அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts

Sunday, September 20, 2009

இலங்கைப் பதிவர் சந்திப்பின் பின்னர் சிலருடன் தொடர்புகளை ஏற்படுத்தியதன் பின் விளைவு!


கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைப் பதிவர் சந்திப்பு நடந்தது. நட்புக்காக ஏங்கும் என்போன்றவர்களுக்கு இது ஒரு வரப் பரிசாதமே! பலருடன் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டேன். சிலருடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பானேன்.எல்லோருடனும் தொடர்பாக இருக்க வேண்டும் என்பதில் நான் அதிக அக்கறை கொண்டிருக்கிறேன். மேலும் இந்த இலங்கைப் பதிவர்கள் பரந்து விரிந்து மாவட்ட மட்டங்களில் ஒரு கூட்டாக இயங்கினாலும் நன்மை பயக்கும். இலங்கைப் பதிவர் சந்திப்பின் பின் ஒரு பதிவிட எண்ணியிருந்தேன். அது இன்னும் நிறைவேறவில்லை.

நல்ல பதிவுகளைப் பார்க்கும் போது நேரமிருந்தால் அதற்கு ஒரு பதிலிடுகை செய்வது என் வழக்கம்.மருதமூரான் எழுதிய
"என்னை புடம்போட்ட பள்ளிகள்: பள்ளி பயின்றதொரு காலம் (தொடர் விளையாட்டு)" என்ற பதிவுக்கு ஒரு இடுகையைப் பின்வருமாறு இட்டேன்.

வணக்கம் மருதமூரரே!
பசுமையான பழைய நினைவுகளை மீட்ட இதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது!
என்ன இப்படியெல்லாம் தொடர் விளையாட்டெல்லாம் நடக்குதா? எங்களை நீங்கள் இதுக்கெல்லாம் கூப்பிடமாட்டியள் தானே! ம்.. என்ன செய்வது கொஞ்சம் பழசாப் போனோம் இல்லையா! சரி எப்படியென்றாலும் என் அனுபவங்களில் கட்டாயம் இதுவரும்! பரவாயில்லை நீராவது 4 பாடசாலைகளில் படித்திருக்கிறீர். நான் மொத்தம் 8 பாடசாலைகள் பெயரைச் சொல்ல வெளிக்கிட்டாலே நிறைய எழுதவேண்டிவரும். ஆறுதலாக எனது பதிவில் போடுகிறேனே!

ஏற்கனவே நான் எழுதிய பல பதிவுகள் அரைகுறையாக இருக்கிறது. எழுதவே நேரமில்லாத என்னை பதிவிட மேலும் விளையாட்டுக்கு அழைப்பார்கள் என்று நான் சத்தியமாக நம்பவே இல்லை. இப்போது நட்புத் தொல்லை கூடிவிட்டது. சும்மா பகிடியாகவே கருத்தைச் சொல்கிறேன் யாரும் கோபிக்க வேண்டாம்.

மருதமூரான் தன்னுடைய காதல்: அழகு: கடவுள்: பணம்= நான் (தொடர் விளையாட்டு) பதிவில் 1.முதலாமவர், தங்க முகுந்தன்: இவரின் வாழ்க்கை அனுபவங்கள் இந்த தலைப்பில் அழகாக தெறிக்கும் என்று நினைக்கிறேன் என்றும்,

யோ வொய்ஸ் தன்னுடைய பள்ளிப் பயின்றதொரு காலம் (தொடர் விளையாட்டு) பதிவில் 01. தங்க முகுந்தன் (தொடர் பதிவுக்கு மருதமூரான் அழைக்கவில்லை என கவலை பட்டீங்கதானே? இப்ப மாட்டிகிட்டீங்க)
என்றும்,
தமது பதிவுகளில் குறிப்பிட்டு என்னை இப்போது பெருஞ்சிக்கலில் மாட்டிவிட்டிருக்கிறார்கள்.

மேலும் யோவொய்ஸ் என்னை நன்றாகப் புரிந்துகொண்டு மருதமூரானுக்கு இட்ட ஒரு இடுகையில் பாவம் அவர் நானும் ஒரு தொடர் பதிவுல மாட்டி விட்டுட்டேன். நேற்று தொலைபேசியில் என்னுடன் பேசி ஏன் மாட்டி விட்டீங்க என கேட்டவர், இன்று கட்டாயம் உங்களிடமும் கேட்பார். இவருக்கு அடுத்தடுத்து வைக்கும் இரண்டாவது ஆப்பு?.. என்று கருத்துச் சொல்லியிருக்கிறார்.



அவர் குறிப்பிட்டதுபோலவே நான் மருதமூரனுடன் தொடர்பு கொண்டு பேசினேன். இந்த இருவருக்கும் எனது கோபத்துடன் கூடிய அன்பான நன்றிகள். உங்களுடைய கட்டளைக்கு தலைவணங்கி கூடிய விரைவில் நீங்கள் எதிர்பார்த்த கட்டுரைகளை எழுதி பதிவிடுகிறேன். அதுவரை சற்றுப் பொறுத்திருக்கவும்.

Sunday, August 23, 2009

இலங்கைப் பதிவர்களின் சந்திப்புப் பற்றிய தகவல்களை உடனே தாருங்கள்!

இன்று காலையில் கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கைப் பதிவர்களின் சந்திப்பு மிக நல்ல முறையில் நடந்ததாகவும் சுமார் 80 பதிவர்கள் கலந்து கொண்டதாகவும் தகவல் - வந்தியத் தேவனுடன் இதுபற்றி தற்போது கதைத்தபின் உடனடியாகப் பதிவிலிடுகிறேன்!பரிமாறப்பட்ட விடயங்கள் கலந்து கொண்ட பதிவர்கள் பற்றிய விபரங்களையும் புகைப்படங்களையும் பதிவிலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் எம்போன்ற பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் நிகழ்வுகளை உடன் தெரியப்படுத்துமாறு அன்போடும் - பணிவோடும் வேண்டுகிறேன்!