அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, November 15, 2009

அழிவுகளின் விளிம்பில் பிறந்த ஞானோதயம்! அதனால் ஏற்பட்ட/ஏற்படும் மனமாற்றம் விடிவைத்தருமா? - ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்!


தற்போது சூடான செய்தி - இராணுவத் தளபதியின் பதவி விலகல் - அதனைத்தொடர்ந்து அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது பற்றியது!

சில மாதங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பற்றியது!

அதற்கு முன் - சில வருடங்களின் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய கருணா அம்மான் பற்றியது!

இப்படி இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம்!

செய்திகளுக்குக் குறைவில்லை! ஊடகங்கள் பிழைக்கத் தெரிந்தவை! - ஆனால் அப்பாவி மக்களின் வாழ்க்கையில் ஏதேனும் நல்ல விடயங்கள் ஏற்பட்டனவா? என்றால் அதற்கு விடை இருந்ததையெல்லாம் பறி கொடுத்ததுதான் மிச்சமாகிறது!

1980 களின்(1971 -1980) முன் கிளர்ச்சிகளின் ஆரம்பத்தில் பொலிசாரின் - இராணுவத்தின் சோதனைகள் ஓரளவு இருந்தன! நாம் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் சுயாதீனமாக நடமாட முடிந்தது! இதை எவரும் மறுக்க முடியாது! அப்போது
ஸ்ரீமாவோ அம்மையாரின் ஆட்சியும் ஜே.ஆர். ஜெயவர்த்தன ஐயாவுடைய ஆட்சியும் நிலவின! 1972இல் புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டு 6ஆண்டுகளில் அதையும் மாற்றி ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்பட்டது! 1990 களில் (1981 -1990) வன்முறைகள் ஆரம்பித்தபின்னர் இராணுவ முகாம்கள் புதிது புதிதாக உருவெடுத்தன! முக்கியமான பகுதிகள் பாதுகாப்பு வலயங்களாக அறிவிகஇகப்பட்டு மகஇகள் வெளியேறஇறபஇபட்டனர்! இது எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது காரணம் - மகாஜனாவில் படித்த காலத்தில் நாம் சில உதைபந்தாட்டப் போட்டிகளுக்காக பலாலி ஆசிரிய கலாசாலை மைதானத்துக்குப் போவதுண்டு! அதேபோல வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற காலத்தில் அடிக்கடி பலாலி - மயிலிட்டி போன்ற இடங்களுக்கு பலாலி விமான நிலையத்தைச் சுற்றி நாம் துவிச்சகஇகரவண்டிகளில் பயணித்ததுண்டு! ஒரு நாள் நாம் சில நண்பர்கள் பலாலி - மயிலிட்டி - காங்கேசந்துறை - கீரிமலை - சேந்தாங்குளம் - மாதகல் - திருவடிநிலை - பொன்னாலை சென்று பின் காரைநகர் கச்சோரினா பீச்சில் குளித்துவிட்டு மூளாயில் உள்ள என்வீட்டில் உணவருந்தி திரும்பிய அனுபவம் மறக்க முடியாதது!
இது 83இல்!

இதன்பிறகு இந்திய இராணுவம் வருவதற்கு முன் அப்பகுதியிலிருந்து (பலாலி - கட்டுவன் மயிலிட்டி தெற்கின் ஒரு பகுதி குரும்பசிட்டியின் ஒரு பகுதி - வயாவிளான் போன்ற இடங்களில்) வெளியேறியவர்கள் சில காலங்கள் கடந்து இந்திய இராணுவம் வந்த பின்னர் சில பகுதிகளுக்குத் திரும்ப முடிந்தது! பின்னர் இந்திய இராணுவத்துடனான மோதல்கள் ;ரம்பிக்கப்பட்டு அவர்கள் வெளியேறிய பின் இப்பாதுகாப்பு வலயம் மேலும் விஸ்தீரணமடைந்து தெல்லிப்பழைச் சந்தியையும் உள்ளடக்கி - பலாலி வீதியில் எமது பள்ளிக்கூடத்தையும் தாண்டி மேலும் அதியுயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டது! இது நான் திரிந்த இடமென்பதால் மிகவும் உறுதியோடு தெரிவிக்க முடியும். இதேபோல யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதி ஆனையிறவு - கிளிநொச்சி - மாங்குளம் என்று வவுனியாவரை இராணுவ முகாம்களில் நாம் கொழும்பு பயணிக்கும்போது இரயிலிலும் பஸ்ஸிலும் எத்தனை முறை இறந்கி ஏறிய அனபவங்களுண்டு! வடக்கு கிழக்கில் மட்டுமல்ல மலையகத்திலும் திடீர் திடீரென இராணுவம் மறிக்கும். எனக்கு நல்ல தொரு அனுபவம் 1987இந்திய ஒப்பந்தத்துக்கு முன்னர் நான் பஸ்ஸில் நுவரெலியா லங்காதீஸ்வரர் கோவிலுக்குச் சென்ற சமயத்தில் எமது பஸ் இடைநிறுத்தப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டது. அப்போது நான் தபாலக அடையாள அட்டை வைத்திருந்தேன்! சிங்களம் பேசுவதில் ஓரளவு சிறுவயதிலேயே தேர்ச்சியிருந்தமையால் நான் தப்பித்தேன்!
இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான போது ஏற்பட்ட வன்முறைகளின்போது நான் கொழும்பிலிருந்தேன்.
இந்திய இராணுவம் புலிகளின் மோதலின்போது யாழில் இருந்தேன்!
இந்திய இராணுவத்தை வெளியேற்றியபோது புலிகளும் - பிரேமதாசா அரசும் ஒரு தேனிலவில் இருந்தார்கள்! தமது அமைப்பை அரசியற் கட்சியாகப் பதிவு செய்தார்கள்!


பின்னர் பிரேமதாசா கொல்லப்பட வேளையில் ஒரு கலவரத்தை பலர் எதிர்பார்த்தார்கள்!உண்மையாகச் சொல்லப்போனால் தமிழர்கள் எல்லோரும் ஓட ரெடியாகவே இருந்தார்கள் அன்றிரவு! அப்படி ஒரு உள் பயமிருந்தது! நான் அதை வெளிப்படையாகவே சொல்கிறேன்! ஏற்பதும் ஏற்காததும் அவரவர் மனச்சாட்சி சொல்லும்! ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமைதி பேணப்பட்டது! ஏனெனில் அப்போது நான் கொழும்பில்தான் இருந்தேன்! போன ஒரு வீட்டில் ஒரு நாள் தங்க வேண்டியிருந்தது!

இதன்பிறகு டிங்கிரி பண்டா விஜேதுங்கா ஜனாதிபதியானார் - அதன்பிறகு சந்திரிகா அம்மையார் - தற்போது மகிந்தாவின் காலம் முடியப் போகிறது!(ஜனாதிபதி பதவியைச் சொன்னேன்!)

இந்தக் காலங்களில் ஏற்பட்ட தாக்குதல்கள் - அழிவுகள் முன்னரைவிட ஏராளம் -இடப்பெயர்வுகளும்தான்!

2002இல் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தம் ஒரு புதிய உதயத்தை தோற்றிவித்திருந்தாலும் அதுவும் 2006இல் இருண்டது!

சுதந்திரமாக நடமாடும் உரிமையும் மறுக்கப்பட்டு ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல பாதுகாப்பு அமைச்சில் அனுமதி வேறு! இதில் போதாக் குறைக்கு புலிகளின் இந்தப் பாஸ் நடைமுறையால் இன்று நிர்க்கதியான மக்களைப் பற்றி எவரும் கண்டுகொள்வதாக இல்லை! இதற்குத்தான் நான் முதல் ஒரு பதிவிட்டேன் - உனக்கொரு நீதி - ஊருக்கொரு.... என்று!

ஜே. ஆர் - பிரேமதாசா - சந்திரிகா இவர்களை விட சாதுரியமாக மகிந்த தனது சாணக்கியத்தால் புலிகளை தற்போது பலமிழக்க வைத்திருக்கிறார் நாட்டினுள்! இதை நான் எழுதுவதால் ஏதோ நான் இவர்களுக்கு வால் பிடிப்பதாக எண்ண வேண்டாம்! உண்மையை நடந்ததை எழுதுகிறேன். இந்தியப் பதிவர் சக்திவேல் அவர்களிடம் ஒரு தடவை மகிந்தவைப் பற்றிய ஒரு செய்தியை ( You Tubeஇல் வெளியாயிருந்தது) தெரிவித்தபோது ஜே.வி.பி கிளர்ச்சியின்போது ஒரு மனிதாபிமான சட்டத்தரணியாக அவர் சிங்கள மக்களுக்கு விளங்கினார். எப்போதும் சில விடயங்கள் ஒரே மாதிரி இருக்க முடியாது! இரவு பகல் போல - சூடு குளிர் போல -இன்பமும் துன்பமும் போல -வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருபவையே!

கடந்த பிடித்ததும் பிடிக்காததும் பதிவின்போது அன்பாய் இருப்போம் என்று குறிப்பிட்டேன்! இப் பதிவில் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளேன்!

முதல் வாக்கியம் யோகருடையது! இது வெற்றிவேற்கை வரி!

சரி இப்போது விடயத்திற்கு வருவோம்! அவரவர் மனநிலை எப்போது தெளிவுபெறுமென்பது யாருக்கும் தெரியாது! இவ்வளவும் நடந்த பிறகும் எமது புத்திக்கு எட்டியதை நாம் செய்யப் போகிறோமா? அல்லது இன்னும் எமக்காக என்றும் போராடும் தலைவர்கள் சொல் கேட்கப் போகிறோமா? என்பதுதான் இப்போதைய கேள்வி! இரண்டாவதாகச் சொன்ன வார்த்தையை கொஞ்சம் அழுத்தம் திருத்தமாக மீண்டும் சொல்கிறேன்! இன்னும் எமக்காக என்றும் போராடும் தலைவர்கள்!

இன்று அப்பாவிமக்கள் தமிழர்களும் முஸ்லிம்களும் தெருவோரங்களில் அடுத்த வேளைக்கு என்ன செய்வதென அறியாத நிலையில் தமது இருப்பைத் தக்கவைக்க அதிகாரவர்க்கத்துக்கு ஒரு தேர்தல்! சுதந்திர காலம் தொடக்கம் அடிமை வாழ்வு வாழும் மலையக மக்களையும் - வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களையும் நான் கவனத்தில் எடுத்துத் தான் இப்பதிவைப் போடுகிறேன்! வடக்கு கிழக்கத் தமிழர்களைக் காட்டிலும் தென் - மேல் பகுதிச் சேரி வாழ் மக்களையும் இலங்கை வாழ் மக்களாக ஏற்கவேண்டும்!

இப்போது எனக்குப் பிடித்த அரசியற் தலைவரான ஈழத்துக் காந்தி தந்தை செல்வாவின் கடிவுள்தான் தமிழரைக் காப்பாற்ற வேண்டும் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது!

தலைப்பில் போட்டபடி மகிந்தவா? சரத் பொன்சேகவா? சரத் என் டி சில்வாவா? வேறு யாராவது......எவரோ?

ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் சிறுபான்மைச் சமூகங்களின் கட்சித் தலைவர்கள் என்ன முடிவு செய்யப் போகிறார்கள்?

தமிழர் கூட்டமைப்பு - இ.தொ.கா - ஸ்ரீ.மு.கா - ம.மு.மு - ஈபிடிபி - மனோ கணேசன் - பிள்ளையான அணி - புளொட் - ஈபிஆர்எல்எப - தமிழர் விடுதலைக் கூட்டணி இவைகளின் நிலைப்பாடு என்ன?

No comments: