அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label அறிக்கை. Show all posts
Showing posts with label அறிக்கை. Show all posts

Friday, April 18, 2014

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 13)


எனது அறிக்கைகளும் கடிதங்களும்!

13.02.2003 - பத்தரிகைகளுக்கு அனுப்பியது (எந்தப் பத்திரிகையும் பிரசுரிக்கவில்லை!)

தமிழ் மக்கள் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் சரி இலங்கை முழுவதும் சரி உலகத்தின் எப்பாகத்திலும் சரி யாழ்ப்பாணப் பொதுசன நூல்நிலையம் எரிக்கப்பட்டதை மறந்திருக்க மாட்டார்கள். அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களின் பின்னணியில் காவல் புரிகின்ற பொலிசாரினால் 01.06.1981ல் அந்தக் கோரமான சம்பவம் நடைபெற்றது. ஆனால் அழிக்கப்பட்ட அந்த நூல் நிலையம் பொதுமக்கள் குறிப்பாக யாழ்ப்பாண அறிவு வளர்க்கும் பெருநோக்குடையவர்களுக்காக மீள நிர்மாணம் செய்யப்பட்டு நூலகத்தின் பிற்பகுதி கோலாகலமாக அன்றைய விசேட ஆணையாளர் தலைமையில் 3 வருடங்கள் 3 நாட்களின் பின் 4.6.1984ல் திறந்துவைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் வாசிகசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நூல்நிலையம் பாரிய வளர்ச்சி கண்டிருந்தது. நகர முதல்வராக இருந்த சாம். சபாபதி அவர்களினால் இருமாடிக்கட்டிடம் அமைக்கப்பட வண.பிதா.லோங் அடிகளின் ஆசீர்வாதத்துடன் அத்திவாரமிடப்பட்ட இந்நூலகம் பூர்த்தியாக்கப்படாத நிலையிலே மக்கள் தேவையறிந்து 1959ம் ஆண்டு பிற்பகுதியில் அன்றைய முதல்வர் அல்பிரட் துரையப்பா அவர்களால் குடிபுகப்பெற்று நூலகம் படிப்படியாக பூரணப்படுத்தப் பட்டது. இது வரலாறு.

ஆழ்ந்து நோக்கும் அறிவுத்திறன் கொண்டவர்கள் இன்று எமது சமூகத்தில் இல்லை என்று விமர்சிக்கும் அளவுக்கு 14.02.2003 நாளை நடைபெறவிருந்த நூலகத் திறப்பு விழா திட்டமிட்டு மக்களின் பெயரால் ஒரு சில அமைப்புக்களினால் நிறுத்தப்பட்டள்ளது. இது வரலாற்றில் ஒரு கறைபடிந்த நிகழ்வாக அமையும். யாழ்ப்பாணத்தமிழன் ஒரு காலத்தில் எவரையும் மிஞ்சி நிற்கும் அளவிற்கு அறிவில் உயர்ந்திருந்தான். ஆனால் கடந்த சில ஆண்டுகள் எமது கல்வியின் தரம் எப்படியிருந்தது என்பது சான்றோருக்குத்தான் தெரியும். நூல் நிலையத்தைப் பயன்படுத்துபவர்கள் ஒருபோதும் அது திறக்கப்படுவதை எதிர்க்கமாட்டார்கள். படிக்காத பண்பாடு தெரியாத அறிவில்லாத கூட்டம் ஒன்று இதைச் செய்தது. நூல் நிலையத்தை திறக்கக் கூடாது என்பதில் கங்கணம் கட்டிய வரலாறு என்றும் எமது வாழ்வில் மாறாத வடுவாகவே அமையும்.

தமிழாராய்ச்சி மாநாடு போன்ற சம்பவம் நிகழும் என்றும் ஹர்த்தால் பூரண மறியல் போராட்டம் என்றெல்லாம் எழுதிய குடாநாட்டுத் தமிழ்ப் பத்திரிகைகள் - பத்திரிகை தர்மத்தைக் கடைப்பிடித்திருந்தால் இந்நிகழ்வை மாற்றியமைத்திருக்க முடியும். ஏம்மால் மாநகர சபை உறுப்பினர்களால் கூறப்பட்ட உண்மையான ஆதாரமான கருத்துக்களை சொற்பிழை தவறாது வரிக்குவரி எழுதியிருந்தால் நிலைமை வேறாயிருக்கும்.

