அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label பறவைகள். Show all posts
Showing posts with label பறவைகள். Show all posts

Sunday, November 15, 2009

ஏரிக்கரை நண்பர்களோடு!





என்னிடமிருந்த ஒரு 16GB மெமரி ஸ்ரிக் கடந்த 2 மாதத்துக்கு முன்னர் காணாமல் போய்விட்டது! இதில் பதிவர் லோஷனைப் பற்றி எழுதிய பதிவும் தொலைந்துவிட்டது! அவருக்கு இவ்வளவு பதிவுலக நண்பர்களா? என்ற தொனியில் எழுதப்பட்டது! இன்று எனது நண்பன் எடுத்த புகைப்படங்களின் பிரதிகள் yahoo Mailஇல் சேமித்து வைத்திருந்ததைக் கண்டு பிடித்து இப்பதிவை இடுகிறேன்!

இந்தப் பெரிய பறவைகள் பாவம். சிறிய பறவைகள் முந்திக்கொண்டு அவற்றுக்குப் போடும் தீனியை அபகரித்துவிடும். அதனால்த்தான் ஒரு பரிவோடு ஊட்டிவிடுவது என் வழக்கம்.



Saturday, November 14, 2009

பிடித்த நண்பர்கள் - இப்போது எனது வீட்டிற்கருகிலுள்ள ஏரிப் பறவைகள்





























இதுபற்றி நான் பல பதிவர்களோடு மனம்விட்டுக் கதைத்திருக்கிறேன்! இதற்கும் தனியாக ஒரு பதிவிட இருக்கிறேன்! - என்று கடந்த பதிவில் குறிப்பிட்டேன்!

மத்திய சுவிற்சர்லாந்திலுள்ள முக்கிய புகையிரதச் சந்தி அமைந்த இடம் ஆர்த்கோல்டா(Arth-Goldau). இம் மாவட்டத்தின் பெயர் சுவிற்ச்(Schwyz). நான் இப்போது வாழும் இடத்தின் பெயர் ஆர்த்(Arth)! இந்த இடத்தைப் பிடித்திருந்தபடியால் - நானே கேட்டு வந்து வாழுகின்றேன். எதிர்வரும் 18-12-2009 அன்று நான் வந்து 2 வருடங்கள்! ஒருபுறம் ஏரி! இரு பக்கங்களிலும் மலைகள்!

ஏரியிலிருக்கும் விதவிதமான பறவைகள்தான் நான் அதிகம் நேசிக்கும் தற்போதைய நண்பர்கள் - ஒரு நாளைக்கு ஒருவேளையாவது அவர்களுடன் என் நேரத்தின் சிறுபகுதியை செலவிடுவது வழக்கம்.

தற்போது பனிக்காலம் தொடங்குவதால் பகல் பொழுது எமக்குக் குறைவு!

அதிகாலையில் 5.00 மணியளவில் எழுந்து 5.48 பேருந்து 6.11 புகையிரதம் மீண்டும் 6.29 பேருந்து பின்னர் 6.35க்கு 10 நிமிட நேர நடை என்று ஆரம்பித்து 7.00 - 4.15 வரை தற்போதைய வேலை போய்விடும். பின்னர் மீண்டும் 4.27க்கு பேருந்து 4.58 புகையிரதம் 5.15 பேருந்து என எனது அறைக்குத் திரும்ப 5.25 ஆகிவிடும். புறப்படும்போதும் வந்து சேரும்போதும் இருட்டிவிடுவதால் அவர்களைச் சந்திக்க முடியாது.

சனி - ஞாயிறு காலங்களில்தான் இப்போது பேச்சுவார்த்தை. நான் ஏரிக்கரைப் பக்கம் போனதும் தாமாகவே வந்துவிடுவார்கள்! எஞ்சிய உணவுகளையும் - அதில்லாத சமயங்களில் அரை இறாத்தல் பாண் அவர்களுக்காக எப்போதும் கொண்டு செல்வேன்!