மீளா அடிமை எனத் தொடங்கும் 7ஆந் திருமுறைப் பாடல் எனக்கு ரொம்பவே பிடித்த பாடல். எம்மூரவர் சிலர் மூளாய்த்தீ என்றும் பாடுவது உண்டு! மூளாத தீ - தணலாக இருப்பது என்ற பொருள்! தமிழர் இதயங்கள் அனைத்தும் அப்படித்தானே இருக்கின்றன!
மனம் விட்டுப் பேசக்கூட அருகில் பெற்ற தாயுமில்லை! மனைவியுமில்லை! சிறுவயது உயிர் நண்பர்களும் இல்லை!குழந்தை மனதோடு இருக்கப் பழகிய எனக்கு குழந்தைகள் இருந்தும் - அவர்களோடு விளையாட அருகில் இல்லை!
இது எனக்கு மட்டுமல்ல - பலருக்கு!
வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு ஓரளவாவது சுதந்திரமிருக்கிறது!
குறிப்பாக பாவம்! முட்கம்பிச் சிறையினுள்ளும் - வெளிச் சிறையிலுள்ள குற்றமற்ற அப்பாவித் தமிழ்க்கைதிகளுக்கும் ஈழத்திலேயே நிர்க்கதியான மக்களும் எம்மைவிட சுதந்திரத்தைக் காண - தேட வேண்டியவர்களே!

எமது வாழ்வில் 1956 - 1958 கலவரங்களை விட பின்னர் நடந்த 1977 - 1981 - 1983 - கால கலவரங்கள் பிரச்சனைகளில் நன்றாக அடிபட்டவன் - தெரிந்தவன் என்ற வகையில் வாழ்வில் தாமரை இலையில் தண்ணீர்போல பட்டும் படாமலும் இருந்தாலும் சமூகத்தைப் பற்றிய அக்கறை நிறைய உண்டு!
பதிவுலகில் கடந்த ஒரு வருடத்தில் நிறைய மனிதநேயம் கொண்ட நண்பர்களையும் சகோதரர்களையும் சந்தித்து அவர்களுடன் நல்ல முறையில் தொடர்புகளைப் பேணி வருகின்றேன்.
இம் மாதம் கருத்துப் பின்னூட்டமிட்ட இருவரைக் கண்டிப்பாக நான் குறிப்பிட வேண்டும். முதலாமவர் ஈழத்துப் பதிவர்களின் ஆதர்ஷநாயகன் லோஷன்!
இருக்கிறம் பதிவைப்பற்றிய பின்னோட்டத்தில் - இவ்வளவும் அரட்டையில் நடந்திருக்கா?
உங்கள் வேலை பற்றி சொன்னவை மனதில் சிறு கலக்கம் தந்தன..
காலம் ஒருநாள் மாறும்.. நம் கவலைகள் யாவும் தீரும்.. :)
மற்றையவர் தேனூர்தி ரமேஸ்! இலை உதிர் காலம் பதிவைப்பற்றிய பின்னோட்டத்தில் - ///இவை - எங்கள் நெஞ்சம்போல வெறுமையாக இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றும்.///
இலை துளிர் காலம் வரும் நண்பா அப்போது மனதை நிரப்பிக்கொள்ளுங்கள்.
காலம் மாறும் - பருவ காலமும் மாறும் - இது வருடத்தில் நிகழ்பவை!
எமக்கு எப்போது?

2 comments:
//எமக்கு எப்போது?//
நம்புவோம், எமக்கும் நடக்கும்!
"மூளாத்தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி...........சுந்தரர் தேவாரம்!"
என்ற தலைப்பைப் பார்த்ததும் ஓடிவந்தேன் சுந்தரரின் தேவாரம்பற்றி தங்களின் பதிவு இருக்கும் என்ற சிந்தனையோட்டத்துடன்! ஆனால் தமிழர்களின் சிந்தனையோட்டத்தை தலைப்பாக்கியுள்ளீர்கள்!
"அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி"
என்ற குறளை வள்ளுவன் வழங்கி எம்தமிழ் சாதிக்கு புத்திமதி ஏலவே கூறியிருந்தும் நாம் உணர்ந்தபாடாய் தெரியவில்லை.
"வள்ளுவன் தன்னை உலகினுக்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பெருமைமட்டும் பேசி என்ன பயன்?
காலச்சக்கரம் சும்மாவா சுழலுகிறது? காலம் கனியும் என்று நம்புவதையும் கடவுளை அதற்காய் வேண்டுவதையும் கைவிடாது இருப்போம்!
Post a Comment