அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, December 3, 2012

சுவிற்சர்லாந்தின் உணவு வகைகளும் முறைகளும்

கடின உழைப்பாளிகளான சுவிஸ் மக்கள் தமது உணவு விடயத்தில் மிகவும் கவனமாகவும் அதே நேரம் மிகவும் இரசனையுடன் உணவு உண்பதுதான் விசேடம்.
சாதாரணமாக உணவு முறையில் ஒரு பிரமிட் முறையைக் கையாள்கிறார்கள். படத்தில் காட்டியபடி இம்முறையினால்தான் சுவிஸ் நாட்டவர்கள் 100 வயதுவரை ஏன் அதற்கு மேலும் வாழ்கிறார்கள்.

விருந்துபசாரங்கள் பல மணிநேரம் நடைபெறுவது வழக்கம்.பல நண்பர்கள் மற்றும் கிறீஸ்தவப் பாதிரியார்களுடன் பல தடவை உணவு உண்டிருக்கிறேன். குறைந்தது ஒர மணிநேரமாவது சாதாரணமாக செலவழித்து உண்பார்கள்.
ஒரு தடவை நானும் ஒரு விருந்துபசாரத்துக்குச் சென்று ஏறக்குறைய 4 மணி நேரம் காத்திருந்து உணவருந்தியது மறக்க முடியாத அனுபவம். முதலில் பரிமாறப்படுவது சாதாரணமாக ஒரு விருந்தபசாரத்தில் குடிவகைகளுடன் சூப். அதன்பின் சலாட். அதற்குப் பிறகு பிரதான சாப்பாடு(Menu) வரும். எனக்கு முதல் இரு அயிட்டங்களுமே போதுமானது. அதிகமாக உண்ண முடியாது. இதன் பின் Disert.
















































































































































































































4 comments:

Jana said...

இது உங்களுக்கே..அநியாயமாக படவில்லையா முகுந்தன். சுவையான உணவுகளை படமிட்டு, அதைப்பற்றி சுவையாகவேறு எழுதி, நாக்கில் எச்சிலை ஊறப்பண்ணிட்டீங்களே???

தங்க முகுந்தன் said...

நான் உண்மையைத்தான் சொன்னேன். நாவில் எச்சில் ஊறினால் சிரமத்தைப் பாராமல் ஒரு தடவை இங்கு வந்து ஒரு பிடி பிடித்துவிட்டுப் போகலாம். வருவதற்கு Visaவுக்கு நான் உத்தரவாதம் கொடுக்கமுடியாது!

யோ வொய்ஸ் (யோகா) said...

ம்ம்ம் கொடுத்து வைக்கலையே

Anonymous said...

இது எதுவுமே சுவை இல்லை. நம்ம நாட்டு உறைப்பு கலந்த சுவை எதிலயுமே வராது!
நான் சுவிசில இருந்துபொண்டு எப்ப நல்ல தமிழ் சாப்பாடு சாப்பிடுவன் என்டு இருக்கிறன்.
ஒரு தடவை சிங்கப்புர் பக்கம் போகணும் (இந்தியாவிற்கு பணம் கொடுக்ககுடாது என்பது எனது கொள்கை) :D