அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, December 23, 2010

அமரர் கா.பொ. இரத்தினம் - பண்டிதர் ஐயா அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

தந்தை செல்வா அவர்களின் தமிழரசுக் கட்சியிலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் பாராளுமன்ற உறுப்பினராயிருந்த தமிழறிஞர் - பண்டிதர் அமரர் கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் அவர்களின் மறைவுக்கு கிருத்தியம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறது!

1965ஆம் ஆண்டில் கிளிநொச்சியிலும் 1970, 1977 களில் ஊர்காவற்றுறையிலும் போட்டியிட்டு பாராளுமன்றம் தெரிவாகிய அமரரின் நினைவுகளுக்காக சில நிழற்படங்களையும் இணைத்துள்ளேன்.







Tuesday, November 16, 2010

கார்த்திகை மாதம் வந்தாலே ஐயப்ப பக்தர்கள் உன்னோடு.......!

கடந்த 2009/2010 சபரிமலை யாத்திரையின்போது





















Monday, October 18, 2010

சூரிச் முருகன் கோவிலில் நவராத்திரி









Monday, October 4, 2010

கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகம் திறந்துவைப்பு!

செய்தி - 03.10.2010

தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைச் செயலகம் கடந்த02.10.2010 சனிக்கிழமை மாலை 4.00மணிக்கு தந்தை செல்வாவின் புதல்வர் திரு. செல்வநாயகம் சந்திரகாசன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வின்போது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். தலைவர் திரு. வீ.ஆனந்தசங்கரியின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.








மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) உதய சூரியன் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் தந்தை செல்வாவின் திருவுருவச் சிலையினை மட்டக்களப்பைச் சேர்ந்த திரு மருதநாயகம் அவர்கள் திரை நீக்கம் செய்து வைத்தார். பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைச் செயலகத்தை திரு செல்வநாயகம் சந்திரகாசன் அவர்கள் நாடா வெட்டி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய பலரும் கட்சியின் முக்கிய பொறுப்பை சந்திரகாசன் அவர்கள் ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர். தலைவர் வீ.ஆனந்தசங்கரி அவர்கள் திரு. சந்திரகாசன் அவர்களை கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டதோடு சகல தமிழ்க் கட்சிகளும் ஒரு அமைப்பின் கீழ் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் இது எனக் குறிப்பட்டார். சகல தமிழ்க்கட்சிகளும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து ஒரே அமைப்பாக இயங்க முன்வரவேண்டும் எனவும், அதற்குத் தடையாக எனது கட்சியின் தலைமைப்பதவி இருக்கும் என எவராவது கருதினால் நான் எனது தலைவர் பதவியையும் இராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் எனவும் கூறினார். எனவே மக்களின் நலன் கருதி தான் எந்த தியாகத்தையும், செய்தாவது தமிழ்க்கட்சிகளின் ஒன்றிணைவிற்கு ஒத்தாசை நல்குவேன் எனவும் குறிப்பிட்டார்.

எல்லாவற்றிற்கும் பதிலளிக்கும் முகமாக இறுதியாக உரையாற்ற வந்த திரு. செல்வநாயகம் சந்திரகாசன் அவர்கள் தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆயுட்கால உறுப்பினர் எனவும் எந்த சந்தர்ப்பத்திலும் வேறு கட்சிக்குப் போகவேண்டிய அவசியமில்லை எனவும் சரியான நேரத்தில் நான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் எனவும் உறுதிபடக்கூறினார். தற்போது தமிழகத்தில் தங்கியிருக்கும் எமது உறவுகளின் நலன்களில் முழுநேரமும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற படியால் நேரமின்மையே இதற்குக் காரணம் எனவும் கூறினார். அதுவரை தமிழர் விடுதலைக் கூட்டணியை வழி நடத்த வேண்டிய பொறுப்பு திரு ஆனந்தசங்கரிக்கு உண்டு எனவும் ஏனைய மத, இன தலைவர்களாலும், சர்வதேச தலைவர்களாலும் நன்கு மதிக்கப்படுகின்ற தலைவர் ஆனந்தசங்கரி எனவும், இவ்வாறான தலைவர்தான் இப்போதைய சூழ்நிலையில் மக்களுக்குத் தேவை எனவும் குறிப்பிட்டார். ஏனோ தொரியவில்லை நல்ல தலைவர்களைத்தான் அடுத்தவர்கள் குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள் எனவும் மக்களும் அதை எளிதில் நம்பி மோசம் போய்விடுகிறார்கள் எனவும் இந் நிலை மாறி நல்லவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்க மக்கள் முன்வர வேண்டும், எனவும் விசனத்துடன் குறிப்பிட்டார். ஒரு அப்பழுக்கற்ற அரசியல்வாதி திரு வீ.ஆனந்தசங்கரி என அவர் மேலும் தனது உரையில் சுட்டிக்காட்டினார். இறுதியாக திரு. ஏகாம்பரம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு முடிவிற்கு வந்தது.


ஊடகச் செயலாளர் - த.கஜன்

Saturday, October 2, 2010

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று!



ஒழுக்கம் அல்லாத அறிவாற்றல்(கல்வி),
மனிதாபிமானம் இல்லாத அறிவியல்,
உழைப்பில்லாத செல்வம்,
நேர்மையில்லாத வணிகம்,
கொள்கை இல்லாத அரசியல்,
மனச்சாட்சி இல்லாத இன்பம்,
தியாகம் இல்லாத வழிபாடு – என்ற மகாத்மா காந்தி சுட்டிக்காட்டிய 7 சமூக கேடுகளை களைய - இன்றைய நாளில் நாம் உறுதி பூணுவோமாக!



Saturday, September 11, 2010

முன்னாள் யாழ் முதல்வர் அமரர் பொன் சிவபாலன் அவர்களின் நினைவு தினம் இன்று!



















நேரமின்மை காரணமாக எழுதுவதைத் தவிர்த்து படங்களை மட்டும் பிரசுரித்தேன். கனடாவிலிருந்து திரு. விக்னேஸ்வரன் தெய்வேந்திரம் அவர்கள் சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் - அதை அப்படியே இணைத்துள்ளேன்!

இன்று பொன் சிவபாலனின் யாழ் மேயர் 12 வது வருட நினைவு நாள். சிவபாலன் தமிழ் இனத்துக்கு மறைந்த தமிழன் தலைவன் அமிர்தலிங்கம் வழியில் தன் இளம் பருவதிலிருந்து சேவை செய்துவறும் வேளையில் 12.09.1998 தமிழ் கடவுள் முருகன் வீரூருந்து அருள்பாலிக்கும் நல்லூர் பதியில்

வைத்து கொலை செய்யபட்டர். இவரின் இழப்பு சித்தன்கேணி மக்களுக்கு மட்டுமல்லது தமிழ் மக்களுக்கும பெரும் இழப்பாகும் .

1989ஆண்டு மார்கழி மாதம் கட்டுனயாக்க சர்வதேச விமானநிலயத்தில் சந்திக்கும் சந்தர்பம் கிடைத்தது. நாம் இருவரும் எம் இந்திய பயணம் தொடர்ப்பாக எயர் லங்கா விமானத்துக்கு (UL 303) UL "Usually Late" வழமை போல் அன்றும் late. எமக்கு கிடைத்த அந்த சந்தர்ப்பம் பலத்தரப்பட விடயங்களை பரிமாற வாய்ப்பாக இருந்தது.
முக்கிய விடயம் அரசியல், சிவபாலன் அன்றைய பயணம் கூட தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் மறைந்த திரு. சிவசிதம்பரம் அவர்களை சந்திக்கும் நோக்கமாக சென்னை செல்வதாக இருந்தது .

மிக மனவேதனையுடன் தலைவர் அமிர்தலிங்கம் 1989 July 13 இல் கொழும்பில் வைத்து கொலை செய்து ஒரு பெரும் தமிழ் தலைவரை இழ்ந்து விட்டோம் என்றார். இக் கொலையால் எதனை சாதிக்கபோகின்றோம் என்று அவர் அன்று கூறியமை இன்றும் என் மனதில் ஒலித்துக்கொண்டு இருகின்றது. .

Thursday, September 2, 2010

அமரர்கள் வி. தர்மலிங்கம் மு. ஆலாலசுந்தரம் ஆகியோரின் நினைவு தினம் இன்று!



1985.9.2இல் படுகொலைசெய்யப்பட்ட அமரர் வி. தர்மலிங்கம் அவர்களுடைய நினைவுத் தூபி

எமது அலுவலகத்தில் அஞ்சலி

Sunday, August 29, 2010

கந்தரனுபூதிக்காக புதிய ஒரு வலைத்தளம் அறிமுகம்!

சிறுவயதிலிருந்தே எமது ஊரிலுள்ள பிள்ளையார் - முருகன்கோவில்களில் நடைபெறும் வெள்ளிக்கிழமைப் பஜனைக்குச் செல்வது வழக்கம். முருகன் கோவிலில் நடைபெறும் கந்தனுபூதிப் பாடல்களும் அதன் இசைமெட்டும் எனக்கு ரொம்பப் பிடித்தது.

நல்லூர்த் திருவிழாவின்போது திவ்ய ஜீவன சங்கத்தின் சிறுவர்களால் பாடப்படும் கந்தரனுபூதிப் பஜனையையும் திருவிழாக் காலங்களில் 1984, 1985, 1986ஆம் ஆண்டுகளில் ரசித்து மகிழ்ந்தவன். அருணகிரிநாதர் பாடிய கந்தரனுபூதிப் பாடல்கள் 51 என வழமையாக எல்லாரும் சொல்லப்பட்டு வந்ததையே நானும் இதுவரை பின்பற்றியிருந்தேன். ஆனால் அதில் 101 பாடல்கள் இருப்பதை அறிந்தபின் இதை மற்றவர்களும் அறிய வேண்டும் என்பதற்காக கந்தர் அனுபூதி (http://kantharanupoothy.blogspot.com/)என்ற புதியதொரு வலைத்தளத்தில் ஏனைய 50 பாடல்களையும் பதிவிட முடிவுசெய்திருக்கிறேன். நல்லூர்த் திருவிழா நடைபெறும் இக்கால கட்டத்தில் இப்பணியை ஆரம்பிப்பதில் பெரும் மனநிறைவடைகிறேன்.