அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, July 4, 2010

கூட்டணி இருக்கும்போது கூட்டமைப்புத் தேவையா?










தமிழர் விடுதலைக் கூட்டணி இருக்கும்போது விடுதலைப் புலிகளின் காலத்தில் கூட்டணியிலும் பின்னர் ஏகப்பிரதிநிதிப் பிரச்சனைகளின் பின்னர் தமிழரசுக் கட்சியிலும் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது எதற்காக புதியதொரு அரசியற்கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும?

தமிழர் விடுதலைக் கூட்டணி தோற்றுவிக்கப்பட்ட பின்னர் தலைவர்களைக் குறைசொல்லிக்கொண்டு அவர்களின் ஜனநாயக வழி சரிவராது என்று சொல்லி ஆயுதங்களைக் கையிலெடுத்து வன்முறைகளை மேற்கொண்டு - மக்களின் உயிர்களையும் - சொத்துக்களையும் அழித்து - இருந்த இடங்களையே சுடுகாடாக்கி இன்றைய இக்கட்டான நிலையை ஏற்படுத்திவிட்டு, திரும்ப இப்போது சுற்றிச் சுற்றிச் சுப்பற்ற கொல்லையில் என்பதுபோல - எல்லாருமே தம்மை அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்தபிறகு - இப்போது புதிதாக இந்தக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதால் ஏதேனும் மக்களுக்கு விமோசனம் வருமா என்றால் ஒன்றுமே இல்லை!

புதியதை உருவாக்கி பழையதை இல்லாமல் செய்வதில் இந்த விசமக்காரக் கும்பல் சாதுரியமாகச் செயற்பட்டு பழைய தலைவர்களின் புனிதமான - அர்ப்பணிப்பான பணிகளை மறைத்து - தம்மை பிரபல்யம் ஆக்கிக்கொள்ளவும் - தம்மை நியாயப்படுத்தவும் முயல்கின்றனர். இதில் அனுபவமுடைய சில தலைவர்களும் தலையை உள் நுழைத்திருப்பது சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது!

தொடரும்.

No comments: