சிறுவயதிலிருந்தே எமது ஊரிலுள்ள பிள்ளையார் - முருகன்கோவில்களில் நடைபெறும் வெள்ளிக்கிழமைப் பஜனைக்குச் செல்வது வழக்கம். முருகன் கோவிலில் நடைபெறும் கந்தனுபூதிப் பாடல்களும் அதன் இசைமெட்டும் எனக்கு ரொம்பப் பிடித்தது.
நல்லூர்த் திருவிழாவின்போது திவ்ய ஜீவன சங்கத்தின் சிறுவர்களால் பாடப்படும் கந்தரனுபூதிப் பஜனையையும் திருவிழாக் காலங்களில் 1984, 1985, 1986ஆம் ஆண்டுகளில் ரசித்து மகிழ்ந்தவன். அருணகிரிநாதர் பாடிய கந்தரனுபூதிப் பாடல்கள் 51 என வழமையாக எல்லாரும் சொல்லப்பட்டு வந்ததையே நானும் இதுவரை பின்பற்றியிருந்தேன். ஆனால் அதில் 101 பாடல்கள் இருப்பதை அறிந்தபின் இதை மற்றவர்களும் அறிய வேண்டும் என்பதற்காக கந்தர் அனுபூதி (http://kantharanupoothy.blogspot.com/)என்ற புதியதொரு வலைத்தளத்தில் ஏனைய 50 பாடல்களையும் பதிவிட முடிவுசெய்திருக்கிறேன். நல்லூர்த் திருவிழா நடைபெறும் இக்கால கட்டத்தில் இப்பணியை ஆரம்பிப்பதில் பெரும் மனநிறைவடைகிறேன்.
Sunday, August 29, 2010
Thursday, August 26, 2010
இன்று அமரர் அ. அமிர்தலிங்கம் அவர்களின் 83ஆவது பிறந்த தினநினைவு!
(விடுதலைப் புலிகளால் 13-07-1989ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களது 83வது பிறந்த தினம் 2010 ஆகஸ்ட் 26ந் திகதி ஆகும். அவர் நினைவாக இக்கட்டுரை வெளியாகின்றது.)
மக்களைக் குழப்பாதீர்கள் - கதிர் பாலசுந்தரம்
முப்பது ஆண்டுகள் போராடி, தமிழ் ஈழத்துக்கு ஊழிப் பேரழிவு கொண்டு வந்த ஆயுத அமைப்புகளே! உங்களுக்கு ஒரு வார்த்தை!
நீங்கள் குழம்பிப்போய் உள்ளீர்கள். மக்களையும் குழப்ப முயல்கிறீர்கள்.
ஆயுதம் ஏந்தியதன் விளைவு, பேரழிவு
அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் அங்கமான ‘இளைஞர் பேரவையில்;’ அங்கத்தவர்களாக இருந்தவர்கள் நீங்கள். உங்களால் வன்முறைப் பக்கம் அமிர்தலிங்கம் அவர்களை இழுத்துச் செல்ல முடியவில்லை. அதனால் இளைஞர் பேரவையைவிட்டு 1975இல் வெளியேறினீர்கள். பிரபாகரன், உமா மகேஸ்வரன், பத்மநாபா, ஸ்ரீசபாரத்தினம், இரத்தினசபாபதி, தேவானந்தா முதலியவர்கள் தலைமையில் ஆயுத இயக்கங்களை உருவாக்கினீர்கள்.
தானுண்டடு தன்வீடுண்டு என்று அமைதியாக மன நிம்மதியாக வாழ்ந்த மக்களைப் போர்க்களத்துக்கு இழுத்துச் சென்றீர்கள். 1983-2009 காலப் பகுதியில், கொடுங்கோல் ஆட்சி புரிந்து, ‘சோற்றுப் பார்சல்’ தந்த மக்களைத் தீச்சுவாலைக்குள் போட்டு வதக்கி எடுத்தீர்கள். கொள்ளை, சித்திரவதை, ஆள் கடத்தல், கொலைகள் மூலம் தொப்பூழ்க்கொடி உறவுகளை வருத்தினீர்கள். மக்கள் காட்டுப் பூனையின் கால்களுள் சிக்கிய எலி குஞ்சாக விழிபிதுங்கி வாழ்ந்தார்கள். அப்பாவித் தமிழ் மக்கள் விட்ட கண்ணீர், கொடுங் கோடையில் யாழ்ப்பாணத்து வழுக்கி ஆறு கரைபுரண்டு ஓடப் போதுமானது.
மேலும், நீங்கள் சிங்கள இராணுவத்தை வரவழைத்து மக்களுக்குச் சுனாமியிலும் படுமோசமான பேரழிவுகளை ஏற்படுத்தினீர்கள்.
மக்களின் இன்றைய பிரச்சினைகள் அனைத்துக்கும் நீங்கள்தான் காரணம்.
சிங்களவனோடு போர்புரிய ஆயுதம் ஏந்திய நீங்கள், கொன்று தள்ளியது சகோதர அப்பாவி உறவுகளைத்தான். உங்கள் ஆயுதங்களுக்குப் பலியாகிய சிங்களவனிலும், சகோதர தமிழன் எண்ணிக்கை மிகமிக அதிகம். அண்ணல் அமிர்தலிங்கம், பேராசிரியர் நீலன் உட்பட அரசியல் வித்தகர்கள் அத்தனை பேரையும் அழித்துள்ளீர்கள். அறிவாளிகள் இருந்தால் உங்கள் அரசியல் வியாபாரம் படுத்துவிடும் என்று வழித்துத் துடைத்து எறிந்துள்ளீர்கள். முப்பது ஆண்டு (1983-2009) காலப் போர் மூலம் நீங்கள் தொடர்ந்து மக்களுக்குத் அழிவைக் கொடுத்தீர்கள். மக்கள் எலும்புந் தோலுமான ஒட்டாண்டிகளாயினர்.
1978 - தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாடு சிவதலம் ஆவரங்காலில் நடந்துகொண்டிருந்தது. ஒரு லட்சம் பார்வையாளர். இளைஞர்கள் - நீங்கள் ஊர்வலமாக வந்து பத்தடி உயர மேடை முன் நின்று “சமாதானம் வேண்டாம். யுத்தம் வேண்டும்;” என்று கூய்ச்சல் எழுப்பினீர்கள் “ஆயுத போராட்டம் சுடலையில்தான் கொடி பறக்கவிடும்” என்று ஆரூடம் கூறி, உங்களை எச்சரித்தார் அமிர்தலிங்கம் அவர்கள். அவர் எதை நீங்கள் செய்வீர்கள் என்று அன்று எதிர்வு கூறினாரோ, அதனை அப்படியே அச்சொட்டாகச் செய்து செங்குருதியால் பிணவாடை வரலாறு எழுதியுள்ளீர்கள். படங்களைப் பாருங்கள். ஆயுதம் ஏந்தி நீங்கள் வரவழைத்த கோடி கோடியில் இரண்டொரு காட்சிகள்.
இன்று உங்கள் சகல மட்ட தலைவர்கள் வரிசையைச் சேர்ந்தவர்களும் கோடி கோடி சீமான்கள். ஆடம்பர மாளிகைகள், பெரிய வணிக நிலையங்கள், பெருந்தோட்டங்கள், உல்லாச ஹோட்டல்கள், தொடர் மாடிகள், ஆடம்பர வாகனங்கள், சுவிஸ் வங்கியில் சேமிப்புகள், பங்குச் சந்தை முதலீடுகள், வேலைக்காரர்கள், அடியாட்கள் என்று குபேரர்களாக வாழ்கின்றீர்கள். நீங்கள் மட்டுமல்ல. உங்கள் உறவினர்களையும் கோடி சீமான்களாக்கி உள்ளீர்கள்.
ஆனால் 1956ஆம் ஆண்டிலிருந்து 1970 வரை பாராளுமன்ற உறுப்பினராகவும், பின்னர் 1977லிருந்து 1989வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் நாற்பது ஆண்டுகள் அரசியல் களத்தில் நின்றவர் அமிர்தலிங்கம். அவரிடம் இருந்த சொத்தெல்லாம மூளாயிலிருந்த மூன்று அறைகொண்ட ஒரு சிறிய வீடுதான்.
மக்கள் விட்ட தவறு
மக்கள் விட்ட தவறின் வரலாறு என்ன? 1981இல் உங்கள் குழப்பத்துக்கு மக்கள் எடுபடவில்லை. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நீங்கள் கட்டி அழுது கொண்டிருந்தீர்கள். மக்கள் அதனைத் தூக்கி வீசிவிட்டு, அமிர்தலிங்கம் அவர்களின் மாவட்ட சபைக்கு ஆதரவாக வாக்களித்தனர். அமிர்தலிங்கம் அவர்கள் நூறுசதவீத வெற்றிபெற்றார். அப்பொழுது மக்கள் அமிர்தலிங்கம் அவர்கள் பக்கம் உறுதியாக நின்றனர். பின்னர் உங்கள் குழப்பத்துள் மக்கள் சிக்கினர். அமிர்தலிங்கம் அவர்களைப் புறக்கணித்தனர். அதன்பேறாய் வந்த வினைகள்தான் 1983-2009 வரையான உள்நாட்டுப் போர் வேளை மக்கள் தலையில் சோனாவாரியாகக் கொட்டுப்பட்ட மரணப் பேரவலங்கள்.
மக்கள் தெளிவு பெறுகின்றனர்
இப்பொழுது தமிழ் ஈழத்தில் மக்கள் தெளிவு பெறுகின்றனர். தயவு செய்து மக்களைக் குழப்பாதீர்கள். மக்கள் அரசியலைச் சரியான வழியில் எடுத்துச் செல்ல ஆரம்பித்துள்ளனர். விரைவில் அவர்கள் பூரண தெளிவு பெற்று, அரசியலைச் சரியான பாதையில் எடுத்துச் செல்வர்.
மக்கள் 1981இல் சரியான வழியில் அரசியலை எடுத்துச் சென்றவர்கள். அண்மையில் 2010 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள், வடகிழக்குத் தமிழ் மக்கள் குழப்பத்திலிருந்து விடுபடுகின்றனர் என்பதற்குச் சிறந்த ஆதாரமாகும். புலம் பெயர்ந்த ஆதரவாளர்கள் ஒரு பிரிவினர் ஒற்றைக் காலில் நின்று பணத்தையும் இறைத்துப் பார்த்தனர். பருப்பு அவியவில்லை. மக்கள் தெளிவான நிலைக்கு வர மேலும் சில ஆண்டுகள் ஆகும்.
போர்க் காலத்தில் அழி;ந்து போகாமல், ஊமைக் காயங்கள் வன்மங்களுடன் உயிர் வாழும் மக்கள் அரசியல் துறையில் மறுமலர்ச்சி பெற்றுள்ளனர். இன்று அவர்கள் அரசியல் மௌனம் அனுட்டிக்கின்றனர். எந்தக கட்சியை ஆதரிக்கின்றான் என்பது அயல் வீட்டானுக்கே தெரியாது. அவ்வளவுக்கு நொந்து போயுள்ளனர். ஆயுத அமைப்புகளே! நீங்கள் அரசியலில் ஈடுபடுவதை ஆலகால விசமாக வெறுக்கின்றனர். நன்கு படித்த பேராசிரியர் வரிசையில் உள்ளவர்கள் அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று அவாவுறுகின்றனர்.
அமிர்தலிங்கம் அவர்களின் நிழலில் ஆயுத அமைப்புகள்
போர்க்காலத்தில் அமிர்தலிங்கம் அவர்களைத் திட்டித் தீர்த்தவர்கள் நீங்கள். இப்பொழுது உங்கள் விழாக்களில் அமிர்தலிங்கம் அவர்களது புகைப் படத்தை வைத்து, மாலையிட்டு உங்களைத் து}க்கி நிறுத்தத் தொடங்கி உள்ளீர்கள். அவரை முன்னிறுத்தி வைத்துக்கொண்டு, உங்கள் சித்தாந்தங்களை மக்களிடம் அவிழ்க்கத் தொடங்கியுள்ளீர்கள். குழப்பிய குட்டையில் மீன் பிடிக்க மக்களைக் குழப்புகிறீர்கள். அமிர்தலிங்கம் அவர்களின் அழிப்பை ஆவலாக எதிர் பார்த்த நீங்கள், அவரது படத்தைத் தீண்டக்கூடாது. உங்கள் கரங்களின் கறையைப் போக்க என்றும் வற்றாத நிராவரை நீரே போதாது.
அதேவேளை, உங்கள் விழா மேடைகளில் வலிந்து ஆதாரமில்லாது அமிர்தலிங்கம் அவர்கள்மீது பொய்க் குற்றம் சுமத்துகின்றீர்கள். அமிர்தலிங்கம் அவர்களது படத்தை மேடையில் வைத்துக்கொண்டே அவர்மீது கல்லெறிகின்றீர்கள். ‘சத்தியங்களின் சாட்சியம்’ நு}லில் உங்கள் பொய்புரட்டுகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஆறு கடக்க அறைகூவல் விடும் மண்குதிரைகள்
தமிழ் மக்களுக்குச் சுபீட்சம் பெற்றுக் கொடுக்க வேண்டும், அதற்குச் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்று சேரவேண்டும் என்று மீண்டும் கூட்டுச் சேர்கிறீர்கள். ‘ஜனநாயக போர்வையில்’ போராடப் போவதாகப் புதிய வேடம் போடுகிறீர்கள். 1983இன் முன்னரும் நீங்கள் கூட்டுச் சேர்ந்து அமிர்தலிங்கம் அவர்களைத் துரோகியாகச் சமூகத்துக்குக் காட்டினீர்கள். பின்னர், ஈழத் தமிழர் தலைவர் யார் என்று உங்களுக்குள் குத்தி வெட்டிச் சுட்டுச் செத்தீர்கள். பிரபாகரன் எல்லோரையும் குட்டி அமர்த்தித் தலைவராகினார். அதே கூட்டம் இப்பொழுது ஒன்று சேர்கிறீர்கள். தலைமைப் பீடத்துக்காகச் சு10துவாது கழுத்தறுப்பு விரைவில் தொடங்கும். மீண்டும் பழைய வரலாறு வேண்டுமா? நீங்கள் அரசியற் களத்தில் இல்லாவிட்டால், என்ன குடியா மூழ்கிப் போய்விடும்?
கூட்டுச் சேரும் உங்களுக்கு அரசியல் அனுபவம், சாணக்கியம், கல்வி வித்துவம் ஏதாவது இருக்கிறதா? அது பூச்சியம் என்பதற்கு 1985இல் நடந்த திம்பு மாநாடு சாட்சியம். ஸ்ரீலங்கா அரசின் பிதிநிதி ஏச்.டபிள்யூ. ஜெயவர்த்தனா ஐக்கியப்பட்ட ஒற்றையாட்சிக்கு உட்பட்ட பரவலாக்கத் தீர்வே ஏற்கப்படும் என்று நீண்ட உரை நிகழ்த்தியதோடு, அந்தக் கூட்டத்தில் மொழி, கல்வி, தொழில் சம்பந்தமான பேச்சை பற்றிய கருத்தை மட்டும் முன்வைக்கும்படி கேட்டார். அப்பொழுது போராளித் தலைவர்கள், பதில் சொல்லத் தெரியாது தலையைச் சொறிந்து கொண்டிருந்தனர். நிலமையை அவதானித்த அமிர்தலிங்கம் அவர்கள் எழுந்தார். அவர் தாம் அது பற்றிப் பேச வரவில்லை. அதெல்லாம் சர்வகட்சி மகாநாட்டில் கதைத்து முடிந்து விட்டது. நிருவாகத்தைப் பரவலாக்குதல், அது எந்த எந்தத் துறைகளை அடக்க வேண்டும், அதிகாரப் பிரிப்புப் பற்றியே பேசவேண்டும் என்றார். முன்னர்; அரசு வழங்கிய தீர்வுகளை மக்கள் நிராகரித்து விட்டார்கள். அதனைக் கருத்தில் எடுத்து அரசாங்கமே பொருத்தமான தீர்வை முன்வைக்க வேண்டும் என்றார். அவர் ஆதாரங்களுடன் கணைகளை அள்ளி வீசுவதை உங்கள் தலைவர்கள் பின்வாங்கு மாணவர்கள் போலக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். எழுந்து ஒரு வார்த்தை வாதாட லாயக்கற்ற நீங்கள் கூட்டுச் சேர்ந்து புறப்பட்டுள்ளீர்கள். நீங்கள் வெறும் மண் குதிரைகள். ஆற்றைக் கடக்க மக்களுக்கு உதவப் போவதாக அறைகூவல் விடுகிறீர்கள்.
