அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, March 31, 2011

தந்தை செல்வா பிறந்த தினம் இன்று!

Thursday, March 24, 2011

மலையகப் பகுதியில் இராமகிருஷ்ணமிஷனின் சமுதாயப் பணி!

லயம் ஒன்றை புனரமைத்து கொடுக்கும் பணிகளில்இரத்தினபுரி மாவட்டத்தில் காவத்தைப்(Kahawatta) பகுதிக்கு 2007 பெப்ரவரியில் சுவாமியுடன் நானும் இப்புனரமைப்பு வேலைகளைப் பார்வையிட சென்றவர்களுடன் இணைந்திருந்தேன்! இந்த பணிகளில் பெரும் ஒத்தாசை புரிந்தவர் இந்த லயத்திற்கு அருகிலிருந்த பாடசாலையின் அதிபர் அவர் ஒரு முஸ்லிம் என்பது தான் இதில் பெரிதும் சிறப்புக்குரிய அம்சம்.சிறுவர் இல்லத்தில் சுவாமியுடன்

Tuesday, March 22, 2011

நியாயமாக போராடவேண்டியவர்கள் மலையகத்தில் வாழும் தமிழர்களே! - பகுதி - 2

சில கடிதங்கள்!


வீரகேசரிச் செய்திஇந்தச் செய்தியைக் கண்ணுற்றதும் பதுளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்மருக்கும் தேசியப்பட்டியலில் உள்ள 7 தமிழ் உறுப்பினர்கள் (1. ஆர் யோகராஜன் 2. பி.பி.இராதாகிருஸ்ணன் 3. வி. புத்திரசிகாமணி 4. கே. துரைரட்ணசிங்கம் 5. ஆர் சந்திரசேகர் 6. எஸ் சதாசிவம் 7. லக்ஸமன் கதிர்காமர்) மற்றும் மலையக அரசியற் கட்சித் தலைவர்களான அமைச்சர்கள் கௌரவ ஆறுமுகம் தொண்டமான், பெ. சந்திரசேகரன் ஆகியோர் உட்பட மொத்தம் 17 பேருக்கு இக்கடிதத்தின் பிரதிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் அனுப்பப்பட்டன.
Monday, March 21, 2011

நியாயமாக போராடவேண்டியவர்கள் மலையகத்தில் வாழும் தமிழர்களே! - பகுதி - 1


கடந்த சில நாட்களாக எமது நாட்டில் வாழும் மலையக சகோதரர்களைப்பற்றிய நினைவுகள் அடிக்கடி வந்துகொண்டிருந்தது!

இங்கே(சுவிசில்) உள்ள நடைமுறைகளைப் பார்க்கும்போது - இங்கு எங்கிருந்து யார் வந்தாலும் அவரவருக்குத்தேவையான அடிப்படை வசதிகளை இந்நாட்டு அரசாங்கம் இன -மத - மொழி - பிரதேச பாகுபாடின்றி செய்து கொடுத்துக்கொண்டு இருக்கிறது!

