Showing posts with label பிதற்றல். Show all posts
Showing posts with label பிதற்றல். Show all posts
Friday, April 25, 2014
கடந்த 20ஆந்திகதி(20.04.2014) எனது முகப்புத்தகத்தில் எழுதியதை அப்படியே பதிவிடலாம் என நினைக்கின்றேன்!
சரியாக இப்போது 2மணிக்கு திடீரென தூக்கம் கலைந்தது!
சில சம்பவங்கள் திடீரென்று மனதில் கனவா அல்லது நனவா எனத் தெரியவில்லை!
ஏன் எனக்கு மட்டும் இந்த நினைவுகள் வந்து போகின்றது!
நூல்நிலையம் என்றால் என்ன!
முள்ளிவாய்க்கால் என்றால் என்ன!
யாழ்ப்பாண முஸ்லிம்கள் என்றால் என்ன!
கஹவத்தை தலுகல்லை முத்துமாரியம்மன் கோவில் என்றால் என்ன!
2005 அல்லது 2006 ஆண்டு சரியாக ஞாபகமில்லை - நடந்து வந்த பௌத்த துறவியை இரவு காவலுக்கு நின்றவர்கள் பொன்னாலையைக் கடக்க தடை பண்ணிய பின் எங்கள் ஊர்த் தேர்த் திருவிழாவுக்கு முதல் நாள் மூளாய் பிள்ளையார் கோவிலுக்கு வந்தவரை நான் எங்கள் வீட்டுக்கு கூட்டிச் சென்று என் தாயாரை எங்கள் வீட்டில் படுக்கச் சொல்லி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்துவிட்டு கோவிலுக்குப் போய் திருவிழாவை முடித்து வந்து அவரோடு தங்கி அடுத்த நாள் அவருக்கு வேண்டியதெல்லாம் செய்து மதியம் தேர் வீதிசுற்றி வந்த பின்னர் அவருக்கு மதியம் உணவளித்த பின் விபுலனிடம் சொல்லி அவரை சித்தங்கேணியில் கொண்டு போய் விட்டது!
புதிதாக கட்டப்பட்ட 20 அடி உயரமான சிவனிடம் சித்தரைக் காண கண்டியிலிருந்து வந்த சீலனையும், ஹேம்தீப்பையும் கூட்டிச் சென்றபோது சித்தர் எனக்கு எதுவும் சொல்லாமல் விட்டதென்ன!
எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர்கள் இருக்கும்போது எனக்கு மட்டும் வேதாந்த மட ஸ்வாமிகள் கடிதம் எழுதியது ஏன்!
நல்லதொரு வாழ்க்கையை வாழ சுவிற்சர்லாந்து சென்ற எனக்கு எல்லாரும் போக வேண்டாம் என்று சொல்லியும் திரும்ப இங்கு வந்ததேன்!
நூலகம் எரிக்கப்பட முன்பே என் அம்மா நான் காசிப் பிள்ளையார் கோவிலுக்கும் துர்க்கையம்மன் கோவிலுக்கும் அடிக்கடி போய் வருவதால் னில்லாத சமயத்தில் என் சமயப்புத்தகங்கள் - ஸ்வாமியறையிலுந்த மணி தொடக்கம் அத்தனை பூசைப் பொருட்களையும் கொண்டுபோய் குப்பையில் போட்டு எரித்ததை எப்படியோ தெரிந்து ஓடிவந்து தண்ணீரூற்றி அணைத்தது என்ன!
எல்லோரும் சும்மா இருக்க கீரிமலையில் சடையம்மா மடத்திலிருந்து சிவனுக்கு பூசை பண்ணிய அந்த காலத்தை நினைத்து இப்போதும் அந்த இடத்தைப் பார்க்க வேண்டிய ஆவல் ஏன்!
காஞ்சிப் பெரியவரிடமும் - திருச்சி ஸ்ரீரங்கம் கட்டிமுடிக்க ஆசியருளிய ஸ்ரீஜீயர் சுவாமிகளிடமும் ஆசிபெற்று - எனது பெரிய தந்தையாருடன் ஸ்ரீசத்தியசாயிபாபாவைத் தரிசனம் செய்யச் சென்றது எதற்கு!
எல்லாவற்றுக்கும் மேலாக புலிகளின் யாழ்ப்பாணப் பொறுப்பாளரோடு எதற்காகமேயர் கந்தையனுடன் சென்று விவாதிக்க வேண்டியிருந்தது?
கோப்பாய் சுப்பிரமுனிய கோட்டத்தில் எதற்காக ஸ்ரீ சாந்திலிங்கேஸ்வரப் பெருமானுக்கு அகண்டநாம பஜனை செய்து நானே அபிஷேகமும் ஹோமமும் பண்ண வேண்டியிருந்தது!
இப்போது இந்தத் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சிக்காக ஏன் எல்லாரிடமும் தந்தை செல்வாவுக்காக சண்டைபோடுவது என
ஏராளமான கடந்தகால சரித்திர உண்மை நிகழ்வுகள் வந்துபோனதோ தெரியவில்லை!
ஒரே குழப்பமாக இருக்கிறது!
கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தால் வாசலில் ஆமியும் பொலிசும் நிற்கிறார்கள்!
இறைவா இது ஏன் - எனக்கு மாத்திரம் இப்படியொரு மன அலைச்சல்?
யோகரின் கொல்லாமை பெரிதென்ற விடயமும், பௌத்த தர்மத்தை உபதேசித்த புத்தபகவானின் கொள்கையும் இன்று வரை மகாத்மாவின் அகிம்சையை விட்டு விலகிச் செல்லாதபடி இருப்பதும்!
பட்டினத்தாரின் காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே எனது 3, 4ஆம் வகுப்புகளில் மகிவும் தீவிரமாக எனது தாத்தாவுக்கு கதைகள் வாசித்துச் சொல்லும்போது ஏற்பட்ட மன உறுதியால் 12 வயதில் நான் சேர்ததுவைத்த சல்லிமுட்டிக் காசு களவு போனதையும், 1978களில் தெல்லிப்பழையில் வீடுபுகுந்த கள்வன் எனது மர உண்டியலுக்குள் இருந்த பித்தளைச் செப்புக்காசுகளை களவெடுத்த பின்பும் கவலைப்படாத நான், ஆவணங்களை மட்டும் எனது பெரியப்பாவின் வீட்டில் புலிகள் கொழுத்தி எரித்தபோது வந்த ஆத்திரம் எதற்காக! இப்போது இந்த யாழ்ப்பாண நூல் நிலையம் சம்பந்தமாக நான் எதற்காக மண்டையைப் போட்டுக் குளப்பியடிக்க வேண்டும்?
இப்படி பல நினைவுகள் மூளாத தீயாக உள்ளே கனன்று கொண்டு இருப்பது எதற்காக! யாராவது வழி சொல்வீர்களா?
இப்பதிவு எழுதும்வரை எனது இந்தப் பதிவுக்கு பதிலிட்டவர்களின் கருத்தையும் இங்கு பதிவிட விரும்புகிறேன்.
Vicky Theivendram Sleep well then think about the social work
20 April at 03:08 ·
Thangarajah Mukunthan நித்திரை வரவில்லையே!
20 April at 03:09 ·
Vicky Theivendram Mugunthan, I went to your perriyamma, 31st last week your mag was read, & your moms too, I met bot perriamma too at the funeral .