பாதுகாக்கப்பட வேண்டிய நல்லூர் சங்கிலியன் தோப்பு மந்திரிமனை யமுனாரியைப் பற்றிப் பல கருத்தக்கள் முன்வைக்கப்பட்டபோதும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரின் நிதி ஒதுக்கீட்டில் இன்று மந்திரிமனை மாத்திரம் மீள பாதுகாக்கப்பட முயற்சிகள் நடக்கின்றன.

தாவீது அடிகளின் உருவப்படம் வைக்கப்பட வேண்டும் எரிந்த நிலையில் இருந்த பழைய நூலகத்தின் மாதிரியை நினைவாக வைக்க வேண்டும் என்று பல தீர்மானங்கள் பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்த பின்னர் எம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவை அங்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பத்திரிகைகளுக்கு தகவல் கொடுப்பவர்கள் முதலில் தமது கருத்துக்களை நூலகருக்கோ அல்லது ஆணையாளருக்கோ அல்லத முதல்வர் மற்றும் உறுப்பினர்களுக்கோ தெரிவித்திருக்கலாம். மேலும் பல மாதங்களுக்கு முன்பாகவே செய்தித் தாள்களில் வெளிவந்த நூலகத் திறப்பு விழா சம்பந்தமான செய்திகளுக்கு இன்று நேரில் வந்த அனைவரும் முன்னரே வந்திருந்தால் இவ்வளவு விரிசல்களையும் நீக்கி இருக்கலாம். காலம் கடந்த விட்டது. கடவுள் விட்ட வழி. இந்தக் காரணங்களில் நாம் கர்த்தர்களாகக் கூடாது என்பதற்காக எமது மாநகரசபை உறுப்பினர்கள் என்ற மக்கள் அளித்த பதவிகளிலிருந்து விலகிக் கொள்கின்றோம்.

நீதி நிலைக்கட்டும்.

தங்க. முகுந்தன். -------------------------

யாழ் பொது நூலக வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்

யாழ் பொது நூல் நிலையம் சம்பந்தமாக வெளிவந்த பத்திரிகை அறிக்கைகள் மற்றும் செய்திகள் கையளிக்கப்பட்ட அல்லது வெளியிட்ட கோரிக்கைகள் பற்றி மாநகர சபை முதல்வரும் உறுப்பினர்களும் பத்திரிகைகளுக்கு கொடுத்த விளக்கங்கள் அறிக்கைகள் முழுமையாக அல்லது பகுதியாக யாழ்ப்பாணப் பத்திரிகைகளிலும் சரி கொழும்பிலும் சரி வெளிவரவில்லை என்பது ஒருபுறமிருக்க குறிப்பிட்ட ஒருசிலரது அறிக்கைகளும் கருத்துக்களும் தொடர்ந்தும் வெளிவந்து தமது நிலையை நியாயப்படுத்திக் கொண்டு இருப்பதுதான் வேதனையை அளிக்கின்றது. இன்று 22.02.2003 உதயனில் 9ம் பக்கத்தில் மாவட்டக் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அறிக்கை படித்த தமிழரையெல்லாம் முட்டாள்களாக்கச் செய்வதுபோலத் தெரிகிறது. இந்தச் செய்திகள் உண்மைச் சம்பவங்கள் பலவற்றை மறைக்கவும் மறக்கவும் ஏதுவாக அமைகிறது. எமது நியாயமான கருத்துக்கள் குறைந்தது நூலகத்தைப் பயன்படுத்தும் வாசகர்களுக்காவது தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக இதனை எழுதவேண்டியவனாக இருக்கின்றேன். நூலகத்தைப் பயன்படுத்தம் வாசகர்களாகிய நீங்கள் உங்கள் சுயமான கருத்தக்களை எனக்கோ அல்லது பிரதான நூலகருக்கோ அல்லது நூலக ஆலோசனைக் குழுவினருக்கோ தெரியப்படுத்தி இந்நூலகம் எவ்வளவு விரைவாகத் திறக்கப் படமுடியுமோ அவ்வளவு விரைவாகத் திறந்த வைக்கப்பட அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். மேலும் இதனை உபயோகப் படுத்துபவர்கள் நல்ல பலனை அடைய வேண்டும் என்பதே எனது உண்மையான ஆதங்கமும் தயவான வேண்டுகோளுமாகும்.