கடந்த 18ஆந்திகதி வெள்ளிக்கிழமை ஒரு முக்கியமான ஆவணத்தை பிரதி பண்ணுவதற்காக நான் எனது தங்குமிடத்திலிருந்து சுவிற்சிலுள்ள(Schwyz) பொது நூல்நிலையத்திற்குச் செல்லும் வழியில் சுவிற்ச்(Schwyz) புகையிரத நிலையத்தில் ஒரு அங்கோலா நாட்டு இளைஞனைச் சந்தித்தேன். அவருக்கு அவரது நாட்டு மொழியும் - இத்தாலி மற்றும் போர்ததுக்கீச மொழியும் தெரியுமாம். எனக்கு ஆங்கிலமும் - இங்கு பேசப்படும் ஜேர்மன் மொழியும் தெரிந்திருந்தும் அவருக்கு உதவி செய்ய விரும்பி அவரை இங்குள்ள அகதிகளுக்கான பதிவு நிலையத்திற்கு அழைத்துச் சென்றேன். அங்கு எனக்கு அவர்பற்றிய செய்தி அதிர்ச்சியைத் தந்தது. அவரது அகதி அந்தஸ்த்துக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே அவரை இந்த மாவட்டத்திற்கு அரசு அனுப்பி வைத்திருந்தது¨. எதுவிதமான ஆவணங்களும் இல்லாத நிலையில் அவர் திரும்பிப் போகும்வரை அவரை ஒரு இடத்தில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரது உணவுக்காக 20 சுவிஸ் பிராங்குகளையும் கொடுத்து (ஒரு நாளைக்கு அடிப்படையாக உணவுக்கு 10 சுவிஸ் பிராங்குகள் போதும் என்ற அவர்களது நிலையில் சனி ஞாயிறு நாட்களுக்கு மட்டும் - திங்கட்கிழமை மீண்டும் அவர்களிடம் போய் அடுத்த வாரத்திற்கான பணத்தை கையெழுத்திட்டு பெற்றக் கொள்ளலாம்) அவரது தங்குமிடத்தை குறித்துக் கொடுத்தனர் அதிகாரிகள்! குறித்த இடம் சற்றுத் தொலைவிலிருந்தாலும் அங்கே பொறுப்பான அதிகாரி இரவு 7.00மணிக்கு வந்து அங்குள்ள தங்குமிடத்தின் கதவுகளைத் திறந்துவிடும்பொழுது அவருக்குரிய தற்காலிக அடையாள அட்டையை வழங்குவார் எனவும் அங்கு அவர் இரவு மட்டும் தங்குவதற்கு அனுமதி உண்டென்றும் அதன்பின் காலையில் அவர் 8.00 மணிக்கு அவ்விடத்திலிருந்து வெளியேறி எங்காவது போய்விட்டு இரவு திரும்ப 7.00 மணிக்கு வந்து தங்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படி ஒரு நடைமுறை இங்கு!ஆனால் எமது நாட்டில் பிரித்தானிய ஆட்சிக் காலத்திலிருந்து இன்றுவரை நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருட்களை பராமரிக்க கொண்டுவந்தவர்களை - இன்னும் அடிமைபோல அரசும் - அதிகாரிகளும் அவர்களுக்காக போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் தொழிற்சங்கங்களும் - அரசியல்கட்சிகளும் இன்றுவரை அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் இருப்பதே வேதனை!

அடிப்படை உரிமைகளுக்காகப் போராடவேண்டிய இலங்கையர்களை நான் 3 பிரிவினராக வகைப்படுத்துகிறேன்.

1. மலையத்தில் வாழும் தமிழர்கள்.

2. தலைநகர் கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் வாழும் சேரிப்புற மக்கள் - குறிப்பாக இதில் கரையோரப் பகுதிகளில் வாழும் அனைத்து இன மக்களும் சேர்க்கப்பட வேண்டும்.

3. கலவரங்களால் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

இதில் குறிப்பாக

அ)1977களில் மலையத்திலிருந்து வெளியேறி வாழ்பவர்கள்

ஆ)1983களில் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள்

இ) வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் - (மற்றும் சிங்களவர்கள்)

ஈ) இறுதி யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

கடந்த ஞாயிறு (20.03.2011) வீரகேசரியில் வெளியான செய்தி -புகைப்படத்தில் குறிப்பிட்ட லயத்தில் மின்சார வசதி செய்துகொடுக்கப்பட்டிருப்பதும் லயங்களின் சுவர்கள் வர்ணமிடப்பட்டதாகவும் இருக்கிறது. இதைவிட மோசமான லயங்கள் மலையகம் பூராவும் நிறையவே உள்ளன.

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் காலஞ்சென்ற திரு. பெ. சந்திரசேகரன் அவர்கள் பிரதி அமைச்சராக இருந்தகாலத்தில் சில லயங்கள் தொடர் மாடிகளாகக் கட்டப்பட்டதும் - சில மலையக மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டதும் உண்மை. ஆனால் இது ஒரு சில பகுதிகளில் மட்டுமே நடந்திருக்கின்றன. முழு மலையகத்தையும் சென்றடையவில்லை.


தேடலில் கிடைத்த ஒரு தகவலையும் இணைத்துள்ளேன்!

(http://www.wsws.org/articles/2010/apr2010/sril-a03.shtml)
--------------

“Rajapakse’s era not golden for us”—Sri Lankan plantation workers
By Panini Wijesiriwardena
3 April 2010

Norwood family outside their home“President Mahinda Rajapakse and his government say they have produced a golden era for the plantations. Yes, it’s a golden era for bosses of the plantation companies. But not for the workers,” a Norwood Estate tea plantation worker told the WSWS.A WSWS reporting team visited the Norwood Estate, near Hatton in Sri Lanka’s central plantation district of Nuwara Eliya, as part of the Socialist Equality Party’s campaign for the April 8 parliamentary elections. SEP candidates are contesting the Jaffna, Nuwara-Eliya, Colombo and Galle districts.

Our reporters found deep hostility toward the Rajapakse regime and the vicious war that it resumed in 2006 against the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE), as well as widespread disgust with all the parties and trade unions that have dominated Sri Lankan politics for decades.

The general election is taking place in an environment of government intimidation and repression against opposition parties and the working class. Political tensions are increasing in the Nuwara-Eliya district, with clashes between rival parties. In particular, the Ceylon Workers Congress (CWC) has unleashed attacks on its political opponents. The CWC, which is both a trade union and a political party, is a member of Rajapakse’s ruling coalition. Facing open discontent among workers, particularly over its sellout wage deal last September, the CWC is desperately trying to boost its vote.

The Norwood Estate worker commented: “In the past year, the union leaders, particularly [CWC leader Arumugam] Thondaman, betrayed our wages struggle. The unions are not fighting for workers; they are fighting for the plantation managements. They explain the difficulties of the managements to us, not our difficulties to the managements. If we go against the unions, particularly the CWC, it acts against us like a police force.”


Barracks style dwellingsSince Rajapakse took office in 2005, the daily wage of a plantation worker has increased only from 200 to 285 rupees ($US1.80 to $US2.50), while the cost of living has skyrocketed. The government falsely claims that there has been massive development in the plantation areas. However, most of the workers in Norwood live in old barrack-style rooms that lack basic amenities.

A female worker told us: “I am not going to work today because I have to fill the water for our use this week. Since we don’t have a house, we are living in a small temporary hut with two children.”


She is a member of Lanka Jathika Estate Workers Union, which is affiliated to the right-wing opposition United National Party (UNP). The Nuwara-Eliya district UNP leader, K. K. Piyadasa, was due to visit the estate and workers were preparing to lobby him and protest over his broken promises as a member of provincial council.

Ramaih, an unemployed young worker, explained: “In our estate nearly 60 youth are unemployed while 25 work casually in the estate.” According to Ramaih, the estate management hires retired workers as cheap casual labour and refuses employment to young people. “We organised several protest activities during the past month demanding jobs. But the management has refused, and trade unions are not fighting for the unemployed youth or for workers’ rights,” he added.

At another estate, Annfield, a worker, Anandan, pointed to the broken promises of a previous UNP government—that of President Ranasinghe Premadasa in the 1990s: “President Premadasa’s government declared there would be ‘shelter for all’ by the year 2000. The CWC leaders were ministers in his government too. But we still have no new shelters.”

Anandan continued: “Over the years, all these plantation trade union leaders have been in coalitions with the ruling parties and received ministerial portfolios but there hasn’t been any remarkable development in the plantation areas. These leaders claim they join the governments for the benefit of workers. They have benefited, but not us.”

A fellow Annfield worker, Murugan, 45, said: “The government used millions of rupees for a war [in the north and east] that killed so many people. When we asked for a small wage increase to survive, we were branded as supporters of terrorism. But all our unions supported the government and betrayed our struggles. Now the UNP promises to pay us high salaries when they come to power. But its union also signed the wage agreement that sold out our demands.”

Murugan added: “We thought that National Union of Workers leader R. Thigambaram would do something for us. He showed a radical face when we were denied a decent wage rise. But he is no different. He is also contesting the elections on the UNP list, together with those who betrayed us.”

Letchumy, a female worker from the Balmoral estate of Agrapatana, said workers would not vote for anybody in the April 8 elections: “We will tear the polling cards. All the trade unions and the parties have betrayed us.”

Seethalakshmi, a female worker and mother of three from the Panmure Estate in Hatton, told us: “It is very hard to live with our low income. For each of our three children we have to spend around 1,000 rupees per month on tuition fees.”

Seethalakshmi and her family live in a house built with clay, which has no proper water supply or sanitation. They have to travel three kilometres to visit the nearest hospital in Dickoya. For a serious illness they must go to the Nawalapitiya hospital, about 25 km away. There is no ambulance in the estate. Workers must hire a vehicle from Hatton town, even when a pregnant mother begins her labour.“We are in the [trade] union just for the sake of it,” Seethalakshmi commented. “They only come at election time and grant money to the Kovil [Hindu temple] and disappear. They do not seriously consider any of our problems.” She concluded: “No matter which major party we vote for in this election, not one is going to solve our problems.”