20 April at 03:12 ·
Thangarajah Mukunthan ம்! எங்கள் மாமாவினுடைய அந்தியேட்டிக்குகூட ஒரு சிறிய நினைவு மலர் வெளியிட்டிருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்! ஆனால் மாமி விரும்பவில்லை! அந்தச் செய்தி மிகச் சுருக்கமாக நான் எழுதிய கட்டுரையிலிருந்து தொகுத்தது!
20 April at 03:14 ·
Vicky Theivendram Yes I read all in Kirithiyam
20 April at 03:14 ·
Thangarajah Mukunthan Ohh! Nantri! he helped me!
20 April at 03:15 ·
Vicky Theivendram The 31st went well master perriappa & perriamm canada did good job at tt day
20 April at 03:16 ·
Star Sundar anna sleep weel take care of your health na.
20 April at 03:19 ·
Thangarajah Mukunthan நன்றி சுந்தர்! உம்மை மறக்க முடியாது! சுவிசில் இருந்தபோது நட்பாகி முதல்முதல் கடந்த 26.02.2014இல் நான் மதுரைக்கு வந்தபோது எனக்காக வந்து ஹோட்டல் மகாராஜாவில் அறை எடுத்துத் தந்து எனக்குப் பண உதவி செய்ததையும், அடுத்தநாள் உமது மோட்டார் சைக்கிளில் காலையிலேயே வந்து விமான நிலையத்திற்கு கூட்டி வந்ததையும் ஒருபோதும் மறக்க மாட்டேன்! You are one of the Special friend!!!
20 April at 03:25 ·
Star Sundar anna ethalam nenga solanuma na.ungala parthatula enaku romba santhosam na.enaikum ungala mara mudiuathu na
20 April at 03:28 ·
Sivaa Nandah தியானம் பண்ணுங்கள் உங்களால் ஏதோ நடத்த இறைவன் திட்டமிட்டுள்ளேன்
20 April at 13:07 ·
Parameswaraiyer Ambikapathy நினைவுகள் - கணனியின் நினைவுக் குச்சி போல - நாம் இட்டவற்றை தேக்கி வைத்திருக்கும் குப்பைத்தொட்டி. இவற்றின் சேர்க்கை ஒருவரின் ஆளுமையைத் தீர்மானிக்கும் ....... உள் நோக்கிய - ஆன்மாவை அறியும் நோக்குடன் கூடிய - சிந்தனைகள் சிறப்புடன் வாழ வழிவகுக்கும். தூங்குதல் ஒருவிதத்தில் இறப்பையும் பின் எழுதல் பிறப்பையும் ஒக்கும். ....... >>>>>????????
20 April at 13:44 ·
Rajanayagam Kesavanathan. ஆழ் மனதின் சக்தி..
21 April at 05:32 ·
Monday, November 23, 2009
சந்திப்பும் கலந்துரையாடலும் ஈழத் தமிழ் பேசும் மக்களுக்கு ஏதேனும் விமோசனத்தைத் தருமா?

நேற்றுடன்(22) கடந்த 4 நாட்கள்(19-11-2009 தொடங்கியது) நடைபெற்ற தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களின் கருத்தரங்கு முடிவுற்றது!
நண்பரொருவருடைய புண்ணியத்தினால் நேரடியாக குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று கலந்துரையாடலின் இறுதியில் பங்குபற்றிய அத்தனை தலைவர்களையும் சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேச முடிந்தது!
ஏதோ! நடப்பவை - நடக்க இருப்பவை - அப்பாவிப் பொது மக்களுக்கு - நல்லதாக - அமைய பிரார்த்தனைகள்!
Saturday, November 21, 2009
சுவிசில் இன்று 3ஆம் நாளாகவும் ..... ஏதோ பேசுகிறார்கள்!....... என்னமோ நடக்குது!.......... நாமறியோம்!



பேசினார் ... பேசினார்கள் ......சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் இதுக்கொரு குறையுமில்லை!
ஜீ.ஜீ 50க்கு 50!

தந்தை செல்வா வடக்கு கிழக்கு இணைந்த மாநிலம்! பேசினார் - பண்டாவுடன் - டட்லியுடன் - சிறிமாவோவின் அரசுடன்!
பின்னர் சர்வகட்சி மாநாடு - திம்பு - பூட்டான் -பெங்களுர் - நோர்வே ஒஸ்லோ -சுவிஸ்!
தமக்குள் பேசினார்கள் - வெவ்வேறு அரசுகளுடன் பேசினார்கள் - மத்தியஸ்த்துடன் பேசினார்கள்....






பேசியபிறகு தனித்தனியே சென்றார்கள் .... பிறகும் சேர்ந்து பேசினார்கள்....
மற்றவர்கள் பேசியதைக் கொச்சைபடுத்திவிட்டு தாம் மட்டும் ஏகப் பிரதிநிதிகள்!
தம்முடன் மட்டும் பேசவேண்டும் என்ற ஆணை! சரி - பேசினார்கள்!
பேசியவர்களை இன்று காணோம்!
பேசியவர்களைக் கொன்றும் தீர்த்தார்கள்! யார் யாரெனப் பட்டியல் போடத் தேவையில்லை!
இப்போது புதியதொரு திருப்பம்!கண்கெட்ட பின்பு ....ஏதோ ஒரு நமஸ்காரம்!
அரை இலட்சம் மக்களுக்குமேல் மாண்டொழிந்து போன பின்னர்.....
3 இலட்சம் மக்களுக்குமேல் நாதியற்றுப் போனபின்னர்......
ஏனைய அனைவரும் இன்று பேச வருகிறார்கள்! என்னப்பா உலகம்! உருண்டைதானே! திரும்பி திரும்பி அதே சுற்றில்!
யோகர் சொன்னார் - சுத்திச் சுத்திச் சுப்பற்ற கொல்லை எண்டு!
ஏதெனும் கதைச்சு சனத்துக்கு ஒரு முடிவைச் சொல்லுங்கப்பா!
மேல இருக்கிறவன் ஒருநாளும் வரமாட்டான்! அவன் வருவதற்கு எத்தனையோ பேர் எத்தனையோ சொன்னாங்க!
அறம் செய விரும்பு!
இணக்கம் அறிந்து இணங்கு!
கூடிப் பிரியேல்
கொள்ளை விரும்பேல்!
போர்த் தொழில் புரியேல்!
மூர்க்கரோடு இணங்கேல்!
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்!
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்!
இன்னும் நிறையக் கிடக்கு எழுதிக் கொண்டே போகலாம்
எல்லாம் படிச்சு முடிக்க முதல் மழை வந்து அழிக்கப்போகுது!
அதுக்கு முதல் ஏதாவது செய்யலாமே!.........யோசிக்க கொஞ்சம் நேரம் வேணும்!
அது சரி இப்ப எங்க பேசீனம்! என்ன பேசீனம்! தெரியுமோ?
உவங்கள் சொல்லுற மாதிரி சூரிச்சில இல்லையாம்! எங்கேயோ கன்டோன் துர்க்காவாம்!
இதுவும் கோரமான வடிவம்போல இருக்கோ!
எங்கயோ டீசன்கோபனாம்!(Diessenhofen)
சுவிற்சர்லாந்தின் பிரசித்தி பெற்ற நதிகளில் ஒன்றான றைன்(Rhein) நதிக்கரை ஓரத்திலமைந்த எழில்கொஞ்சும் அமைதியான இடமொன்றில்!
விரிவான செய்திகளுக்கு!
http://www.tamilnewsnetwork.com/tamilnewsnetwork.com/post/2009/11/19/Tamil-Muslim-political-parties-find-their-table-in-Zurich.aspx
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=30642
http://srilankawatch.com/index.php?option=com_content&task=view&id=393&Itemid=2
http://www.lankatimes.com/fullstory.php?id=22940
http://beta.thehindu.com/news/international/article52467.ece
Sunday, November 15, 2009
சின்னச் சின்ன ஆசை! சிங்கக்கொடி - நந்திக் கொடி - புலிக்கொடி மூன்றையும் பறக்க விடலாம்தானே!

சுவிசில் நான் இருக்கும் பகுதியில் மட்டுமல்ல எல்லா மாநகராட்சிகளிலும் 3 கொடிகள் பறக்க விடப் பட்டிருக்கும்!
ஒன்று நாட்டின் தேசியக் கொடி!
மற்றது மாநிலத்தின்(மாவட்டத்தின்) கொடி!
மற்றயது மாநகராட்சியின் கொடி!
படத்திலிருப்பவை எமது பகுதியின் கொடிகள்!
2006இல் சுவிசின் மாதிரியைப் பார்க்கவோ - படிக்கவோ இலங்கை அரசின் தூதுக்குழுவும் - புலிகளின் தூதுக்குழுவும் வந்திருந்தன! ஆனால் விட்டுக்கொடுப்புக்கள் இல்லாத காணரத்தால் எல்லாம் அம்போ!
இலங்கையைவிட சுவிற்சர்லாந்து சிறியது! இங்கு 26 மாநிலங்கள் பல்வேறுபட்ட மொழிகளைப் பேசும் பகுதிகளில் அமைதியான நீதியான ஆட்சி நிலவுகிறது! இதே அமைப்பு முறையை எமது நாட்டிலும் ஏற்படுத்துவதன்மூலம் இனங்களுக்கிடையில் நல்லெண்ணம் - புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும் என்பது எனது திடமான கருத்து!
ஆனால் நான் யோசனை செய்து என்ன பலன்?
இலங்கையைவிட சுவிற்சர்லாந்து சிறியது! இங்கு 26 மாநிலங்கள் பல்வேறுபட்ட மொழிகளைப் பேசும் பகுதிகளில் அமைதியான நீதியான ஆட்சி நிலவுகிறது! இதே அமைப்பு முறையை எமது நாட்டிலும் ஏற்படுத்துவதன்மூலம் இனங்களுக்கிடையில் நல்லெண்ணம் - புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும் என்பது எனது திடமான கருத்து! ஆனால் நான் யோசனை செய்து என்ன பலன்?



25 மாவட்டங்கள் தனித்தனி மாநில ஆட்சி - இதைத்தான் மாவட்ட ஆட்சியாக ஏற்க முற்பட்டபோது நடைபெற்ற தேர்தல்களின் வன்முறையால் 1981இல் யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டதே!
ம்...என்ன செய்வது? யாரை நோவது!
வடக்கு கிழக்கில் வாழ்ந்த ஒரு கணிசமான அளவு முஸ்லிம் சிங்கள மக்களை அவர்களது வாழ்ந்த பிரதேசத்தில் வாழவிடாமல் செய்வதில் எந்தவித தார்மீகமும் இருப்பதாக எனக்குப்படவில்லை! இடம்பெயர்ந்த அல்லது புலம்பெயர்ந்த நாம் எமது அன்றாடத் தேவைகளுக்காக வீட்டைக்கட்டியும் - கோவில் கட்டியும் வாழுகிறோமில்லையா?
அதேபோல இருந்தவர்கள் தமது இடங்களில் குறியேற விண்ணப்பித்ததை ஏதோ பாதகச் செயல்போல தூக்கிப்பிடிக்கிறோமே! இது நியாயமானதா?
இப்போது ஒரு கேள்வி என்மீது எழுப்பப்படும் - சிங்களக் குடியேற்றங்கள் பற்றியது!
ஏன் கையில் வெண்ணெய் இருக்க அலைவான்?
கடவுளே ஒரு மண்ணும் புரியவில்லை!
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
பிதற்றல்
அழிவுகளின் விளிம்பில் பிறந்த ஞானோதயம்! அதனால் ஏற்பட்ட/ஏற்படும் மனமாற்றம் விடிவைத்தருமா? - ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்!

தற்போது சூடான செய்தி - இராணுவத் தளபதியின் பதவி விலகல் - அதனைத்தொடர்ந்து அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது பற்றியது!
சில மாதங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பற்றியது!
அதற்கு முன் - சில வருடங்களின் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய கருணா அம்மான் பற்றியது!
இப்படி இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம்!
செய்திகளுக்குக் குறைவில்லை! ஊடகங்கள் பிழைக்கத் தெரிந்தவை! - ஆனால் அப்பாவி மக்களின் வாழ்க்கையில் ஏதேனும் நல்ல விடயங்கள் ஏற்பட்டனவா? என்றால் அதற்கு விடை இருந்ததையெல்லாம் பறி கொடுத்ததுதான் மிச்சமாகிறது!
1980 களின்(1971 -1980) முன் கிளர்ச்சிகளின் ஆரம்பத்தில் பொலிசாரின் - இராணுவத்தின் சோதனைகள் ஓரளவு இருந்தன! நாம் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் சுயாதீனமாக நடமாட முடிந்தது! இதை எவரும் மறுக்க முடியாது! அப்போது
ஸ்ரீமாவோ அம்மையாரின் ஆட்சியும் ஜே.ஆர். ஜெயவர்த்தன ஐயாவுடைய ஆட்சியும் நிலவின! 1972இல் புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டு 6ஆண்டுகளில் அதையும் மாற்றி ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்பட்டது! 1990 களில் (1981 -1990) வன்முறைகள் ஆரம்பித்தபின்னர் இராணுவ முகாம்கள் புதிது புதிதாக உருவெடுத்தன! முக்கியமான பகுதிகள் பாதுகாப்பு வலயங்களாக அறிவிகஇகப்பட்டு மகஇகள் வெளியேறஇறபஇபட்டனர்! இது எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது காரணம் - மகாஜனாவில் படித்த காலத்தில் நாம் சில உதைபந்தாட்டப் போட்டிகளுக்காக பலாலி ஆசிரிய கலாசாலை மைதானத்துக்குப் போவதுண்டு! அதேபோல வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற காலத்தில் அடிக்கடி பலாலி - மயிலிட்டி போன்ற இடங்களுக்கு பலாலி விமான நிலையத்தைச் சுற்றி நாம் துவிச்சகஇகரவண்டிகளில் பயணித்ததுண்டு! ஒரு நாள் நாம் சில நண்பர்கள் பலாலி - மயிலிட்டி - காங்கேசந்துறை - கீரிமலை - சேந்தாங்குளம் - மாதகல் - திருவடிநிலை - பொன்னாலை சென்று பின் காரைநகர் கச்சோரினா பீச்சில் குளித்துவிட்டு மூளாயில் உள்ள என்வீட்டில் உணவருந்தி திரும்பிய அனுபவம் மறக்க முடியாதது!
இது 83இல்!
இதன்பிறகு இந்திய இராணுவம் வருவதற்கு முன் அப்பகுதியிலிருந்து (பலாலி - கட்டுவன் மயிலிட்டி தெற்கின் ஒரு பகுதி குரும்பசிட்டியின் ஒரு பகுதி - வயாவிளான் போன்ற இடங்களில்) வெளியேறியவர்கள் சில காலங்கள் கடந்து இந்திய இராணுவம் வந்த பின்னர் சில பகுதிகளுக்குத் திரும்ப முடிந்தது! பின்னர் இந்திய இராணுவத்துடனான மோதல்கள் ;ரம்பிக்கப்பட்டு அவர்கள் வெளியேறிய பின் இப்பாதுகாப்பு வலயம் மேலும் விஸ்தீரணமடைந்து தெல்லிப்பழைச் சந்தியையும் உள்ளடக்கி - பலாலி வீதியில் எமது பள்ளிக்கூடத்தையும் தாண்டி மேலும் அதியுயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டது! இது நான் திரிந்த இடமென்பதால் மிகவும் உறுதியோடு தெரிவிக்க முடியும். இதேபோல யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதி ஆனையிறவு - கிளிநொச்சி - மாங்குளம் என்று வவுனியாவரை இராணுவ முகாம்களில் நாம் கொழும்பு பயணிக்கும்போது இரயிலிலும் பஸ்ஸிலும் எத்தனை முறை இறந்கி ஏறிய அனபவங்களுண்டு! வடக்கு கிழக்கில் மட்டுமல்ல மலையகத்திலும் திடீர் திடீரென இராணுவம் மறிக்கும். எனக்கு நல்ல தொரு அனுபவம் 1987இந்திய ஒப்பந்தத்துக்கு முன்னர் நான் பஸ்ஸில் நுவரெலியா லங்காதீஸ்வரர் கோவிலுக்குச் சென்ற சமயத்தில் எமது பஸ் இடைநிறுத்தப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டது. அப்போது நான் தபாலக அடையாள அட்டை வைத்திருந்தேன்! சிங்களம் பேசுவதில் ஓரளவு சிறுவயதிலேயே தேர்ச்சியிருந்தமையால் நான் தப்பித்தேன்!
இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான போது ஏற்பட்ட வன்முறைகளின்போது நான் கொழும்பிலிருந்தேன்.
இந்திய இராணுவம் புலிகளின் மோதலின்போது யாழில் இருந்தேன்!
இந்திய இராணுவத்தை வெளியேற்றியபோது புலிகளும் - பிரேமதாசா அரசும் ஒரு தேனிலவில் இருந்தார்கள்! தமது அமைப்பை அரசியற் கட்சியாகப் பதிவு செய்தார்கள்!

பின்னர் பிரேமதாசா கொல்லப்பட வேளையில் ஒரு கலவரத்தை பலர் எதிர்பார்த்தார்கள்!உண்மையாகச் சொல்லப்போனால் தமிழர்கள் எல்லோரும் ஓட ரெடியாகவே இருந்தார்கள் அன்றிரவு! அப்படி ஒரு உள் பயமிருந்தது! நான் அதை வெளிப்படையாகவே சொல்கிறேன்! ஏற்பதும் ஏற்காததும் அவரவர் மனச்சாட்சி சொல்லும்! ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமைதி பேணப்பட்டது! ஏனெனில் அப்போது நான் கொழும்பில்தான் இருந்தேன்! போன ஒரு வீட்டில் ஒரு நாள் தங்க வேண்டியிருந்தது!
இதன்பிறகு டிங்கிரி பண்டா விஜேதுங்கா ஜனாதிபதியானார் - அதன்பிறகு சந்திரிகா அம்மையார் - தற்போது மகிந்தாவின் காலம் முடியப் போகிறது!(ஜனாதிபதி பதவியைச் சொன்னேன்!)
இந்தக் காலங்களில் ஏற்பட்ட தாக்குதல்கள் - அழிவுகள் முன்னரைவிட ஏராளம் -இடப்பெயர்வுகளும்தான்!
2002இல் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தம் ஒரு புதிய உதயத்தை தோற்றிவித்திருந்தாலும் அதுவும் 2006இல் இருண்டது!
சுதந்திரமாக நடமாடும் உரிமையும் மறுக்கப்பட்டு ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல பாதுகாப்பு அமைச்சில் அனுமதி வேறு! இதில் போதாக் குறைக்கு புலிகளின் இந்தப் பாஸ் நடைமுறையால் இன்று நிர்க்கதியான மக்களைப் பற்றி எவரும் கண்டுகொள்வதாக இல்லை! இதற்குத்தான் நான் முதல் ஒரு பதிவிட்டேன் - உனக்கொரு நீதி - ஊருக்கொரு.... என்று!
ஜே. ஆர் - பிரேமதாசா - சந்திரிகா இவர்களை விட சாதுரியமாக மகிந்த தனது சாணக்கியத்தால் புலிகளை தற்போது பலமிழக்க வைத்திருக்கிறார் நாட்டினுள்! இதை நான் எழுதுவதால் ஏதோ நான் இவர்களுக்கு வால் பிடிப்பதாக எண்ண வேண்டாம்! உண்மையை நடந்ததை எழுதுகிறேன். இந்தியப் பதிவர் சக்திவேல் அவர்களிடம் ஒரு தடவை மகிந்தவைப் பற்றிய ஒரு செய்தியை ( You Tubeஇல் வெளியாயிருந்தது) தெரிவித்தபோது ஜே.வி.பி கிளர்ச்சியின்போது ஒரு மனிதாபிமான சட்டத்தரணியாக அவர் சிங்கள மக்களுக்கு விளங்கினார். எப்போதும் சில விடயங்கள் ஒரே மாதிரி இருக்க முடியாது! இரவு பகல் போல - சூடு குளிர் போல -இன்பமும் துன்பமும் போல -வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருபவையே!
கடந்த பிடித்ததும் பிடிக்காததும் பதிவின்போது அன்பாய் இருப்போம் என்று குறிப்பிட்டேன்! இப் பதிவில் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளேன்!
முதல் வாக்கியம் யோகருடையது! இது வெற்றிவேற்கை வரி!
சரி இப்போது விடயத்திற்கு வருவோம்! அவரவர் மனநிலை எப்போது தெளிவுபெறுமென்பது யாருக்கும் தெரியாது! இவ்வளவும் நடந்த பிறகும் எமது புத்திக்கு எட்டியதை நாம் செய்யப் போகிறோமா? அல்லது இன்னும் எமக்காக என்றும் போராடும் தலைவர்கள் சொல் கேட்கப் போகிறோமா? என்பதுதான் இப்போதைய கேள்வி! இரண்டாவதாகச் சொன்ன வார்த்தையை கொஞ்சம் அழுத்தம் திருத்தமாக மீண்டும் சொல்கிறேன்! இன்னும் எமக்காக என்றும் போராடும் தலைவர்கள்!
இன்று அப்பாவிமக்கள் தமிழர்களும் முஸ்லிம்களும் தெருவோரங்களில் அடுத்த வேளைக்கு என்ன செய்வதென அறியாத நிலையில் தமது இருப்பைத் தக்கவைக்க அதிகாரவர்க்கத்துக்கு ஒரு தேர்தல்! சுதந்திர காலம் தொடக்கம் அடிமை வாழ்வு வாழும் மலையக மக்களையும் - வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களையும் நான் கவனத்தில் எடுத்துத் தான் இப்பதிவைப் போடுகிறேன்! வடக்கு கிழக்கத் தமிழர்களைக் காட்டிலும் தென் - மேல் பகுதிச் சேரி வாழ் மக்களையும் இலங்கை வாழ் மக்களாக ஏற்கவேண்டும்!
இப்போது எனக்குப் பிடித்த அரசியற் தலைவரான ஈழத்துக் காந்தி தந்தை செல்வாவின் கடிவுள்தான் தமிழரைக் காப்பாற்ற வேண்டும் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது!
தலைப்பில் போட்டபடி மகிந்தவா? சரத் பொன்சேகவா? சரத் என் டி சில்வாவா? வேறு யாராவது......எவரோ?
ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் சிறுபான்மைச் சமூகங்களின் கட்சித் தலைவர்கள் என்ன முடிவு செய்யப் போகிறார்கள்?
தமிழர் கூட்டமைப்பு - இ.தொ.கா - ஸ்ரீ.மு.கா - ம.மு.மு - ஈபிடிபி - மனோ கணேசன் - பிள்ளையான அணி - புளொட் - ஈபிஆர்எல்எப - தமிழர் விடுதலைக் கூட்டணி இவைகளின் நிலைப்பாடு என்ன?
Sunday, November 8, 2009
மூளாத்தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி...........சுந்தரர் தேவாரம்!
மீளா அடிமை எனத் தொடங்கும் 7ஆந் திருமுறைப் பாடல் எனக்கு ரொம்பவே பிடித்த பாடல். எம்மூரவர் சிலர் மூளாய்த்தீ என்றும் பாடுவது உண்டு! மூளாத தீ - தணலாக இருப்பது என்ற பொருள்! தமிழர் இதயங்கள் அனைத்தும் அப்படித்தானே இருக்கின்றன!
மனம் விட்டுப் பேசக்கூட அருகில் பெற்ற தாயுமில்லை! மனைவியுமில்லை! சிறுவயது உயிர் நண்பர்களும் இல்லை!குழந்தை மனதோடு இருக்கப் பழகிய எனக்கு குழந்தைகள் இருந்தும் - அவர்களோடு விளையாட அருகில் இல்லை!
இது எனக்கு மட்டுமல்ல - பலருக்கு!
வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு ஓரளவாவது சுதந்திரமிருக்கிறது!
குறிப்பாக பாவம்! முட்கம்பிச் சிறையினுள்ளும் - வெளிச் சிறையிலுள்ள குற்றமற்ற அப்பாவித் தமிழ்க்கைதிகளுக்கும் ஈழத்திலேயே நிர்க்கதியான மக்களும் எம்மைவிட சுதந்திரத்தைக் காண - தேட வேண்டியவர்களே!
மனம் விட்டுப் பேசக்கூட அருகில் பெற்ற தாயுமில்லை! மனைவியுமில்லை! சிறுவயது உயிர் நண்பர்களும் இல்லை!குழந்தை மனதோடு இருக்கப் பழகிய எனக்கு குழந்தைகள் இருந்தும் - அவர்களோடு விளையாட அருகில் இல்லை!
இது எனக்கு மட்டுமல்ல - பலருக்கு!
வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு ஓரளவாவது சுதந்திரமிருக்கிறது!
குறிப்பாக பாவம்! முட்கம்பிச் சிறையினுள்ளும் - வெளிச் சிறையிலுள்ள குற்றமற்ற அப்பாவித் தமிழ்க்கைதிகளுக்கும் ஈழத்திலேயே நிர்க்கதியான மக்களும் எம்மைவிட சுதந்திரத்தைக் காண - தேட வேண்டியவர்களே!
எமது வாழ்வில் 1956 - 1958 கலவரங்களை விட பின்னர் நடந்த 1977 - 1981 - 1983 - கால கலவரங்கள் பிரச்சனைகளில் நன்றாக அடிபட்டவன் - தெரிந்தவன் என்ற வகையில் வாழ்வில் தாமரை இலையில் தண்ணீர்போல பட்டும் படாமலும் இருந்தாலும் சமூகத்தைப் பற்றிய அக்கறை நிறைய உண்டு!
பதிவுலகில் கடந்த ஒரு வருடத்தில் நிறைய மனிதநேயம் கொண்ட நண்பர்களையும் சகோதரர்களையும் சந்தித்து அவர்களுடன் நல்ல முறையில் தொடர்புகளைப் பேணி வருகின்றேன்.
இம் மாதம் கருத்துப் பின்னூட்டமிட்ட இருவரைக் கண்டிப்பாக நான் குறிப்பிட வேண்டும். முதலாமவர் ஈழத்துப் பதிவர்களின் ஆதர்ஷநாயகன் லோஷன்!
இருக்கிறம் பதிவைப்பற்றிய பின்னோட்டத்தில் - இவ்வளவும் அரட்டையில் நடந்திருக்கா?
உங்கள் வேலை பற்றி சொன்னவை மனதில் சிறு கலக்கம் தந்தன..
காலம் ஒருநாள் மாறும்.. நம் கவலைகள் யாவும் தீரும்.. :)
மற்றையவர் தேனூர்தி ரமேஸ்! இலை உதிர் காலம் பதிவைப்பற்றிய பின்னோட்டத்தில் - ///இவை - எங்கள் நெஞ்சம்போல வெறுமையாக இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றும்.///
இலை துளிர் காலம் வரும் நண்பா அப்போது மனதை நிரப்பிக்கொள்ளுங்கள்.
காலம் மாறும் - பருவ காலமும் மாறும் - இது வருடத்தில் நிகழ்பவை!
எமக்கு எப்போது?
பதிவுலகில் கடந்த ஒரு வருடத்தில் நிறைய மனிதநேயம் கொண்ட நண்பர்களையும் சகோதரர்களையும் சந்தித்து அவர்களுடன் நல்ல முறையில் தொடர்புகளைப் பேணி வருகின்றேன்.
இம் மாதம் கருத்துப் பின்னூட்டமிட்ட இருவரைக் கண்டிப்பாக நான் குறிப்பிட வேண்டும். முதலாமவர் ஈழத்துப் பதிவர்களின் ஆதர்ஷநாயகன் லோஷன்!
இருக்கிறம் பதிவைப்பற்றிய பின்னோட்டத்தில் - இவ்வளவும் அரட்டையில் நடந்திருக்கா?
உங்கள் வேலை பற்றி சொன்னவை மனதில் சிறு கலக்கம் தந்தன..
காலம் ஒருநாள் மாறும்.. நம் கவலைகள் யாவும் தீரும்.. :)
மற்றையவர் தேனூர்தி ரமேஸ்! இலை உதிர் காலம் பதிவைப்பற்றிய பின்னோட்டத்தில் - ///இவை - எங்கள் நெஞ்சம்போல வெறுமையாக இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றும்.///
இலை துளிர் காலம் வரும் நண்பா அப்போது மனதை நிரப்பிக்கொள்ளுங்கள்.
காலம் மாறும் - பருவ காலமும் மாறும் - இது வருடத்தில் நிகழ்பவை!
எமக்கு எப்போது?
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
பிதற்றல்
Saturday, November 7, 2009
உனக்கொரு நீதீ! ஊருக்கொரு நீதீ! தமிழா! நீ எப்போது திருந்தப் போகிறாய்?
தன்பிழை தானறியார் தெரிந்திடினும் மனம் ஏற்கா!
மற்றவர்மேல் பழிபோடும் சாதுரியம்
வசையுரைவதிலும் சாணக்கியமானவனே!
தமிழா நீ சரியான சந்தர்ப்பவாதி!
பண்புடைய பரிவுடைய முன்வந்த மூத்தகுடி
பதவிக்கும் பணத்துக்கும் ஆசைகொண்டு
படும்பாடு பார்த்திருக்க முடியவில்லை!
படுத்திருக்க இயலவில்லை!
இடையிடையில் தோன்றும் விரக்தியும் கோபமும்தான்எழுதவைக்கிறது இந்தக் கவிப் பதிவை!
எழுத விரும்பவில்லை! இருக்கவும் விருப்பமில்லை!
ஆனாலும் ஏதோ ஒன்று எழுதவே சொல்கிறது!
1985களில் சேர்ந்திருந்த நம்மவர்கள்(பிரித்து வாசித்தால் எளிதில் புரியும்)சேர்ந்த பின்னர் பிரிவினைகள்
அழிப்பவன் எதிரி என்ற பதத்தின் பொருள்மாற்றி
தம்முள் எதிரிகளைத் தாமே உருவாக்கி
உடனிருந்து அவர்தமைக் கொன்றோழித்து
எதிரியோடுறவாடி தாம் விரும்பும் நேரங்களில் பேசுவார்கள் - அருகருகே இருந்து உண்டு களிப்பார்கள் - விருந்தினராயிருப்பார்கள் - உலவித் திரிவார்கள்.
ஒரு சில நேரங்களில் பழையதை மறந்துவிட்டு பயங்கரமாய் மோதிடுவார்!
குழந்தை –குட்டி குஞ்சு குருமன் ஆண் பெண் எந்த இருப்பும் தெரியாமல் கொன்றொழிப்பார் - கேட்டால் மக்களைக் காக்கப் போர்! விடுதலை வேண்டிய போர்!
கேள்வி கேட்க முடியாது - கருத்துச் சொல்ல முடியாது – கேட்டாலும் இவையனைத்தும் தந்திரம் உபாயம் - அவர் மொழியில் சுளிவு நெளிவு!மனதில் அன்று படித்த பட்டினத்தார் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது! தன் வினை தன்னைச் சுடும் - ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.
பல்லாண்டு காலம் புட்டும் தேங்காய்போல் வாழ்ந்த
முஸ்லீம் இனத்தவர் அனைவரையும் ஒரு நாள் அவகாசத்தில் ஊரைவிட்டு அனுப்பினர். இருநூறோ ஐநூறோ சரியாகத் தெரியாது. அனுப்பிவிட்டு அவர்தம் சொத்தை பாதுகாத்தும் கொடுக்கவில்லை. வந்தபின்னர் அவர்கள் வீட்டையும் - எம் தமிழ்ச்சாதி - அடாத்தாக வைத்துக் கொண்டு வீட்டினுள்ளும் ஏற்கவில்லை. மன்னிக்க ஏற்கவில்லை அல்ல – எழும்பிப் போகவில்லை. எவ்வளவு அயோக்கியத்தனம்.
இதையெல்லாம் பார்த்து மௌனமாய் - முட்டாளாய் - ஒரு பேச்சுப் பேசாமல் இருந்த பழிதான் - பாவமாய் இன்றைக்கு எம்மவர்களை வாட்டி வதை வதையென வதைக்கிறதோ?
வேண்டிய பொழுது வாய்திறக்கவில்லை - இன்று வாழும் தேசமெல்லாம் பேசாதது மட்டுமல்ல பற்பல போராட்டங்கள் செய்கிறோம்.
நீ ஆட்சி புரிந்த நேரத்தில் உனக்கொரு நீதி! நீ விட்டுவிட்டு வெளியேறி போராடுகையில் ஒரு நீதி! உன்னாட்சியில் நீ வைத்ததுதான் சட்டம். யாரும் எதுவும் சொல்லவோ செய்யவோ முடியாது!
ஆனால் நீ எங்கு வாழுகிறாயோ எந்த நாடானாலும் அங்கு யார் ஆட்சி செய்தாலும் உனக்கு அனைத்தும் செய்ய உரிமை உண்டு! நீ உன் சிந்தனையை கொஞ்சம் யோசித்துப் பார்த்தாயா?
மற்றவர்கள் மனிதர்கள்! நீ மட்டும் மிருகம்தான்!
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
பிதற்றல்
Saturday, August 1, 2009
எம் மக்கள் படும் துன்பம் போக்கிட நீ வந்தருள்வாய்! - மூளாய்ப் பிள்ளையாரிடம் வேண்டுகோள்!

காக்கை உருவெடுத்து காவிரியை ஓடவைத்தாய்
குள்ளச் சிறுவனாய் குறுமுனிக்கு அருள் சுரந்தாய்
கூக்குரல்போட்டுக் கதறிடும் எம்மூரவர்க்கு
கூத்தாடி மைந்தனே! குமரனின் அண்ணா! காட்டுன் கருணையை!
மூளாயூரில் வந்தமர்ந்த சித்தி விநாயகனே!
மூலமாய் இருப்பவரே! முன்வந்து காட்டிடுவாய்!
தம்பியும் நீயும் தரணியிலே ஓரூரில்
தனித்தேர் தன்னில் வீதியுலா வருவீர்கள்!
உன்னைப் பேர்த்தெடுத்த உன்னங்கி தான் கவர்ந்தார்
உள்ளமுருக வேண்டுகிறோம் உன்னடியார் நாங்களெல்லாம்!
இலங்கை இராணுவமும் இந்திய இராணுவமும்
இலக்காக அழித்தொழிக்க அடித்த ஷெல் எதுவும்
எம்மூரில் தாக்காது - எவரையும் அழிக்காது
எமைக் காத்த தெய்வம் நீ! ஏன் ஐயா இந்த மௌனம்?
ஆடிமாதம் பிறந்தாலே அரண்டிடுவார் தமிழரெல்லாம்!
ஓடிஓடி தாம் ஒழித்து உயிர் தப்ப வாழும் வாழ்க்கை
கம்பிவேலி தன்னுள் இன்று கதறுகின்றார் மக்களெல்லாம்
கல்லினுள்ளே இருந்தெமக்கு கருணைபுரி நற் தெய்வம்!
ஊர்விட்டு நாடுவிட்டு வேறு உலகில் இருப்பவன் நான்
ஊனின்றி உறக்கமின்றி உன்னையே துதிக்கின்றேன்!
காட்டிடுவாய் கயவரை, காலமெல்லாம் தாம் செய்த
காருண்யமில்லா களவுதனைக் கண்டிப்பாய்!
காவலாக வந்திங்கு கலி நீக்க கருணைபுரி
காதலின் மிகுதியாலே கதறுகிறேன் காப்பாற்று!
வலக்காலில் துளைத்திட்ட ஷெல்த்துண்டும்
வலக் கையில் ஏறிய அம்பு போன்ற குச்சியும்
என்நெஞ்சில் பாய்ந்த புலிகளின் குண்டினாலும்
எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் செய்தவன்நீ
என்னைக் காக்கும் தெய்வம் நீ என்னுயிரில் உறைபவன் நீ
எம்மூரார் படும் துன்பம் போக்கிட நீ வந்தருள்வாய்!
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
பிதற்றல்,
மூளாய்,
வேண்டுகோள்
Friday, July 31, 2009
நல்லூர் முருகா காப்பாத்தப்பா! இந்த மோட்டுத் தமிழரை! கொலை கொள்ளை கடத்தல் புரிந்தவர்கள் வாயில் தர்மம் - திருக்குறள் எல்லாம் இப்போது வருகுதப்பா!

அகிலத்தைக் காப்பவனே!
அநீதியை அழிப்பவனே!
அக்கிரமம் செய்தோர்
அறம் உரைக்கும் நாளிதையா!
அப்பாவி மக்களை அந்தரத்தில் தவிக்கவிட்டு
அந்நிய நாட்டில் அவரொருவர் மணம் செய்தார்!
ஆண்டியாக்கியபின் அவல வாழ்வு போதாதென்று
அந்நிய நாட்டில் அரசு அமைக்கப் போகிறார்கள்!
காவலுக்கு வந்தவனை கயமையாகக் கொன்ற பின்னர்
காரணத்தைச் சொல்லவில்லை கட்டாகப் பழிசொல்வார்!
மன்னிப்பை வேண்டும் பக்குவம் மனிதர்க்கு உண்டென்ற
மாண்பான சிந்தனையை மறந்துவிட்டார் மோடரிவர்!
நாயைவிடக் கேவலமாய் மிருகம் ஒன்று உண்டென்னில்
பாயில் படுத்தவனைக் கொன்றொழித்த புலிகள்தான்!
வீடிழந்து தொழிலிழந்து அறிவுக்கல்வி தானிழந்து
வீணாக முட்கம்பிச் சிறையினுள்ளே வாடுகின்றார்!
வணங்காமண் பொருட்களும் கொழும்பில் கிடக்கிறது
வரிசையாய் மலங்கழிக்க வாக்களித்த பாவத்திற்கு
வன்னி மக்கள் துயருறும் வேதனையை அறியாமல்
வீறாப்புப் பேச்சையும் நீ அடக்க வா முருகா!
5 நிமிடத்தில் உதித்த என் தமிழ் கவி இது! எப்படி?
Tuesday, July 28, 2009
சிங்கமாவது - புலியாவது? எருமைகள் ஒன்று சேர்ந்தால் எதுவும் நடக்கலாம்!
பதிவிலிடவேண்டும் என்று பல நாட்களாக எடுத்த வைத்திருந்த இந்த எருமை மாடுகளின் ஒற்றுமையை இன்று 2ஆம் திருவிழா பிதற்றல்களில் இணைக்கின்றேன்! அறிவு இனியாவது எம் தமிழருக்கு வருமா?
எமது நாட்டின் சட்டங்கள் யாவும் ஒவ்வொரு ஆட்சியாளர்களது தேவை மற்றும் தமது ஆதிக்க பலத்தை நிலைநிறுத்த ஏற்படுத்தப்பட்டவை! அல்லது மாறஇறத்திற்கு உள்ளாகஇகப்படுபவை! சாதாரண மக்களுடைய தேவை கருதி இயற்றப்படும் சட்டங்களாக எதுவுமே இல்லை!
ஒரு சாதாரண அரச தொழிலுக்கு பல பரீட்சைகள் - நேர்முகத் தேர்வுகள் வைத்து அரச அலுவலராக நியமனம் பெறுபவர்கள் 20வருட காலம் உத்தியோகம் செய்த பின்னர் 55 அல்லது 60 வயதுகளின் பின்பே தமது ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்! ஆனால் பாராளுமன்றில் 5 வருடங்கள் எந்தவித அறிவுமின்றி மக்களுடைய வாக்குகளில் பதவி பெறும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு(சட்டம் பல நிபந்தனைகளை விதித்திருந்தாலும் நாலந்த எல்லாவலையைக் கொன்ற உளுப்பினரும் சில காலம் தண்டனைபெற்ற பின்னர் - மீண்டும் சபை உறுப்பினரானார்) ஓய்வூதியம் அவர் பதவிமுடிவடைந்த பிறகு வழங்கப்படுகிறது!
நான் ஏன் தேவையில்லாமல் பிதற்றுவான் இதோ அந்த எருமை மாட்டு வீடியோ பாருங்களேன்!
http://www.youtube.com/watch?v=LU8DDYz68kM&eurl=http%3A%2F%2Fwww%2Eorkut%2Ecom%2FFavoriteVideos%2Easpx%3Fuid%3D153820329877180788%26na%3D4%26nst%3D18%26nid%3DdWlkXzI1MzM5NjM0NnxmdF92aWQsbndfMHxhZF8xMjM4NjA0&feature=player_embedded
எமது நாட்டின் சட்டங்கள் யாவும் ஒவ்வொரு ஆட்சியாளர்களது தேவை மற்றும் தமது ஆதிக்க பலத்தை நிலைநிறுத்த ஏற்படுத்தப்பட்டவை! அல்லது மாறஇறத்திற்கு உள்ளாகஇகப்படுபவை! சாதாரண மக்களுடைய தேவை கருதி இயற்றப்படும் சட்டங்களாக எதுவுமே இல்லை!
ஒரு சாதாரண அரச தொழிலுக்கு பல பரீட்சைகள் - நேர்முகத் தேர்வுகள் வைத்து அரச அலுவலராக நியமனம் பெறுபவர்கள் 20வருட காலம் உத்தியோகம் செய்த பின்னர் 55 அல்லது 60 வயதுகளின் பின்பே தமது ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்! ஆனால் பாராளுமன்றில் 5 வருடங்கள் எந்தவித அறிவுமின்றி மக்களுடைய வாக்குகளில் பதவி பெறும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு(சட்டம் பல நிபந்தனைகளை விதித்திருந்தாலும் நாலந்த எல்லாவலையைக் கொன்ற உளுப்பினரும் சில காலம் தண்டனைபெற்ற பின்னர் - மீண்டும் சபை உறுப்பினரானார்) ஓய்வூதியம் அவர் பதவிமுடிவடைந்த பிறகு வழங்கப்படுகிறது!
நான் ஏன் தேவையில்லாமல் பிதற்றுவான் இதோ அந்த எருமை மாட்டு வீடியோ பாருங்களேன்!
http://www.youtube.com/watch?v=LU8DDYz68kM&eurl=http%3A%2F%2Fwww%2Eorkut%2Ecom%2FFavoriteVideos%2Easpx%3Fuid%3D153820329877180788%26na%3D4%26nst%3D18%26nid%3DdWlkXzI1MzM5NjM0NnxmdF92aWQsbndfMHxhZF8xMjM4NjA0&feature=player_embedded
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
பிதற்றல்
Monday, July 27, 2009
பிதற்றல்கள் தொடரும் - ஏனென்றால் ஊரைவிட்டு ஓடிப்போனவன் அல்லது விரட்டப்பட்டவன் - ஊரைப்பற்றியும் உறவுகளைப்பற்றியும் ஒவ்வொருகணமும் யோசிப்பவன் நான்!
எப்படி என்னால் இருக்க முடியும்? அதனால்த்தான் இந்தப் பிதற்றல்கள்! உயிரைக் காப்பாற்றிய செந்தமிழ்க்கடவுள் என் உடலில் பல வெளிக் காயங்களை ஏற்படுத்தியிருக்கிறான் -
ஆம் 10.10.1987 புரட்டாசிச்சனி மதியம்.
நல்லை ஆதீனத் தொண்டர் அணியினராகிய நாம் வண்ணார்பண்ணைப் பெருமாள் கோவிலில் தொண்டுப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மதியம் 1.00 மணியளவில் குண்டுச் சத்தங்கள் கேட்டன. கோவில் மூடப்பட்ட பின் அப்போது நான் தங்கியிருந்த கந்தர்மடம் பழம் றோட் பிள்ளையார் கோவில் ஐயா வீட்டிற்குப் போய் சற்று நேரத்தில் எனது நண்பன் ஒருவன் வந்து வாடா நிறைய சனம் காயப்பட்டுக் கிடக்காம். உதவ வேணும் என்று சொல்ல அவனுடன் யாழ்ப்பாண நகருக்குப் போனேன். குண்டுகள் வந்து விழுந்தபடி இருந்தது. என் கண்முன்னாலேயே ஒரு இளைஞன் குண்டடிபட்டு விழுந்தான். சைக்கிளில் விழுந்து கிடந்த சுபாஸ் ஹோட்டலுக்கு முன்பாக இருந்த பிள்ளையார் கோவிலுக்கு நானும் எனது நண்பனும் ஓடிப் போனோம். நாங்கள் எங்கள் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு ராணித் தியேட்டர் பக்கத்திலிருந்து அவருக்குப் பக்கத்தில் செல்லவும் அடுத்த குண்டு அதே இடத்தில். அந்த இடம் ஒரே புகை மண்டலமாயிருந்தது. காதுக்குள் கிண் என்ற சத்தம் மாத்திரம் – அந்த இளைஞனின் உடல் சிதறியிருந்தது.எனக்கு சற்று நேரத்தின்பின்னர்தான் என்னுடம்பில் ஏதோ செய்வதுபோல இருந்தது. பார்த்தால் எனக்கு ஒன்பது இடங்களில் ஷெல் துண்டுகள் - சின்னச் சின்ன ஷெல்த் துண்டுகள் 8 இடங்களில் - ஒரு பெரிய துண்டு என் வலது தொடையில்.அடுத்தது 12.06.2006இல் புலிகளால் சுடப்பட்ட நடுநெஞ்சுக் காயம் - துளைத்த குண்டு பின்புறமாக வெளிப்பட்டிருந்தாலும் அவன் செயல் எந்தச் சேதாரமும் இல்லை! இந்த 2 காயங்களுக்கு மேலாக வைத்தியர்களால் உள்ளிருந்த சிந்திய இரத்தத்தை வெளியேற்ற குழாய்கள் பொருத்தத் துளைத்த 3 ஓட்டைகள்! கடந்த 16.07.2009இல் வலதுஉள்ளங்கையில் நுழைந்து மேற்கையால் வெளியேறிய பென்சில் அளவு தடிப்புக் கொண்ட ஒரு மரக் குச்சியும் எதுவும் செய்யவில்லை!
விசர்ச் செல்லப்பாவின் சீடன் யோகரின் பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது -
தேகம் நீயல்லவென்றானெங்கள் குருநாதன்
சித்தத்திற்றிகழுகின்றானெங்கள் குரு நாதன்
அதேபாடலில் இறுதியில்
தாகத்தையாக்கிவிட்டானெங்கள்குருநாதன்
சத்தியத்தைக் காணவைத்தானெங்கள்குருநாதன்!
ஆம் சத்தியம் என்று சொல்லப்படும் உண்மைகளைக் காண இன்றுவரை என்னை உயிரோடு வைத்திருக்கிறான் என்னுடைய தமிழ்க் கடவுளான கலியுகவரதன் நல்லூரில் வாழும் முத்தமிழ் வேந்தன்!வள்ளி தெய்வானையுடனுறை சுவாமிநாதன்!
மணிவாசகரின் சிவபுராணத்தில் புறந் தோல் போர்த்தெங்கும் புழுவழுக்குமூடிமலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா! என்று உடம்பில் 9 வாசல்கள் இருப்பதைக் கறிப்பிடுகிறார் எனக்கோ ஒன்பதொடொன்றொடேழு இருக்கிறது! இது சம்பந்தரின் அடிகள்! எல்லாம் அவன் செயல்! சிவன் செயல்!
ஆம் 10.10.1987 புரட்டாசிச்சனி மதியம்.
நல்லை ஆதீனத் தொண்டர் அணியினராகிய நாம் வண்ணார்பண்ணைப் பெருமாள் கோவிலில் தொண்டுப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மதியம் 1.00 மணியளவில் குண்டுச் சத்தங்கள் கேட்டன. கோவில் மூடப்பட்ட பின் அப்போது நான் தங்கியிருந்த கந்தர்மடம் பழம் றோட் பிள்ளையார் கோவில் ஐயா வீட்டிற்குப் போய் சற்று நேரத்தில் எனது நண்பன் ஒருவன் வந்து வாடா நிறைய சனம் காயப்பட்டுக் கிடக்காம். உதவ வேணும் என்று சொல்ல அவனுடன் யாழ்ப்பாண நகருக்குப் போனேன். குண்டுகள் வந்து விழுந்தபடி இருந்தது. என் கண்முன்னாலேயே ஒரு இளைஞன் குண்டடிபட்டு விழுந்தான். சைக்கிளில் விழுந்து கிடந்த சுபாஸ் ஹோட்டலுக்கு முன்பாக இருந்த பிள்ளையார் கோவிலுக்கு நானும் எனது நண்பனும் ஓடிப் போனோம். நாங்கள் எங்கள் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு ராணித் தியேட்டர் பக்கத்திலிருந்து அவருக்குப் பக்கத்தில் செல்லவும் அடுத்த குண்டு அதே இடத்தில். அந்த இடம் ஒரே புகை மண்டலமாயிருந்தது. காதுக்குள் கிண் என்ற சத்தம் மாத்திரம் – அந்த இளைஞனின் உடல் சிதறியிருந்தது.எனக்கு சற்று நேரத்தின்பின்னர்தான் என்னுடம்பில் ஏதோ செய்வதுபோல இருந்தது. பார்த்தால் எனக்கு ஒன்பது இடங்களில் ஷெல் துண்டுகள் - சின்னச் சின்ன ஷெல்த் துண்டுகள் 8 இடங்களில் - ஒரு பெரிய துண்டு என் வலது தொடையில்.அடுத்தது 12.06.2006இல் புலிகளால் சுடப்பட்ட நடுநெஞ்சுக் காயம் - துளைத்த குண்டு பின்புறமாக வெளிப்பட்டிருந்தாலும் அவன் செயல் எந்தச் சேதாரமும் இல்லை! இந்த 2 காயங்களுக்கு மேலாக வைத்தியர்களால் உள்ளிருந்த சிந்திய இரத்தத்தை வெளியேற்ற குழாய்கள் பொருத்தத் துளைத்த 3 ஓட்டைகள்! கடந்த 16.07.2009இல் வலதுஉள்ளங்கையில் நுழைந்து மேற்கையால் வெளியேறிய பென்சில் அளவு தடிப்புக் கொண்ட ஒரு மரக் குச்சியும் எதுவும் செய்யவில்லை!
விசர்ச் செல்லப்பாவின் சீடன் யோகரின் பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது -
தேகம் நீயல்லவென்றானெங்கள் குருநாதன்
சித்தத்திற்றிகழுகின்றானெங்கள் குரு நாதன்
அதேபாடலில் இறுதியில்
தாகத்தையாக்கிவிட்டானெங்கள்குருநாதன்
சத்தியத்தைக் காணவைத்தானெங்கள்குருநாதன்!
ஆம் சத்தியம் என்று சொல்லப்படும் உண்மைகளைக் காண இன்றுவரை என்னை உயிரோடு வைத்திருக்கிறான் என்னுடைய தமிழ்க் கடவுளான கலியுகவரதன் நல்லூரில் வாழும் முத்தமிழ் வேந்தன்!வள்ளி தெய்வானையுடனுறை சுவாமிநாதன்!மணிவாசகரின் சிவபுராணத்தில் புறந் தோல் போர்த்தெங்கும் புழுவழுக்குமூடிமலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா! என்று உடம்பில் 9 வாசல்கள் இருப்பதைக் கறிப்பிடுகிறார் எனக்கோ ஒன்பதொடொன்றொடேழு இருக்கிறது! இது சம்பந்தரின் அடிகள்! எல்லாம் அவன் செயல்! சிவன் செயல்!
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
பிதற்றல்
Subscribe to:
Posts (Atom)



