Friday, April 25, 2014
கடந்த 20ஆந்திகதி(20.04.2014) எனது முகப்புத்தகத்தில் எழுதியதை அப்படியே பதிவிடலாம் என நினைக்கின்றேன்!
சரியாக இப்போது 2மணிக்கு திடீரென தூக்கம் கலைந்தது!
சில சம்பவங்கள் திடீரென்று மனதில் கனவா அல்லது நனவா எனத் தெரியவில்லை!
ஏன் எனக்கு மட்டும் இந்த நினைவுகள் வந்து போகின்றது!
நூல்நிலையம் என்றால் என்ன!
முள்ளிவாய்க்கால் என்றால் என்ன!
யாழ்ப்பாண முஸ்லிம்கள் என்றால் என்ன!
கஹவத்தை தலுகல்லை முத்துமாரியம்மன் கோவில் என்றால் என்ன!
2005 அல்லது 2006 ஆண்டு சரியாக ஞாபகமில்லை - நடந்து வந்த பௌத்த துறவியை இரவு காவலுக்கு நின்றவர்கள் பொன்னாலையைக் கடக்க தடை பண்ணிய பின் எங்கள் ஊர்த் தேர்த் திருவிழாவுக்கு முதல் நாள் மூளாய் பிள்ளையார் கோவிலுக்கு வந்தவரை நான் எங்கள் வீட்டுக்கு கூட்டிச் சென்று என் தாயாரை எங்கள் வீட்டில் படுக்கச் சொல்லி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்துவிட்டு கோவிலுக்குப் போய் திருவிழாவை முடித்து வந்து அவரோடு தங்கி அடுத்த நாள் அவருக்கு வேண்டியதெல்லாம் செய்து மதியம் தேர் வீதிசுற்றி வந்த பின்னர் அவருக்கு மதியம் உணவளித்த பின் விபுலனிடம் சொல்லி அவரை சித்தங்கேணியில் கொண்டு போய் விட்டது!
புதிதாக கட்டப்பட்ட 20 அடி உயரமான சிவனிடம் சித்தரைக் காண கண்டியிலிருந்து வந்த சீலனையும், ஹேம்தீப்பையும் கூட்டிச் சென்றபோது சித்தர் எனக்கு எதுவும் சொல்லாமல் விட்டதென்ன!
எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர்கள் இருக்கும்போது எனக்கு மட்டும் வேதாந்த மட ஸ்வாமிகள் கடிதம் எழுதியது ஏன்!
நல்லதொரு வாழ்க்கையை வாழ சுவிற்சர்லாந்து சென்ற எனக்கு எல்லாரும் போக வேண்டாம் என்று சொல்லியும் திரும்ப இங்கு வந்ததேன்!
நூலகம் எரிக்கப்பட முன்பே என் அம்மா நான் காசிப் பிள்ளையார் கோவிலுக்கும் துர்க்கையம்மன் கோவிலுக்கும் அடிக்கடி போய் வருவதால் னில்லாத சமயத்தில் என் சமயப்புத்தகங்கள் - ஸ்வாமியறையிலுந்த மணி தொடக்கம் அத்தனை பூசைப் பொருட்களையும் கொண்டுபோய் குப்பையில் போட்டு எரித்ததை எப்படியோ தெரிந்து ஓடிவந்து தண்ணீரூற்றி அணைத்தது என்ன!
எல்லோரும் சும்மா இருக்க கீரிமலையில் சடையம்மா மடத்திலிருந்து சிவனுக்கு பூசை பண்ணிய அந்த காலத்தை நினைத்து இப்போதும் அந்த இடத்தைப் பார்க்க வேண்டிய ஆவல் ஏன்!
காஞ்சிப் பெரியவரிடமும் - திருச்சி ஸ்ரீரங்கம் கட்டிமுடிக்க ஆசியருளிய ஸ்ரீஜீயர் சுவாமிகளிடமும் ஆசிபெற்று - எனது பெரிய தந்தையாருடன் ஸ்ரீசத்தியசாயிபாபாவைத் தரிசனம் செய்யச் சென்றது எதற்கு!
எல்லாவற்றுக்கும் மேலாக புலிகளின் யாழ்ப்பாணப் பொறுப்பாளரோடு எதற்காகமேயர் கந்தையனுடன் சென்று விவாதிக்க வேண்டியிருந்தது?
கோப்பாய் சுப்பிரமுனிய கோட்டத்தில் எதற்காக ஸ்ரீ சாந்திலிங்கேஸ்வரப் பெருமானுக்கு அகண்டநாம பஜனை செய்து நானே அபிஷேகமும் ஹோமமும் பண்ண வேண்டியிருந்தது!
இப்போது இந்தத் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சிக்காக ஏன் எல்லாரிடமும் தந்தை செல்வாவுக்காக சண்டைபோடுவது என
ஏராளமான கடந்தகால சரித்திர உண்மை நிகழ்வுகள் வந்துபோனதோ தெரியவில்லை!
ஒரே குழப்பமாக இருக்கிறது!
கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தால் வாசலில் ஆமியும் பொலிசும் நிற்கிறார்கள்!
இறைவா இது ஏன் - எனக்கு மாத்திரம் இப்படியொரு மன அலைச்சல்?
யோகரின் கொல்லாமை பெரிதென்ற விடயமும், பௌத்த தர்மத்தை உபதேசித்த புத்தபகவானின் கொள்கையும் இன்று வரை மகாத்மாவின் அகிம்சையை விட்டு விலகிச் செல்லாதபடி இருப்பதும்!
பட்டினத்தாரின் காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே எனது 3, 4ஆம் வகுப்புகளில் மகிவும் தீவிரமாக எனது தாத்தாவுக்கு கதைகள் வாசித்துச் சொல்லும்போது ஏற்பட்ட மன உறுதியால் 12 வயதில் நான் சேர்ததுவைத்த சல்லிமுட்டிக் காசு களவு போனதையும், 1978களில் தெல்லிப்பழையில் வீடுபுகுந்த கள்வன் எனது மர உண்டியலுக்குள் இருந்த பித்தளைச் செப்புக்காசுகளை களவெடுத்த பின்பும் கவலைப்படாத நான், ஆவணங்களை மட்டும் எனது பெரியப்பாவின் வீட்டில் புலிகள் கொழுத்தி எரித்தபோது வந்த ஆத்திரம் எதற்காக! இப்போது இந்த யாழ்ப்பாண நூல் நிலையம் சம்பந்தமாக நான் எதற்காக மண்டையைப் போட்டுக் குளப்பியடிக்க வேண்டும்?
இப்படி பல நினைவுகள் மூளாத தீயாக உள்ளே கனன்று கொண்டு இருப்பது எதற்காக! யாராவது வழி சொல்வீர்களா?
இப்பதிவு எழுதும்வரை எனது இந்தப் பதிவுக்கு பதிலிட்டவர்களின் கருத்தையும் இங்கு பதிவிட விரும்புகிறேன்.
Vicky Theivendram Sleep well then think about the social work
20 April at 03:08 ·
Thangarajah Mukunthan நித்திரை வரவில்லையே!
20 April at 03:09 ·
Vicky Theivendram Mugunthan, I went to your perriyamma, 31st last week your mag was read, & your moms too, I met bot perriamma too at the funeral .
20 April at 03:12 ·
Thangarajah Mukunthan ம்! எங்கள் மாமாவினுடைய அந்தியேட்டிக்குகூட ஒரு சிறிய நினைவு மலர் வெளியிட்டிருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்! ஆனால் மாமி விரும்பவில்லை! அந்தச் செய்தி மிகச் சுருக்கமாக நான் எழுதிய கட்டுரையிலிருந்து தொகுத்தது!
20 April at 03:14 ·
Vicky Theivendram Yes I read all in Kirithiyam
20 April at 03:14 ·
Thangarajah Mukunthan Ohh! Nantri! he helped me!
20 April at 03:15 ·
Vicky Theivendram The 31st went well master perriappa & perriamm canada did good job at tt day
20 April at 03:16 ·
Star Sundar anna sleep weel take care of your health na.
20 April at 03:19 ·
Thangarajah Mukunthan நன்றி சுந்தர்! உம்மை மறக்க முடியாது! சுவிசில் இருந்தபோது நட்பாகி முதல்முதல் கடந்த 26.02.2014இல் நான் மதுரைக்கு வந்தபோது எனக்காக வந்து ஹோட்டல் மகாராஜாவில் அறை எடுத்துத் தந்து எனக்குப் பண உதவி செய்ததையும், அடுத்தநாள் உமது மோட்டார் சைக்கிளில் காலையிலேயே வந்து விமான நிலையத்திற்கு கூட்டி வந்ததையும் ஒருபோதும் மறக்க மாட்டேன்! You are one of the Special friend!!!
20 April at 03:25 ·
Star Sundar anna ethalam nenga solanuma na.ungala parthatula enaku romba santhosam na.enaikum ungala mara mudiuathu na
20 April at 03:28 ·
Sivaa Nandah தியானம் பண்ணுங்கள் உங்களால் ஏதோ நடத்த இறைவன் திட்டமிட்டுள்ளேன்
20 April at 13:07 ·
Parameswaraiyer Ambikapathy நினைவுகள் - கணனியின் நினைவுக் குச்சி போல - நாம் இட்டவற்றை தேக்கி வைத்திருக்கும் குப்பைத்தொட்டி. இவற்றின் சேர்க்கை ஒருவரின் ஆளுமையைத் தீர்மானிக்கும் ....... உள் நோக்கிய - ஆன்மாவை அறியும் நோக்குடன் கூடிய - சிந்தனைகள் சிறப்புடன் வாழ வழிவகுக்கும். தூங்குதல் ஒருவிதத்தில் இறப்பையும் பின் எழுதல் பிறப்பையும் ஒக்கும். ....... >>>>>????????
20 April at 13:44 ·
Rajanayagam Kesavanathan. ஆழ் மனதின் சக்தி..
21 April at 05:32 ·
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment