இலங்கைத் தமிழருக்கப் போட்ட பிச்சையா என்று அறிவிழி பதிவிட்ட பதிவுக்கு நான் ஒரு கருத்தைத் தெரிவிக்க அவர் அதை பிரசுரிக்காது அகற்றிவிட்டார். கருத்துச் சுதந்திரத்துக்கு நான் முக்கியம் வழங்குவதால் இதை எனது பதிவில் இடுகிறேன். பிழையிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.
எனது பதிவு இதுதான்கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது என்பதற்காக அவரவர் தனிப்பட்ட விடயங்களில் தலையிடுவது அநாகரீகம் என நான் கருதுகிறேன்.
நடிப்பது அவர்கள் தொழில். எமது பிரச்சனைக்கு அவர்கள் பட்டது போதும் என்று நான் நினைக்கிறேன். எமக்கு யாருடைய உதவியோ - கருத்துக்களோ தேவையில்லை என்று தானே நாம் நாமாக செயல்படுகிறோம். இதற்கு ஏன் மற்றவர்களைப் பழி சொல்லுகிறார்கள். எத்தனை சந்தர்ப்பங்களை நாம் விட்டுவிட்டோம்.
இன்றும் விமானத்தாக்குதல்கள் நடத்துவதால் பாதிக்கப்படுவது பற்றியும் அதன் எதிர்விளைவகள் பற்றியும் எவருமே கருத்துக்கள் தெரிவிப்பதில்லையே!
யார் மீது குற்றம் காண்பது என உலகமே தவிக்கிறதே! ஒரு காலத்தில் எமக்காக சிங்கள இனவெறி அரசின் படுபாதகச் செயல்களை கண்டித்த பல நாடுகளும் இன்று மௌனமாக இருப்பதன் காரணம் புரியவில்லையா?.
நாம் அன்று மோட்டுச் சிங்களவன் என்று சொன்னோம். இன்று யார் மோடர்கள்?