அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, July 24, 2011

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் - ஊடகங்கள் - தவறான செய்திகளும்!

நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் குறித்து பல ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளமை கவலைக்குரியதாகும். நடுநிலை நின்று செய்திகளைத் தவறாமல் - திரிவுபடுத்தாமல் மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதில் ஊடகங்களுக்கு தனியான பங்களிப்புண்டு! - அதுவே ஊடகங்களின் கடமையும்!முதலில் குடாநாட்டு உள்ளூர்ப் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டால் உதயன் - வலம்புரி இரண்டிலும் தவறான செய்திகள் பிரசுரமாகியிருக்கின்றன!

வடக்கில் தமிழருக்கு பெரு வெற்றி 18 சபைகளும் கூட்டமைப்பு வசம்; ஈ.பி.டி.பியினருடன் இணைந்து களமிறங்கிய ஆளும் கட்சி தோல்வி - இது உதயன் பத்திரிகையின் தலைப்புச் செய்தி!

வடக்கு உள்ளூராட்சித் தோ்தல்
த.தே.கூ. அமோக வெற்றி; படுதோல்வியடைந்தது அரசு
18 சபைகள் கூட்டமைப்பு வசம்! - இது வலம்புரி பத்திரிகையின் தலைப்புச் செய்தி!

இணையத்தளமான லங்காஸ்ரீ - தமிழ்வின் தனது துரித செய்திச் சேவையில் பல தவறுகளைப் பிரசுரித்திருக்கிறது.

1. வடக்கில் உள்ள 20 பிரதேச சபைகளில் 18 சபைகளையும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நடந்த இரு சபைகளையும்கூட கூட்டமைப்பே கைப்பற்றி உள்ளது.

2.யாழ்ப்பாண சாவகச்சேரி நகரசபையின் முழு ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

3. திருகோணமலை மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

4. திருகோணமலை நகரசபையைக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கைப்பற்றியுள்ளது.


செய்திகளைத் திருத்தம் செய்தால் முதல் மூன்று செய்திகளில் 17 சபைகள் என வரவேண்டும். இதில் 3 நகர சபைகள் 14பிரதேச சபைகள் அடங்கும். கிருத்தியத்தில் இது குறித்த செய்தி விபரமாக வெளிவந்துள்ளது.

அடுத்த 3 செய்திகள் பின்வருமாறு அமைய வேண்டும்

1.யாழ்ப்பாண சாவகச்சேரி நகரசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கைப்பற்றியுள்ளது

2. திருகோணமலை மாவட்டத்தில் 4 பிரதேச சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

3. திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கைப்பற்றியுள்ளது.


இப்பதிவில் தவறேதுமிருந்தால் மன்னிக்கவும்!

1 comment:

Murari said...

தமிழ் இணையத் தளங்களில் நாடொறும் நான் கவனிக்கும் பிளைகளை சேர்த்து அன்றன்றே ஒரு கட்டுரை வரையலாம். உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.தமிழ் வானொலிகளும் அப்படித்தான்.நன்றி.