அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label தந்தை செல்வா. Show all posts
Showing posts with label தந்தை செல்வா. Show all posts

Monday, April 28, 2014

தந்தை செல்வா சமாதியில்!

நேற்று முன்தினம் நடைபெற்ற செல்வா நினைவுப் பேருரை சம்பந்தமான செய்திகள் எதுவுமே இதுவரை வெளிவரவில்லை! என்ன உலகமடா இது!

படங்களைப் பதிவிடுவதில் சில சிக்கல்கள் இருப்பதால் மேலதிக படங்களை இணைக்க முடியவில்லை! மன்னிக்கவும்!

Friday, April 25, 2014

தந்தை செல்வாவின் 37ஆவது நினைவு தினம் நாளை - 26.04.2014!


தந்தை செல்வாவைப் பற்றி அறிந்து கொள்வதற்காக இந்தக் கட்டுரைகளையும் படங்களையும் சேரத்துள்ளேன்! தினகரனில் வெளியான படங்களும், வீரகேசரியில் வெளியான கட்டுரைகள் இரண்டும், இந்தியாவிலிருந்து வெளிவரும் ஈழசுதந்திரனில் நான் எழுதிய கட்டுரையும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. தந்தை செல்வாவின் நூற்றாண்டு விழா அவையினரால் வெளியிடப்பட்ட 4 பக்க குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது.

Tuesday, April 26, 2011

இன்று ஈழத் தமிழர் தலைவர் தந்தை செல்வா அவர்களின் நினைவு தினம்


ஈழத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா அவர்களின் நினைவு நாள்(26.04.2011) இன்றாகும்.

அவர் சொல்லிய வழியில் சென்றிருந்தால் இன்று உருப்படியான நிலையில் தமிழ் மக்கள் இருந்திருப்பார்கள். ஆனால் எல்லாம் எதிர்மாறாக ... நடந்தவற்றை எண்ணும்போது......... முடியவில்லை!

அவரது இறுதி வசனம் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று!

அவரது நினைவு நாளில் அவரை மனதார நினைப்பதை மட்டும் என்னால் செய்யமுடியும்!

Thursday, March 31, 2011

தந்தை செல்வா பிறந்த தினம் இன்று!

Monday, April 26, 2010

தந்தை செல்வாவின் நினைவு நாள் இன்று


ஈழத் தமிழினத்தின் தலைவர் தந்தை செல்வா அவர்களின் நினைவு (26.04.2010) இன்றாகும்.

Wednesday, March 31, 2010

தந்தை செல்வாவுடன் நாடாளுமன்றிலிருந்த ஆனந்தசங்கரி அவர்களே சரியான தெரிவு!

அன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வா அவர்களும் தற்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி அவர்களும் 1970ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றிபெற்று ஒரே காலத்தில் நாடாளுமன்றில் இருந்தவர்கள்.

2010தேர்தலில் போட்டியிடும் தமிழர்களில் தந்தை செல்வாவுடன் நாடாளுமன்றில் ஒன்றாயிருந்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர் ஒருவரே! தமிழரசுக் கட்சியின் இன்னொருவரான பண்டிதர். கா.பொ. இரத்தினம் அவர்கள் இப்போதிருக்கும் மற்றைய உறுப்பினராவார்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து தெரிவான 3 உறுப்பினர்களில் இருவர் அரசுடன் இணைய தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் தோற்ற நிலையில் தமிழ்க் காங்கிரஸின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினராக - தமிழர் கூட்டணியிலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் தொடர்ந்தவரும் இவர் ஒருவரே!

1965இல் கிளிநொச்சி - கரைச்சி கிராம சபையின் தலைவராக இருந்து பின் 1968இல் கிளிநொச்சி நகர சபைத் தலைவராகி - கிளிநொச்சித் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக 1970இல் இருந்து 1983 வரை தொடர்ந்து இருந்த பெருமைக்குரியவர் - ஆனந்தசங்கரி அவர்கள்.

1989இல் யாழ்ப்பாணத்திலும் 2004இல் வன்னியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்த இவர் 2000 2001களில் நடைபெற்ற தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவராவார்.

2001 தேர்தலில் புலிகளின் ஆதரவாளர்களால் திட்டமிட்டே தோற்கடிக்கப்பட்டார்.

இவருக்கு 2006இல் ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ அமைப்பு கௌரவ விருது வழங்கியமை - இவருடைய துணிச்சலுக்கும் நீதிக்குமான ஒரு சான்றாகும். போரின்போது எவருமே மக்களுக்காக (சிலர் ஏகப்பிரதிநிதிகளுக்காக குரலெழுப்பியது வேறு)குரலெழுப்பாத நிலையில் அரசுடைய முகமூடிகளைக் கிளித்தெறிந்து உண்மை நிலைகளை அறியத் தந்தவர்.

ஆசிரியராக - சட்டத்தரணியாக இருந்த இவர் கிராம சபையிலிருந்து ஆரம்பித்து கிளிநொச்சியை தனி மாவட்டமாக்கிய பெருமைக்குரியவராவார்!

ஒரு மாவட்டத்தை உருவாக்கியவர் - அந்த மாவட்டத்திற்கே அழிவு என்ற போதும் - தனது மக்கள் கொடுரமான அவலங்களைச் சந்திக்கும்போது - மௌனம் சாதிக்காமல் தன்னாலியன்றதைச் செய்ததை - மறந்துவிடாமல், அவரது அனுபவம் - ஆற்றல் - துணிவு இவற்றை கவனித்து இம்முறை நடைபெற இருக்கும் தேர்தலில் யாழ் மாவட்டத்திலும் வன்னி மற்றும் மட்டக்களப்பு, கொழும்பு மாவட்டங்களிலும் ஆனந்தசங்கரி அவர்கள் தலைமையில் இயங்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆதரிப்போமாக!

Tuesday, March 30, 2010

தீர்க்கதரிசி தந்தை செல்வாவின் பிறந்தநாள் நாளை!

தமிழ்ச்சமூகம் அதிருப்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அதனால்தான் உணர்ச்சிமிக்க சில இளைஞர்கள் ஆயுதங்களைத் தூக்கி உள்ளனர்.
ஆயுதங்கள் அழிவுக் கருவிகள்.
ஆயுதத்தைத் தூக்கியவருக்கும் அது அழிவைக் கொடுக்கும்.


அகிம்சை அப்படியானதல்ல. போராடுபவர்களின் தார்மீக உரிமையை வளர்க்கும். போராடுவோரை ஆளவோ, அடக்கவோ முடியாத நிலைமையை ஆளவும் அடக்கவும் முயல்வோருக்கு ஏற்படுத்தும். அகிம்சைப் பாதையில்தான் எம் போராட்டம் அமையும். அதிலிருந்து சற்றும் விலகமாட்டோம்.

இறுதியாக தந்தையவர்கள் தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறிய தீர்க்கதரிசன வார்த்தைகளை நாம் நிதானமாக சிந்திப்பது அவசியம்.

வாழும் உரிமைக்கான போராட்டத்தில் இன்றைய நிலையில் தந்தையின் நாமத்தைச் சொல்வதற்கோ அல்லது அவரது தமிழரசுக் கட்சியையும் அதன் சின்னத்தையும் உபயோகப் படுத்துவதற்கோ இன்றுள்ள தமிழரசுக் கட்சியினருக்கு ஒரு யோக்கியதையும் இல்லை!

கடந்த 2004 பொதுத் தேர்தலில் தலைவர் ஆனந்தசங்கரியவர்கள் - தமிழர் விடுதலைக் கூட்டணியை பிரிந்து சென்றவர்கள் பயன்படுத்த முடியாதென நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்த காரணத்தினால் நியாயமற்ற முறையில் ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்த தமிழரசுக் கட்சியை பயன்படுத்தினார்கள். அதனால் ஏற்பட்ட பாரதூரமான விளைவுகளை யோசிக்காமல் மீண்டும் இம்முறை தமக்குள் பிளவுண்டு அநியாயத்திற்கு துணைபோகிறார்கள்.

நாளை நடைபெறவுள்ள அவரது பிறந்த தின நினைவில் இந்தப் பரிதாபத்துக்குரியவர்கள் என்ன நியாயங்களை முன்வைக்கப் போகிறார்களென பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே தமிழ் மக்களைச் சொல்லொணாத துயரத்தில் மாட்டிவிட்டிருக்கும் தமிழரசுக்கட்சியினர் தற்போது ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்தும் விதங்களில் தமது தேர்தல் பேச்சுக்களை வீசிவருகிறார்கள். நேரத்துக்கு ஒரு பேச்சுப் பேசும் பேச்சாளராக தற்போதைய தமிழரசுக் கட்சித் தலைவர் சம்பந்தன் பேசி வருவதும் யாவரும் அறிந்ததே!

தந்தையின் பெயரை உச்சரிப்பதற்கே தகுதியற்ற இவர்கள் பதவிகளுக்காக தந்தையின் பெயரை சொல்லியே மக்களை ஏமாற்ற முற்படுகிறார்கள்!

Thursday, March 11, 2010

அமரர்கள் ஜீஜீயும் தந்தை செல்வாவும்!


பொன்னம்பலம், 1901 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் கணபதி காங்கேசர், யாழ்ப்பாணத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள அல்வாய் என்னும் ஊரைச் சேர்ந்தவர், தபால் அதிபராகப் பணியாற்றினார். தாயார் மானிப்பாய்க்கு அண்மையிலுள்ள நவாலியைச் சேர்ந்தவர். பொன்னம்பலம், யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும், கொழும்பு சென் ஜோசப் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்னர் உயர் கல்விக்காகக் கேம்பிரிட்ஜ் சென்று இயற்கை அறிவியல் துறையிலும் சட்டத்துறையிலும் பட்டம் பெற்றார். இலங்கை திரும்பிய அவர் கொழும்பில் வழக்கறிஞராகத் தொழில் புரிந்தார். நல்ல வாதத் திறமை கொண்ட பொன்னம்பலம் சிறந்த குற்றவியல் வழக்கறிஞராகப் புகழ் பெற்றார். 1948 ஆம் ஆண்டில் அரச வழக்கறிஞர் (King’s Counsel) என்னும் தகுதியைப் பெற்றுக்கொண்டார்.

இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். இவரது மகன், குமார் என்று அழைக்கப்பட்ட காசிநாதர் காங்கேசர் பொன்னம்பலம், இலங்கைத் தமிழர் அரசியலில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். இனவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1931 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது அரசாங்க சபைக்கான தேர்தலில் மன்னார்-முல்லைத்தீவுத் தொகுதியில் பொன்னம்பலம் போட்டியிட்டாராயினும் வெற்றிபெற முடியவில்லை. ஆயினும் இது இவரின் அரசியல் வாழ்வின் தொடக்கமாக அமைந்தது. 1934 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் பருத்தித்துறைத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம், வெற்றி பெற்று அரசாங்க சபை உறுப்பினர் ஆனார். 1936 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்ற இவர் 1947 ஆம் ஆண்டுவரை அரசாங்க சபை உறுப்பினராகத் தொடர்ந்தார்.

1944, ஆகஸ்ட் 29 இல் இலங்கையில் தமிழர் நலன்களைப் பேணும் நோக்கில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்னும் அரசியல் கட்சியை இவர் தொடக்கினார். இக் கால கட்டத்தில் இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்களுக்காக பிரித்தானிய அரசினால் ஏற்படுத்தப்பட்ட சோல்பரி ஆணைக்குழு முன் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக சமபல பிரதிநிதித்துவ முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என வாதிட்டார். இதன் மூலம் பொதுவாக இலங்கை அரசியலிலும், சிறப்பாக இலங்கைத் தமிழர் அரசியலிலும் பெரும் செல்வாக்குப் பெற்றார். அக்காலத்தில் ஐம்பதுக்கு ஐம்பது என்று பரவலாக அறியப்பட்ட இச் சமபல பிரதிநிதித்துவக் கொள்கையை அடிப்படையில் 1947 இல் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றது. இத் தேர்தலில் நல்ல அரசியல் செல்வாக்குக் கொண்டிருந்த அருணாசலம் மகாதேவாவை எதிர்த்து யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம் பெருமளவு வாக்குகளால் வெற்றி பெற்றார்.

1948 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்கப்பட்ட முதலாவது அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டதும், மலையகத் தமிழரின் பிரஜா உரிமை பற்றிய பிரச்சினைகளில் பொன்னம்பலத்தின் அணுகு முறைகளையும் ஏற்றுக்கொள்ளாத சில தலைவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறினர். இதனால் கட்சி பிளவு பட்டது. எனினும் பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சி அரசில் தொழில் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சுமார் ஐந்தாண்டு காலம் அமைச்சராகப் பதவியில் இருந்த இவர், பல பாரிய தொழிற்சாலைகளைத் தமிழர் பகுதிகளில் நிறுவினார். வடக்கில், காங்கேசன்துறையில் நிறுவப்பட்ட சீமெந்துத் தொழிற்சாலையும், வன்னிப் பகுதிக்கு அண்மையில் பரந்தன் என்னுமிடத்தில் நிறுவப்பட்ட இரசாயனத் தொழிற்சாலையும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கு அண்மையில் வாழைச்சேனையில் ஏற்படுத்தப்பட்ட காகித ஆலையும் இவற்றுள் முக்கியமானவை.

தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்த செல்வநாயகம், வன்னியசிங்கம், நாகநாதன் முதலிய தலைவர்கள் தமிழரசுக் கட்சி என அழைக்கப்பட்ட கூட்டாசிக் கட்சியை (Federal Party) உருவாக்கினர். தமிழ்க் காங்கிரசைவிடக் கூடிய தமிழ்த் தேசியவாதக் கட்சியாக அடையாளம் காணப்பட்ட இக் கட்சியின் செல்வாக்கு வளர்ந்தபோது, காங்கிரசின் செல்வாக்குக் குறையத் தொடங்கியது.

1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஈ. எம். வி. நாகநாதன், பொன்னம்பலத்தை எதிர்த்து யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்டார். இத் தேர்தலில் பொன்னம்பலம் வெற்றி பெற்றார் ஆயினும், வாக்கு வித்தியாசம் குறைவடைந்ததுடன், நாடாளுமன்றத்தில் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையும் குறைந்தது. 1956 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் காங்கிரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. இத் தேர்தலில் இக் கட்சியின் சார்பில் பொன்னம்பலம் மட்டுமே மிகவும் குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.

1960 ஆம் ஆண்டில் இரண்டு தடவைகள் பொதுத்தேர்தல் நடைபெற்றது. மீண்டும் யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம் இரண்டிலும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான அல்பிரட் துரையப்பாவிடம் தோற்றார்.

1965 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத் தேர்தலில் இவருடன் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்னும் இருவர் (உடுப்பிட்டி மு. சிவசிதம்பரம், வவுனியா தா. சிவசிதம்பரம்) வெற்றி பெற்றனர்.

1970 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலும் பொன்னம்பலம் யாழ்ப்பாணத் தொகுதியிலேயே போட்டியிட்டார். இத்தடவை இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் மாவட்ட நீதவான் ஆகிய சி. எக்ஸ். மார்ட்டின் என்பவரிடம் தோல்வியடைந்தார். இத் தேர்தலில் மூன்றாம் இடமே இவருக்குக் கிடைத்தது. இதுவே பொன்னம்பலம் போட்டியிட்ட இறுதித் தேர்தலாகவும் அமைந்தது.

1970 ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கைத் தமிழர் அரசியலில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. 1970 இல் பதவிக்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசு பல தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் தமிழ் இளைஞர் மத்தியில் தீவிரவாதம் முளைவிடத் தொடங்கியது. தமிழர் மிதவாதக் கட்சிகளின் தலைவர்கள் இனியும் பிரிந்து நின்று எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்தனர். தமிழரசு, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், மலையகத் தமிழர்களின் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும் சேர்த்துக்கொண்டு தமிழர் கூட்டணி என்னும் புதிய அமைப்பை உருவாக்கினர். இதன் தலைவர்களாக, எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், எஸ். தொண்டமான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இதன் மூலம் அரசியலில் இருந்து ஓரளவுக்கு ஒதுங்கி இருந்த பொன்னம்பலம் மீண்டும் அரசியலுக்கு வந்தார். எனினும் தீவிர அரசியல் இவர் நேரடியாக இறங்கவில்லை.

தமிழர் கூட்டணியினர் தமிழீழம் என்னும் தனி நாட்டை உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைத்துத் தீர்மானம் நிறைவேற்றினர். அத்தீர்மானத்தை அச்சிட்டு மக்களுக்கு நேரடியாக வழங்கிய அ.அமிர்தலிங்கம், வி. என: நவரத்தினம், கா.பொ. இரத்தினம், கே. துரைரட்ணம் முதலிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு ட்ரையல் அட் பார் எனப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணை நடத்த ஏற்பாடாகியது. இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மிகவும் கவனிக்கப்பட்ட ஒரு வழக்காக இது விளங்கியதுடன், தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையைக் காட்டும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது எனலாம். இவ்வழக்கை நடத்துவதற்காகச் செல்வநாயகம் தலைமையில் அமைக்கப்பட்ட 61 வழக்கறிஞர் குழுவில் ஜீ.ஜீ. பொன்னம்பலம் பங்குபற்றி வாதாடினார். இதில் பொன்னம்பலத்தின் வாதத்திறமையினால் கூட்டணித் தலைவர்கள் விடுதலையாயினர். இவ் வழக்கின் மூலம் தமிழர் மத்தியில் பொன்னம்பலத்தின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்தது எனலாம்.

இவ் வழக்கில் ஏற்பட்ட புகழ் காரணமாகத் தமிழ்நாட்டில் மு. கருணாநிதி மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கொன்றிலும் கருணாநிதிக்காகப் பொன்னம்பலம் வாதாடினார். எனினும் வழக்கு முடியுமுன்னரே மலேசியாவில் அவர் காலமானார்.

அவரது உடல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுக் கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபின்னர் யாழ்ப்பாணத்தில் அவரது சொந்த ஊரான அல்வாயில் மக்கள் திரளின் மத்தியில் எரியூட்டப்பட்டது.

Chelvanayakam was born in Ipoh, Malaysia(31.03.1898), but returned to Sri Lanka (then called Ceylon) at the age of four. He studied at Union College, Tellippalai, and St. Thomas' College. At age 19, he had a bachelor's degree, and by 25, was called to the bar. He married Emily Grace Barr Kumuarakulasinghe two years later.

Chelvanayakam became active in the All Ceylon Tamil Congress during the drive for independence, becoming the party's deputy leader. He was elected to Parliament in the 1947 elections.

The ACTC was torn between Chelvanayakam and G.G. Ponnambalam, who pushed for greater cooperation with the United National Party government. Chelvanayakam broke with Ponnambalam in protest over the latter's support for the denial of citizenship to the estate Tamils in 1949. He went on to found a new, more aggressive party, the Federal Party.

In the 1956 election, the Federal Party emerged as the leading party in the Tamil regions, but the new prime minister, Solomon Bandaranaike, pushed through the Sinhala Only Act, which met with stiff opposition from the Tamils.

Chelvanayakam led a satyagraha protest against the new law. The campaign succeeded at first in swaying the government, which negotiated the Bandaranaike-Chelvanayakam Pact which agreed to provide government services in Tamil and devolve powers to a set of provincial councils. Bandaranaike abandoned the pact after stiff opposition from Buddhist monks.

After his fruitless experience dealing with the Sri Lanka Freedom Party governments of 1956-65, Chelvanayakam turned to the UNP. After that party's victory in the 1965 election, the Federal Party joined the government of Dudley Senanayake. He signed the Senanayake-Chelvanayakam Pact which also provided for Tamil services and district councils.

Senanayake's regime failed to implement the Pact and as a result, Chelvanayakam and the FP left the government in 1968.

By the 1970s, Chelvanayakam had grown bitter over his failure to win any meaningful concessions from the Sinhalese, and became sympathetic to the cause of Tamil separatism. The FP and other parties merged into the Tamil United Liberation Front towards that end, with Chelvanayakam as their leader.

His health was increasingly poor; he had suffered from Parkinson's disease and growing deafness since the 1950s. In 1961, Chelva underwent surgery in Edinburgh to relieve the stress from Parkinson disease at the hands of a neurosurgeon, Francis John Gillingham and the operation “proved successful.” Despite the success of this operation, he died in 1977 at his home and was buried in Jaffna.

Chelvanayakam was a beloved figure to Sri Lanka's Tamils, to whom he was known as "Thanthai Chelva" or "Father Chelva". He was called as Eezha Thahthai Selva in Tamil Nadu .He was sometimes compared to Mahatma Gandhi due to his reliance on nonviolence and, even at the end of his life, his commitment to use only peaceful means to achieve his political ends. Chelvanayakam's political biography was published in 1994 by his son-in-law and political science professor A.Jeyaratnam Wilson.


Jaffna
1947

G. G. Ponnambalam Bicycle 14,324

A. Mahadeva Elephant 5,224

1952

Ponnambalam, G.G. Umbrella 12,726

Naganathan, E.M.V. Hand 8,317

1956

G. G. Ponnambalam Bicycle 8,914

E.M.V. Naganathan House 7,173

M. Karthigasan Star 3,239

A. Visuvanathan Key 2,703

1960 March

A.T. Durayappah Sun 6,201

G.G. Ponnambalam Bicycle 5,312

S. Kathiravelupillai House 5,101

Arulambalam Visuvanathan Key 767

1960 July

A.T. Durayappah Bicycle 6,313

G.G. Ponnambalam Eye 6,015

S. Kathiravelupillai House 5,644

1965

G.G. Ponnambalam Bicycle 9,350

C.X. Martyn House 6,800

Alfred T. Duryappah Pair of Scales 5,918

1970

C.X. Martyn House 8,848

A.T. Durayappah Umbrella 8,792

G.G. Ponnambalam Bicycle 7,222


kankesanturai
1947

S.J.V. Chelvanayakam Key 12,126

P. Nagalingam Hand 5,160

S. Nateson Pair of Scales 4,605

1952

Natesan, Subbaiya Key 15,337

Chelvanayakam, S.J.V. Bicycle 11,571

1956

S.J.V. Chelvanayakam House 14,855

S. Natesan Umbrella 8,188

V. Ponnampalam Star 4,313

1960 March

S.J.V. Chelvanayakam House 13,545

V. Karalasingham Key 5,042

R.N. Sivapirakasam Bicycle 1,448

1960 July

S.J.V. Chelvanayakam House 15,668

R.N. Sivaprkasam Pair of Spectacles 2,009

1965

S.J.V. Chelvanayakam House 14,735

S. Sri Bhaskaran Bicycle 6,611

V. Karalasingham Lamp 2,257

K. Vaikunthavasan Star 958

V. Seenivasagam Umbrella 741

1970

S.J.V. Chelvanayakam House 13,520

V. Ponnampalam Star 8,164

C. Suntharalingam Cockerel 5,788

T. Thirunavakkarasu Bicycle 3,051

Tuesday, March 2, 2010

தமிழரசுக் கட்சித் தலைவரைக் கொன்று அதே கட்சியில் ஏகப் பிரதிநிதிகளென கொன்றவர்களுக்காகப் போட்டியிட்டால் என்னதான் உருப்படும்? உண்மைகள் செத்துவிடாது!


உண்மைகள் மனிதரைப்போல செத்துவிடாது! யாரும் ஒருபோதும் மறைத்துவைக்கவும் முடியாது – மறைக்கவும் முடியாது. என்றோ ஒரு நாள் அது வெளிவந்தே தீரும்!

ம(மா)க்களுக்கு அது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல சிலர் பட்டுத் தெளிவார்கள். ஒரு சிலருக்குப் பட்டும் புத்திவருவதில்லை!

தற்போது தமிழரசுக் கட்சித் தலைவராக இருக்கும் திரு. இரா. சம்பந்தன் அவர்களுக்காக பலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புகழ்மாலை தொடுக்கிறார்கள். சரி அதை ஏற்றுக்கொண்டாலும் - நியாயம் - உண்மைத் தன்மைகளை ஓரளவுக்காவது இவர்கள் தொட்டுச் செல்வார்கள் என்றால் அங்கு எதையுமே காணவில்லை! இதில் பெரிய நகைச்சுவை என்னவெனில் வெளிநாடு வந்தபின்னர்தான் பலருக்கும் சுதந்திரம் - உரிமை பற்றி அதிகமாகப் பேசவும் எழுதவும் முடிகிறது!

தமிழரசுக் கட்சி 1977 முதல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலக முகவரியைக் கொண்டு அதே தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இயங்கிவந்தது. இதற்கும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. 1977இல் தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் போட்டியிட்ட சமயம் மறைந்த திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் தனக்கு யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதி தரப்படவில்லை என கூட்டணியிலிருந்து பிரிந்துசென்று சுயேட்சையாக யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டபின் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆரைப் பிடித்து ஒரு மாதிரி தனது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை தன்வசம் எடுத்தார். இதனால் தமிழரசுக் கட்சியையும் பத்திரப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன் தலைவராக திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களும் அவர்களின் மறைவுக்குப் பின் திரு. அ. தங்கத்துரை தலைமையில் கட்சி பௌத்தலோக மாவத்தையின் முகவரியில் பதியப்பட்டது. இந்தக் கட்சியில் எனது பெயரும் இருந்தது. இப்போது நீக்கப்பட்டிருக்கலாம்.
1994 தேர்தலில் திரு. அ. தங்கத்துரை அவர்கள் வெற்றிபெற்றதைப் பொறுக்கமுடியாத திரு. இரா. சம்பந்தன் அவரைப் படுத்தியபாடு பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் மனச்சாட்சிப்படி இயங்கும் கூட்டணி உறுப்பினர்களுக்கு இது தெளிவாகத் தெரியும். இந்தப் பதவிக்காக அவர் கலாநிதி நீலனையும் இழுத்து ரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த படாதபாடுபட்டார். 3 வருடம் தனக்கு 3 வருடம் தங்கத்தரைக்கு என சம்பந்தர் பதவிக்காக ஒரு கட்டாய ஒப்பந்தத்தை தயார்படுத்தினார். சரியாக 3 வருடத்தில் 05.07.1997இல் பாடசாலைக் கட்டிடத் திறப்பு விழாவில் திரு. அ. தங்கத்துரை கொலைசெய்யப்பட்டார். அவருடன் கூடவே பல கல்விசார் அறிஞர்களும் கொல்லப்பட்டனர். (பதவிக்காக கொலையையும் செய்ய ஏற்பாடு செய்தாரா என்று இப்போது சந்தேகம் எழுகிறது. ஏனெனில் புலிகளை அவர் அதற்காகத்தான் பயன்படுத்தினார்போல எனக்குப் படுகிறது. இது எனது தனிப்பட்ட கருத்து!)
2001 தேர்தலில் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டபின் 05.06.2002இல் மரணமடைந்த தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்களின் தேசியப்பட்டியல் நாடாளுமன்றப் பதவிக்கு ஏற்கனவே தேர்தல் திணைக்களத்திற்குப் பெயர் குறிப்பிட்ட திரு. முத்துலிங்கம் அவர்கள் இருக்கத்தக்கதாக தனது மாவட்டத்தில் தோல்வியடைந்த திரு. துரைரட்ணசிங்கத்தை நியமிப்பதற்காக – கட்சித் தலைவரின் உடல் சாம்பலாவதற்கு முன்னரே முகமாலைத் தடுப்புச் சுவரைக்கடந்து புலிகளிடம் ஓடியவர்கள் - சம்பந்தனும் - ஜோசப்பரும் மற்றும் அன்றைய புலிப்பாட்டுப்பாடியவர்கள் அனைவரும்.

கூட்டணித் தலைவரின் பக்கத்தில் அவரது சாம்பல் அள்ளும்வரை ஆரம்ப சகாவான ஆனந்தசங்கரியே பக்கத்திலிருந்தார். இவர்கள் காங்கிரஸிலிருந்து கூட்டணிக்கு வந்தவர்கள்! இன்றுவரை கூட்டணிக்காகவே தம்மை அர்ப்பணித்தவர்கள்.

திரு. தங்கத்துரை அவர்களின் மறைவுக்குப் பின்னர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் திரு. ஆவரங்கால் சின்னத்துரை அவர்கள். இவரது சம்மதம் பெறப்படாமலேயே 2004 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்த பிரிந்து சென்றவர்கள் தமிழரசுக் கட்சியை கூட்டமைப்பின் கட்சியாக மீள தேர்தலில் பயன்படுத்தினர்.அப்போது புதிய தலைவராக பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களை நியமித்தார்கள். தற்போது இரா. சம்பந்தனுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றப் பதவியிலும் சரி - தமிழரசுக் கட்சித் தலைவர் பதவியிலும் சரி அவருக்குப் பிறகுதான் இவர். 1970இல் தங்கத்துரை மூதூர்த் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரானார். 1977இல் இவர் திருகோணமலைத் தொகுதியின் உறுப்பினராமையும் குறிப்பிடத்தக்கது.

கட்சியின் தலைவர்கள் இருவரைக் கொன்றவர்கள் யாரென அகிலமே அறியும்
இவர்கள் தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று சொல்லி பாவம் அஹிம்சையை தன் சிரமேற்கொண்டுவாழ்ந்து எம் தலைவர் ஈழத்தக் காந்தி தந்தை செல்வா - அப்பாவித் தமிழ் மக்களின் குடியுரிமையைப் பறித்தபோது ஏற்படுத்திய ஒரு பலமான அமைப்பை, களவு – கொலை – கடத்தல் போன்ற அநீதிக்குப் பெயர்போன கும்பலுக்காக சம்பந்தன் - மாவை கூட்டுச் செய்த அநியாயத்திற்கு ஆண்டவனின் தண்டனையே இன்றைய நிலை! கடவுள்தான் தமிழரைக் காப்பாற்ற வேண்டும் என்று இவர்களுக்காகத்தான் தந்தை சொன்னாரோ தெரியாது! இவர்கள் - இவர்களோடு தேர்தலில் போட்டியிட்டவர்கள் - இவர்களுக்காக தேர்தலில் வாக்களித்தவர்கள் ஏன் இத்தனைக்கும் மேலாக இவர்களின் ஏகப் பிரதிநிதிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள்!
இனிமேலும் இந்தத் தமிழரசுக் கட்சியையும் - அவரது வீட்டுச் சின்னத்தையும் - அவரது அமைதியான பெயரையும் எந்த அநீதியாளரும் சொல்ல அனுமதியில்லை என்பதுடன் இவற்றை மேலும் பயன்படுத்தினால் இதைவிட மேலும் அழிவுகள்தான் எதிர்நோக்க வேண்டி வருமென அவர்களின் ஆத்மாக்களில் நின்று நான் சபதம் செய்கிறேன்!

Friday, February 26, 2010

செத்துவிட்டாரென சிந்தித்ததனால் - எம்நாடும் செத்துக்கொண்டிருக்கிறதே! - தமிழ் முஸ்லிம் பேரினவாதங்கள் எனும் புதியபிசாசுகளும் இப்போது பித்துப்பிடித்து ...

தந்தை செல்வாவின் நூற்றாண்டுவிழாவுக்காக 1998இல் அன்றைய அமைச்சராக இருந்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் - எஸ்.ஜே.வியை என் இறைக்கைகளில் காணுங்கள் என்ற கவிதையிலிருந்து ஒரு சில பகுதிகளை இன்றைய தேவை கருதி பதிவிடுகிறேன்.

Thursday, February 18, 2010

தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களுக்காக தந்தை செல்வாவினால் விட்டுச் செல்லப்பட்ட அரும்செல்வம் - தலைவர் வீ. ஆனந்தசங்கரி



வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமன்றி மேற்கிலும் தெற்கிலும், மத்தியிலும் வாழ்கின்ற தமிழ் மக்களும், ஏனைய தமிழ் பேசும் மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் இன்று காலத்தின் கட்டாயமாகும்.அரசுடன் முரண்படுவதற்காக அன்றி, ஏனைய இன மக்களை பாதிக்காத வகையில் அனைத்து தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை காண்பதற்காகவே. இதில் மாறுப்பட்ட கருத்துக்கு இடமில்லை. என்னையும், தமிழர் விடுதலைக் கூட்டணியையும் பொறுத்தவரையில் சமாதானத்தையும் சமத்துவத்தையும் அனைவருக்கும் பெற்றுக் கொடுப்பதற்காக ஒரு பொது திட்டத்திற்கமைய அனைவருடனும் இணைந்து செயற்பட தயாராகவுள்ளோம்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

Sunday, June 21, 2009

கட்டுரைகள் எழுதும்போது பிரிக்கும் வழியை முன்னெடுக்காது, ஒற்றுமைப்படுத்தும் வழியில் எழுதினால் சிலவேளை பிரிந்து நிற்பவர்கள் கூட ஒன்றுபட முடியும்!

இக்கடிதம் தந்தை செல்வாவினுடைய சிலை திறப்பு நடைபெற்ற பின் வெளியான வீரகேசரி வாரவெளியீட்டுச் செய்திக்கு எழுதிய பதில் கட்டுரை. 10 வருடங்களாகியும் இதுவரை வெளியிடவில்லை. இன்றும் பத்திரிகைகள் குழப்புகின்ற செய்திகளைத் தான் எழுதி சிண்டுமுடிக்கும் விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றன என்பதும் கவலையைத் தருகிறது. நியாயமாக நீதியாக எழுதி அல்லல்படும் அநாதரவாக இருக்கும் மக்களுக்கு தம்மால் செய்யமுடிந்ததைச் செய்யத் தக்கதாக கட்டுரைகள் செய்திகள் வெளிவர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. உண்மைகளை - நடப்பவைகளை எழுதுங்கள் - கட்டுரை என்கிறபோது நல்லவழியில் சிந்தித்து எழுதுங்கள் - என்பதே எனது பணிவான கருத்து!


ஆசிரியர்
வீரகேசரி வார வெளியீடு
கொழும்பு 14.

அன்புடையீர்,
தங்களின் 02.05.1999 வீரகேசரி வார வெளியீட்டில் 6ஆம் பக்கத்தில் வெளியான தந்தை செல்வாவின் வழி செல்ல இன்று யார் உள்ளனர்? என்ற தலைப்பிலான கட்டுரையில் அதை எழுதிய ஆர். தயாபரன் அவர்கள் உண்மைக்கு மாறான தகவல்கள் சிலவற்றைத் தெரிவித்தள்ளார். உண்மையான கருத்துக்கள் வீரகேசரியில் வரவேண்டுமென்ற அபிமானத்தால் இதனை எழுதுகிறேன். தயவுசெய்து பிரசுரிக்க வேண்டுகிறேன்.

26.04.99 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமான வைபவத்தில் மாநகரசபையின் உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினருமான நானும் கலந்து கொண்டதை ஏனோ திரு. ஆர். தயாபரன் அவர்கள் குறிப்பிட மறுத்துவிட்டார்.மேலும் நிகழ்ச்சியின்போது தமிழ் வாழ்த்தினையும், ஈழத்தமிழ் தேசிய கீதத்தையும் (பரமஹம்சதாசன் இயற்றிய இப்பாடல் அமரர் கு. வன்னியசிங்கம் அவர்கள் காலத்திலிருந்து அவரது தலைமையில் நியமிக்கப்பட்ட தேசிய கீதசபையால் தெரிவுசெய்யப்பட்டபாடல்) இசைத்தவன் என்ற வகையிலும் அன்றைய முழுநிகழ்ச்சிகளின்போதும் இருந்தவன் என்ற வகையிலும் பொய்யான தகவலைத் தந்தமைக்கு மனம்வருந்தியே இதைக் குறிப்பிட்டு எழுதுகிறேன்.

தந்தை செல்வாவினுடைய நினைவுநாளில் அவரது அரசியல் ஞானத்தை – அவரது எளிய வாழ்க்கை முறையை – தமிழ் தேசிய இனத்தின் அன்றைய போராட்ட(சாத்வீக) நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டதாகவே பேச்சுக்கள் பெரும்பாலும் அமைந்திருந்தது. மேலும் இந்நிகழ்ச்சி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக தந்தை செல்வா நூற்றாண்டுத் தேசிய அவையினால்மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் - சகல கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த வேளையிலும் ரெலோவைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே பங்குபற்றினர்.

தன்னிகரில்லாத் தலைவன் ஒருவனை நினைவு கூரவும், கௌரவிக்கவும், அவரை அடியொற்றிப் பின்வளர்ந்தவர்கள் யாராயிருப்பினும் அழைப்பு இல்லாமலேயே வந்திருக்கலாம். அழைப்பு அனுப்பியும் வராதிருந்தமைக்கு காரணம் எமக்குத் தெரியாது. மேலும் புளொட் அமைப்பின் யாழ் மாவட்டப் பொறுப்பாளர்(அரசியல்) திரு. கிருபைராசா அவர்கள் அன்றையதினம் கொழும்பில் இருந்ததையும் நினைவுபடுத்தவேண்டும்.

தமிழீழத் தீர்மானத்திலிருந்த எவரும் (கூட்டணி உட்பட) இன்றுவரை விலகிச் செல்லவில்லை என்பதுடன் அரசு அதற்கீடான மாற்றுத் திட்டத்தை முன்வைத்தால் அதை கூட்டணி பரிசீலித்து பின் தமிழ் மக்களின் அனுமதிக்குஅவர்கள் முன் அதை சமர்ப்பிக்க வேண்டும் என்ற தீர்மானமும் இன்றுவரை மாற்றப்படவில்லை. மாற்றவும் முடியாது. இந்நிலையில் கடந்த 1997 – 1998 ஆம் ஆண்டு தந்தை செல்வா நூற்றாண்டுத் தேசிய அவையின் முடிவுக்கு இணங்க சிலை ஒன்றை நிறுவ எடுத்த முடிவும் தாமதமாக நிறைவேறியமைக்கம் - நடைபெறவிருக்கும் தேர்தலுக்கம் முடிச்சுப் போடுவதுதான் மிகவும் வேதனையைத் தருகிறது.

குறிப்பிட்ட நிகழ்ச்சியை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஒரேயொரு பத்திரிகையான உதயன் நகரில் நேற்று நடந்த உணர்வுபூர்வ நிகழ்வில் தந்தையின் சிலை திறப்பு என்று வெளியிட்ட செய்தியையும் குறிப்பிடுவது பொருத்தமானது.

குறை கண்டுபிடிக்கும் ஒரே நோக்குடன் செய்திகள் வெளிவருவது நடுநிலைப் பத்திரிகையான வீரகேசரிக்கு அழகல்ல.
பல இடர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தபோதும் தமிழ்மக்களின் இன்னல்களைப் போக்குவதற்கான நடவடிக்கைகளில் இன்று ஈடுபடுவதாக தெரியவில்லை என்பதும் முழுக்க முழுக்க கூட்டணியைக் குற்றம் சுமத்தும் நோக்கிலேயே எழுதப்பட்டது. கட்டுரைகள் எழுதும்போது பிரிக்கும் வழியை முன்னெடுக்காது,ஒற்றுமைப்படுத்தும் வழியில் எழுதினால் சிலவேளை பிரிந்து நிற்பவர்கள் கூட ஒன்றுபட முடியும். தந்தை செல்வாவின் இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல முன்வருவோர் முதலில் தந்தைiயை அறிந்திருக்கவேண்டும். வீணே பெயரைச் சொல்வதால் மட்டும் அவரது இலட்சியம் ஈடேறாது. துமிழர் விடுதலைக் கூட்டணி தந்தை செல்வா வழியில்தான் என்றும் இயங்கி வருகிறது. தோடர்ந்தும் அவர் வழியிலேயே செல்லம் என்பதை ஆர். தயாபரன் உட்பட தவறாகக் கருதுவோர்கள் இனிமேலாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

துரையப்பா விளையாட்டரங்குப் புதைகுழிகள் சம்பந்தமான தகவல்களைத் தெரிவிக்கப்படக்கூடிய சாத்தியமான நிலை அன்றில்லை. காரணம் ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்ட விடயம் - தற்போது ஆய்விலும் விசாரணையிலும் இருக்கும்போது அதுபற்றி அறிவுள்ள ஒருவன் கருத்துக் கூறமுடியாது என்பதே எனது கருத்தாகும். மேலும் சிலை திறப்புக்கு மாவை சேனாதிராசா படியில் ஏறியபோது கம்பி கீழே விழுந்தது என்ற செய்தி பிழையானது. ஏந்தக் கம்பியும் விழவில்லை. அது முழுமையாகச் செய்யப்பட்ட ஒரு படிக்கட்டு.

மேலும் காற்றினால் தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த கொட்டகை இருக்கும் கம்பிகள் காற்றின் வேகத்தினால் கீழே விழுந்து ஒருவருக்கு மட்டுமே மேல் நெற்றியில் காயம் ஏற்பட்டது. அவராகவே எழுந்துவந்தபோது நாமே அவரை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தபோது கூடவே சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் உதவியாளர் சென்றபோதும் அவரை வைத்தியசாலையில் தங்கவேண்டும் என்று கூறியமையால் திரும்ப அவர் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து தனது துவிச்சக்கரவண்டியில் வீடு சென்று மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்றார். இதனை அறியாது குண்டு வெடித்ததா? ஏன்றெல்லாம் பொய்யான தகவல் தெரிவித்து குண்டுவெடிப்புக்கள் இன்னும் ஏற்பட வேண்டும் என்ற ஆதங்கமிருக்கும் இந்நபர்களைக் கருத்தில்வைத்தோ என்னவோ தந்தையவர்கள் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறிச் சென்றார்: ஏதோ கடவுளின் கிருபையால் நிகழ்வும் மிகச் சிறப்பாக மதியம் 12 மணியளவில் நிறைவடைந்தது.

தங்க. முகுந்தன்.
யாழ் மாநகர சபை உறுப்பினரும்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு உறுப்பினரும்.






நன்றி - தமிழ் நெற்(மேலேயுள்ள 3 படங்கள்)