இன்று பதிவிட்ட சுவிற்சர்லாந்து உணவுகளைக் கண்டபின் பின்னூட்டமிட்ட நண்பன் ஜனா நல்ல சாப்பாட்டுப்படங்களைப் போட்டு வயிற்றை நன்றாக இறுக்கிறீங்களோ என மின்னஞ்சல் தொடர்பில் கேட்டுக் கொண்டார். இல்லையடா எனக்குப் பிடித்தது எங்கள் ஊர்ச் சாப்பாடு என்றேன். அப்போது தொடர்ந்தபோதுதான் தூதுவளைச் சம்பலில் ஆரம்பித்து கூழாம்பழம், இலந்தை என்று முள்ளுமுருக்கை வரை கதைபோய் பிறகு மட்டுவில் கத்தரிக்காயும் முள்ளுமுருக்கையும் யாழ்ப்பாணத்தில் இப்போது இல்லை என்ற தகவலைத் தெரிவித்தார். 2வாரங்களுக்கு முன்னர் உதயனில் கட்டுரை வந்ததாகவும் - யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மேல் நடுகைத் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருப்பதாகவும்த் தகவல் தந்தார். முன்னர் யாழ்ப்பாணத்தில் மில்க்வைற் தொழிலதிபர் அமரர் க: கனகராசா அவர்கள் இருந்தபோது ஊர்தோறும் மரங்கள் நடுவதற்கு தாமே முன்னின்று மரக்கன்றுகளை வழங்கி வந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் அதற்கும் வழியில்லை. அவர் இறுதியாகச் சொன்னார் ஒரு வாக்கியம் அதாவது மரந்தான் - மனிதன் மறந்தான் என்று! அருமையான வாக்கியத்தைப் பிடித்துக்கொண்டு அவருக்குச் சொல்லிவிட்டு ஓர் பதிவை இட்டேன். இந்த விடயத்தில் புள்ளி விபரங்களுடன் அவர் அவரது நண்பர் திரு. ஜெயசீலனுடன் தொகுத்து ஒரு கட்டுரையைத் தருவார். அதற்கு முன்னர் நான் பதிவிட வேண்டும் என்று நினைத்ததைப் பதிவிலிட்டேன்.
Sunday, October 11, 2009
எனக்கு பிடித்த சாப்பாடு - அருகிவரும் மரங்கள் - நம்மவர்களின் கவலையீனம்
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
பிடித்தது,
வேண்டுகோள்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
மரங்கள் பற்றிய உங்கள் அக்கறை வரவேற்கத்தக்கது. யாழ்ப்பாணத்தில் முள்ளுமுருங்கை தற்போது அழிந்துவருவது உண்மையே. காரணம் அந்த இன மரங்களில் தொற்றும் ஒருவித கிருமிதான். அத்தோடு மட்டுவில் கத்தரிக்காயை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள், அது தற்போது அல்ல முன்னரே அதன் தரம் கெட்டு அழிவடையும் நிலையில் உள்ளது.
அக்கறையான பதிவுக்கு நன்றி.
- SIVA
ஒரு சம்பாசனையினைக்கூட பதிவாக்கும் திறமை தேர்ந்த எழுத்தாளர்களால்த்தான் முடியும். கலக்கிட்டீங்க தங்கமுகுந்தன். "மரம்தான் ஆனால் மனிதன் மறந்தான்" என்று நம்ம செல்லம் நடிகர் பிரகாஷ்ராஜ் எழுதிய வசனம்.
// "மரம்தான் ஆனால் மனிதன் மறந்தான்" என்று நம்ம செல்லம் நடிகர் பிரகாஷ்ராஜ் எழுதிய வசனம்//
இருக்கலாம் ஆனால் இது
”மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்” என்னும் வைரமுத்துவின் கவிதையை பார்த்து கூறியதாக இருக்கலாம்
தாமே முன்னின்று மரக்கன்றுகளை வழங்கி வந்த மில்க்வைற் தொழிலதிபர் அமரர் க: கனகராசா அவர்களை ஞாபகப்படுத்தி பதிவிட்டது மிகவும் பொருத்தமானதே.நன்றி.
Post a Comment