அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, July 4, 2011

பதிவுலகில் 3 ஆண்டுகள் - சில நினைவுகள்!!!

சுவிற்சர்லாந்துக்கு வந்து 4 வருடங்களும் 2மாதங்களும் 10 - 20 நாட்களுமான என்னால் 3 வருடங்கள் எப்படி பதிவிட முடிந்தது என்றால் உண்மையில் தனிமைதான்! பல ஊரே உறவுகளாக இருந்த நான் இன்று ஒரு ஊரை உறவாக எண்ணி தனியாக வாழ்கிறேன்! ஆம் நான் இருக்கும் ஊர் அப்படி அழகானது! அதனாலேயே வந்த நாள் முதல் இங்கு வாழ்கிறேன்.1983களிலிருந்தே எழுதுவதிலும் பேசுவதிலும் பாடுவதிலும் ஓரளவு அனுபமுடைய நான் தினபதி - தினகரன் - வீரகேசரிப் பத்திரிகைகளில் எழுதிவந்துள்ளேன்! பின்னர் வலம்புரி - உதயன் - தினக்குரலிலும் தொடர்ந்தேன். பல கட்டுரைகள் - கடிதங்கள் தேவையான நேரத்தில் பிரசுரிக்கப்படாத காரணத்தால் வெகுண்டெழுந்தேன். இந்த கட்டுரைகள் - கடிதங்கள் சமய - சமூக சம்பந்தமானவை! மக்களுக்கு ஓரளவாவது நல்ல வழியையே இவை ஏற்படுத்தும்!

என்னுடைய கருத்துக்கள் இப்போதைய ஐ.நா சபையின் நிபுணர் குழுவின் அறிக்கையோடு ஒத்திருப்பதை எண்ணி எனக்குள்ளே நான் பிரமிப்பதுண்டு! இருபகுதியினரையும் நான் விமர்சித்துள்ளேன் - குற்றம் சுமத்தியுள்ளேன்! ஏன் ஒரு கட்டத்தில் நான் நாட்டின் தலைவரைக் கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றேன்! இதைப் பயம் காரணமாக என் பதிவிலிருந்து எடுத்திருக்கலாம்! நான் வாகீசரின் வழிநிற்பவன்! நாம் யார்க்கும் குடியல்லோம் - நமனை அஞ்சோம்!


எனது இந்த பதிவை அழகுற வடிவமைத்து கிருத்தியம் என்ற பெயரையும் வைத்து பதிவுலகிற்கு அறிமுகமாக்கிய மேடை - மலையகம் பதிவர் ராமானுஜம் நிர்ஷன் அவர்களுக்கு எப்போதும் போல இப்போதும் என் மனம்நிறைந்த நன்றியைத் தெரிவித்து இதனை நிறைவு செய்கிறேன்!

என்றும் உண்மையுடன்

தங்க. முகுந்தன்.

9 comments:

Jana said...

வாழ்த்துக்கள் அண்ணை...
அது சரி வாகீசர் என்றால் அப்பர் என்கின்ற திருநாவுக்கரசர்தானே ?

தங்க முகுந்தன் said...

நன்றி ஜனா!
ஓம் திருநாவுக்கரசர் தான் வாகீசர்

SShathiesh-சதீஷ். said...

வாழ்த்துக்கள் அண்ணை.

SShathiesh-சதீஷ். said...

:)

தங்க முகுந்தன் said...

நன்றி சதீஷ்!!!

Anuthinan S said...

வாழ்த்துக்கள் அண்ணா!!!

றமேஸ்-Ramesh said...

வாழ்த்துக்கள் அண்ணே.. இணையத்தில் இதயமிணைகிறோம்.

யோ வொய்ஸ் (யோகா) said...

வாழ்த்துக்கள் அண்ணா.......

LOSHAN said...

தாமதமான வாழ்த்துகள் அண்ணா..
தொடர்ந்து பகிருங்கள்..
உங்கள் படப் பதிவுகள் கூட நான் ரசிப்பவை அண்ணா..