அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, June 20, 2010

எங்கள் மாவட்ட நூலகம்!

சுவிற்சர்லாந்தில் (Schweiz என்று ஜேர்மன் (டொச்) மொழியில் சொல்வார்கள்) உள்ள 26 மாவட்டங்களில் எமது மாவட்டத்தின் பெயர் Schwyz . நாட்டின் பெயர் (Schweiz) ஷுவைற்ஸ் எனவும் எமது மாவட்டத்தின் பெயரை (Schwyz) ஷுவிற்ஸ் என்றும் அழைப்பார்கள். வேற்றுமொழி பேசுபவர்களுக்கு உச்சரிப்பு பெரும்பாலும் வராது!

ஊரிலிருந்தவேளையில் எமது இந்து இளைஞர் மன்ற நூலகமும் யாழ்ப்பாண பொதுசன நாலகமும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தன.

ஊரைவிட்டு வெளியேறிய பின்னர் கொழும்பில் மாநகரசபை பொது நூலகத்தையும், தேசிய நூலகத்தையும் (National Library), தேசிய சுவடிகள் கூட்டத்தாபனத்துடனும் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்தேன். நாட்டைவிட்டு வெளியேறிய பிறகு எமது மாவட்டத்திலுள்ள நூலகத்துடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டேன். மொழி கற்பதற்காக பல புத்தகங்களை இங்கு எடுத்து வாசிப்பது வழக்கம். மொழி அகராதி எல்லாராலும் வாங்க முடியாது என்பதை நூலக அதிகாரிகளுக்கு எடுத்துச் சொன்னதன் பிரகாரம் ஜேர்மன் தமிழ் மொழி அகராதி இப்போது அங்கே வாங்கி வைத்திருக்கிறார்கள். 10பிராங் செலுத்தினால் அங்கத்துவ அட்டை வழங்கப்பட்டு விரும்பிய புத்தகங்கள் மற்றும் சிடிக்கள் எடுத்துச் சென்று மீள ஒப்படைக்கமுடியும். நாமே பிரதிபண்ணுவதற்கு போட்டோகொப்பி இயந்திரமும் இங்குண்டு. இன்ரனெற் பார்ப்பதற்கு 30 நிமிடங்களுக்கு 2பிராங் அறவிடுகிறார்கள். கணனியில் பிரதி எடுப்பதற்கு முதல் 5 தாள்கள் இலவசம். அதன்பின் ஒவ்வொரு தாளுக்கும் 20றாப்பன் அறவிடுகிறார்கள். ஒரு பிரதி பண்ணுவதற்கும் 20 றாப்பன்தான்! (1பிராங் - 100 றாப்பன்)






















No comments: