அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, February 28, 2010

1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க்கட்சிகள் ஒரு ஆய்வு!

தமிழ்க்கட்சிகள் இவ்வளவு சோதனைகள் - வேதனைகள் - இழப்புக்கள் - அழிவுகள் - என்பவற்றுக்குப் பின்னும் திரும்பத்திரும்ப சிங்களக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதையும் தமக்குள் தனித்தனியாகப் பிரிந்தும் போட்டியிடுவதைப் பார்த்தால் தலையைக் கொண்டுபோய் எங்காவது சுவரில் மோதவேண்டும் போல இருக்கிறது.

கடந்தகால தேர்தல் முடிவுகளைப் பார்ப்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது.

1977இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்

ஐக்கிய தேசியக்கட்சி 31,79,221 – 140 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி 4,21,488 – 18 ஆசனங்கள்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 18,55,331 – 8 ஆசனங்கள்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 62,707 – 1 ஆசனம்
லங்கா சமசமாஜக் கட்சி 2,25,317
கம்யூனிஸ்ட் கட்சி 1,23,856
மகாஜன எக்சத் பெரமுன 22,639
சுயேட்சைகள் 3,53,014 – 1 ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சி தன்னுடைய பெரும்பான்மை பலத்தைக் கொண்டு நாட்டின் 1972இல் ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியின் தலைமையில் இருந்த கூட்டணியரசின் அரசிலமைப்பை மாற்றி விபுதியதொரு அரசியல் சாசனத்தை உருவாக்கி அதன்மூலம் – ஜனாதிபதி ஆட்சிமுறையை ஏற்படுத்தியது. பிரதமராயிருந்த ஜே.ஆர் ஜனாதிபதியாகவும் ரணசிங்க பிரேமதாச பிரமராகவும் தெரிவாகினர். மேலும் பாராளுமன்றத்தின் காலத்தை 6 ஆண்டுகளுக்கு மேலதிகமாகத் தொடர்ந்தும் தக்கவைக்க இந்த அரசு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை 22.12.1982இல் நடத்தியது.

அதில் அரசின் கொள்கைக்கு
சார்பாக 31,41,223 வாக்குகளும்
எதிராக 26,05,983 வாக்குகளும் கிடைத்தன.

ஜனநாயகத்திற்கு முரணாக மக்கள் பாராளுமன்றத் தேர்தலுக்கு வாக்களித்தது 6 ஆண்டுகளுக்கு மட்டுமே என மேலதிகமான 6 ஆண்டுகளை ஏற்காது தமிழர் விடுதலைக் கூட்டணியின் 16 உறுப்பினர்கள் தமது பதவிகளைத் துறந்தார்கள். இவர்களில் இருவர் தேர்தல் முடிந்த சில காலத்திலேயே ஆளும் கட்சியுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருந்தனர். கூட்டணி இல்லாத நிலையில் அடுத்த 6 ஆண்டுகாலம் எதிர்க்கட்சியாகும் வாய்ப்பை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெற்றது. அன்றைய நாளில் ஐ.தே.கட்சியினால் சுதந்திரக்கட்சித் தலைவி திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்காவின் பாராளுமன்ற உறுப்பினர் உரிமையையும் குடியுரிமையையும் பறிக்கப்பட்டதை நினைவுபடுத்த வேண்டும். அவரது மகன் அனுர பண்டாரநாயக்க எதிர்க்கட்சித் தலைவரானார்.

20.10..1982இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. வெற்றிபெற்று ஜனாதிபதியானார் - ஜே.ஆர்.

ஜே.ஆர் ஜெயவர்த்தனா 34,50,811
ஹெக்டர் கொப்பேகடுவ 25,48,438
றோகண விஜேவீர 2,73,428
குமார் பொன்னம்பலம் 1,73,934
கொல்வின் ஆர்.டி.சில்வா 58,531
வாசுதேவ நாணயக்கார 17,005

19.12.1988இல் 2ஆவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற ஆர். பிரேமதாசா ஜனாதிபதியானார்.

ரணசிங்க பிரேமதாசா 25,69,199
சிறிமாவோ பண்டாரநாயக்கா 22,89,960
ஓஸி அபயகுணசேகர 2,35,719

1989 இல் நடைபெற்ற பாராறுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டது. ஐக்கிய சோசலிச முன்னணி என்ற கூட்டில் ஸ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி -லங்கா சம சமாஜக் கட்சி – நவ சமசமாஜக் கட்சி - ஸ்ரீ லங்கா மகாஜன பக்சய என்பன இணைந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசு10ரியன் சின்னத்தில் ஈ.என்.டி.எல்.எப் - ஈ.பி.ஆர்.எல்.எப் - டெலோ – ரி.யூ.எல்.எப். டின்பன இணைந்தும் போட்டியிட்டன. ஈரோஸ் அமைப்பு சுயேட்சையாக போட்டியிட்டது.

ஐக்கிய தேசியக்கட்சி 28,37,961 – 125 ஆசனங்கள்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 17,80,599 – 67 ஆசனங்கள்
ஈரோஸ் அமைப்பின் சுயேட்சை 2,29,877 – 13 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி 1,88,593 - 10 ஆசனங்கள்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2,02,014 - 4 ஆசனங்கள்
ஐக்கிய சோசலிச முன்னணி 1,60,271 – 3 ஆசனங்கள்
மகாஜன எக்சத் பெரமுன 95,793 – 3 ஆசனங்கள்
சுயேட்சைகள் 1,01,210

(தொடரும்)

ஆனந்தசங்கரியின் புதல்வர் ஜெயசங்கரி கொழும்பு மாவட்டத்தில் போட்டி!


தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஜெயசங்கரி ஆனந்தசங்கரியை தலைமை வேட்பாளராகக் கொண்டு போட்டியிடுகின்றது. இதேவேளை திருகோணமலை, அம்பாறை தவிர்ந்த அனைத்து வடக்கு கிழக்கு மாவட்டங்களிலும் உதயசூரியன் சின்னத்தில் தனித்து போட்டியிட வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ் மாவட்டத்தில் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தலைமையிலும் வன்னி மாவட்டத்தில் செல்வரட்ணம் சுதாகரன் தலைமையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சோமசுந்தரம் யோகானந்தராஜா தலைமையிலும் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.

கிருத்தியம் புதிய வலைப்பதிவு - அறிவிப்பு

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கிருத்தியம் எனும் இதேபெயர் கொண்ட புதிய தளத்தில் இவ்வருடப் பதிவுகள் அனைத்தும் பதிவிடப்பட்டு அதில் பதிவுகள் தொடர இடப்படுவதால் www.kirthiyam.blogspot.com என்ற தள முகவரிக்குச் சென்று வாசித்து அறியும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

சிரமத்திற்கு மன்னிக்கவும்!

அன்புடன்,
தங்க. முகுந்தன்.

Friday, February 26, 2010

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம் மிக மிக அருமை! அளவானவர்கள் பார்த்து சரியாகத் தொப்பியைப் போட்டால் நாடு உருப்படும்!

கடந்த சில தினங்களாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் - சிரிக்கவும் சிந்திக்கவும் மிக அருமையாக இருக்கிறது.

செத்துவிட்டாரென சிந்தித்ததனால் - எம்நாடும் செத்துக்கொண்டிருக்கிறதே! - தமிழ் முஸ்லிம் பேரினவாதங்கள் எனும் புதியபிசாசுகளும் இப்போது பித்துப்பிடித்து ...

தந்தை செல்வாவின் நூற்றாண்டுவிழாவுக்காக 1998இல் அன்றைய அமைச்சராக இருந்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் - எஸ்.ஜே.வியை என் இறைக்கைகளில் காணுங்கள் என்ற கவிதையிலிருந்து ஒரு சில பகுதிகளை இன்றைய தேவை கருதி பதிவிடுகிறேன்.

தமிழர் விடுதலைக் கூட்டணி 4 மாவட்டங்களில் போட்டி!

தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை தேர்தலில் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய நான்கு (4) மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்களைச் சமர்ப்பித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கட்சியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்களும் கொழும்பில் ஆனந்தசங்கரி ஜெயசங்கரியும் முதன்மை வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

சச்சினுக்காக!

கிரிக்கெற்றில் சாதனைபடைத்த சச்சின் டெண்டுல்கார் அவர்களுடைய ரசிகர்களுக்காக சில புகைப்படத் தொகுப்பு!

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த மதிகெட்ட ........ நினைத்து......பகுதி - 1

தலைப்பை பார்த்துவிட்டு என்மீது யாரும் கோபம் கொள்ள வேண்டாம்! உண்மையைத்தான் எழுதுகிறேன். எதிர்க்கட்சியாக ஒரு காலம் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களை கொச்சைப்படுத்தி கேட்டது தமிழீழம் வாங்கினது ஜப்பான் ஜீப் என்று சொல்லி அவர்களுடைய ஜீப்புக்களையும் பறிமுதல் செய்து அல்லது கொழுத்தி சேதம் விளைவித்த வீரர்கள் இன்று என்ன பண்ணினார்கள்? பண்ணுகிறார்கள்? -

Thursday, February 25, 2010

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் அவர்களுக்கு எனது நன்றிகள்!

தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் பிரச்சனை ஏற்படுவதற்கு(2002) நீங்கள்தான் காரணமாக இருந்தீர்கள்.

கடந்த 22.5.2009இல் உங்கள் மூவருக்கும் (சம்பந்தன், மாவை. சேனாதிராசா ஆகியோர்) எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதுபோல உங்கள் கூட்டமைப்பும் உடைந்துவிட்டது.(தீர்க்க தரிசியான தந்தையை நான் உண்மையாக நேசிப்பதால் சொல்லிய 5 மாதங்களுக்குள்ளேயே பிரச்சனை வெளிப்பட்டிருக்கிறது).

நீங்களும் இப்போது தேர்தலில் போட்டியிடாது விலகியிருக்கிறீர்கள். நான் பதவியிலிருக்கும்போது விலகுமாறு வேண்டியிருந்தேன். நீங்கள் பதவிக்காலம் முடிந்தபின் போட்டியிடாது விலகியிருக்கிறீர்கள்.

காலம் கடந்த உங்களின் செயலுக்கு வாழ்த்துகிறேன். இந்தத் தடவை திருமலையில் ஒரு ஆசனம் கிடைக்க முடியுமா என கொஞ்சம் சிரமப்பட்டு உழையுங்கள்.

நன்றி.

தேர்தல் பம்மாத்துகள் - புதியவர்களின் வருகை - வாக்குகள் சிதறும் நிலை!

தேர்தல் நாள் நெருங்க நெருங்க – நடக்கின்ற – நடக்கப் போகின்ற செயல்களைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்ற நிலையில் இதை மிகவும் விரக்தி நிலையில் எழுதுகின்றேன்.

தற்போது கிடைத்துள்ள செய்திகளின்படி பார்த்தால் இந்தத் தடவை வடக்கு கிழக்கில் தமிழ் வாக்காளர்களின் வாக்குகள் சிதறி பாராளுமன்ற ஆசனங்கள் கடந்த 2004இல் பெற்றதில் அரைப் பங்காகுமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

2001 தேர்தலில் ஒன்றுபட்டு கூட்டமைப்பை ஏற்படுத்திய 4 தமிழ்க்கட்சிகளின் ஊடகங்களுக்கான அறிக்கை (பகுதி 2)

ஊடகங்களுக்கு - 22.10.2001 என இரு பக்கங்களில் வெளியான அறிக்கையின் முதற்பகுதி நேற்று வெளியானது - இன்று அதன் மறுபகுதி பிரசுரமாகிறது

Tuesday, February 23, 2010

பூனையில்லா வீட்டில் எலிக்குக் கொண்டாட்டம்! விடுதலைப் புலிகளற்ற நிலையில் கூட்டமைப்பின் குடுமிச்சண்டை!

கடந்த 2009-07-30ல் நான் எழுதிய - மறைந்த ரவிராஜ விடுதலைப் புலிகளைப் பற்றச் சொன்னது! புலிகளால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகள் அல்ல நாம்! பார்க்க - தினக்குரல் 31.07.2003 - என்ற செய்தியை மீள இப்போது நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

Monday, February 22, 2010

வலம்புரிக்கு பத்து வயது - வாழ்த்துக்கள்!

யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகை தனது 10ஆவது வயதை முடித்து 11ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கிறது. 11ஆவது வயதில் இணையத்தையும் ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி!

சுற்றுலா வரும் பெரும்பான்மையினப் பயணிகளால் யாழ் பொது நூலகத்தின் அமைதி பாதிப்பு – வாசகர்கள் படிப்பதில் சிரமம் - நூலகர் நெஞ்சம் குமுறுகிறார்!


நாடு கடந்து இருப்பினும் அடிக்கடி யாழ்ப்பாண மாநகர விடயங்களில் அதிகளவு கவனம் செலுத்தும் நான் கடந்த வாரமும் இன்றும் யாழ்ப்பாண பொது நூலகருடன் தொடர்பு கொண்டபோது அவரது பேச்சில் விரக்தி தொனித்தது. என்ன என்று விலாவாரியாக விசாரித்தேன்.

Friday, February 19, 2010

இதுவரை காலமும் எமக்குள் முட்டிமோதிய நாம் இனிமேலாவது ஐக்கியப்படுவது அவசியம்! இதுவரை நடந்தவற்றுக்குப் பின்பாவது தமிழ்க்கட்சித்தலைவர்கள் இதை உணர்வார்களா?


தற்போது தேர்தல்கள் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட 66 அரசியல் கட்சிகளில் 18 தமிழ்க் கட்சிகள் இருக்கின்றன. இவற்றின் தலைவர்கள் ஒன்றுபட்டு மக்களுடைய பிரச்சனைகளுக்கு கௌரவமான தீர்வைக் காண முன்வரவேண்டும்!

Thursday, February 18, 2010

தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களுக்காக தந்தை செல்வாவினால் விட்டுச் செல்லப்பட்ட அரும்செல்வம் - தலைவர் வீ. ஆனந்தசங்கரிவடக்கிலும் கிழக்கிலும் மட்டுமன்றி மேற்கிலும் தெற்கிலும், மத்தியிலும் வாழ்கின்ற தமிழ் மக்களும், ஏனைய தமிழ் பேசும் மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் இன்று காலத்தின் கட்டாயமாகும்.அரசுடன் முரண்படுவதற்காக அன்றி, ஏனைய இன மக்களை பாதிக்காத வகையில் அனைத்து தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை காண்பதற்காகவே. இதில் மாறுப்பட்ட கருத்துக்கு இடமில்லை. என்னையும், தமிழர் விடுதலைக் கூட்டணியையும் பொறுத்தவரையில் சமாதானத்தையும் சமத்துவத்தையும் அனைவருக்கும் பெற்றுக் கொடுப்பதற்காக ஒரு பொது திட்டத்திற்கமைய அனைவருடனும் இணைந்து செயற்பட தயாராகவுள்ளோம்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