G. Sivan, 60, has been working in the Panmure Estate since he was 14, along with his two brothers. They had no other option in life because their parents could not afford to pay for their education. Throughout their lives, none of the estate workers’ basic problems have been resolved by the succession of Colombo governments.

Sivan said some workers had been provided with housing loans, which they must repay in 795-rupees monthly instalments—about a quarter their wage. Even to receive full salaries, workers had to work 18 days a month and achieve the daily plucking targets. If they worked one day less, they lost around 25 percent of their monthly salary.

“Our income is not enough even to buy the basic amenities,” Sivan objected. “One kilo of rice is 55 rupees, one kilo of dhal [lentils] is 200 rupees, and a kilo of coconut oil is 250 rupees. How can we afford all this on a daily basis? The government said it could not reduce the food prices due to the war [against the LTTE]. Nearly one year has passed since the end of the war but the prices are still rising.”

Sivan was equally bitter about the unions: “The unions are selfishly aligned with the companies and the government. They are not on the side of the workers. The working class needs a new leadership. I have known the Socialist Equality Party for years, and its warnings have come true.”


He concluded: “I have lived under many governments—from the time of Madam Bandaranaike [prime minister in the 1960s, 1970s and 1990s], through the UNP regime and up to the present one. None has solved our problems. We need a new party with a new program.”

இன்னும் இவர்களைப் பற்றி அறிய (http://www.youtube.com/watch?v=92UiSzY_kX8) இந்தத் தளத்திற்குச் சென்று காணொளி மூலம் பாருங்கள்!

Thursday, March 17, 2011

இன்னும் என்னென்ன தொடரப் போகிறதோ? நாமறியோம்!


29.12.2004இல் எழுதிய ஒரு கடிதத்தில்

"இப்படியே ஆளுக்கு ஆள் மண்ணுக்கு உரிமை பாராட்டும்போது, பூமாதேவி தனது உரிமையை இந்த அனர்த்தம் மூலமாக எமக்குப் படிப்பினை செய்துள்ளாள்.

இதனை இன்னும் உணராவிடில் - பின்னர் வருவதை நான் சொல்ல விரும்பவில்லை.

பௌத்த சமயம் கூறும் துக்கத்துக்கு காரணமான ஆசையை சிங்களவர்கள் விடுவதாக இல்லை.


காதற்ற ஊசியும் வாராது காணுன் கடைவழிக்கே என்ற இந்து சமயத்தின் சிறந்த சித்தர் பட்டினத்தாரின் கருத்தையும் தமிழர்கள் ஏற்பதாயில்லை."

இப்படி நான் குறிப்பிட்டிருந்தேன்!
ஆனால் இன்று ஜப்பானில் பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது! இன்னும் என்னென்ன தொடரப் போகிறதோ? நாமறியோம்!Saturday, March 5, 2011

மாவை மகாராஜ ஸ்ரீ சண்முகநாதக்குருக்கள் ஐயா அவர்களுக்கு எமது அஞ்சலிகள்!மாவை ஆதீன முதல்வரும் - மாவிட்டபுரம் கந்தசுவாமி தேவஸ்தான பிரதம சிவாச்சாரியாருமகிய மகாராஜ ஸ்ரீ சண்முகநாதக்குருக்கள் ஐயா அவர்கள் முருகப் பெருமானுடைய பாதாரவிந்தங்களை அடைந்தார் என்ற செய்தியைக் கேள்வியுற்றோம்.

அவரது ஆத்மா பேரானந்தப் பெருவாழ்வடைய எல்லாம்வல்ல இறைவனை மனமார வேண்டுகிறோம்.

அன்னாரின் சமய - சமூகப் பணிகளை நாம் நினைவுகொள்ளுவதோடு - அன்னாரின் பூதவுடலுக்கு எமது அஞ்சலிகளைத் சமர்ப்பிப்பதுடன் - அவரது குடும்பத்தவருக்கும் பிரிவால் துயருறுகின்ற சைவ அடியார்களுக்கும் எல்லாம் வல்ல மாவைக் கந்தன் மன தைரியத்தை வழங்கிட மனதார வேண்டுகின்றோம்.

சூரிச் முருகன் கோவிலில் சிவராத்திரி!