அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, June 7, 2010

ஜனாதிபதிக்கும் சம்பந்தனுக்கும் ஆனந்தசங்கரி அவர்கள் எழுதிய கடிதங்கள்

01-06-2010
மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ச,
ஜனாதிபதி,
கொழும்பு.

இனப்பிரச்சினைக்கான தீர்வு.

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

இனப்பிரச்சினைக்கு ஓர் திருப்திகரமான தீர்வு காண்பதற்கு வேண்டிய பேச்சுவார்த்தைகளுக்கான ஆரம்ப நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்வதை முன்னிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். முதற்கட்டமாக தாங்கள் புதுடில்லிக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்தை மக்கள் வரவேற்கின்றார்கள். இத்தனை உயிரிழப்புகள்,சொத்திழப்புகளின் பின் காணப்போகின்ற தீர்வு பல்வேறு மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமன்றி, எதிர் காலத்தில் ஏதாவது ஒரு சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் எவரும் தலையிடாது இருக்கக்கூடியதாக அமைய வேண்டும்.

இது சம்பந்தமான எனது நிலைப்பாடு தாங்கள் அறிந்ததே. ஓற்றையாட்சியின் கீழ் ஒரு தீர்வு காணமுடியாதென்ற கருத்தை நான் பல காலமாக கொண்டுள்ளேன். அதற்கு ஒரேயொரு மாற்றீடாக நாட்டுப் பிரிவினைக்கு இடமளிக்காது, அவசியமேற்படின் இந்தியாவின் உத்தரவாதத்துடன் இந்திய அரசியல் முறையிலான ஒரு தீர்வை ஏற்பதே பொருத்தமாக இருக்கும். சர்வகட்சி குழுவினரின் ஆலோசனையை பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன தங்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சியில், 2008ம் ஆண்டு தை மாதம் 23ம் திகதி அலரி மாளிகையில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை இங்கு தருகின்றேன்.

“இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எப்போதும் சமஸ்டி முறைமையே பொருத்தமான தீர்வாக வற்பறுத்தி வந்தமை ஓர் இரகசியமான விடயமல்ல. சமஸ்டி என்ற பதம் சிலருக்கு ஏற்புடையதாக இல்லாமையால், சமஸ்டி அடிப்படையிலான தீர்விற்கு ஒரேயொரு மாற்றாக இந்திய முறையிலான தீர்வை ஏற்பதாக கூறி வந்துள்ளோம். இந்த விடயத்திலும் வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்திலும் எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை. வன்முறையை வெறுத்துத் தள்ளி அகிம்சை முறையிலும், நட்புடனும் எமது நாட்டு மக்களை எமது நிலைப்பாட்டிற்கு சம்மதிக்க வைத்து ஒற்றையாட்சியின் கீழ் நிரந்தரமான ஒரு தீர்வை காணமுடியாது என்பதையும், தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அத்துடன் நாடு பிரிந்து விடக்கூடும் என்ற அச்சம் கொண்டவர்களுடைய பயத்தைப் போக்க முயற்சிப்போம். எமது மக்கள் மத்தியில் பிரிவினைப் பற்றிய சிந்தனை முற்றாக அழிக்கப்பட்டு, ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழக்கூடிய தன்மையை ஏற்க வைப்போம்”

நடந்தேறிய தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களுடைய தீர்ப்பை அரசும,; சர்வதேச சமூகமும் ஏற்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு பொருத்தமான பதிலை இத்துடன் இணைத்துள்ளேன். இத்தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என அழைக்கப்படும் இலங்கைத் தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 65119 ஆகும். இது மொத்த வாக்காளர்களில் 9 வீதத்தினர் மட்டுமே. மேலும், பல்வேறு காரணங்களினால் இடம்பெயர்ந்த மக்கள் முறையாக வாக்களிக்க முடியவில்லை. ஆகவே, தயவு செய்து பாராளுமன்றத்தில் பிரதிநித்துவம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது சம்பந்தமாக சகல தமிழ் கட்சிகளையும் அழைத்து பேச வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். இத்துடன் 2008ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி ‘ஐலன்ட’ பத்திரிகையில் வெளியான எனது ஜனவரி 23ஆம் திகதிய உரையை இணைத்துள்ளேன். நன்றி.


அன்புடன்


வீ.ஆனந்தசங்கரி
தலைவர், தமிழர் விடுதலைக்கூட்டணி

01-06-2010
His Excellency Mr.Mahinda Rajapaksa
President of Sri Lanka.

Your Excellency,

Solution to the Ethnic problem

I am happy to note that you are taking the initiative to start negotiations to find a satisfactory solution for the ethnic problem. As a first step your impending visit to New Delhi shortly is very much welcomed by the people. Whatever solution found, after so much of loss of life and property, should be acceptable to all sections of the people and also should be a lasting one, that should not be meddled with, in the future, to the detriment of any group of people.
Your Excellency is very well aware of my views in this matter. I have been always of the view that a solution under a unitary system will never help to find a solution and as the only alternative the Indian model may be adopted, without leaving room for any division of the country, if necessary with guarantees by India. I wish to quote here an extract of my speech delivered on the 23rd of January 2008 at Temple trees, at the handing over ceremony of the APRC proposal by Prof.Tissa Vitharane, to you.
“It is no secret that we had been agitating for a solution based on the federal concept and also offered to accept the Indian Model as the only alternative, if the term federal is allergic to anyone. We have not changed our views in this matter and in the matter of merger of the North and the East. We assure everybody that while spurning violence, we will by non-violent means and in a friendly way, continue to persuade the citizens of our country to agree that no permanent solution can be found under a Unitary System. We will continue to dispel the fears of those who think that the country will be divided. We will take all steps to erase off the minds of our people the idea of separation and to strongly support the concept of a united Sri Lanka”
Annexed please find my response to Mr. Sampanthan’s appeal that the Government and the International community should accept the verdict given by the people of the North and the East, should be accepted. I strongly object to this request since the ITAK (TNA) polled only 65119 votes which is only 9% of the total voters in the electoral district of Jaffna. Furthermore the IDPs could not cast their votes properly due to various reasons. Hence kindly see that all Tamil parties are consulted whether they have representation in Parliament or not.
Also please find annexed a copy of my speech referred to here, as reported in The Island of 25th January 2008.
Thanking you
Your’s Sincerely

V.Anandasangaree
President- TULF




01-06-2010


அரசும் சர்வதேச சமூகமும் வடகிழக்கு மாகாண மக்களுடைய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற திரு. சம்பந்தனின் கோரிக்கைக்கான பதில்:

இலங்கைப் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடந்து ஏறக்குறைய இரண்டு மாதங்களாகி விட்டன. பொதுவாக இத்தேர்தல்; சம்பந்தமான எனது கருத்தை வெளிப்படுத்த விரும்பாத போதும், வடகிழக்கில் நடந்தேறிய தேர்தல் சம்பந்தமான எனது சில கணிப்புக்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நடந்து முடிந்த தேர்தல் சம்பந்தமாக தமிழரசுக் கட்சி தலைவரும், அக்கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவருமான திரு. இரா.சம்பந்தன் அரசும் சர்வதேச சமூகமும் மக்கள் தீர்ப்பை ஏற்கவேண்டுமென்றும் தவறின் தமிழ் மக்கள் இரண்டாந்தர பிரஜைகளாக கணிக்கப்படுவார்களென்றும் கூறியுள்ளார். இத்தகைய அறிக்கைகள் அவர்களின் மட்டத்தில் தேர்தல் காலங்களில் மட்டும் வருவது வழக்கம.; அரசும் சர்வதேச சமூகமும் தமது தேர்தலை அங்கீகரிக்க மாட்டார்களென்ற பயம் திரு. சம்பந்தன் அவர்களுக்கு ஏற்பட்டதன் காரணமென்ன? இலங்கைத் தமிழரசுக் கட்சி இத்தேர்தலில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மேற்படி கூற்று கேலிக்குரியதே. கடந்த தேர்தலில் அவரது கட்சி யாழ் தேர்தல் மாவட்டத்தில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 65.119 வாக்குகள் மட்டுமே. இது யாழ் தேர்தல் மாவட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 9மூ மட்டுமே. திரு சம்பந்தனுடைய கட்சி 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் 90மூ வாக்குகளைப் பெற்றுக்கொண்டதாக அவர் தம்பட்டம் அடித்தாலும் அத்தேர்தலில் முற்று முழுதாக தமது “நாணயத்தை” இழந்து விட்டார். ஐரோப்பிய ஒன்றியம் பொதுநலவாய நாடுகள் உட்பட வருகை தந்திருந்த பல்வேறு தேர்தல் கண்காணிப்புக்குழு அறிக்கையை படித்துப் பார்க்கின்றவர்களுக்கு எவ்வளவு மோசடிகள், ஆள்மாறாட்டங்கள் தேர்தல் சட்ட மீறல்கள் எந்த அளவிற்கு நடந்தேறியுள்ளன என்பது புலனாகும். பவ்றல் மற்றும் ஊ.ஆ.நு.ஏ ஆகிய உள்ளிட்ட உள்நாட்டு தேர்தல் கண்காணிப்புக்குழுக்கள் இரண்டும் இணைந்து வடகிழக்கில் நடைபெற்ற தேர்தல் இரத்து செய்யப்பட வேண்டும் எனவும், அப்பகுதிகளுக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் விடப்பட்ட கோரிக்கையை தேர்தல் சட்டத்தில் இடமின்மையால் தேர்தல் ஆணையாளரால் அவர்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட முடியவில்லை. இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் தான் இலங்கை தமிழரசுக் கட்சி தமிழரை பெரும்பான்மையாகக் கொண்ட 23 ஸ்தானங்களில் 22 ஸ்தானங்களை கைப்பற்றினர். மேலும் மிகப்பிரபல்யமான தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை து~;ப்பிரயோகம் செய்து வாக்காளர்களை ஏமாற்றியுள்ளனர். 2004ம் ஆண்டு மாசிமாதம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து தமிழ்தேசியக்கூட்டமைப்பு ஒன்றில் கலைக்கப்பட்டிருக்க வேண்டும், அன்றேல் செயலிழக்கப்பட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர்களுள் ஒருவராக செயற்பட்ட சு.ப. தமிழ்ச்செல்வன் அதே பெயரில் தமிழ்தேசிய கூட்டமைப்பை மீண்டும் ஆரம்பித்து இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 2 ஸ்தானங்களையும் ரெலோவிற்கு 2 ஸ்தானங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் நு.P.சு.டு.கு இற்;கும் தலா ஓரு இடத்தையும் கொடுத்து 06 இடங்களை தமக்கு எடுத்துக் கொண்டனர். இலங்கை தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெயரை மக்களுக்கு காட்டி 22 பாராளுமன்ற ஸ்தானங்களைக் கைப்பற்றி ஆறு ஆண்டு காலங்கள் பாராளுமன்றத்தில் ஆசனத்தில் வீற்றிருந்தனர்.

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் 2010ம் ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை இலங்கைத் தமிழரசுக்கட்சியினர் தமிழ் தேசிய கூட்டமைப்பினராகவே தொடர்ந்து செயற்பட்டனர். விடுதலைப்புலி இயக்கத்தினரையும், அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சியிரையும், ரெலோ இயக்கத்தினர் இருவரையும் மற்றும் வன்னி மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த சிலரையும் போட்டியிட வாய்ப்பளிக்க மறுத்த பின்பும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை கலைக்காது கடந்த தேர்தல் வரையும் அதே பெயரில் செயற்பட்டனர். தொடர்ந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெயரில் இயங்குகின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு இதுவே காரணம். தமிழ் மக்களை தொடர்ந்தும் தப்பாக வழிநடத்தாது இலங்கைத் தமிழரசுக்கட்சியினர் மிகக்கண்ணியமான முறையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். துரதிஸ்டவசமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உண்மையான வரலாறு அப்பாவி தமிழ்மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டு விட்டது. தெரிந்தோ, அப்பாவித்தனமாகவோ, சில புத்தி ஜீவிகள் அரசியல் ஆய்வாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள் போன்றோரால் தற்போதைய தமிழ்தேசிய கூட்டமைப்பே 2001ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதென நம்பவைத்து தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க மக்களை தூண்டினர். உண்மையில் இத்தேசிய கூட்டமைப்பானது 2001ம் ஆண்டு எனது தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது என்பதை யாவரும் அறிவர். ஆனால் இப்போது “உண்மை” வெளிப்பட்டு விட்டது. கடந்த ஆறு ஆண்டு காலமாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும் தமக்குரிய கடமைகளைச் செய்யாதபடியினால் கடும் ஏமாற்றத்துடன் அவர்களுக்கு நல்லதொரு பாடத்தைப் புகட்டவென காத்திருந்த மக்கள,; பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இப்பாராளுமன்ற உறுப்பினர் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு வேண்டிய கடமைகளைச் செய்யத்தவறியது மட்டுமன்றி அவர்களது பல்லாயிரக்கணக்கான உறவினர்களையும் பலகோடி பெறுமதிமிக்க சொத்துக்களையும் பாதுகாக்க தவறிவிட்டனர் என்பதையும் உணருகின்றனர். செல்வாக்குமிக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெயரை உபயோகித்து இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வழிகாட்டியவர்களே இப்பேரழிவுகளுக்கும், சொத்துக்களின் இழப்புக்களுக்கும் பொறுப்பாளியாவார்கள். இழந்த உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பெற்றுத்தர வேண்டிய நட்ட ஈட்டை பெற்றுத்தருவதில் இவ் 22 பிரதிநிதிகளும் ஏன் மௌனம் சாதித்தனர். அப்பாவி மக்களை விடுதலைப்புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தக் கூடாதெனவும் அவர்களை விடுவிக்கும் படி சர்வதேசமே வேண்டி நின்ற போதும் அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும,; அவர்கள் மீது மிக மிக அக்கறை காட்டவேண்டிய இவர்கள் மௌனம் சாதித்தனர். திரு. சம்பந்தன் அவர்கள் தமிழரசுக்கட்சி தலைவராகவோ அன்றேல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராகவோ இருந்தும், வடகிழக்கு மாகாண தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக தன்மையை இழந்து விட்டார். கடைசி நேரத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்கும் படி தப்பாக வழிகாட்டியவர்கள் தமது செயற்பாட்டை நியாயப்படுத்துவார்களா? திரு.சம்பந்தன் அவர்கள் கூட தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சில ஆசனங்களை வெல்ல வைத்தமைக்காக ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால், இவர்கள் அனைவரினதும் ஒன்றிணைந்த முயற்சியால் 65119 வாக்குகளுக்கு மேல்; பெற்றுக்கொள்ள முடியவில்லை. திரு. சம்பந்தன் அவர்கள் கூறியது போல தாம் சரத் பொன் சேகாவிற்கு பெற்றுக் கொடுத்த 113873 வாக்குகளோடு ஒப்பிடுகையில் சில உண்மைகள் தெரியவருகின்றன. கடும் வேதனைக்குரிய விடயமென்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பொறுப்பற்ற முறையில் பிரச்சாரம் செய்தவர்கள் நடந்து கொண்ட முறையே. புத்தி ஜீவிகள் எனவும் பல்கலைக்கழக மாணவர்கள் எனவும் சுதந்திர ஊடகவியாலாளர்கள் எனவும் கூறிக்கொண்டவர்கள் சில ஊடகவியலாளர்களுடன் இணைந்து யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் திரைமறைவில் நடந்த எத்தனையோ நிகழ்வுகளை மக்களுக்கு வெளிப்படுத்தாது மறைத்துவிட்டனர். சுருங்கக் கூறின் 22 பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் உல்லாசப் பயணத்திலும் சிலர் தமது பராளுமன்ற பதவிக்காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட காலத்தை இனப்பிரச்சினைகளை தெரியப்படுத்துவதாக எனக் கூறிக்கொண்டு சிலர் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்ச்சியுற வைப்பதில் பெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டும,; இன்னும் சிலர் சர்வதேச சமூகத்தை விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக இயங்க வைக்க போதியளவு அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கள் ஏற்படும் வரை காலத்தையும் செலவிட்டனர். காயமுற்ற விடுதலைப் புலி போராளிகளின் மரணங்கள், இறுதிக்கட்டப் போரின் போதும், சிறுவர்களைப் போராளிகளாக பலவந்தமாக சேர்க்கப்பட்டதையும் மக்களுக்கு முற்றுமுழுதாக மறைத்து விட்டனர். முல்லைத்தீவில் குடியிருந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு இவ்விடயங்கள கொண்டு வரப்பட்டபோதும் யுத்த காலத்தில் இப்பேர்பட்ட இழப்புக்கள் தவிர்க்க முடியாதென்று கூறியுள்ளார். இறுதியாக வன்னியில் அவர் நீரிறைக்கும் இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள் போன்றவற்றை வாக்காளர்களுக்கு வழங்கினார் என அறியப்படுகின்றது.

இலங்கைக்கு உள்ளேயும், வெளியேயும் சகல சக்திகளும் ஒன்றிணைந்து அரசியல் களத்தில் இருந்து என்னை ஓரங்கட்ட மாபெரும் முயற்சி செய்தனர் என்பதை யாரும் மறுத்திட முடியாது. பல்வேறு துறைகளிலும் உள்ள தமிழர்களின் ஒத்துழைப்பை கொண்டு திட்டமிட்டு என்னை ஏன் ஓரங்கட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர் என்பதைத்தான் என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. என்ன தீங்கு செய்தேன்?; நான் எவருக்கும் எப்போதும் எந்த தீங்கும் செய்யாது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக சேவையாற்றி வந்தேன். நான் சொல்லக் கூடாத விடயமாக இருந்தாலும,; தேர்தலில் எனக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு தேசிய இழப்பு மட்டுமன்றி, இதற்கு பொறுப்பானவர்களும்; விரைவில் முழுநாடும் மக்களும் உணர்வதோடு மட்டுமன்றி தமிழ் மக்கள் கைவிடப்பட்ட அநாதைகள் என்பதையும் உணர்வார்கள். எனது அறிவுரைகளுக்கு தமிழ்மக்கள் செவிசாய்த்திருந்தால் பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டிருக்கும் சில சுயநலமிக்க தலைவர்கள் என் அறிவுரைகளுக்கு செவிசாய்க்கவோ, அதற்கேற்ப செயற்படவோ விரும்பவில்லை. மாறாக ஒரு மனிதனின் பொறுமையின் எல்லைக்கப்பால் சென்று விமர்சனங்களையும், வீண்பழிகளையும் என் மீது வாரி இறைத்தனர். எம் நாட்டில் அரசியல் விரோதிகளை அவமதிக்கும் ‘துரோகி’ என்ற சிறப்புப்பட்டத்தையும் தந்து மகிழ்ந்தனர்.

இனப்பிரச்சினைத் தீர்விற்கு இந்திய அரசியல் முறைக்கொத்த ஒரு தீர்வை முதன்முதலாக முன்மொழிந்ததும் முன்வைத்ததும் நானே. 2002ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் குறிப்பாக மிகமுக்கியமான இரு வேட்பாளர்களிடம,; தேர்தல் பிரசாரத்தின் போது இனப்பிரச்சினையை முன்வைக்காது தேர்தல் முடிந்த பி;;ன்னர் எல்லா வேட்பாளர்களும் இணைந்து இனப்பிரச்சினைகளுக்கு முடிவெடுக்கலாம் என ஆலோசனை வழங்கியிருந்தேன். பலராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதான இந்திய அரசியல் முறையை நான் முன்வைத்தேன். இது சம்பந்தமாக மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்~ அவர்கள் பிரதமராக இருந்தபோதும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் இது பற்றி பேசியுள்ளேன். அதுமட்டுமன்றி பலமட்டங்களிலும் உள்ள பலருடனும் இது பற்றி பேசினேன். நான் தொடர்பு கொண்டவர்களுள் பிரதம மந்திரி,; அமைச்சர்கள், கட்சித்தலைவர்கள், எதிர்க்கட்சித்தலைவர்கள், சமயப்பெரியவர்கள், வணக்கத்திற்குரிய ஆண்டகைகள், மகா நாயக்கர்கள், பல்வேறு இனப்பிரமுகர்கள் போன்ற பலரும் அடங்குவர். என் ஆலோசனைக்கு எவ்வித எதிர்ப்பும் நான் எதிர்கொள்ளவில்லை. இந்திய அரசின் முறையை நான் முன்வைத்தமைக்கு முதற்காரணம் ‘சம~;டி’ ‘ஒற்றை ஆட்சி’ ஆகிய சொற் பிரயோகங்களை விரும்பாதவர்களை திருப்திப்படுத்தும.; இரண்டாவதாக பாக்கு நீரினைக்கு அப்பால் உள்ள 80000000 தமிழர்களை அமைதிப்படுத்தும். இன்னும் பலவற்றில் மூன்றாவதாக அன்று இந்தியாவில் அமைந்திருந்த இந்த அமைப்பு முறையாகும்.

பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட மிகப் பெரிய ஐனநாயக நாடான இந்தியாவில் அயல் நாடுகளான இஸ்லாமிய நாடுகளுடன் முரண்பாடு இருந்த போதும் மிக மதிக்கப்படுகின்ற ஓர் இஸ்லாமியர் அந்நாட்டின் ஐனாதிபதியாக விளங்கினார். இந்தியாவின் மக்கள் தொகையில் சீக்கியமக்கள் 2வீதமாக இருந்தும் சீக்கியர்களில் சிலர் காலிஸ்தான் நாட்டுப் பிரிவினையை கோரியிருந்தும் இன்று பிரதமராக இருப்பவர் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற ஒரு சீக்கியராவார். தவிரவும் தமிழர்இ இஸ்லாமியர் சிங்களவர் எமது மதங்களான பௌத்தமும் இந்து மதமும் எமது கலாச்சாரம,; பண்பாடு அத்தனையும் இந்தியாவில் இருந்து இங்கு வந்தவையே. எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டுப் பிரிவினையை ஒருபோதும் இந்தியா அனுமதிக்காது. இன்னும் ஒரு முக்கிய விடயம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பிரிவினை கோரிய தமிழ் நாட்டில் அக் கோ~ம் நிறுத்தப்பட்டு இன்று பிரிவினை பற்றி பேசுவதை ஒட்டு மொத்தமாக எல்லோரும் நிறுத்தி விட்டனர். ஆறு ஆண்டுகளுக்கு முன் நம்நாட்டின் சூழ்நிலைக்கேற்ப சில மாற்றங்களோடு இந்திய முறையிலான அரசியலமைப்பை பல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாயிருந்தது. ஆனால், இலங்கை தமிழரசுக்கட்சி மட்டும் பொறுப்பேற்று விடுதலைப்புலிகளுடன் பேசியோ அல்லது அவர்களை இணங்கவோ வைத்திருந்தால் அந்தத்தீர்வை ஏற்றுக்கொள்ளக்கூடிய பொன்னான வாய்ப்பு கிட்டியிருக்கும். இலங்கை தமிழரசுக்கட்சியும் தமிழ்தேசியகூட்டமைப்பும் விடுதலைப்புலிகளின் முகவர்களாக செயற்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல சந்தர்ப்பங்களை இழந்தபின் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் கோடிக்கணக்கில் சொத்துக்களும் அழிக்கப்பட்ட பின்பு இந்திய அமைப்பு முறைபற்றி பேசுகிறார் திரு. சம்பந்தன் அவர்கள், அதுவும் கூட அரை மனதாக. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனது ஆலோசனையை எற்றிருந்தால் எமது மக்களின் பல்வேறு இழப்புக்களை தவிர்த்திருக்கலாம். இதுவரை காலமாக மௌனமாக இருந்துவிட்டு, ஐனவரி மாதம் 20ம் திகதி கல்முனையில் nஐனரல் பொன்சேகாவை ஐனாதிபதி தேர்தலில் ஆதரிக்கும் கூட்டத்தில் இவ் ஆலோசனை முதற்தடவையாக முன்வைத்தது. இத்திட்டம் என்னாலேயே முன்வைக்கப்பட்டதென்றோ அத்திட்டத்திற்கு எனது ஆதரவு உண்டென்றோ கூறவில்லை. மீண்டும் ஏப்ரல் 20ம் திகதி ஒரு தேசிய பத்திரிகை முன் பக்க செய்தியில் தாம் இந்திய முறையை ஆதரிக்கத் தயாரென திரு. சம்பந்தன் அவர்கள் கூறியதாக செய்தி வெளிவந்தது. இச்சந்தர்ப்பத்தில் கூட இத்திட்டம் என்னால் முன்வைக்கப்பட்டதென்றோ அல்லது இத்திட்டத்திற்கு எனது ஆதரவும் உண்டென்றோ அப்பத்திரிகையோ அல்லது சம்பந்தனோ வெளிப்படுத்தவில்லை. ஐனாதிபதியால் ஏற்கனவே இத்திட்டம் வெளிப்பட்டதென மட்டும் திரு.சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.

திரு. சம்பந்தன் அவர்களின் இத்தகைய விபாPதப் போக்கே தமிழ்மக்கள் இந்நிலைக்கு தள்ளப்பட்டமைக்கு காரணமாகும். இது என்னுடைய திட்டமென முழு உலகமும் அறிந்திருந்தது. இது சம்பந்தமாக ஐனாதிபதி அவர்கள் எதுவித கருத்தும் கூறியதாக நான் அறியவில்லை. அவ்வாறுதான் ஐனாதிபதி அவர்கள் கூறியிருந்தாலும் கூட ஐனாதிபதி தேர்தல் காலத்தில் நான் அவரைக் கேட்டுக் கொண்டதன் நிமித்தமாகவே இருந்திருக்கும். ஐனாதிபதித் தேர்தலின் பின்பே ஐனாதிபதி இதை கூறினார் என்பது திரு சம்பந்தன் அவர்களின் நிலைப்பாடு. திரு. சம்பந்தன் அவர்களின் சுயநலப்போக்கிற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். என்னைப் பொறுத்தவரையில் திரு. சம்பந்தன் மூலமாகவோ வேறு எவர் மூலமாகவோ சிறுபான்மையினருக்கு ஏற்புடைய ஓர் தீர்வைக் காண்பதே பிரதானமானது. புத்தி ஐPவிகள், சுதந்திர எழுத்தாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அச்சு ஊடகவியலாளர்கள் என்மீது வெறுப்புக் கொண்டுள்ளார்களா? அப்படி இருப்பின் அதற்குரிய காரணம் என்ன? நடைபெறும் எதற்கும் தனக்கே புகழ் கிட்ட வேண்டும் என சம்பந்தன் அவர்களும், பத்திரிகைகள் ஏதேனும், தாம் விரும்பும் எவருக்கேனும் புகழ்தேட வேண்டும் என்றும் எண்ணலாம். எனக்கு வேண்டியதெல்லாம் எமது மக்களின் பிரச்சினைக்கு ஓர் தீர்வும், துரோகி என எனக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவ பட்டம் நீக்கப்பட்டு நிம்மதியாக இறக்க வேண்டும் என்பதே.

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதே தமிழ் மக்களுக்கு சிறந்த வழி எனக் கூறியவர்கள் தமது கூற்றை வாபஸ் பெற வேண்டும். சிறந்ததோர் தீர்வை அடைவதற்குப் பதிலாக இத்தகைய சம்பவங்கள் இன்னும் குழப்பத்தை எற்படுத்தும். எவருக்கேனும் என் மீது வெறுப்பு இருப்பின் எனது அரை நூற்றாண்டு கால அரசியலுடன் தமது குரோத மனப்பான்மையை கலக்க விடக் கூடாது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2006 மே 25ம் திகதி வெளியாகிய ஆங்கில தினசரியாகிய டெய்லி நியூஸ் பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இந் நாட்டில் இன்றுள்ள மிகச்சிறிய அளவிலுள்ள ஐனநாயக தமிழ் அரசியல் வாதிகளில் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் அவர்களும் ஒருவராவர். எனையோர் கொல்லப்பட்டும், விலைக்கு வாங்கப்பட்டு விடுதலைப் புலிகளால், மௌனிகளாக்கப்பட்டுள்ளனர். வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்கள் மக்களைக் கொல்வதில்லை, எவருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை. எவரையும் கொலை செய்யவோ வெறுப்படையவோ தூண்டுவதில்;லை. அவர் பிள்ளைகளைக் கடத்தி ஆயுத பாணிகள் ஆக்குவதில்லை. தம் மக்கள் மீது வரி வசூலிப்பதும் இல்லை. அவர் இன்று ஈடுபட்டுள்ள பணி ஐனநாயக முறையில் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகான சிரமப்பட்டு உழைப்பதே. அவரின் கனவெல்லாம் கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுடனும் கிராமவாசிகளுடனும் சுதந்திரமாக நடந்துதிரியவே. யாராவது பல்கலைக்கழக மாணவர்களை அல்லது புத்திஐPவிகளை அல்லது அரசியல் ஆய்வாளர்களை அல்லது சுதந்திரமாக எழுதுவோரை பத்திரிகையாளர்களை எவரையேனும் புண்படுத்தியுள்ளேனா என்று பார்ப்பதற்காக இத் தலையங்கத்தை பல தடவைகள் படித்துப் பார்த்தேன். இவர்கள் தமது எழுத்து மூலமும், பேச்சு மூலமும், பிரச்சார மூலமும் 56 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ஈடுபட்ட என்னைத் தோற்கடிக்க வடகிழக்கே உள்ள தமிழ்மக்களை ஏன் ஈடுபடுத்தினார்கள்?; கிளிநொச்சி தொகுதியில் முதன் முறையாக 1960ம் ஆண்டும,; அதைத் தொடர்ந்து நடந்த பாராளுமன்ற, உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் அத்தனையிலும் போட்டிபோட்டுள்ளேன். கிளிநொச்சி (கரைச்சி) கிராம சபையின் தலைவராக 1965ம் ஆண்டும் கிளிநொச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக 1970ம் ஆண்டும,; 1977ம் ஆண்டும் தெரிவு செய்யப்பட்டேன். பாராளுமன்றத்தின் கால எல்லையை பொதுசன வாக்கெடுப்பு மூலம் மேலும் ஆறு ஆண்டுகள் நீடிக்க அரசு எடுத்த முயற்சியை எதிர்த்து திரு. சம்பந்தன் உட்பட பதினாறு பேர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்தோம்.

“ஐனநாயக குரலுக்கு செவிசாயுங்கள்” என்ற தலைப்புடன் அப்பத்திரிகையின் ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “ஐனநாயக வாதியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. வீரசிங்கம் ஆனந்தசங்கரி மீண்டும் ஓர் கடிதம் வரைந்துள்ளார். இத்தடவை தமிழ்நாடு முதலமைச்சர் கலாநிதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களை இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்திய முறையிலான அதிகாரப் பகிர்வை இலங்கை அமுல்படுத்த அவரின் ஆதரவை கோரியுள்ளார். கட்சிகளின் ஒத்துழைப்போடு இனப்பிரச்pசனைக்கு ஓர் தீர்வுக்கான முயற்சிக்கும் ஐனாதிபதி அவர்களுக்கும் உதவ முயற்சிக்கின்றார்”;.

இலங்கை சுதந்திரம் அடைந்து 2002ம் ஆண்டு மாசி 4ம் திகதி 59வது சுதந்திரதினத்தைக் கொண்டாடிய விழாவில் ஐனாதிபதியாக தெரிவானதன் பின் முதல் அவர் தடவையாக அவ்விழாவில் கலந்து கொண்டார். அவர் தன் உரையில் கூறியதாவது “தமிழ் இஸ்லாமிய மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய கடமையோடு அவர்களின் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு புனிதமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும். நான் மொராகாகந்த மகா சமுத்திர அங்குரார்ப்பண விழாவில் கூறியதை மீண்டும் வற்புறுத்துகின்றேன். அது என்னவெனில் பயங்கரவாதத்தை ஒழிக்க மிகச்சிறந்த ஆயுதம் அப்பாவி தமிழ்மக்களுக்கு நியாயம் வழங்குவதே, அதற்கு தென்னிலங்கையில் வாழும் சிங்கள மக்கள் தயாராக உள்ளனர். இரத்தவெறி பிடித்த புலிகளின் கோரிக்கைக்கு இணங்க நாம் தயாராக இல்லை. ஆனால், நியாயமாகவும் நேர்மையாகவும் செயற்படுவதாக இருப்பின் குறைந்த பட்சம் திரு. ஆனந்தசங்கரிஇ டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களின் கோரிக்கைக்கு இணங்கியாக வேண்டும்”;. ரூபவாகினியிலும் வேறு தொலைக்காட்சிகளிலும் இவ் உரை ஒளிபரப்பப்பட்டது.

