அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, October 26, 2009

நேற்று அதிகாலை முதல்(25.10.2009 ஞாயிறு) நேரமாற்றம்


பனிக்காலத்தை முன்னிட்டு வழமையான நேரத்தைவிட 1 மணித்தியாலம் குறைக்கப்படுவது கிரமமாக சுவிஸ்ற்சர்லாந்தில் நடைபெறும் நடைமுறை. ஒக்ரோபர்(October) மாதக் கடைசி ஞாயிறு அதிகாலை முதல் இந்த நடைமுறை தொடங்கி மார்ச்(March) மாத இறுதி ஞாயிறு திரும்ப 1 மணிநேரம் கூட்டுவதுடன் இந்நடைமுறை முடிவுக்கு கொண்டு வரப்படும்.இலங்கைக்கு இதுவரை 3மணிநேரம் 30 நிமிடங்கள் வித்தியாசமிருந்த நேரம் இனி 4.30 மணி நேரமாக அதிகரிக்கும். வழமையாக எம்முடன் காலை 8.00 மணிக்கு இலங்கையிலிருந்து தொடர்பு கொண்டால் எமக்கு இங்கு அதிகாலை 4.30மணி. இனி இது 3.30மணி! என்னைப் பொதுவாக எனது குடும்பத்தினரும் உறவினர்களும் பின்னிரவுகளில் தொடர்பு கொள்வது வழக்கம்.
நானும் கொழும்பில் இருந்த போதும்சரி இங்கும்சரி மற்றவர்களைப்போல தொலைபேசியை இரவு நேரங்களில் offஇல் வைப்பது கிடையாது! நிம்மதியான தூக்கம் ஈழத்தவர்களான எமக்கு என்றைக்குத்தான் இருந்தது? இருக்கும்?

எந்த நேரம் பொலிஸ் வரும்! - ஆமி வரும்! - எந்த நேரம் என்ன நடக்கும்? எப்போது குண்டு வெடிக்கும்! ஷெல் விழும் என்ற நினைவுகள் எப்போது நீங்குமோ அன்றுதான் எமக்கு நிம்மதியான தூக்கம்!

8 comments:

Jana said...

பனிக்கால மணிக்குறைப்ப தகவல் தந்தமைக்கு நன்றி.
ஒரு மணித்தியாலம் குறைக்கப்பட்டதால் வேளைக்கு எழும்பவேண்டிய நிலை வந்துவிடுமல்லவா???

தங்க முகுந்தன் said...

இல்லை ஜனா!

இப்போது ஒரு மணி நேரம் தாமதித்து எழும்பினால் சரி!

Muruganandan M.K. said...

நேர மாற்றம் பற்றிய தகவலுக்கு நன்றி

யோ வொய்ஸ் (யோகா) said...

தகவலுக்கு நன்றி முகுந்தன் அண்ணா

Anonymous said...

in Canada this time change will be coming Saturday the 31st.

Admin said...

தகவலுக்கு நன்றிகள்

Muniappan Pakkangal said...

Nice info,nice photos,nehilvaana mudivu Thanga Muhunthan.Somebody will come for rescuing Eezha tamilians.

ilangan said...

நம்ம நாட்டிலயும் அரை மணித்தியாலப் பிரச்சனை நாட்டுக்குள்ள இருந்தது. போடருக்கு அங்கால போனா அரை மணித்தியாலம் கூட்ட வேணும். இஞ்ஞால வந்தால் அரை மணித்தியாலம் குறைக்கிறதெண்டு.
இப்ப?
அங்கங்க இது இப்பவும் நடைமுறையில் இருக்கு.
உங்கள் தகவலுக்கு நன்றி.