அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, November 15, 2009

சின்னச் சின்ன ஆசை! சிங்கக்கொடி - நந்திக் கொடி - புலிக்கொடி மூன்றையும் பறக்க விடலாம்தானே!



சுவிசில் நான் இருக்கும் பகுதியில் மட்டுமல்ல எல்லா மாநகராட்சிகளிலும் 3 கொடிகள் பறக்க விடப் பட்டிருக்கும்!
ஒன்று நாட்டின் தேசியக் கொடி!
மற்றது மாநிலத்தின்(மாவட்டத்தின்) கொடி!
மற்றயது மாநகராட்சியின் கொடி!

படத்திலிருப்பவை எமது பகுதியின் கொடிகள்!

2006இல் சுவிசின் மாதிரியைப் பார்க்கவோ - படிக்கவோ இலங்கை அரசின் தூதுக்குழுவும் - புலிகளின் தூதுக்குழுவும் வந்திருந்தன! ஆனால் விட்டுக்கொடுப்புக்கள் இல்லாத காணரத்தால் எல்லாம் அம்போ!

இலங்கையைவிட சுவிற்சர்லாந்து சிறியது! இங்கு 26 மாநிலங்கள் பல்வேறுபட்ட மொழிகளைப் பேசும் பகுதிகளில் அமைதியான நீதியான ஆட்சி நிலவுகிறது! இதே அமைப்பு முறையை எமது நாட்டிலும் ஏற்படுத்துவதன்மூலம் இனங்களுக்கிடையில் நல்லெண்ணம் - புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும் என்பது எனது திடமான கருத்து!

ஆனால் நான் யோசனை செய்து என்ன பலன்?

இலங்கையைவிட சுவிற்சர்லாந்து சிறியது! இங்கு 26 மாநிலங்கள் பல்வேறுபட்ட மொழிகளைப் பேசும் பகுதிகளில் அமைதியான நீதியான ஆட்சி நிலவுகிறது! இதே அமைப்பு முறையை எமது நாட்டிலும் ஏற்படுத்துவதன்மூலம் இனங்களுக்கிடையில் நல்லெண்ணம் - புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும் என்பது எனது திடமான கருத்து! ஆனால் நான் யோசனை செய்து என்ன பலன்?


25 மாவட்டங்கள் தனித்தனி மாநில ஆட்சி - இதைத்தான் மாவட்ட ஆட்சியாக ஏற்க முற்பட்டபோது நடைபெற்ற தேர்தல்களின் வன்முறையால் 1981இல் யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டதே!

ம்...என்ன செய்வது? யாரை நோவது!

வடக்கு கிழக்கில் வாழ்ந்த ஒரு கணிசமான அளவு முஸ்லிம் சிங்கள மக்களை அவர்களது வாழ்ந்த பிரதேசத்தில் வாழவிடாமல் செய்வதில் எந்தவித தார்மீகமும் இருப்பதாக எனக்குப்படவில்லை! இடம்பெயர்ந்த அல்லது புலம்பெயர்ந்த நாம் எமது அன்றாடத் தேவைகளுக்காக வீட்டைக்கட்டியும் - கோவில் கட்டியும் வாழுகிறோமில்லையா?
அதேபோல இருந்தவர்கள் தமது இடங்களில் குறியேற விண்ணப்பித்ததை ஏதோ பாதகச் செயல்போல தூக்கிப்பிடிக்கிறோமே! இது நியாயமானதா?

இப்போது ஒரு கேள்வி என்மீது எழுப்பப்படும் - சிங்களக் குடியேற்றங்கள் பற்றியது!
இதற்கு ஒரு நியாயமான தீர்வு இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் அல்லது அதற்கு முன்னரான பண்டா செல்வா அல்லது டட்லி செல்வா உடன்படிக்கையில் இருக்கிறதல்லவா? ஏன் 2002இல் ஏற்படுத்தப்பட்ட நோர்வே அனுசரணையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கண்டிப்பாக இருக்குமே!

ஏன் கையில் வெண்ணெய் இருக்க அலைவான்?

கடவுளே ஒரு மண்ணும் புரியவில்லை!

No comments: