அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, June 5, 2010

அமிர் குடும்பத்தினரின் இலங்கை விஜயம்

மறைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் - முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் அ. அமிர்தலிங்கம் அவர்களின் மனைவியார் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் இளைய மகன் வைத்திய கலாநிதி அமிர்தலிங்கம் பகீரதன் அவர்களும் கடந்த வாரம் இலங்கைக்குச் சென்றிருந்தனர். பிபிசி வானொலியின் ஆவணத் தயாரிப்புக்காக அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளுக்கு - ஊடகங்கள் வழமைபோல தமது கற்பனையில் செய்திகளை தயாரித்து வழங்கியிருந்தன. அமரர் அமிர்தலிங்கம் அவர்களைப் பற்றிய இந்த ஆவணத் திரட்டலில் அரசு யாழ்ப்பாணத்திற்கு அனுமதி வழங்காத நிலையில் கொழும்பில் தங்கியிருந்து ஒரு சில தலைவர்களைச் சந்தித்துவிட்டு உடனடியாகவே அவர்கள் நாடு(இங்கிலாந்து) திரும்பினர்.

(இரா. சம்பந்தன் மாவை சேனாதிராசா ஆகியோருடன்)

பேசுவதற்கு வருகிறோம் என்று சொல்லி விருந்தாளிகளாக வந்து உபசார நேரத்தில் துப்பாக்கியால் சுட்டபோது அமிர்தலிங்கம் அவர்களும் முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் வெ. யோகேஸ்வரன் அவர்களும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். தலைவர் சிவசிதம்பரம் காயங்களுடன் தப்பித்தார். விருந்தாளிகளாக வந்த மூன்று விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களையும் காவற் கடமையில் நின்றிருந்த பொலிசார் சுட்டுக் கொன்றமை குறிப்பிடத்தக்கது.

அமரர் அமிர்தலிங்கம் அவர்களுடைய வரலாற்றுப் பதிவில் கொலையாளிகளைத் தப்பிக்கவிடாது சுட்டுக்கொன்ற முக்கிய கடமையைச் செய்த பொலிஸ் சார்ஜன்ட் நிசங்க அவர்களை பிபிசி நிருபரும் நேரடியாகச் சென்று நடந்த விடயங்களைப் பதிவு செய்திருக்கிறார். இதை பத்திரிகைகள் வழமைபோல சிண்டுமுடிக்கும் விளையாட்டாக செய்திப்பரிமாற்றம் செய்துள்ளன.

இந்த விஜயத்தின் பின்னர் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

பத்திரிகைச் செய்தி

பல ஆண்டுகளின் பின் இலங்கை வந்த நான், மக்கள் துன்ப துயரங்களுக்கு மத்தியிலும் போர்ச்சூழல் இல்லாமல் இருப்பதையிட்டு நிம்மதியடைகிறேன். அதேநேரத்தில் இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், முக்கியமாக வன்னிப் பிரதேச மக்கள் தகுந்த முறையில் மீளக்குடியமர்த்தப்படவும், அவர்தம் வாழ்வு புனரமைக்கப்படவும் வேண்டிய அத்தியாவசியத்தையும் அறிந்து கொண்டேன. நான் யாழ்ப்பாணம் செல்ல முடியாத நிலையிலிருந்த போதும் பலரையும் சந்தித்துப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதன் மூலம் எம்மக்களின் தற்போதைய உணர்வுகளையும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

இன்றைய காலகட்டத்தில் மக்களின் புனர்வாழ்வுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியிருந்தாலும் எம் மக்களின் அடிப்படை அரசியல், அபிலாஷைகள் தீர்க்கப்பட வேண்டியது மிக அவசியமானது. 50ம் ஆண்டுகளிலிருந்து தந்தை செல்வாவும், எனது கணவரும் மன்னெடுத்த அரசியல் உரிமைப் போராட்டம் இன்னமும் தீர்க்கப்படாத ஒரு பிரச்சனையாகவே உள்ளது. இதை இன்றைய அரசாங்கம் கவனத்தில் கொண்டு சர்வதேசம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வை முன்னெடுத்து அமுல் நடத்தவேண்டுமென ஜனாதிபதி அவர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோளாகும்.

நன்றி

Press Release

Impressions and expectations of Mrs. M Amirthalingam (widow of late Mr. A Amirthalingam)

After a long time, I returned to Sri Lanka . I could see our people were more relaxed and were living without any difficulties and in an environment reasonably conducive to survive. At the same time our people who have been affected by the conflict have to be resettled in a habitable environment. I understood the need for their redress and re-establish the old life style. In spite the fact I could not go to Jaffna , I was able to meet knowledgeable and informed people and understood and discussed their feelings, desire and the keenness for their renewal of the economic activities and lifestyle.

In today’s situation, resettlement of our people is of paramount importance. At the same time, their long term political expectations should be met.

In 1950s, our renowned leader, late SJV Chelvanayakam and my husband initiated and fought for the political rights of Tamil people. The problems existed then persist even today. The present government’s priority should be to understand the variety of problems and settle those in a manner acceptable to the Tamils and the international community. This is the request from the depth of my heart to President Mahinda Rajapaksa and I earnestly hope he will deal with these problems and establish long term peace and tranquillity in Sri Lanka .

Mrs.M.Amirthalingam

Note to Editors:

Mrs. Amirthalingam and her younger son, Dr. Baheerathan Amirthalingam have been on a short visit to Sri Lanka to take part in a BBC World Service Radio Documentary. While Mrs. Amirthalingam has visited Sri Lanka before, it is the first time Dr. Baheerathan visited the Country after the assassination of his father, late Mr. A. Amirthalingam



நிசங்க அவர்களுடன் அமிர்தலிங்கம் அவர்கள்

1 comment:

Anonymous said...

திருமதி அமிர்தலிங்கம் மற்றும் திரு பகீரதன் படங்களை பதிவு செய்தமைக்கு நன்றி.
சி.சிற்சபேசன்