அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, March 5, 2011

மாவை மகாராஜ ஸ்ரீ சண்முகநாதக்குருக்கள் ஐயா அவர்களுக்கு எமது அஞ்சலிகள்!மாவை ஆதீன முதல்வரும் - மாவிட்டபுரம் கந்தசுவாமி தேவஸ்தான பிரதம சிவாச்சாரியாருமகிய மகாராஜ ஸ்ரீ சண்முகநாதக்குருக்கள் ஐயா அவர்கள் முருகப் பெருமானுடைய பாதாரவிந்தங்களை அடைந்தார் என்ற செய்தியைக் கேள்வியுற்றோம்.

அவரது ஆத்மா பேரானந்தப் பெருவாழ்வடைய எல்லாம்வல்ல இறைவனை மனமார வேண்டுகிறோம்.

அன்னாரின் சமய - சமூகப் பணிகளை நாம் நினைவுகொள்ளுவதோடு - அன்னாரின் பூதவுடலுக்கு எமது அஞ்சலிகளைத் சமர்ப்பிப்பதுடன் - அவரது குடும்பத்தவருக்கும் பிரிவால் துயருறுகின்ற சைவ அடியார்களுக்கும் எல்லாம் வல்ல மாவைக் கந்தன் மன தைரியத்தை வழங்கிட மனதார வேண்டுகின்றோம்.

1 comment:

சிவத்தமிழோன் said...

சிவாச்சாரியார் எல்லாம் வல்ல முருகப்பெருமானுடன் சைவசிந்தாந்த சுத்தாத்துவித பேரானந்தத்தை நுகர்திருக்க வேண்டுவோமாக. திருச்சிற்றம்பலம்