அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, May 22, 2010

தமிழருக்கு ஏன் இந்த தலைகுனிவு!

சங்கம் வைத்த தமிழன் இன்று பல
சங்கங்கள் வைத்திருந்தாலும்
தரணியில் தாழ்வுற்றதும்
தலைகுனிந்ததும் காரணம் யாதோ?

சங்கிலியன் வன்னியன் விக்கிரமன் என
பாராண்ட மன்னர் நீதிக்காய் அரசியற்ற,
நீதியைப் புறந்தள்ளி - நிதிக்காக
கொள்ளையும் கொலையும்தான்
எம் கொடுங்கோல் என ஆட்சிசெய்து
குடிமக்களை குலைநடுங்கச் செய்த வீரமும் போய்
இருந்த இடம் தெரியாது அழிந்தொழிந்து போனோமே!

இருந்த ஆட்சியில் நியாயமற்ற காரணத்தால் இன்று
நாடுகடந்த அரசு என்னும் பெயர் சொல்லி
இருந்த மக்களை நட்டாற்றில் தவிக்கவிட்டு
இடம்பெயர்ந்து வாழவந்த தமிழரையும்
இடிபடச் செய்யும் கோணங்கித்தனமான
புத்தியை யார் ஏற்பார்?

பந்து விளையாட்டுக்காய்
பள்ளி அதிபரைக் கொன்றவரும்
பாசாங்கு செய்து பழி தீர்த்த வன்மையும்
மறுபேச்சு உரைத்திட்ட
மனிதரையும் கொன்றொழித்தவர்தான் நம்
தேசத்தின் தலைவர் என மதியிழந்த மனிதரும்
மறுபேச்சின்றி தேர்ந்தெடுத்த
மக்களும் இன்று படும்பாடு
மதியுள்ளவரே சிந்தனை செய்வீர்!

பொதுமறை தந்த வள்ளுவன் சொன்ன
கொடுங்கோன்மை அரசின் துன்பத்தால்
மக்கள் சிந்திய கண்ணீரும் சாபமும்
இருந்த ஆட்சியையே இல்லாமல் செய்ததா?

1 comment:

ARV Loshan said...

எமது பிறவிக் குணம் அண்ணே.. எல்லா நாட்டுத் தமிழனும் இப்படி ஈன,எளிய பிறவி தான்..
குத்து வெட்டும்,குழி பறிப்பும் எம்மவர்க்கே உள்ள எளிய குணம்..
திருந்த மாட்டோம் நாம்..