ஈழத் தமிழன் சாபக்கேடு
அமிர்தலிங்கம் அவர்களின் அயராத முயற்சி காரணமாக, இந்திய அமைதிப் படை .1987இல் இலங்கை வந்து சேர்ந்தது. நீங்கள் ஆட்சியைக் கைப்பற்றும் அதிகாரவெறியில் சகுனிகளாகச் செயற்பட்டீர்கள். அந்தப் பொன்னான சந்தர்ப்பத்தில் உங்கள் ஆயுத அமைப்புகளுக்கு மூடுவிழா நடாத்திவிட்டு ஒதுங்கிப் போயிருந்தால், இதுவரையில் தமிழ் ஈழம் பூத்துக் காய்த்துப் பழுத்துக் குலுங்கியிருக்கும். மன்னித்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஈழத் தமிழ் இனத்துக்குச் சாபக்கேடு. 1975 தொட்டு தமிழ் இனத்தின் தலையாய பிரச்சினை நீங்கள்தான் - ஆயுத இயக்கங்கள்தான்.
மக்கள் மௌனம் பேசுவது
ஆயுத அமைப்புகளே!
உங்களுக்குக் கோடி கோடி புண்ணியம் உண்டு. தயவு செய்து மக்களை மீண்டும் ஒரு முறை குழப்பாதீர்கள். நீங்கள் முன்னர் ஒரு முறை மக்களைக் குழப்பி, அவர்கள் அழுதழுது அனுபவித்தது போதும். நீங்கள் சீண்டாமல் விட்டால் மக்களுக்குச் சரியான அரசியற் பாதையில் பிரயாணிக்கத் தெரியும். நீங்கள் மக்களுக்குச் செய்யக் கூடிய மாபெரும் நன்மை ஒன்று உண்டு. உங்கள் அமைப்புகளைக் கலைத்துவிட்டு, அரசியற் களத்திலிருந்து ஒட்டு மொத்தமாக ஒதுங்கிக் கொள்ளுங்கள். உங்கள் துர்நாற்ற வாடை அரசியற் களத்தில் வீசக்கூடாது. அதுதான் இன்று தமிழ் ஈழத்தில் அரசியல் பேசாது மௌனம் காக்கும் மக்களின் வேணவா.
மக்களின் எதிர்பார்ப்பு
ஆயுத அமைப்பைச் சேர்ந்தவர் டக்ளஸ் தேவானந்தா. 2010 தேர்தலில் யாழ் மாவட்டத்தில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றார். எனினும் அவரது கட்சி மண் கவ்வியது. அரச அமைச்சராக இருந்து கொதிக்கிற வயிறுகளுக்கு கஞ்சி ஊற்றியதற்கு நன்றிக் கடனாகப் போட்ட வாக்குகள். கொழும்புப் பாராளுமன்றத்திலும், இந்தியாவிலும், சாவகச்சேரியிலும் இவரது கொலைகள் தலைவிரித்து நிற்கின்றன. இன்னும் வெள்ளை வான் மூலம் ஆட்கள் கடத்துவது பற்றியும், காணாமற் போதல் பற்றியும் சர்ச்சைகள் பூதாகாரமாக எழுந்துள்ளன. வன்முறை அமைப்பு வழிவந்த அவரது அரசியலுக்கு நீண்ட ஆயுள் இல்லை. மக்கள் சரியான தலைமையைத் தெரிந்து எடுத்ததும், அவர் சுவடுமில்லாமல் காணாமல் போய்விடுவார்.
இரா சம்பந்தர் அவர்கள் ஆதரித்ததால், ஆயுத அமைப்பினர் சிலர் 2010 தேர்தலில் உயிர் பிழைத்துள்ளனர். வடமாகாணத்தின் அரசியற் திறமைசாலிகள் யாவரும் அழிக்கப்பட்டு விட்டார்கள். படித்த விவேகமான ஆக்கத்திறன் படைத்த, சுயசிந்தனையுள்ள அரசியல்வாதி ஒருவர் தன்னும் இன்று அரசியற் களத்தில் உயிரோடு இல்லை. அதுவே முன்னாள் போராளி அமைப்பினர் சிலர் வெற்றிகளுக்குத் துணை போனது. அவர்களை மடிக்குள் பொத்தி வைத்திருப்பது விசப் பாம்பிற்குப் பால் வார்ப்பது போன்றது. அதனை இரா சம்பந்தர் அவர்கள் புரியும் காலம் வெகு து}ரத்தில் இல்லை.
தமிழ் ஈழத்தின் இன்றைய தேவை. ஆயுத அமைப்புப் பின்னணி அற்ற, நன்கு படித்த விவேகமான சுயமாகச் சிந்தித்துச் செயற்படக் கூடிய இளம் அரசியல் வாதிகளே. பேராசிரியர் எஸ்.கே.சிற்றம்பலம், நீதிபதி விக்கினேஸ்வரன் போன்ற மூத்த அரசியல் வாதிகளின் வழி காட்டலில் புதிய அரசியல் எழுச்சி ஏற்படவேண்டும். மக்கள் அதனையே எதிர் பார்க்கின்றனர்.

அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
தலைவர் அமிர்,
நினைவுகள்
Monday, August 23, 2010
Thursday, August 19, 2010
மாம்பழத் திருவிழாவில் பங்குபற்றிய மாணவர்கள் விபரம்!
சூரிச் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் திருக்கோவிலில் நேற்று நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் காமதேனு கல்விக் கழக மாணவர்கள் பங்குபற்றிச் சிறப்பித்தார்கள்.
பழனியாண்டவர் செல்வி அனுத்திகா அரிராஜசிங்கம்
ஒளவையார் செல்வன் ஜனன் ஜவீன்
பிள்ளையார் செல்வி பிரணவி மங்களேஸ்வரன்
சிவபெருமான் செல்வன் துவாரகன் வனிதநாதன்
உமாதேவியார் செல்வன் சயந்தன் றதீஸ்வரன்
முருகன் செல்வன் சிதூர்சன் சிவசுப்பிரமணியம்
நாரதர் செல்வன் துவாரகன் விமலச்சந்திரன்
இவர்களோடு பொறுப்பாசிரியை திருமதி ஸ்ரீகலாசேனை சிவசுப்பிரமணியம் அவர்களும், ஆலய மகோற்சவ பிரதம குரு - ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ இராம. மகேஸ்வரக் குருக்கள் ஐயா (ஹாம் - ஜேர்மனி) அவர்களும் நிற்பதை படத்தில் காணலாம்.

சூரிச் முருகன் கோவில்,
மாம்பழத் திருவிழா
Wednesday, August 18, 2010
சூரிச் முருகன் கோவில் - மாம்பழத் திருவிழா
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
சூரிச் முருகன் கோவில்,
மாம்பழத் திருவிழா
Saturday, August 14, 2010
நல்லூரைக் கும்பிடு! - நாளை கொடியேற்றம்!
வழமைபோல நல்லூர் முருகனின் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது! யாழ்ப்பாணக் குடாநாடே விழாக் கோலம் பூண்டுவிடும்.2006இல் இருந்து கடந்த 5 வருடங்களாக முருகனைக் காணாமல் மனம் தவியாய்த் தவிக்கிறது! எப்போது மீண்டும் ஒருதடவைவந்து தேரடியிலும் உள்ளே கொடித்தம்பத்துக்கு முன்பாகவும் விழுந்து கும்பிடுவேன் என்றிருக்கிறது!
கடந்த வருடம் வெளியாகிய நல்லைக் குமரன் மலரிலிருந்த எழிலான படங்களை இணைத்துள்ளேன்.
பல்லவி
நல்லூரைக் கும்பிட்டு நீ பாடு - அதனாலே
நாட்டிலுள்ள பிணிகள் ஓடும்
அநுபல்லவி
செல்லாதே வெறுங்கையாய் செல்லப்பன் வாழ்ந்த நாடு
தேங்காயுடன் பழம் கொண்டு நீ செல்லு
சரணம்
வாடி உன் மனம் ஓடினாலும் வருத்தங்கள்
கோடிகோடியாகக் டினாலும் குறைகள் வந்து
தேடி உன்னை மூடினாலும் செல்லப்பன் பாதம்
சிந்தித்தால் ஓடிப் போமே!
பெண்டு பிள்ளைகளென்று பேதைமை கொண்டு நீ
கண்ட கண்ட இடம் கலங்கி நீ திரியாதே!
(யோகர் சுவாமிகளின் நற்சிந்தனை)

நல்லூர்,
நற்சிந்தனை,
யோகர் சுவாமி
Friday, August 13, 2010
சூரிச் முருகன் கோவில் கொடியேற்றம் இன்று
இன்று 13.08.2010 வெள்ளிக்கிழமை சூரிச் அடில்ஸ்வீல் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் திருக்கோவிலில் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
சூரிச் முருகன் கோவில்
Subscribe to:
Posts (Atom)