அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, December 10, 2009

ஐயப்பன் பஜனைப் பாடல்கள் (தொடர்ச்சி)

கொள்ளுப்பிட்டி ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஸ்ரீ ஐயப்பஸ்வாமி திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தர்மசாஸ்தா
காலடி ஸ்ரீ ஆதிசங்கரர் திருக்கோவில் முன்பாக

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையிலுள்ள ஆலயப்படியில்

சொரிமுத்தையனார் கோவிலில்

எரிமேலியில் பேட்டை துள்ளலுக்கு முன் சாயம் பூசியநிலையில்

யாத்திரை நிறைவடைந்தபின் கன்னியாகுமரி வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்தர் ஆச்சிரமத்தில் ஸ்வாமி ஸ்ரீ சைதன்யானந்த மகாராஜ் அவர்களுடன் எமது குழுவினர்

திருவள்ளுவரின் பாதத்தில் நாம்

கன்னியாகுமரி ஸ்ரீ குகநாதேஸ்வரப் பெருமான் கோவிலில் இருமுடிகட்டு நிறைக்கும்போது

சொரிமுத்தையனார் கோவிலில்

இருமுடியைச் சுமந்து வந்தோம் இரக்கமில்லையா!
இறைவா உன் சோதனைக்கோர் அளவுமில்லையா!

அழுதையிலே குளித்துவந்தோம் அறியவில்லையா!
அருகேயோர் கல்லெடுத்தோம் வைக்கவில்லையா!
கரிமலையில் கதறிவந்தோம் கவனமில்லையா!
கருடன் என்னைக் கண்டதாகச் சொல்லவில்லையா!

பம்பையிலே குளித்துவந்தேன் பார்க்கவில்லையா!
பம்பா நதி போஜனம் நீ அருந்தவில்லையா!
பம்பையிலே விளக்கெடுத்தோம் பார்க்கவில்லையா!
பகவானே உனக்குக் கூட சாட்சி தேவையா!

பதினெட்டுப் படிகள் ஏறி வரவுமில்லையா
படித்தேங்காய் உடைத்த சத்தம் கேட்கவில்லையா!
கொடிமரத்தை சுத்தி வந்தேன் காணவில்லையா!
கூடிநின்ற சனங்களைப் போய் கேட்டுப்பாரையா!

நெய் அபிஷேகம் செய்தேன் நினைவுமில்லையா!
மெய்யுருகிப் பாடியதும் கேட்கவில்லையா!
ஐயா உன் சரணம் என்றே கூறவில்லையா!
விஸ்வமெல்லாம் காத்தருளும் ஜோதியல்லவா!

இருமுடியை இருமுடியை இருமுடியை
சுமந்து வந்தோம் இரக்கமில்லையா!
இறைவா உன் சோதனைக்கோர் அளவுமில்லையா!
ஐயப்பா உன் சோதனைக்கோர் அளவுமில்லையா!

-------------------

சபரிமலை சாரலிலே சாயங்கால வேளையிலே
இருமுடியை தாங்கிக்கொண்டு ஒருமுகமாய் கூடிக்கொண்டு
சரணம் சொல்லிப் பாடிவந்தோம் ஐயப்பா – நாங்கள்
சரணம் சொல்லிப் பாடிவந்தோம் ஐயப்பா

சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

கருணையின் திருவுருவை காண்பதற்கே காத்திருந்தோம்
தர்மத்தின் மறுவடிவை தரிசிக்க முடிவானோம்
கருணையின் திருவுருவை காண்பதற்கே காத்திருந்தோம்
ஓங்கார ஒளிவிளக்கை ஒற்றுமையாய் நாம் மகிழ்ந்தோம்
திருமுகத்தைக் காண்பதற்கு திரளாக கூடிவந்தோம்
திருமுகத்தைக் காண்பதற்கு திரளாக ஓடிவந்தோம்

இருமுடி தாங்கி சன்னதி தாண்டி சரணம் சொல்லி வந்தோமே!
பாதபலத்தில் தேகபலத்தில் மறுபடி மறுபடி வருவோமே!

வேதத்தின் வித்தகனை விரைவாக காணவந்தோம்
சிலைவடிவில் அமர்ந்தவனை அலைஅலையாய் காணவந்தோம்

சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

மாசற்ற மணிவிளக்கை மகிழ்வுடனே நாடிவந்தோம்
தலைவனாக அமர்ந்தவனை மலையேறிப் பாடிநின்றோம்

-----------------

ஸ்வாமியே ஐயப்போ! ஸரணம் ஐயப்போ!
வில்லாளி வீரனே! வீரமணி கண்டனே!

மண்டலகாலம் வந்தல்லோ!
மணிமாலை கழுத்தில விழுந்தல்லோ!
சின்மயரூபன் ஐயன்ட நாமம்
புண்ய மந்திரம் உரைத்தல்லோ!
உதித்தது சிந்த படித்தல்லோ
காடாக நின்று சுதி முழக்கம்

உச்சிக்காய் பிறவிக்காய் ஆச்சும் மூச்சும் நின்ற மதம்
நித்தமும் சொல்லிடும் புண்ய நாமம் - புண்ய நாமம்

ஆதார பூதனே! ஆதரிக்க நீ
சன்னதி தேடுவாய் ரட்சை ஏது – ரட்சை ஏது!
ஸ்வாமியே ஐயப்போ! ஸரணம் ஐயப்போ!
வில்லாளி வீரனே! வீரமணி கண்டனே!

பேட்டைகட்டி எருமேலி பம்பையில் பாவம் போக்கி
மகர ஜோதி காண நாங்கள் வருகுதோ! – நாங்கள் வருகுதோ!

ஐஸ்வர்ய நாயகா விக்னம் அகற்றி நீ
பொண்ணுபடி ஏறுவாய் ரட்சை ஏது! – ரட்சை ஏது!
ஸ்வாமியே ஐயப்போ! ஸரணம் ஐயப்போ!
வில்லாளி வீரனே! வீரமணி கண்டனே!

-------------------

ஐயா ஸ்வாமி மன்னிக்கணும் ஐயப்ப ஸ்வாமி மன்னிக்கணும்
கண்ணைத் திறந்து ஸ்வாமியே காணிக்கையை ஏத்துக்கணும்!

மன்னிக்க மாட்டாயா! ஐயப்பா மன்னிக்க மாட்டாயா!
மணிகண்ட ஸ்வாமிகளே! என்பிழை மன்னிக்க மாட்டாயா!

ஸ்வாமியெண்ட ஆசாமி செய்த பிழையை மன்னிக்கணும்
குருநாதன் சொல்மறந்து நடந்த பிழையை மன்னிக்கணும்
விரதவிதியை மறந்து நடந்த வழியை நீங்க மன்னிக்கணும்
குறையும் பகையும் இருக்கும் மனசை புண்ணியவானே மன்னிக்கணும்
சறுக்குப் பாதை வழுக்கும்போது ஓடிவந்து தாங்கும் ஐயனே! ஐயப்பா!

கறுப்பு வேட்டிகட்டி கழுத்தில் முனை கட்டி முடி ஏந்தி வரும்வரையில் மனசைக் காக்கணும்!

அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழை அத்தனையும் நீங்க பொறுக்கணும்!

மன்னிக்க மாட்டாயா! ஸ்வாமியே மன்னிக்க மாட்டாயா!
விளையாட்டுப் பிள்ளைகளை ஐயனே! நீ மாற்ற மாட்டாயா!

குளிச்சுப்பூசை வைச்சதிலே குறையிருந்தா மன்னிக்கணும்
ஸ்வாமிமாரு பெயரைச் சொல்லி அழைச்ச குறையை மன்னிக்கணும்
மறந்து மறந்து காலணியை மாற்றுப் பிழையை மன்னிக்கணும்
சரணம் மறந்து கரணம் போடும் வாய் வார்த்தையை மன்னிக்கணும்
சபரிபீடம் அதிக உதையம் காயைப்போல மனசு சிதறுதே!... ஐயப்பா!

மகரக்குடை அணிந்து மகர ஜோதியன்று வருகின்ற பகவானே! வுpரதம் காக்கணும்!

அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழை அத்தனையும் நீங்க பொறுக்கணும்!

கவனிக்க மாட்டாயா! ஐயனே! கவனிக்க மாட்டாயா!
கால்பிடித்துக் கதறுகிறோம் தெய்வமே! பிழை பொறுக்க மாட்டாயா!

அன்னதானக் கணக்குப் பார்த்த அறியாமையை மன்னிக்கணும்
அம்பலத்தில் அடுத்த கதையைப் பேசினாலும் மன்னிக்கணும்
அரிசிபோல சிதறிப்போன ஆன்மாவை சேர்த்திடணும்
அச்சன்கோயில் ஓடம்போல எங்க மனசை ஆக்கிடணும்
பேசாத மௌனியான பெரிய குருஸ்வாமி ஐயப்பா!.... ஸ்வாமியே
பிடிச்சா உடும்புப்பிடி ஐயா உன் சரணாகதி உடகுவைச்சு மனங்குடைச்சு காப்பாத்தணும்

அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழை அத்தனையும் நீங்க பொறுக்கணும்!

-------------------

போனால் சபரிமலை போக வேண்டும் - நாங்க
கேட்டால் சரணகோஷம் கேட்க வேண்டும் - நாங்க
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும் - நாங்க
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்

மண்டலகாலத்தில் மாலையணிந்து ஸ்வாமி சரணம் - ஐயப்ப சரணம்
மணிகண்டன் நாமம் இருமுடி நேர்ந்து ஸ்வாமி சரணம் - ஐயப்ப சரணம்
இருமுடி தாங்கி எருமேலி சென்று ஸ்வாமி சரணம் - ஐயப்ப சரணம்
பேட்டை ஆடி நாங்கள் வருவோம் - ஸ்வாமி சரணம் - ஐயப்ப சரணம்

மெட்டும் எடுத்து காட்டில் நடந்து - ஸ்வாமி சரணம் - ஐயப்ப சரணம்
அழுதா நதியில் கல்லும் எடுத்து - ஸ்வாமி சரணம் - ஐயப்ப சரணம்
கல்லிடும் குன்றில் போட்டு நாங்கள் - ஸ்வாமி சரணம் - ஐயப்ப சரணம்
கரி மலையும் ஏறியே வந்தோம் - ஸ்வாமி சரணம் - ஐயப்ப சரணம்

பம்பை நதிக்கரை விரியும் வைத்து - ஸ்வாமி சரணம் - ஐயப்ப சரணம்
பம்பை விளக்கை தொழுது நாங்கள் - ஸ்வாமி சரணம் - ஐயப்ப சரணம்
மகர ஜோதி நாளில் உன்னை - ஸ்வாமி சரணம் - ஐயப்ப சரணம்
கண்டு தொழவே வந்திடுவோம் - ஸ்வாமி சரணம் - ஐயப்ப சரணம்

--------------

கானக வாசா! எங்கள் கலியுக வரதா!
ஏழைகள் மேலே உந்தன் பார்வை விழாதா!
ஹரியும் ஒருபாதி ஹரனும் ஒருபாதி சேர்ந்து உருவாகி வந்த சுபஜோதி
பாராயோ! எம்மைப் பாராயோ!

கவலை வரும்வேளை கழுத்தில் மணிமாலை வந்து விழுகாதோ!
வாழ்க்கை மலராதோ! – மணிகண்டா! – மணிகண்டா!

மனதில் உனை இட்டு தலையில் ஒரு கட்டு சுமந்து நடை போட்டு
சபரி வரும்நாளை தாராயோ! ஸ்வாமி தாராயோ!

கானக வாசா! எங்கள் கலியுக வரதா!
ஏழைகள் மேலே உந்தன் பார்வை விழாதா!

கடலில் அலைபோல மனதில் பல துயரம் வந்து அலை ஆடும்
எம்மை சதிர் ஆடும் - அறிவாயோ! ஐயா அறிவாயோ!

அழுதை நதிபோல அழுத விழிபார்த்து அமுத மொழி பேச
ஆனை அது ஏறி வாராயோ! ஸ்வாமி வாராயோ!

கானக வாசா! எங்கள் கலியுக வரதா!
ஏழைகள் மேலே உந்தன் பார்வை விழாதா!

மோக நிலை கூடி வாழ்வும் உனைத் தேடி சரணம் ஒரு கோடி
வந்த இடம் தேடி – வாராயோ! ஸ்வாமி வாராயோ!

வண்ண புலி ஏறி வண்ண முகம் காணும் கன்னிமார் நெஞ்சம்
துள்ளும் நிலை கொஞ்சம் தாராயோ! ஸ்வாமி தாராயோ!

கானக வாசா! எங்கள் கலியுக வரதா!
ஏழைகள் மேலே உந்தன் பார்வை விழாதா!

-----------

வந்த கடன் தீரவில்லை சொந்தக் கடன் ஓயவில்லை
எந்தக் கடன் தீர்ப்பதற்கு என்னைப்படைத்தாய் ஐயா!

ஏழைகள் அழுவதற்கோ கண்ணைப்படைத்தாய்
ஐயப்பா! ஐயப்பா! ஐயப்பா! ஐயப்பா!
வாழ்வதற்கு பட்டகடன் அப்பப்பா இங்கு
வருவதற்கும் கடன் வாங்கி வந்தேனப்பா!

தாய்ப்பாசம் தந்தைக் கடன் தீராது ஒரு ஜென்மம் எடுத்தாலும் போதாது
ஊர்சுமந்த தந்தைக் கடன் தீராது இன்னும் மறுஜென்மம் எடுத்தாலும்

கடலுடன் வானம் கடன்கொண்ட தீலை
மழையாகப் பொழிந்தாலும் நிறையாதோ!
கரிமலை நாதன் கருணையின் கடனை
கண்ணீரால் அடைத்தாலும் அடையாதோ!

பொன்னோடு பொருள் வாங்கி குவித்தாலும்
இந்தப் பொன்னம்பல கடன் தீர வழி ஏது!
கண்ணீரால் தண்ணீரால் நிறைத்தாலும்
ஜென்ம பாபத்தின் கடன் இன்னும் மாளாது

இருமுடி தாங்கி திருவடி நாளும்
கடன் தீர்க்க வருடங்கள் போதாதே
வரும் ஜென்மம் எல்லாம் மலை தாண்டி வந்து
மடிந்தாலும் கடன்பாரம் ஓயாதே!

------------------------

படிகள் அழைக்குது பதினெட்டுப் படிகள் அழைக்குது!
புடிப்படியாய் உயரும் படிப்பைச் செல்லிக் கொடுக்குது!

கொடி அழைக்குது கொடி மரமும் அழைக்குது!
கோட்டை ஆளும் சாஸ்தாவிடம் கொண்டு செல்லுது! – நம்மை
கோட்டை ஆளும் சாஸ்தாவிடம் கொண்டு செல்லுது!

சன்னதி திறக்குது ஸ்வாமி சன்னதி திறக்குது
புண்ணியம் கோடி குடியிருக்கிற சன்னதி திறக்குது

நெய்யும் மணக்குது ஸ்வாமி நெஞ்சை மயக்குது
கையடக்கம் ஆனபுள்ள அதில குளிக்குது

அர்ச்சனை நடக்குது ஸ்வாமி அர்ச்சனை நடக்குது
ஆயிரம் காலப் பயிருக்கங்கே அர்ச்சனை நடக்குது

பூவும் மணக்குது ஸ்வாமி பூவும் மணக்குது
பூத நாதன் மேனி தொட்ட சுகத்தில் திளைக்குது

சொப்பனம் தட்டுது ஸ்வாமி சொப்பனம் தட்டுது
சொப்பனம் தட்டும் வேளையெல்லாம் ஜோதி தெரியுது

சேதி சொல்லுது அது ஒரு சேதி சொல்லுது
தை மாதம் பிறக்,கும் நாளில் வரவேண்டும் என்குது

காடு மணக்குது சபரிக் காடும் மணக்குது
காந்த மலையைக் கண்டுவந்தால் வீடும் மணக்குது

செல்வம் கொழிக்குது வேண்டும் செல்வம் கொழிக்குது
வாபரோட தோழன் துணை நாளும் இருக்குது! – வீர
வாபரோட தோழன் துணை நாளும் இருக்குது

----------------

வந்தது வந்தது கார்த்திகை வந்தது
மங்கள நெஞ்சினில் மாலை விழுந்தது
ஐயப்பா எங்கள் ஐயப்பா

காலை விடிந்தது கார்த்திகை வந்தது
மங்கள நெஞ்சினில் மாலை விழுந்தது
அணிந்தோமே ஐயப்பா உன்னை சுமந்தோமே!

ஒரு நாளில் மலையேறி வருவோமே! – ஐயப்பா
ஒரு நாளில் மலையேறி வருவோமே!

வீரமணி கண்ட ஸ்வாமி எங்கள் விரதம் காப்பாயே! - ஸ்வாமி

ஆனந்த கானத்தில் ஏகாந்தம் நிறைந்து குருஸ்வாமி தந்த மணிமாலைகள் அணிந்தோம் சந்தணம் பூசியணிந்து சரணங்கள் சொல்லி மகிழ்வோமே
மண்டல நோன்புமிருந்து ஒரு மாமலை ஏறி வருவோமே!

திருவடி சரணம் சொல்வோமே
அவரின் சொல்லை கேட்போமே!
இரவும் பகலும் உந்தன் பெருமையைப் பேசி வருவோமே!

இருவேளை நீராடி திருநீறு பூசி திருக்கோவில் சென்று நிதம் உன் நாமம் சொல்லி – கற்பூரப் பிரியனே! சரணம் ஐயப்பா!
காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா!
இருவேளை நீராடி திருநீறு பூசி திருக்கோவில் சென்று நிதம் உன் நாமம் சொல்லி பூஜைகள் நித்தம் நடத்தி உந்தன் பூமுகம் நினைந்திடுவோமே!
ஸ்வாமிகள் பாதம் வணங்கி உந்தன் சன்னதி நினைந்திடுவோமே!

நாற்பது நாளும் விரைவாக நகரும்!
நகரும் சுகமாக விரைவாய் வருவோம்
உன்னைத் தேடி ஸ்வாமி ஐயப்பா!

------------------


ஓடி வா ஐயப்பா ஓடி வா ஐயா
பஜனைக் கூட்டத்துக்கு ஓடி வா ஐயா!

ஓடி வா ஐயப்பா ஓடி வா ஐயா
சின்னச் சின்னக் காலெடுத்து ஓடி வா ஐயா

நீலக் கறுப்பு ஆடையிலே ஆடு சாமிக் கூட்டம்
நீயிருந்து பாருமையா தீரும் மன வாட்டம் (ஓடி வா ஐயப்பா)

ஆலவட்டம் போட்டுவரும் கன்னிமாரு கூட்டம்
ஆடி நடை போடுது பார் நீலிமலை ஏற்றம் (ஓடி வா ஐயப்பா)

குறுக்கே பாஞ்சு பாஞ்சு சேறு பூசி ஆடும்
பொய்க்கால் குதிரை போல சுவாமி காலு பறக்கும் (ஓடி வா ஐயப்பா)

முறுக்கா முறுக்குதையா மூளை ஏறும் நரம்பு
முகுந்தன் மகனே உன் சக்திக் கேது வரம்பு

ஓடி வா ஐயப்பா ஓடி வா ஐயா
பஜனைக் கூட்டத்துக்கு ஓடி வா ஐயா!
சரணம் சரணம் சாமியே சரணம் சரணம் சாமியே!
சாமிமாரு சரணமழையில் வரணும் வரணும் சாமியே!

நல்ல எண்ணம் வளரணும் நாடு நகரம் செழிக்கணும்
சொன்ன சொல்லு பலிக்கணும் சொன்னபடி நடக்கணும்
நாளும் இனிமையாகணும் ஒற்றுமையா வாழணும்
வாழையடி வாழையா உன்னடிமையாகணும்

சாமியப்பா! ஐயப்பா! சரணமப்பா! ஐயப்பா!
வந்தோமப்பா! ஐயப்பா! வாறோமப்பா! ஐயப்பா!

மாலை போட்ட சாமியெல்லாம் சொல்லுதையா சரணம்
காத்திருக்க வைக்கலாமோ சாமி ஓடி வரணும் (ஓடி வா ஐயப்பா)

நெக்குருகி பாடுகிறோம் குளத்துப்புழை விருத்தம்
கூப்பிட்டதும் ஓடிவந்தால் தீருமையா வருத்தம்வருத்தம்(ஓடி வா ஐயப்பா)

ஆனை புலி வாழும் மலை அஞ்சு மலை ஆளும்
ஆறுமுகன் சோதரனே! ஓடி ஓடி வாரும்! (ஓடி வா ஐயப்பா)

நெய்யிருந்த குட்டி குட்டி சாஸ்தா வரவு பாடும்
கன்னிமாரு ஏக்கம் தீர கண்ணு முன்னே வாரும்

ஓடி வா ஐயப்பா ஓடி வா ஐயா
பஜனைக் கூட்டத்துக்கு ஓடி வா ஐயா!
சரணம் சரணம் சாமியே சரணம் சரணம் சாமியே!
சாமிமாரு சரணமழையில் வரணும் வரணும் சாமியே!

பஞ்ச மெல்லாம் தீரணும் பருவ மழை பொழியணும்
வஞ்சமில்லா மனசிலே அம்பலமாய் குந்தணும்
நிம்மதியா வாழணும் நியமங்களைக் காக்கணும்
அன்னதானம் செய்யணும் உனக்கு அடிமை ஆகணும்

சாமியப்பா! ஐயப்பா! சரணமப்பா! ஐயப்பா!
வந்தோமப்பா! ஐயப்பா! வாறோமப்பா! ஐயப்பா!

பம்பைக் கரை ஓரத்திலே வித விதமா பாட்டு
பாட்டதுக்கு தாளமிட அதிருதையா வேட்டு (ஓடி வா ஐயப்பா)

உன்னிடத்தில் வைச்ச ஆசை அஞ்சு மலை நீளம்
ஆசை தீர வாருமையா எங்க நிலை மாறும் (ஓடி வா ஐயப்பா)

அரையடி விக்ரகத்தில் அண்டமெல்லாம் ஆடும்
ஆரமணி மார்பழகா கண்ணெடுத்துப் பாரும் (ஓடி வா ஐயப்பா)

உள்ளம் உருகும் பாட்டுக் கேட்க நீயிருக்கும்போது
உலகில் வேறெதையும் கேட்கவில்லை மனசு!

ஓடி வா ஐயப்பா ஓடி வா ஐயா
பஜனைக் கூட்டத்துக்கு ஓடி வா ஐயா!
சரணம் சரணம் சாமியே சரணம் சரணம் சாமியே!
சாமிமாரு சரணமழையில் வரணும் வரணும் சாமியே!

சுவாமியுடன் சேரணும் சரணங்களை விளிக்கணும்
சுவாசம் நின்ன போதிலும் விஸ்வாசம் நிலைக்கணும்
கால பயம் தீரணும் ஞானமயம் ஆகணும்
கால காலம் சபரி வரை எங்கள் வாழ்வு அமையணும்

ஓடி வா ஐயப்பா ஓடி வா ஐயா
பஜனைக் கூட்டத்துக்கு ஓடி வா ஐயா!

--------------

கார்த்திகைப்பூங்காலை விரதம் காத்திடும் திருவேளை
மாலை அணிந்தவர் கோவிலை நாடிட ஒன்றுசேரும்நேரம்
நோன்பு ஆரம்ப நன்னேரம்

சுவாமியே ஐயப்போ! சுவாமியே ஐயப்போ!
சுவாமியே ஐயப்போ! சரணம் சரணம் ஐயப்போ!

ஜாதிபேதம் ஒன்றுமில்லை ஏற்றத்தாழ்வு ஏதுமில்லை
மாலையிட்ட மாந்தருக்கு மனம் சுத்தமாகும்
என்றும் மணிகண்டன் புகழைப்பாட மகிழ்ச்சிகள் கூடும்

கார்த்திகைப்பூங்காலை விரதம் காத்திடும் திருவேளை
மாலை அணிந்தவர் கோவிலை நாடிட ஒன்றுசேரும்நேரம்
நோன்பு ஆரம்ப நன்னேரம்

சுவாமியே ஐயப்போ! சுவாமியே ஐயப்போ!
சுவாமியே ஐயப்போ! சரணம் சரணம் ஐயப்போ!

பேட்டைதுள்ளிப் பாட்டுப்பாடி
காடுகளும் மலையும் ஏறி
கூட்டமுடன் பதினெட்டாம் படிகள் ஏறி
சுவாமியைக் கண்டு தொழுது புண்ணியம் நாட
ஏல்லாத் தீமைகளும் மறைந்து விடும் புனிதமும் கூடும்

கார்த்திகைப்பூங்காலை விரதம் காத்திடும் திருவேளை
மாலை அணிந்தவர் கோவிலை நாடிட ஒன்றுசேரும்நேரம்
நோன்பு ஆரம்ப நன்னேரம்

சுவாமியே ஐயப்போ! சுவாமியே ஐயப்போ!
சுவாமியே ஐயப்போ! சரணம் சரணம் ஐயப்போ!

-----------------

கற்பூரச் சுடர் ஒளியில் காட்சி தரும் ஐயப்பா
கனிவுடனே அருள் வழியால் காத்திடுவாய் ஐயப்பா
அற்புதமாய் சபரிமலை அமர்ந்திருக்கும் ஐயப்பா
பொற்பதங்கள் சரணம் என்று போற்றிடுவோம் ஐயப்பா

எண்ணியதை திண்ணமுற செய்திடுவாய் ஐயப்பா
என்றுமுள்ள பரம்பொருளே இனியவனே ஐயப்பா
விண்ணதிர மண்ணதிர பாடிவந்தோம் ஐயப்பா
விருப்பமோடு பதினெட்டாம்படி ஏறி வந்தோம் ஐயப்பா

நெய்குளித்து மெய் விளங்க நீயிருப்பாய் ஐயப்பா
நெஞ்சுருகி பாடியுன்னைத் தேடிவந்தோம் ஐயப்பா
தைமாத ஜோதி தரும் தரிசனமே ஐயப்பா
தருணமிது கருணையுடன் அருள்புரிவாய் ஐயப்பா

2 comments:

ஈழவன் said...

அனைத்தும் படங்களும் அருமையானவை முகுந்தன்.

Sivamjothi said...

திருவடியும், மகர ஜோதியும், பொன்னாம்பல மேடும் நமது உடலில் உள்ளது.
மேலும் அறிந்துகொள்ள http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html
ஐயப்பனை காண சபரிமலை செல்வதும் நம்மை நாம் அறிவதும் ஒன்று