அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label மூளாய். Show all posts
Showing posts with label மூளாய். Show all posts

Sunday, April 7, 2013

மூளாய்ப் பிள்ளையார் திருவிழா இம்முறை புதுவருட தினத்தன்று ஆரம்பம்




மூளாய் வரதன்புலோ ஸ்ரீ சித்திவிநாயகராலய மகோற்சவம் எதிர்வரும் 14.04.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

Saturday, April 17, 2010

மூளாய்ப் பிள்ளையார் - கொடியேற்றம் இன்று!


சித்திரா பொர்ணமி அன்று தீர்த்த உற்சவத்தைக் கொண்ட எமது மூளாய் வதிரன்புலோ ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமானுடைய வருடாந்த மகோற்சவம் இன்று 17.04.2010 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. கடல்கடந்து வாழும் நிலையிலும் எம்பெருமானுடைய திருவருளுக்காக இங்கிருந்தவண்ணம் மனதார வேண்டுகிறேன்!

என்றும் வேண்டும் இன்ப அன்பு!

Saturday, August 1, 2009

எம் மக்கள் படும் துன்பம் போக்கிட நீ வந்தருள்வாய்! - மூளாய்ப் பிள்ளையாரிடம் வேண்டுகோள்!


காக்கை உருவெடுத்து காவிரியை ஓடவைத்தாய்
குள்ளச் சிறுவனாய் குறுமுனிக்கு அருள் சுரந்தாய்
கூக்குரல்போட்டுக் கதறிடும் எம்மூரவர்க்கு
கூத்தாடி மைந்தனே! குமரனின் அண்ணா! காட்டுன் கருணையை!
மூளாயூரில் வந்தமர்ந்த சித்தி விநாயகனே!
மூலமாய் இருப்பவரே! முன்வந்து காட்டிடுவாய்!
தம்பியும் நீயும் தரணியிலே ஓரூரில்
தனித்தேர் தன்னில் வீதியுலா வருவீர்கள்!
உன்னைப் பேர்த்தெடுத்த உன்னங்கி தான் கவர்ந்தார்
உள்ளமுருக வேண்டுகிறோம் உன்னடியார் நாங்களெல்லாம்!
இலங்கை இராணுவமும் இந்திய இராணுவமும்
இலக்காக அழித்தொழிக்க அடித்த ஷெல் எதுவும்
எம்மூரில் தாக்காது - எவரையும் அழிக்காது
எமைக் காத்த தெய்வம் நீ! ஏன் ஐயா இந்த மௌனம்?
ஆடிமாதம் பிறந்தாலே அரண்டிடுவார் தமிழரெல்லாம்!
ஓடிஓடி தாம் ஒழித்து உயிர் தப்ப வாழும் வாழ்க்கை
கம்பிவேலி தன்னுள் இன்று கதறுகின்றார் மக்களெல்லாம்
கல்லினுள்ளே இருந்தெமக்கு கருணைபுரி நற் தெய்வம்!
ஊர்விட்டு நாடுவிட்டு வேறு உலகில் இருப்பவன் நான்
ஊனின்றி உறக்கமின்றி உன்னையே துதிக்கின்றேன்!
காட்டிடுவாய் கயவரை, காலமெல்லாம் தாம் செய்த
காருண்யமில்லா களவுதனைக் கண்டிப்பாய்!
காவலாக வந்திங்கு கலி நீக்க கருணைபுரி
காதலின் மிகுதியாலே கதறுகிறேன் காப்பாற்று!
வலக்காலில் துளைத்திட்ட ஷெல்த்துண்டும்
வலக் கையில் ஏறிய அம்பு போன்ற குச்சியும்
என்நெஞ்சில் பாய்ந்த புலிகளின் குண்டினாலும்
எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் செய்தவன்நீ
என்னைக் காக்கும் தெய்வம் நீ என்னுயிரில் உறைபவன் நீ
எம்மூரார் படும் துன்பம் போக்கிட நீ வந்தருள்வாய்!

எமது பிள்ளையார் கோவில் செய்தி - இன்றைய தினக்குரலில் முதற் பக்கத்தலைப்புச் செய்தியாக!


Friday, July 31, 2009

இப்போது கிடைத்த செய்தி - எமது மூளாய் பிள்ளையார் மற்றும் முருகன் கோவில்கள் உடைக்கப்பட்டு கொள்ளை!


நேற்று 30.07.2009 வியாழக்கிழமை இரவு 11.00மணிக்கும் 4.00மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கோவில் கதவு உடைக்கப்பட்டு உள்ளிருந்த சகல விக்கிரகங்களும் பெயர்க்கப்பட்டு இருந்த சகல பெறுமதியான பொருட்களும் நகைகளும் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாக கொழும்பிலிருந்த நண்பர் ஒருவர் அறிவித்தார். உடனடியாகவே ஊருக்கு தொடர்பு கொண்டு சம்பவத்தை ஊர்ஜிதம் செய்த பின்னர் பதிவிலிடுகிறேன். 2 தடவைகள் பொலிசார் வந்து விசாரணைகள் மற்றும் கைரேகைகளைப் பதிவுசெய்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூலஸ்தானத்தில் இருந்த பிள்ளையாருடைய சிலையையும் பெயர்த்து மறுபக்கமாக திருப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்னர்தான் அரசடிச் சந்தியிலிருந்த மற்றும் சுழிபுரம் தபாற்கந்தோருக்கு அண்மையிலிருந்த இராணுவச் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டன. நேற்று யாழ்ப்பாண நகருக்கு இண்மையில் இளம் தம்பதியினர் அலவாங்கால் கொத்திக் கொலைசெய்யப்பட்டு பணம் நகை கொள்ளை என்ற செய்தி பத்திரிகையில் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

Monday, July 13, 2009

எங்கள் ஊர்ப்பிள்ளையார் கோவில் மணவாளக் கோலத் திருவிழா!










படங்களுக்காக விபுலனுக்கு நன்றி!

Saturday, July 4, 2009

மூளாய் வதிரன்புலோ ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த சங்காபிஷேகம் இன்று! (04.07.2009 சனிக்கிழமை)






கடந்த சித்திரை மாதம் நடைபெற்ற திருவிழாக்களின் எடுக்கப்பட்ட சில காட்சிகள்

Saturday, March 28, 2009

மூளாய் அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம்

இந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும், புராண இதிகாசங்கள் பெருமையுடன் எடுத்தியம்பிய, இலங்காபுரி என்னும் அழகுறு தீவின் தலையென விளங்கும் வட திசையாம் யாழ்ப்பாணம் என்னும் அழகுறு நகரில் நீர்வளமும் நிலவளமும் மட்டுமல்ல கலைவளமும் கல்விக்கூடங்களும் கற்றவர் பலரையும் கல்வியில் சிறந்த கனதனவான்களையும் கொண்ட கிராமமாக விளங்கும் “மூளாய்” என்னும் பதியினிலே வதிரன்புலோ என்னும் திவ்விய ஷேத்திரத்தில் அழகு பொழியும் திருவீதிகளுடன் அண்ணனும் தம்பியும் வாழ்ந்தால் இப்படித்தான் வாழ வேண்டும் என எடுத்துக்காட்டாக தம்பிக்கு துணையாக அண்ணனும் அண்ணனுக்குத் துனையாக தம்பியுமாக ஓரே வீதியில் வானளாவ உயர்ந்து நிற்கும் இராஜகோபுரத்துடன் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயமும் அருகில் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி ஆலயமும், இந்தஇரு ஆலயங்களுக்கும் பொதுவான சித்திரத் தேரும் அமையப் பெற்றமை சிறப்புக்குரியதாகும். இப்பதியில் வீற்றிருந்து திருவருள் பாலித்து வரும் எம்பிரான் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முத்துக்குமார சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 30.03.2009 திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறும்.

03.04.2009 வெள்ளிக்கிழமை மாலை சப்பறத் திருவிழா

07.04.2009 செவ்வாய்க்கிழமை காலை தேர்த் திருவிழா

08.04.2009 புதன்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிக்கமும்

09.04.2009 வியாழக்கிழமை மாலை பூங்காவனத் திருவிழா

இவ்வேளையில் நாட்டில் சாந்தியும் சமாதானமும் கிடைக்க எல்லாம்வல்ல முருகப் பெருமானைப் பிரார்த்திப்போமாக.

“மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”

செய்தியை அனுப்பிய கா. பார்த்தீபன் அவர்களுக்கு எமது நன்றிகள்.

Tuesday, August 19, 2008

மூளாய் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பரிபாலன சபை விபரம்

மூளாய் ஸ்ரீ வதிரன்புலோ சித்திவிநாளகர் தேவஸ்தான பரிபாலன சபை விபரம்



தலைவர்-க.செல்வராசா

உப-தலைவர்-ம.சிவசுப்பிரமணியம்

உப-தலைவர்-சி.ஜெந்திரகுமார்

செயலாளர்-வி.தனலிங்கம்

உப-செயலாளர்-க.பாலச்சந்திரன்

பொருளாளர்-மு.முத்துக்குமாரசூரியர்



எனைய பன்னிரண்டு நிர்வாக சபை உறுப்பிணர்கள்

Tuesday, August 12, 2008

2008 மூளாய் பிள்ளையார் கோவில் திருவிழா - 2




2008 மூளாய் பிள்ளையார் கோவில் திருவிழா - 1






எனது சொந்த ஊரான மூளாயில் கோயில் கொண்டிருக்கும் பிள்ளையார் முருகன் கோவில்கள் இரண்டும் அருகருகே இருக்கின்றன. தேரோடும் வெளிவீதி ஒன்றுதான். தேரும் ஒன்றுதான். அண்ணனும் தம்பியும் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்பதற்கு எமது ஊர் ஓர் முன்மாதிரி. இந்த வருடம் 2008 - பிள்ளையார் கோவிலில் (சித்திரைச் சித்திரைக்கு தீர்த்தம் நடைபெறும் - முருகனுக்கு பங்குனி உத்திரத்தில் தீர்த்தம்) நடைபெற்ற திருவிழாக்களின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடுத்து அனுப்பிய தம்பிகள் பார்த்தீபனுக்கும் விபுலனுக்கும் எனது நன்றிகள்.