அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, March 9, 2009

கன்னியாகுமரி ஸ்ரீ விவேகானந்த ஆச்சிரமத்தின் ஸ்தாபகர் ஸ்வாமி மதுரானந்த மகராஜ் அவர்கள் புகைப்படங்கள்
















2 comments:

சிவத்தமிழோன் said...

அண்ணா, நலமா? நீண்ட நாட்களாகிவிட்டன கதைத்து. உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். ஓடி வந்தேன் கிருத்தியத்தில் நலம் நவில.

அண்ணா, இராமகிருசுண மட சுவாமிகள் உருத்திராக்கம் அணிவது பொதுவாக நான் கண்டதில்லை. ஈழமணி நாட்டில் அவர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளபோது உருத்திராக்கம் அணிதல் நலம் பல ஊட்டும் எனக் கருதுகிறேன்.


விவேகானந்த ஆச்சிரமம் பற்றி சிறியேன் அறியும் பாக்கியத்தை பெறவில்லை. தங்களால் தெய்வீக மணம் கமழும் திருவதனம் கொண்ட சுவாமியைக் காணும் பேறு பெற்றேன். சிவானந்தம் நிறைந்த வதனம். துறவியரின் சீடர்களுக்கும் சாதரண மக்களுக்கும் சிவசிந்தையை ஊட்டும் உருத்திராக்கம் பூண்ட மகானின் திருவுருவில் இறையானந்தம் நுகரும் பேறு கிட்டியது.

அண்ணா, நன்றிகள்.

தங்க முகுந்தன் said...

அன்புத் தம்பி சிவத்தமிழோனுக்கு!
வணக்கம்.
நீண்ட நாட்கள் தொடர்பில்லாமல் இருந்தீர். சுவாமியினுடைய உருவத்தைப் பார்த்து தொடர்பு கொண்டமைக்கு நன்றி. அடியேன் சுவாமியை நேரடியாகத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றிருந்தேன். எனது கிருத்தியத்தின் அறிமுகத்தில் தரிசித்த மகான்கள் வரிசையில் சுவாமியினுடைய பெயரையும் பதிவிட்டிருப்பதை நான் சுட்டிக் காட்டுவதுடன் அண்மையில் தான் கன்னியாகுமரியிலிருந்து படங்கள் கொண்ட சிடியை அனுப்பி வைத்தார்கள். சில வேலைப் பளு காரணமாக பதிவிடுவது தாமதப் படுகிறது. சுவாமியினுடைய வாழ்க்கைவரலாறு முழுவதும் பதிவிட இருக்கிறேன். படித்துவிட்டு உமது கருத்தைத் தெரிவிக்கவும்.

என்றும் மறவாதவன்.