அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, December 31, 2009

பழையன கழிதலும் புதியன புகுதலுமாக இனி வரும் காலம் இனிய பொழுதாக எமது மக்களுக்கு நல்லதொரு வழியை ஏற்படுத்தட்டும்!


ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின்

என் கடன் பணி செய்து கிடப்பதே!

தன்னைப் போலச் சகலமும் ஓம்புக
விண்ணைப் போல வியாபகமாகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை!


ஜாதி பேதம் ஒன்றும் இல்லை
ஏற்றத் தாழ்வு ஏதுமில்லை
மாலையிட்ட மாந்தருக்கு மனம் சுத்தமாகும்!


அந்த அரபிக் கடலும் பம்பா நதியும் நீரால் ஒரு நிறம் தான் மனிதர்கள் ஒரு குலம் தான்!


மீள முடியாத தாக்கங்கள் - இழப்புகள் - மன உளைச்சல்களைப் பெரிதும் சுமந்தவந்த 2009ஆம் ஆண்டை ஒருபோதும் ஈழத்தமிழர்கள் மறந்துவிடார்கள்- மறந்துவிடவும்முடியாது! இனிமேலும் இப்படியொரு அழிவை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது! மனம் மிகவும் கனத்த நிலையில் புதிய 2010ஆம் ஆண்டை வரவேற்பது கடமையாகிறது!

வாழ்வாதார அடிப்படை வசதிகளை துறந்து தவித்து நிற்கும் மக்களைப் பற்றி இன்றைய ஜனாதிபதி தேர்தல் வரும் நேரத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலுமாக இனி வரும் காலம் இனிய பொழுதாக எமது மக்களுக்கு நல்லதொரு வழியை ஏற்படுத்த இறைவனை வேண்டுவதுடன் - நாமும் அதற்கு எம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளுவதுமே இன்றைய கடமையாகிறது!

எப்படியாகிலும் பழகிய தெரிந்த தொடர்பான அனைவருக்கும் புதுவருடம் பசுமையாக இனிமையைத் தரட்டும் என வாழ்த்த முனைகிறேன்!


என்றும் மறவாத அன்புடன்
தங்க. முகுந்தன்.

யாத்திரையாம் யாத்திரை சபரிமலை யாத்திரை!

கடந்த 16.11.2009 கார்த்திகை முதல் நாளன்று சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா பகவானுக்காக மாலை அணியப்பெற்ற ஐயப்ப பக்தர்கள் தமது 41 நாள் மண்டல விரதத்தை கடந்த 26.12.2009இல் நிறைவேற்றினார்கள். சபரிமலைக்கு யாத்திரை செய்ய முடியாத பக்தர்கள் பலர் தமது வேண்டுதல்களை மண்டல கால நிறைவன்று போகின்ற பக்தர்களிடம் தமது கட்டை நிரப்பி விரதத்தைப் பூர்த்திசெய்தார்கள். சுவிற்சர்லாந்தின் சூரிச் அடில்ஸ்வில் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் சுவாமி திருக்கோவிலில் இம்முறை பெருந்திரளான பக்தர்கள் ஒன்றுதிரண்டு இவ்விரத மண்டல பூர்த்தியில் கலந்து கொண்டார்கள். கனடா, டென்மார்க், இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்தும் ஐயப்பனுக்கு மாலை அணிந்த யாத்திரீகர்கள் கலந்த சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

சூரிச் அடில்ஸ்வீல் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் திருக்கோவிலில் திருவாதிரை தரிசனம்!

இன்று 31.12.2009 வியாழக்கிழமை அதிகாலை சூரிச் அடில்ஸ்வீல் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் திருக்கோவிலில் நடேசர் ஆருத்திரா தரிசனம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இணுவையூர் மகாவித்துவான் சிவஸ்ரீ வீரமணி ஐயா அவர்கள் பாடிய நடேசருக்கான திருவூஞ்சலும் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Monday, December 28, 2009

சுவிஸ் - சூரிச் - அடில்ஸ்வில் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஐயப்ப மண்டல விரத பூஜை