மேலும், ஆசிரியர் தலையங்கத்தின் பகுதிகள் சுயவிளக்கம் அளிக்கின்றன. இலங்கை தமிழரசுக்கட்சி – தமிழ்தேசியக் கூட்டமைப்பு இந்த வேளையில் விடுதலைப்புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறி அவர்களின் முகவர்களாக செயற்பட்டனர். திருவாளர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஐh, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் அந்த நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருப்பார்களேயானால் பல்லாயிரக்கனக்கான உயிர்களோடு பலகோடி பெறுமதியான மக்கள் சொத்தும் பொதுச் சொத்தும் காப்பாற்றப்பட்டிருக்கும். இலங்கை தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்மக்களைக் காப்பாற்ற தவறியனவே அன்றி நானல்ல. அப்படியானால் இந்த புத்திஐPவிகளும், அரசியல் ஆய்வாளர்களும,; சுதந்திரமாக எழுதுவோரும், தமிழ்ப்பத்திரிகையின் ஒரு பகுதியினரும் தமிழ் மக்கள,; தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதே ஒரே வழி என, எந்த அடிப்படையில் மக்களை வழி நடத்தினர். கனடாவில் இருந்து செயற்படும் ஓர் பிரபல்யமான ஆங்கில எழுத்தாளருடைய ஆங்கில கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து தேர்தல் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது ஏப்ரல் 5ம் திகதி ஒரு தமிழ் தினசரி வெளியிட்டிருந்தது. அவர்கள் கொடுத்திருந்த தலையங்கம் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஆதரிப்பதே ஒரே வழ,p என ஆலோசனை வழங்கியிருந்தது. இத்தினசரி திட்டமிட்டு என்னைத் தோற்கடிக்கும் நோக்கத்தோடு இவ்வாறு பிரசுரித்தமை பச்சைத் துரோகமான செயலாகும். இது ஏன் நடந்தது? எப்படி நடந்தது? ஓர் தனி மனிதனை வேட்டையாட எடுக்கப்பட்ட முயற்சியின் பின்னணி யார்;? அவர்கள் எதற்காக இதைச் செய்தார்கள் என்பது பெரும் புதிராக உள்ளமையால் விசாரிக்கப்பட வேண்டிய விடயமாகும். கடந்தசில வருடங்களாக அடிக்கடி பல கொடூரமான சம்பவங்கள் நடந்துள்ளன. அப்போதேல்லாம் நான் உட்பட மிகச்சிறிய எண்ணிக்கையினரைத் தவிர மற்றனைவரும் மௌனம் சாதித்தனர். இத்தனை சக்திகளும் ஒன்றிணைந்து குறைந்த பட்சம் ஒரு சம்பவத்தையேனும் கண்டித்திருந்தால் பல ஆயிரக்கணக்கான உயிர்களையும் பல கோடி பெறுமதியான சொத்துக்களையும் காப்பாற்றியிருக்க முடியும். எல்லா சக்திகளும் ஒன்று சேர்ந்து தமிழருக்கு ஒரு விரோதியை அடையாளம் கண்டுள்ளனர். அது நானே. எல்லா நேரமும் மக்களை ஏமாற்றமுடியாது. விரைவில் ஒரு நாள் இந்த அனர்த்தங்களுக்கு பொறுப்பானவர்கள் தமது செயலுக்காக பெரும் இழப்புக்களை சந்திக்கவேண்டி வரும்;.

குடத்தனை என்ற ஊரில் மண் அள்ளச் சென்ற ஒரு பல்கலைக்கழக மாணவன் உழவு இயந்திரத்துடன் தீயிட்டுக் கொலை செய்யப்பட்டான். அப்போது ஆட்சேபித்தவன் நானே. பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் ரட்ணஐPவன் கூல் இன் நியமனம் ஆட்சேபிக்கப்பட்டபோது அதையும் எதிர்த்தவன் நானே. இதுபோன்ற பல்வேறு சம்பவங்களில் நான் சம்பந்தப்பட்டுள்ளேன். சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் நான் முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் இந்திய முறையிலான ஒரு தீர்விற்கு இலங்கை அரசிற்கு வழங்கிய ஆலோசனைக்கு பெரும் வரவேற்பு உண்டு என குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் தன் முடிவுரையில் குறிப்பிடுவதாவது “தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. ஆனந்தசங்கரி, இந்திய அரசியல்வாதிக்கு பெரும் பொறுப்புணர்வோடு எழுதியுள்ளாரென நாம் கருதுகின்றோம். ஏனெனில், அந்த ஜனநாயகத் தலைவருக்கு தென்னலங்கையிலுள்ள ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற பல்வேறு கட்சிகளுடனும் நெருங்கிய உறவுண்டு.


சம்பந்தப்பட்ட ஆசிரியர் என்மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ளார் போல் தோன்றுகின்றது. ஆனால,; என்னைப் பொறுத்தவரையில் எத்தகைய இன்னல்கள் ஏற்பட்டிருந்தபோதும,; எனது கடமையை எனது நாட்டிற்கும,; இந்த நாட்டு மக்களுக்கும் அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் செய்துள்ளேன். என்மீது அதிகம் நட்பு பாராட்டாத இன்னுமொரு தமிழ் தினசரி 2009ம் ஆண்டு நவம்பர் 3ம் திகதி தனது தலையங்கத்தில் என்னைப் பாராட்டி உள்ளது. இன்று நான் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கும,; விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பு நான் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கும் பேதங்கள் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு வௌ;வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தபோதும் நான் மட்டும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்திய முறையிலான தீர்வே சிறந்ததென தொடர்ந்தும் கூறிவருகிறேன் என அப்பத்திரிக்கை குறிப்பிட்டிருந்தது.

பெரும்பான்மை மக்களை முறைப்படி உரிய உத்தரவாதங்களுடன் அணுகி அவர்களுக்கு ஏதும் ஐயமிருப்பின் அவ் ஐயத்தைப் போக்கக்கூடியதும் அவர்கள் ஏற்கக் கூடியதுமான இந்திய அரசியல் அமைப்பை ஏற்கவைக்குமாறு திரு. சம்பந்தன் அவர்களுக்கு ஆலோசனை கூற விரும்புகிறேன்.


வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்,
தமிழர் விடுதலைக் கூட்டணி

01-06-2010

A response to Mr. R. Sampanthan’s appeal that the Government and the International Community should accept the verdict of the People of the North and the East.

It is now about two months since the General Election to the Sri Lankan Parliament was held. I am not to comment on the verdict of the people but as far as the election in the North and the East is concerned I have a few observations to make. Mr. R. Sampanthan, the leader of the Ilankai Thamil Arasu Kadchi and its Parliamentary group leader has appealed that the Government and the International Community should accept the verdict given by the People of the North and the East. He also warns that otherwise the Tamil People will be pushed to the state of second – class citizens. This statement is often heard in their circles during the elections only. Why did it occur to Mr. Sampanthan that they may not be acceptable to the Government and the International Community? On the basis of the total votes his ITAK polled, his claim is ridiculous. At the recently held general election his party polled only 65119 votes, which is only 9% of the total polled in the electoral district of Jaffna. Mr. Sampanthan’s party lost its credibility fully at the general election held in 2004, although he was crowing about that his party polled over 90% of the total votes polled in the Jaffna electoral district. Reference to the reports of the various election monitoring teams including those of the European Union and the Commonwealth, will reveal how fraudulently that election was held and how large scale impersonations and violations of election laws took place. Two local teams the PAFFRAL and the CMEV jointly demanded annulling of the elections held and wanted a fresh poll, which the Commissioner of Elections could not undertake without provisions for fresh poll in the election law. It is only under these circumstances that the ITAK won 22 of the 23 Tamil majority seats at the 2004 election. Further more the ITAK used the popular name “Tamil National Alliance” to hood-wink the Tamil voters. With the split in the TULF in February 2004 the TNA either stood dissolved or became non-functional. The ITAK was utilized by the Late Mr. S.P. Thamilchelvan of the LTTE, to form a new alliance by the same name and gave two positions for the Ilankai Thamil Arasu Kadchi, two for TELO, one each for the All Ceylon Tamil Congress and Premachandran’s EPRLF and retained the balance six positions for the LTTE. The ITAK won 22 seats and completed a full term of six years using the name Tamil National Alliance.
With the defeat of the LTTE on 18th of May 2009 the ITAK continued to function as TNA, until Parliament was dissolved in February 2010. The ITAK should have dissolved the TNA when they dropped the LTTE, the ACTC, two members from the TELO and some others from Vanni and Batticaloa, but continued to use that name at the last Parliamentary Election as well. This is the mess the ITAK that calls itself the TNA is now in. The ITAK should be honest enough to give up calling itself TNA without misleading the Tamil People. The most unfortunate thing is that the true history of the TNA had been concealed and the innocent Tamil People are made to believe, knowingly or innocently, by some intellectuals, political analysts, university students, free lance journalists and many such others, that the present TNA is the original TNA formed in 2001, of which I was the President and that the Tamils have no choice other than supporting the TNA at the election.
The cat is now out of the bag. The voters who had been waiting to teach a lesson for those who had let them down during the last six years as Members of Parliament, are thoroughly disappointed that they had been misled once again. The voters now feel that their Members of Parliament not only failed to do their duty to the people, whom they claimed to have represented, but had also failed to save several thousands of their kith and kin and several billions worth of their properties. All those who guided the voters to cast their votes for the ITAK, using the popular name the TNA, should bear the blame for the loss of lives and properties. These 22 representatives kept mum about the compensation the people are entitled to, for the lives and properties lost. When the whole world demanded that the LTTE should not use the innocent civilians as human shields and should release them forthwith, the only organization that should have been more concerned about the people whom they claimed to represent, remained silent. Mr. R. Sampanthan whether as leader of the ITAK or of the Tamil National Alliance has lost his moral right to represent the Tamils of the North and the East. I leave it to the good sense of those people who misdirected the voters to vote for the TNA at the eleventh hour, to decide as to whether the stand they took is justifiable. Mr. Sampanthan too had not failed to thank the media that helped the TNA to win a few seats. But strangely enough joint efforts of all these people could not help the TNA to go beyond 65119 compared to 113873 votes General Sarath Fonseka polled which Mr. Sampanthan claimed as due to his efforts. The most distressing thing is the irresponsible manner in which those who campaigned for the TNA conducted themselves. The so called Intellectuals some University Students, some free-lance journalists and some media persons, all got together and concealed what happened behind the scene during the last lap of the war. In short the fact that some Members of Parliaments of the TNA’s 22, were on jaunts abroad for years together, some for more than half the period of their membership in Parliament, claiming to be lobbying abroad, some others were campaigning in India for the defeat of the Congress Government, some were just marking time without returning to Sri Lanka until the required number of civilians were killed, for the International Community to react positively favoring the LTTE, the mass scale killings of LTTE injured cadre, recruitment of child soldiers even during the last lap of the war, were all concealed from the voters. When some of these matters were brought to the notice of a TNA Member of Parliament based in Mullaitheevu, he seems to have commented that these things cannot be avoided in a war. He was last seen in Vanni distributing water pumps sewing machines etc to the voters.
It is now very obvious that all forces joined together within Sri Lanka and outside to oust me from the political arena. Why should there be an organized campaign to oust me, soliciting the support of Tamils from all walks of life, is a thing I could not understand. What wrong have I done to my country and its people? I have not harmed any body at anytime and served the country and its people with much devotion for more than half a century. It is not for me to say that but I consider my defeat at the poll as a national loss and those responsible for it will have their regrets. Very soon the country as a whole will feel it and the Tamil people will feel left in the lurch like orphans. If the Tamil people had listened to my advice a lot of problems could have been solved. Selfishness of certain leaders did not permit the people to listen to me. On the contrary, abuse had been showered on me in a demeaning manner, far beyond a man’s limit of tolerance. I was honoured with the honorary title of “Traitor” a term used in our country to insult a political opponent.
The idea of finding a solution to the ethnic problem based on the Indian model was first mooted by me. It was during the Presidential Election of 2005 that I appealed to all Presidential Candidates, the two main Candidates in particular, to take the ethnic issue out of the campaign and treat it separately by arriving at a consensus among the candidates after the election. I suggested the Indian model which I found acceptable to very many. I had discussed this matter with His Excellency Mahinda Rajapaksa when he was Prime Minister and later also after he was elected as President. This matter was discussed with many at various levels. Most of those whom I contacted, such as Prime Minister, Ministers, Party Leaders, the Opposition Leader, Religious Dignitaries, like Right Rev. Bishops, Very Venerable Mahanayakas, Leading Citizens of all ethnic groups and many such others. I hardly found any opposition for my proposal. The main reasons for my proposing the Indian model were, first of all it will satisfy those who are allergic to the terms Federal and Unitary. The second reason was to silence the 80 million Tamils across the Palk-Strait, and the third, apart from many others, was the Political setup prevailing in India at that time. The largest democracy in the world with a majority Hindu population had a much respected Muslim as the Head of the State, in-spite of the fact that India had strained feelings with the neighboring Islamic States. Furthermore Sikhs form only 2% of the population. It is the Sikhs who demanded kalistan. It is a much respected Sikh who is now the Prime Minister of India. Apart from these the Tamils, Muslims and the Sinhalese, our religions Hinduism and Buddhism and our culture all came from India. Above all there is an overall and all time guarantee that India will never allow division of the country. Another important factor is that it was Tamil Nadu where the demand for separation started over fifty years back and now ceased. No one talks about separation in Tamil Nadu today.
Six years back there was a general understanding among various ethnic groups, to accept the Indian model perhaps with minor adjustments to suit local conditions. We could have accepted it if only the ITAK took the Initiative and negotiated with the LTTE or persuaded them to accept the Indian model. The ITAK – TNA did nothing then, although they were the proxies of the LTTE. Having missed so many opportunities and after so many thousand innocent lives lost and billions worth of property destroyed Mr. Sampanthan is now talking about the Indian model, that too half heartedly. If the TNA had accepted my proposal then how much of losses for our people could have been avoided. Having remained silent on this issue so long, he openly commented supporting it for the first time at a meeting of the ITAK-TNA at Kalmunai on the 20th of January, in support of the Presidential Candidate General Sarath Fonseka. At that meeting he did not have the courtesy to say that the Indian Model idea was first mooted by me or at least had my support. Once again on the 20th of April a national Tamil daily carried a front page news item under the caption “we are prepared to support a solution based on the Indian model”. Even on this occasion neither that daily nor Mr. Sampanthan did mention it as my proposal or have my support. He only said that this matter had already been referred to by the President. It is this attitude of Mr. Sampanthan that had brought the Tamil Community to this state. The whole world knows that this idea was mine. I do not remember the President ever saying this. Even if the President had said so it is purely due to the request I made to him during the Presidential election. Mr. Sampanthan’s claim is that the President made this reference after he was elected as President. This is one very glaring example of Mr. Sampanthan’s very selfish attitude. As for me I want a solution acceptable to the minorities, whether it comes through Mr. Sampanthan or from anybody else. Let Mr. Sampanthan claim credit for anything and let any media project anyone they want as heroes. All what I want is a solution for our people and the honorable title of “traitor” bestowed on me removed, for me to die peacefully. Those who claimed the TNA as the best bet for the Tamils should withdraw what they had said. Contrary to finding a satisfactory solution, such claims had only messed up the whole thing. Anyone having any personal grudge against me, should not mix it up with my political career which in over half a century old.
Four years back on the 25th of May 2006, ‘Daily News’ carried an editorial and commented as “The TULF leader is among the few democratic Tamil Politicians we have in this country today. Others have been killed bought or their voices stilled by the LTTE. Veerasingam Anandasangaree does not kill people, he does not harm or encourage others to kill or hate people. He does not abduct children and arm them to the teeth or tax his own people. The only thing he does today is to take pains to bring about a solution to the problem the country is faced with, in a democratic manner. He follows the civilized way. He dreams of walking freely in Kilinochchi among school children and his village people’.
I went through this editorial over and over again to see whether there is anything that could have hurt or provoked a University student or an intellectual or a Political analyst or a free lance journalist or the print media to write or speak or campaign against me to the extent of canvassing, almost the entire Tamil Population of the North and the East, to vote against me. I am one who is in politics for over fifty six years and very actively for fifty years having contested the Kilinochchi electorate for the first time in 1960 and every election that followed whether parliamentary or local. I became chairman of the Kilinochchi (Karachchi) Village Council in 1965, Chairman Kilinochchi Town Council in 1968 and got elected to Parliament both in 1970 and 1977 and voluntarily vacated my seat along with sixteen other members of the TULF including Mr. R.Sampanthan protesting against the extension of the term of Parliament by a further period of six years, through a referendum.
The editor who titled the editorial as “Listen to democratic voices” states “Democratic Tamil United Liberation Front (TULF) leader Veerasingham Anandasangaree has written again. This time to the Chief Minister of Tamil Nadu Dr. Kalaignar M.Karunanidhi urging a meeting between them to enlist the latter’s support for promoting the Indian Model of power devolution in Sri Lanka”. The editor further says, “He is trying to help President Mahinda Rajapaksa another consensus builder to bring about an agreement among all parties to find a just solution”.
I hope it will not be irrelevant if I quote a paragraph from a speech the President delivered at the 59th Independence Day ceremony, on the 4th of February 2005, the first after his election as the President. He said “It is our duty to protect the lives and property of the Tamil and Muslim people and bring sanctity to the future world of their children. As I stated at the inauguration of the Moragakanda maha Sumudra. I wish to reemphasis that the most reliable weapons against terrorism is to do justice by the innocent Tamil People. I know that the Sinhala people in the south are ready for this. We are not ready to give into the blood- thirsty demands of the LTTE. However at the minimum we should be reasonable and honest enough to agree with Mr. Anandasangaree or the Hon. Douglas Devananda”. His Excellency’s speech was telecast by Rubavahini and some other TV stations and the whole country was listening to it.
Extracts of the above editorial are self –explanatory. At the time this editorial appeared, the ITAK-TNA was acting as proxies of the LTTE accepting them as sole representatives of the Tamil People. Why did not M/s R. Sampanthan, Mavai Senathirajah and Suresh Premachandran take any action then that would have saved the lives of several thousand innocent people and billions worth of property both Public and Private. If is the ITAK-TNA that had failed to save the Tamils and not me. So on what basis the so called intellectuals, political analysts free lance journalists and a section of the Tamil Media come to the conclusion that the “TNA (ITAK) is the best bet for the Tamils”. A Tamil daily publishing a translation of an article by a renowned Journalist based in Canada, on the 5th of April, just two days before the date of polling, with the caption, “For the Tamils of the North and the East the best choice at the election would be the TNA”. The greatest betrayal on the part of the Tamil daily was to publish it, deliberately aiming at my defeat at the poll. Why did this happen? How did it happen? Who is behind this move to hound a loner, and for what consideration remains a mystery, that needs investigation. Lot of incidents of horrendous nature took place off end on during the last few years. Everyone was silent excepting a very few of whom I had been one. If only all these forces had get together and condemned at-least one incident, thousands of lives and valuable properties could have been saved. All the forces have got together and have identified one common enemy of the Tamils. That is me. The public cannot be fooled all the time and one day soon those responsible for the present crisis will have to pay heavily for the role they played. When a University Student was burnt with his tractor and trailer for removing sand at kudathanai, it was I who had to protest. When Professor Ratnajeevan Hoole’s appointment as vice chancellor of the University of Jaffna was objected to, it was I who had to protest. There were very many such incidents like this.
The editor in his editorial had also brought out the fact that in my letter to the Chief Minister Dr.Karunanithi I had said that my proposal to the government of Sri Lanka to adopt a constitution like the Indian Model, has received very wide support. He concludes his comments by saying “We are of the view that the TULF leader has written to the Indian politician with a great sense of responsibility, because the democratic TULF leader maintains cordial relations with all parties in the South including the JVP and the JHU and other parties such as the SLMC and other Tamil parties”
I do not know whether the Editor had over- expressed his confidence in me. But as far as I am concerned, irrespective of any constrains I had done my duty to my country and its people with devotion and care. Another National daily in its editorial dated 3rd Nov 2009 though not very friendly towards me, complemented me for taking the same stand even today on the ethnic issues that I took several months before the defeat of the LTTE. The TNA has taken different stands at different times while I am sticking to the Indian Model throughout as the ideal solution for the ethnic problem. My advice to Mr. Sampanthan would be to stick to the Indian Model as a solution to our problem that can be easily made acceptable to the majority community if approached carefully with proper guarantees to allay the fears, if they have any.

V.Anandasangaree,
President TULF

No comments: