அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, November 7, 2009

உனக்கொரு நீதீ! ஊருக்கொரு நீதீ! தமிழா! நீ எப்போது திருந்தப் போகிறாய்?

தன்பிழை தானறியார்
தெரிந்திடினும் மனம் ஏற்கா!
மற்றவர்மேல் பழிபோடும் சாதுரியம்
வசையுரைவதிலும் சாணக்கியமானவனே!
தமிழா நீ சரியான சந்தர்ப்பவாதி!

பண்புடைய பரிவுடைய முன்வந்த மூத்தகுடி
பதவிக்கும் பணத்துக்கும் ஆசைகொண்டு
படும்பாடு பார்த்திருக்க முடியவில்லை!
படுத்திருக்க இயலவில்லை!
இடையிடையில் தோன்றும் விரக்தியும் கோபமும்தான்
எழுதவைக்கிறது இந்தக் கவிப் பதிவை!

எழுத விரும்பவில்லை! இருக்கவும் விருப்பமில்லை!
ஆனாலும் ஏதோ ஒன்று எழுதவே சொல்கிறது!
1985களில் சேர்ந்திருந்த நம்மவர்கள்(பிரித்து வாசித்தால் எளிதில் புரியும்)
சேர்ந்த பின்னர் பிரிவினைகள்

அழிப்பவன் எதிரி என்ற பதத்தின் பொருள்மாற்றி
தம்முள் எதிரிகளைத் தாமே உருவாக்கி
உடனிருந்து அவர்தமைக் கொன்றோழித்து
எதிரியோடுறவாடி தாம் விரும்பும் நேரங்களில் பேசுவார்கள் - அருகருகே இருந்து உண்டு களிப்பார்கள் - விருந்தினராயிருப்பார்கள் - உலவித் திரிவார்கள்.

ஒரு சில நேரங்களில் பழையதை மறந்துவிட்டு பயங்கரமாய் மோதிடுவார்!

குழந்தை –குட்டி குஞ்சு குருமன் ஆண் பெண் எந்த இருப்பும் தெரியாமல் கொன்றொழிப்பார் - கேட்டால் மக்களைக் காக்கப் போர்! விடுதலை வேண்டிய போர்!
கேள்வி கேட்க முடியாது - கருத்துச் சொல்ல முடியாது – கேட்டாலும் இவையனைத்தும் தந்திரம் உபாயம் - அவர் மொழியில் சுளிவு நெளிவு!

மனதில் அன்று படித்த பட்டினத்தார் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது! தன் வினை தன்னைச் சுடும் - ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.

பல்லாண்டு காலம் புட்டும் தேங்காய்போல் வாழ்ந்த
முஸ்லீம் இனத்தவர் அனைவரையும் ஒரு நாள் அவகாசத்தில் ஊரைவிட்டு அனுப்பினர். இருநூறோ ஐநூறோ சரியாகத் தெரியாது. அனுப்பிவிட்டு அவர்தம் சொத்தை பாதுகாத்தும் கொடுக்கவில்லை. வந்தபின்னர் அவர்கள் வீட்டையும் - எம் தமிழ்ச்சாதி - அடாத்தாக வைத்துக் கொண்டு வீட்டினுள்ளும் ஏற்கவில்லை. மன்னிக்க ஏற்கவில்லை அல்ல – எழும்பிப் போகவில்லை. எவ்வளவு அயோக்கியத்தனம்.

இதையெல்லாம் பார்த்து மௌனமாய் - முட்டாளாய் - ஒரு பேச்சுப் பேசாமல் இருந்த பழிதான் - பாவமாய் இன்றைக்கு எம்மவர்களை வாட்டி வதை வதையென வதைக்கிறதோ?

வேண்டிய பொழுது வாய்திறக்கவில்லை - இன்று வாழும் தேசமெல்லாம் பேசாதது மட்டுமல்ல பற்பல போராட்டங்கள் செய்கிறோம்.

நீ ஆட்சி புரிந்த நேரத்தில் உனக்கொரு நீதி! நீ விட்டுவிட்டு வெளியேறி போராடுகையில் ஒரு நீதி!

உன்னாட்சியில் நீ வைத்ததுதான் சட்டம். யாரும் எதுவும் சொல்லவோ செய்யவோ முடியாது!
ஆனால் நீ எங்கு வாழுகிறாயோ எந்த நாடானாலும் அங்கு யார் ஆட்சி செய்தாலும் உனக்கு அனைத்தும் செய்ய உரிமை உண்டு! நீ உன் சிந்தனையை கொஞ்சம் யோசித்துப் பார்த்தாயா?

மற்றவர்கள் மனிதர்கள்! நீ மட்டும் மிருகம்தான்!

No comments: