அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label கூட்டணி. Show all posts
Showing posts with label கூட்டணி. Show all posts

Wednesday, June 5, 2013

அமரர்கள் மு.சிவசிதம்பரம், சி. நமசிவாயம் ஆகியோரின் நினைவு


தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு.சிவசிதம்பரம், கூட்டணியின் யாழ்ப்பாணக்கிளை உபதலைவரும், யாழ்ப்பாண வரத்தகர் சங்கத் தலைவருமாகிய சின்னத்தம்பி நமசிவாயம் JP ஆகியோரின் நினைவு தினமான ஆனி 5ஆம் நாளான இன்று கூட்டணியின் தலைமைக் காரியாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களின் தலைமையில் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் ஆதரவாளர்களும் மறைந்த தலைவர்களை நினைவுகூர்ந்து தமது அஞ்சலிகளைத் தெரிவித்தனர்.


ஆனி 5 - இலங்கைத் தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத சில சம்பவங்கள்!

Security was tightened when parliament considered watering down the Sinhala-only language law in 1956
ஈழத் தமிழர் வரலாற்றில் ஆனி 5 என்ற நாள் மறக்கமுடியாத சில வரலாற்றுப் பதிவுகளைக் கொண்டிருக்கிறது.

1956இல் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம்
1974 இல் பொன் சிவகுமாரனின் மறைவு
1998 இல் சின்னத்தம்பி நமசிவாயம் JP அவர்களின் மறைவு(த.வி.கூ. யாழ்ப்பாணக்கிளை உபதலைவர், வரத்தகர் சங்கத் தலைவர்)
2002 இல் தலைவர் சிவசிதம்பரம் அவர்களின் மறைவு
நாம் எமது வரலாறுகளை ஆவணப்படுத்தாமல் இருப்பதனால் பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளைக்கூட மீள நினைவுபடுத்தாமல் தவறு இழைக்கின்றோம். வரலாறுகளை நினைவு கூருவதன்மூலமே எமது வருங்காலச் சந்ததியினருக்கு அவற்றை விட்டுச் செல்ல முடியும். கடந்த 1.6.2013ல் நூலகம் எரிக்கப்பட்டு 32 ஆண்டுகள் நிறைவடைந்த நாள். யாழ்ப்பாணத்தில் அதுகுறித்த ஒரு நிகழ்வும் இடம்பெறவில்லை. மாநகர சபைக் கூட்டத்தில் வேறெதுக்கோ எல்லாம் அடிபாடும் சண்டையும்தான் நடந்தது. நூலகத்தை நினைவுபடுத்த யாரும் இல்லை. நான் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்யப் போனால் அதற்கும் ஆணையாளரிடம் - முதல்வரிடம் அனுமதி பெற வேண்டியிருந்தமையால் அது நிறைவேறவில்லை.

Thursday, July 14, 2011

அமரர்கள் அமிர் - யோகேஸ் நினைவு தினம்!

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களான அமரர்கள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரின் 22ஆவது நினைவு தினம் 13.07.2011 இல் யாழ்ப்பாணம் தமிழர் விடுதலைக் கூட்டணிக் காரியாலயத்தில் நடைபெற்றது. கடந்த கால நினைவுகளைப் பகிர சில புகைப்படங்கள்!

(விரைவில் மேலதிக தகவல்களை இணைக்கவுள்ளேன் - பொறுத்திருக்கவும்!)












Tuesday, April 12, 2011

புதுவருடக் கொண்டாட்டங்களில் பங்குபற்றுமாறு மக்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்!

மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க,
கட்டளை அதிகாரி,
பலாலி.

அன்புள்ள ஜெனரல்,

உங்களுக்கு என்னை நான் அறிமுகப்படுத்த தேவையில்லை என நினைக்கின்றேன். இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த நாட்டு பிரஜையாக நான் வாழ்ந்திருக்கின்றேன். எனக்கு தற்போது 78 வயதாகி அரைநு}ற்றாண்டுக்கு மேல் அரசியலில் ஈடுபாடுகொண்டு 17 ஆண்டுகளுக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றேன். நான் அரசியலையும் நிர்வாகத்தையும் கலந்து பேசுபவன் அல்ல என்பதை தாங்கள் அறிய வேண்டும். இடம்பெயர்ந்து துன்பத்தில் வாழ்ந்த மக்களுக்கு எத்தகைய மனிதாபிமான சேவையை இராணுவத்தினர் ஆற்றியுள்ளனர் என்பதை நான் மிகவும் பாராட்டியிருக்கின்றேன். இராணுவத்தையும் பொலிஸையும் சேர்ந்த பெண் அதிகாரிகள் அங்கவீனர்கள், கடும் நோயாளிகள், முதியோர்கள், கர்ப்பிணி தாய்மார்களை எவ்வாறு பராமரித்தனர் என்பதை நான் அறிவேன். அண்மைகாலத்தில் தங்களுக்கு நடந்ததை பிள்ளைகள் மறக்கக்கூடிய வகையில் எவ்வாறு பெண் அதிகாரிகள் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தார்கள் என்பதையும் நான் அறிவேன். இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் கூட இவர்களை வெகுவாக பாராட்டியுள்ளனர். படையினர் தமது கடமையை திறமையாக செய்துள்ளனர். தற்போது அவர்கள் ஓய்வெடுக்க வேண்டிய நேரம்.

வடகிழக்கு மக்கள் ஒரு ரக இராணுவத்தை ஒத்த ஆட்சியில் 30 ஆண்டுகளுக்கு மேல் கஷ்டப்பட்டார்கள் என்பதை நான் தங்களுக்கு கூறத்தேவையில்லை. அவர்கள் போதியளவு அவமானம், சங்கடம், அச்சுறுத்தல். மிரட்டல் ஆகியவற்றுக்கு ஆளாகியிருந்;தனர். இந்த நிலைமை மீண்டும் திரும்புவதை மக்கள் விரும்பவில்லை. இச் சம்பவங்கள் அவர்களுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளமையால் குறிப்பாக பெண்கள் ஒரு துப்பாக்கியை கண்டதும் பைத்தியம் பிடித்தவர்கள் போல் கடந்த காலத்தை நினைத்து மிரண்டு ஓடுகின்றனர்.

நடந்து முடிந்த நல்ல சம்பவங்கள் தற்போது இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன. வடகிழக்கில் வாழ்கின்ற மக்கள் ஒரு துப்பாக்கியையோ, சீருடை அணிந்த இராணுவத்தினரையோ காண விரும்புகின்றார்கள் இல்லை. அவ்வளவுது}ரம் மிக மோசமாக அவர்கள் கடந்த காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர். அவர்கள் தமது உடமைகள் அத்தனையையும் இழந்துள்ளனர். யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகளாகிய பின்னரும் முன்பு வசதியாக வாழ்ந்த வீடுகள் போலன்றி ஆதிகால மனிதர்களின் வீடுகளையொத்த வீடுகளில் வாழ்கின்றனர். ஆண்கள் தனது மனைவியரையும், மனைவியர் தமது கனவரையும் இழந்துள்ளனர். சிலர் தமது பிள்ளைகளை இழந்தும், வேறு சிலர் தம் பிள்ளைகளை தடுப்பு முகாமிலும் எதுவித குற்றமும் புரியாமலே தடுத்து வைக்கப்பட்டுள்ளதை பாhக்கின்றனர். பலர் குடும்பத் தலைவரை இழந்துள்ளனர். பிள்ளைகள் பலர் பாடசாலைக்கோ, வேறு வேலைக்கோ போக முடிவதில்லை.

இவ்வாறான சு10ழ்நிலையில் இம் மக்கள் புதுவருடத்தை கொண்டாடுவது அவர்களுடைய கற்பனைக்கு எட்டாத விடயமாகும். அவர்கள் தமது வாழ்வில் சந்தோஷம் பற்றி நினைக்க முடியாமல் உள்ளனர். சிறு பிள்ளைகள் சில தமாஷாக்களால் கவரப்படலாம். ஆனால் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாகவும், குது}கலமாகவும் இருக்கக்கூடிய நிலைமை இல்லை. அவர்கள் தனிமையில் விடப்படுவதையே விரும்புகின்றனர். அவர்கள் இயல:பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு இன்னமும் காலம் உண்டு. பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளில் பலவந்தமாக இவர்களை சேர்ப்பதை தவிர்க்குமாறு தயவ செய்து தங்கள் அதிகாரிகளுக்கு கட்டளையிடுங்கள். மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு கடந்தகாலத்தில் நடந்ததை மறக்க அவர்களின் உற்றார் உறவினர்கள் திரும்பி வரும்வரை அன்றேல் அவர்களுக்கு என்னகதி ஏற்பட்டது என்பதை தெரியும் வரை கால அவகாசம் வழங்குங்கள். தயவு செய்து கச்சேரிக்கும், விளையாட்டு கழகங்களுக்கும் புதுவருட கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு மக்களுக்கு தொந்தரவு செய்ய வேண்டாமென அறிவுறுத்தவும்.

வாழ்க்கையை கொண்டாடுவதற்கு முன்பு அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான நினைவுகளை மறக்க அவகாசம் கொடுங்கள். பெருமளவில் ஓட்டாண்டியாக்கப்பட்ட வன்னி மக்களுக்காக அனுதாபப்படுங்கள் என யாழ் குடாநாட்டு மக்களை விநயமாக கேட்டுக்கொள்கிறேன்.

வீ. ஆனந்தசங்கரி,
தலைவர் - தமிழர் விடுலைக் கூட்டணி.
11.04.2011.

Thursday, December 23, 2010

அமரர் கா.பொ. இரத்தினம் - பண்டிதர் ஐயா அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

தந்தை செல்வா அவர்களின் தமிழரசுக் கட்சியிலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் பாராளுமன்ற உறுப்பினராயிருந்த தமிழறிஞர் - பண்டிதர் அமரர் கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் அவர்களின் மறைவுக்கு கிருத்தியம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறது!

1965ஆம் ஆண்டில் கிளிநொச்சியிலும் 1970, 1977 களில் ஊர்காவற்றுறையிலும் போட்டியிட்டு பாராளுமன்றம் தெரிவாகிய அமரரின் நினைவுகளுக்காக சில நிழற்படங்களையும் இணைத்துள்ளேன்.







Tuesday, July 20, 2010

கூட்டணியின் கனடாக்கிளைத் தலைவர் திரு. முருகப்பர் நாகலிங்கம் நடராசா அவர்கள் காலமானார்

கடந்த 15.07.2010 அன்று அமரத்துவமடைந்த திருவாளர் முருகப்பர் நாகலிங்கம் நடராசா அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கனடாக் கிளைத் தலைவராக இருந்து ஆற்றிய மேலான பணிகளை நாம் எளிதில் மறந்துவிட முடியாது.

அமரரின் மறைவால் வாடும் அவர்தம் துணைவியார், பிள்ளைகள், மருமக்கள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம்,

அமரர் உயர்திரு முருகப்பர் நாகலிங்கம் நடராசா அவர்களது ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தமிழர் விடுதலைக் கூட்டணி
கனடாக் கிளை
18 ஆடி 2010

மறைந்த கூட்டணித் தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்களின் பிறந்த நாள் நினைவு இன்று!



Wednesday, July 14, 2010

இன்று யாழில் நடைபெற்ற கூட்டணித் தலைவர்களின் நினைவஞ்சலி







தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் செயலாளர்நாயகமும், பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களினதும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு.வெ.யோகேஸ்வரன் அவர்களினதும் 21வது நினைவு தினம் இன்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் யாழ்.மாவட்டத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் இரா.சங்கையா தலைமையில் இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடரை கூட்டணியின் முன்னால் உடுவில் கிராமசபை தலைவர் ச.முத்துலிங்கம் கூட்டணியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான திரு. த.பூலோகரட்ணம் ஆகியோர் ஏற்றினர். அமரர்கள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலத்தப்பட்டது.

தொடர்ந்து நினைவுரைகள் இரா.சங்கையா தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியர் செ.முத்துலிங்கம், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் செ. விஜயரத்தினம், ச.முத்துலிங்கம், திருஞானசம்பந்தர் ஆகியோர் நினைவுரைகள் நிகழ்த்த நன்றியுரையினை தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஊடகச்செயலாளர் த.கஜன் நிகழ்த்தினார். தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆதரவாளர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Sunday, July 4, 2010

கூட்டணி இருக்கும்போது கூட்டமைப்புத் தேவையா?










தமிழர் விடுதலைக் கூட்டணி இருக்கும்போது விடுதலைப் புலிகளின் காலத்தில் கூட்டணியிலும் பின்னர் ஏகப்பிரதிநிதிப் பிரச்சனைகளின் பின்னர் தமிழரசுக் கட்சியிலும் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது எதற்காக புதியதொரு அரசியற்கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும?

தமிழர் விடுதலைக் கூட்டணி தோற்றுவிக்கப்பட்ட பின்னர் தலைவர்களைக் குறைசொல்லிக்கொண்டு அவர்களின் ஜனநாயக வழி சரிவராது என்று சொல்லி ஆயுதங்களைக் கையிலெடுத்து வன்முறைகளை மேற்கொண்டு - மக்களின் உயிர்களையும் - சொத்துக்களையும் அழித்து - இருந்த இடங்களையே சுடுகாடாக்கி இன்றைய இக்கட்டான நிலையை ஏற்படுத்திவிட்டு, திரும்ப இப்போது சுற்றிச் சுற்றிச் சுப்பற்ற கொல்லையில் என்பதுபோல - எல்லாருமே தம்மை அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்தபிறகு - இப்போது புதிதாக இந்தக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதால் ஏதேனும் மக்களுக்கு விமோசனம் வருமா என்றால் ஒன்றுமே இல்லை!

புதியதை உருவாக்கி பழையதை இல்லாமல் செய்வதில் இந்த விசமக்காரக் கும்பல் சாதுரியமாகச் செயற்பட்டு பழைய தலைவர்களின் புனிதமான - அர்ப்பணிப்பான பணிகளை மறைத்து - தம்மை பிரபல்யம் ஆக்கிக்கொள்ளவும் - தம்மை நியாயப்படுத்தவும் முயல்கின்றனர். இதில் அனுபவமுடைய சில தலைவர்களும் தலையை உள் நுழைத்திருப்பது சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது!

தொடரும்.