பூரணப் படுத்தப்படாத நிலையில் நூலகம் திறந்து வைக்கப்படுவதால் நூலகத்தின் எதிர்கால பணிகள் கேள்விக்குரியதாகிவிடும் என நினைப்பதே தவறாகும். நூலகம் திறக்கப்படுவது சம்பந்தமாக உதயன் பத்திரிகையில் கடந்த 10.11.2002ன் 12 ஆம் பக்கத்தில் யாழ் பொது நூலகம் எப்போது திறக்கப்படும் எனவும் 16.11.2002ன் 9ம் பக்கத்தில் யாழ் பொது நூலகம் ஜனவரியில் திறப்பு – அமைச்சர் ஜயலத் அறிவிப்பு எனவும் 06.12.2002ன் IIIம் பக்கத்தில் அடுத்த வருடம் ஜனவரியில் யாழ் நூலகம் திறக்கப்படும் அமைச்சர் ஜயலத் கூறுகிறார் என்றும் உள்ளது. இதை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்கள் முன்னரே தமது கருத்தக்களைத் தெரிவித்திருக்கலாம். ஏற்பாடுகள் செய்யப்பட்டு அழைப்பிதழ்கள் அச்சிட்டு திறக்கப்படவிருப்பதற்கு முதல்நாள் வந்து பொதுமக்களின் பெயரால் ஒவ்வொரு அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்ததுதான் விந்தையாயிருக்கிறது. 1974ல் நடந்தது போன்ற இரத்தக்களரி ஒன்று ஏற்படக் கூடாது – கல்விக்குப் பெயர்போன யாழ்ப்பாணத்தில் அப்படிப்பட்ட ஓர் சம்பவம் இடம்பெற்றதாக இருக்கக் கூடாது என்பதற்காகவே நாம் நிகழ்வை இரத்தச் செய்ததுடன் எங்கள் பதவிகளிலிருந்தும் ஒட்டுமொத்தமாக விலகிக்கொண்டோம்.

வாசிக்கும் பழக்கமுடையவர்களுக்குத்தான் நூலகம் தேவை. அதை விடுத்து வீணே கூக்குரலிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தம் மனிதருக்கு கடந்த தினமுரசு 500வது இதழில் காதில பூ கந்தசாமி சொன்னதுபோல "கன்ரீனில போய்க் குந்தியிருந்து அரட்டையடிக்கிறதுதான் உடனடி முக்கியமெண்டு நிக்குதுகள்."

ஆரம்பத்தில் 1959ம் ஆண்டளவில் நூலகத்தில் இடநெருக்கடி காரணமாக மாடியீறாகக் கட்டிமுடிக்கப்படாத நிலையிலேயே அன்றைய மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா குடிபுகும் வைபவத்தை நடாத்தினார். அதன் பின்னர் நூலகம் படிப்படியாகவே பூரணப்படுத்தப் பட்டது. இது இன்றைய இளம் தலைமுறையினருக்குத் தெரியாது.உலகப் புகழ் பெற்ற ஒப்பற்ற எமது உயிர்போன்ற நூலகம் ஆனி 1ம் திகதி இரவு பொலிசாரால் தீயிடப்பட்டது. ஏறத்தாள 97,000 பெறுமதிமிக்க நூல்கள் முற்றாக எரிந்து சாம்பலானது.

வணக்கத்திற்குரிய தாவீது அடிகள் சுவாமி ஞானப்பிரகாசரின் மாணவர் ஒப்பியல் ஆய்வாளர் பொது நூலகம் எரிகிறது என்ற தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்து மாரடைப்பால் உயிர் துறந்தார். புத்தகங்களின் பெறுமதி அவருக்குத் தெரியும் என பாராளுமன்றத்தில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கம் தெரிவித்தார். 04.06.1984ல் மீளளிக்கப்பெற்ற கட்டிடித்தை அவர் திறந்து வைக்கும் போதும் பகுதி பகுதியாகவே நூலகம் இருந்தது. அப்போது விசேட ஆணையாளராக இருந்த திரு. சி.வி.கே. சிவஞானம் அவர்கள் அன்று வெளியிட்ட மலரில் இந்த அழிவைக் கண்டு அசந்து விடாமல் அதையே ஆக்கமாக மாற்றி இந்நூலகத்தை மீளமைக்கவும் மூன்றாம் கட்டமாக மேற்குப்புறமாக இப்பொழுது திறந்து வைக்கப்படும் கட்டடத்தை அமைக்கவும்…… கீழ்த்தளத்தில் வாசிகசாலைப்பகுதி சிறுவர்பகுதி உடனுதவும்பகுதி ஆகியன இடைக்கால ஒழுங்காக 10.12.1982ம் திகதியிலும் 14.07.1983ல் இரவல் கொடுக்கும் பகுதியும் திறந்துவைக்கப்பட்டன….. இப்போது புதிய கட்டடமும் சிறுவர்பகுதியும் திறந்துவைக்கப்படுகின்றன. … இம்முயற்சியில் முக்கிய பங்கு கொண்டவன் என்ற வகையில் நான் மகிழ்ச்சியடைவது போல…. இந்நூல் நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் உரிமையும் இந்த மாநகராட்சி மன்றத்திற்கு உரித்தாகியது பெருமைக்குரியது … என்கிறார். ஆனால் கடந்த 13.02.2003 உதயனில் ஒரு தடவையல்ல இருமுறைகள் யாழ்நூலகம் அழிக்கப்பட்டது என்ற தகவலைத் தெரிவித்து திறப்பு விழாவை ரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரினார்.

16.11.2002 உதயன் 5ம் பக்கத்தில் ஜீ.ஜீ யின் சிலையை நூலகத்தில் நிறுவ அனுமதி கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஆ. விநாயகமூர்த்தி அவர்கள் அதற்கு புலிகளின் ஆலோசனையைப் பெற்றாரா? 13.02.2003 உதயன் 2ம் பக்கத்தில் பத்திரிகை வாயிலாக திறப்புவிழா பற்றி அறிந்ததாக பொய் சொல்கின்றார். அதற்கு 3 மாதங்களுக்கு முன்னர் அவரால் எழுதப்பட்ட மேற்குறிப்பிட்ட கடிதம் ஆவணமாக இருக்கின்றது. நூலகம் திறக்கப்படவிருப்பதால்தானே அமரர் ஜீ.ஜீ யின் சிலை வைப்பதுபற்றி எழுதியிருப்பார். யாரை முட்டாள் என நினைக்கின்றாரோ தெரியவில்லை.

தந்தை செல்வா அறங்காவல் குழு மாநகராட்சி மன்றத்திற்குச் சொந்தமான இடத்தில் அதுவும் பொதுநூலகத்திற்கும் சமாதிக்குமிடையில் முன்னர் விளையாட்டு கிளப்பாக இருந்த இடத்தின் பிற்பகுதி தமக்கரியதெனவும் அதில் தந்தை செல்வா நினைவாக ஓர் நூலகத்தை அமைக்க அந்த இடத்தைத் தமக்கத் தராவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்ததைத் தொடர்ந்து நாம் கூட்டணி உறுப்பினர்கள் இதுபற்றி மாநகர சபைக் கூட்டத்தில் கூறிய கருத்துக்கள் குடாநாட்டுப் பத்திரிகைகளில் வெளிவராததும் கவலைக்குரியதே. அன்றைய கூட்டத்தில் நான் பொதுநூல் நிலையத்துக்கு அருகில் தனது பெயரில் நூலகம் அமைவதை பெரியவரின் ஆத்மாகூட ஏற்றுக்கொள்ளாது எனவும் அத்துடன் அவரது ஆவணங்களையும் அவர் சம்பந்தப்பட்ட சகல விடயங்களையும் தனியாக பொது நூலகத்தில் தந்தை செல்வாவின் பெயரில் ஒரு தனியான பகுதியாக ஏற்படுத்தவதற்கு சபை சகலவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும் தெரிவித்தேன். மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றம் சென்றால் மாநகரசபையால் வழங்கப்பட்ட சமாதி அமைந்திருக்கும் பகுதியை மாநகர சபையே பொறுப்பெடுத்தச் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் கூறினேன்.

பத்திரிகைகள் தமது பத்திரிகை தர்மத்தை சரியாகக் கைக்கொள்ளவில்லை என்றும் நீதியாக நடக்கவில்லை என்றும் பகிரங்கமாகவே தெரிவிக்கின்றேன். இதைப்பற்றி கடந்த 13.02.2003ல் மாநகரசபையில் குடாநாட்டுப் பத்திரிகைகளின் நிருபர்களுடனும் கடந்த 16.02.2003ல் யாழ் தினக்குரல் பத்திரிகை ஆசிரியர் பீடத்தினருடனும் வாதப்பட்டதை யாரும் அறிய மாட்டார்கள். பத்திரிகைகள் நாம் கொடுத்த சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையின் 8 முக்கிய குறிப்புக்களுக்கான விளக்கங்களை பிரசுரித்திரித்திருக்கலாம். பத்திரிகையாளர் மாநாட்டில் நான் கூறியதுபோல யாராவது நூலகத்தை திறக்காமல் செய்வதற்கு ஏதேனும் விபரீதங்களை ஏற்படுத்துவார்கள் என எச்சரித்திருந்தேன். அதேபோல 12ஆந் திகதி நள்ளிரவு நூலகத் திறப்புக்கள் அபகரிக்கப்பட்டன. நடந்தது என்ன? 1981ல் நூலகத்தை தீக்கிரையாக்கிய இலங்கைப் பொலிசார் யாழ்ப்பாணத் தமிழர்களில் ஒருசிலரிடமிருந்து நூலகத்தைப் பாதுகாக்க காவலிருந்ததுதான். இவர்களுடன் இராணுவமும் இணைந்ததும் குறிப்பிடத் தக்கது. இதனை யாரிடம் கூறுவது?

14.02.2003 வீரகேசரி முற்பக்கத் தலைப்புச் செய்தியில் என்னையும் முதல்வரையும் விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் இளம்பரிதியையும் தொடர்புபடுத்தி பூட்டிய அறைக்குள் சில நிமிட நேரம் உரையாடினர் என்று செய்தி வெளியிட்டது. தொடர்ந்து முதல்வர் கூறியதாக த ஐலன்ட் பத்திரிகையும்(17.02.2003) தினமுரசும் செய்திகளை வெளியிட்டுள்ளன.

நூலகத்தின் மேல் எனக்கு தீராத பற்று இருக்கிறது. மாநகரசபை உறுப்பினர்களில் எத்தனைபேருக்கு வாசிக்கும் பழக்கம் இருக்கிறதோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்கு சிறுவயதிலிருந்தே அந்தப் பழக்கம் இருப்பதுடன் எரிக்கப்பட்ட பெரிய நூல்நிலையத்தில் 1981க்கு முன்னரே அம்புலிமாமா நட்சத்திரமாமா போன்ற புத்தகங்களை வாசித்தவன் என்ற வகையிலும் நூலகத்தின் அருகிலிருந்த சுப்பிரமணியம் பூங்காவில் விளையாடியவன் என்ற ரீதியிலும் எனக்கு இவை மீண்டும் இருந்ததுபோல உடனேயே கட்டப்பட வேண்டும் என்ற ஆதங்கம் உண்டு. இதை நான் எமது மாநகரசபை பொன் விழா மலரின் வாழ்த்துச் செய்தியில் - மீண்டும் யாழ் நகர் தனது பழைய பொலிவைப் பெற்றால் அந்த மன நிறைவை நீண்ட நாட்கனவை அடையும் ஒருவனாக நானும் இருப்பேன். கனவு நனவாவது காலத்தின் கடமை. நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற மூலரின் மந்திரத்தை தெய்வம்தான் நிலைநிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டதை நினைவுபடுத்துவது பொருந்தம் என நினைக்கின்றேன்.

நூலக வாசகர்கள் முடிந்தால்

யாழ்ப்பாண பொதுநூலகம் மீளளிக்கப்பெற்ற கட்டடத் திறப்பு விழா மலர், யாழ்ப்பாணப் பொது நூலகம் ஒரு வரலாற்றுத் தொகுப்பு, மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது என்ற புத்தகங்களை வாசித்தால் எமது நூல் நிலையத்தின் முன்னைய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்.

இன்று நூலகக் கட்டடத்தைப் பார்க்கும் எந்த ஒரு பாமரனும் கட்டி முடிக்கப்படாத கட்டடம் என்று சொல்ல மாட்டான். அப்படிச் சொன்னால் அது முட்டாள்தனமானதாகும். அப்படியானால் பிரான்ஸ் நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நூலகத்துக்கு வழங்கிய ஒரு தொகுதி நால்களை தற்பொழுது யாழ் கச்சேரிக்கு முன்னர் இயங்கும் பொது நூலகத்தில் அல்லது நல்லூரிலுள்ள மாநகர சபை அலுவலகத்தில் வைத்தே வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவர் புதிய கட்டடத்திலேயே வழங்கினார். பத்திரிகைகளும் இதைப் படம்பிடித்து செய்திகள் வெளியிட்டிருந்தன. அதே பத்திரிகைகள் கட்டடத்தின் உட்பகுதியை அழகாகப் படம் எடுத்துப் பிரசுரித்திருக்கலாம். பத்திரிகைகள் இந்த விடயத்தில் நீதியாக – நடுநிலையாகச் செயற்பட்டிருந்தால் மறுப்பறிக்கைகள் வருவது நின்றிருக்கும். அத்துடன் நூலகத்தையும் திறந்து வைத்திருக்கலாம். ஆனால் எல்லாம் தலைகீழாக நடந்து முடிந்துவிட்டது. வரலாற்றில் கறைபடிந்த ஒரு நிகழ்வாக பொது நூல்நிலையத் திறப்புவிழா அமைந்து விட்டது. கல்வியறிவற்ற – பண்பாடு தெரியாத ஒரு கூட்டத்தின் கங்கணம் கட்டிய வரலாறு மாறாத உட்காயமாக அமையும். இவற்றையெல்லாம் தீர்க்கதரிசனத்தால் அறிந்தோ என்னவோ தந்தை செல்வா தமிழரைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நூலகம் எப்போது திறக்கப்படும் என ஏங்கும்

தங்க. முகுந்தன். முன்னாள் மாநகர சபை உறுப்பினன் தமிழர் விடுதலைக் கூட்டணி தந்தை செல்வா அகம் 57/48 ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம். 22.02.2003

------------------------------------

அமெரிக்கத் தகவல் நூலகமும் யாழ்ப்பாணப் பொதுசன நூலகமும் ஒன்று கலந்தமையையும் - அறிவுத் திறமைக்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஸ்தாபிதமும் சிறப்பான பலனைக் கொடுத்திருக்கிறது. இன்றும் தொடர்கிறது. அமெரிக்க யாழ்ப்பாண நட்புறவு 140 ஆண்டுகளுக்கு மேலாக வந்த தொடர்பை மூதறிஞர் க. சி. குலரத்தினம் ஐயா அவர்கள் யாழ்ப்பாண நூல் நிலையம் என்ற நூலில் மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார்.வீணாக அழிவைப்பற்றி எண்ணாது – ஆக்க பூர்வ அறிவின் அடிப்படையில் நோக்கும்போது அன்றைய அமெரிக்க ஸ்தானிகர் 104,000 ரூபாவையும் பின்னர் 1966ல் 11,000 ரூபாவையும் வழங்கியிருந்தார். இதைவிட இந்திய அரசும் பிரித்தானிய அரசும் கூடவே நன்கொடையளித்திருந்தன.எனவே யாழ்ப்பாண நூலக விடயத்தில் அனாவசியமான அரசியல் தலையீடுகளைத் தவிர்த்து அறிவு பூர்வமாக சிந்தித்து செயற்படுவதே சிறந்தது. இன்று யாழ் பொது நூலகம் கணனி மயப்படுத்தப்பட்டு புதுப்பொலிவுடன் செயற்படுவதுடன் தொடர்ந்தும் நவீன வசதிகளைப் பெறவும் வளரும் விஞ்ஞான தொழில்நுட்ப அறிவினை யாழ்ப்பாணத்திலும் ஊன்றச் செய்யும் நடவடிக்கையை ஊக்கம் அளித்து வெறுமனே கொழும்பில் மட்டும் எல்லா வசதிகளும் இருக்கின்றது என்ற நிலையை மாற்றி சகல பகுதிகளிலும் நவீனம் ஊடுருவ வகை செய்ய வேண்டும். இதுவே இன்றைய அறிவுத் தேவையாகும். இன்று இந்நாட்டில் சிங்களப் பகுதிகளில் இருக்கும் வசதிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணமோ அல்லது வவுனியா திருமலை மட்டக்களப்பு பகுதிகள் சரி கொழும்பு காலி மொரட்டுவை பேராதனை இறாகம போன்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் எந்த அளவு என்பதை நோக்கலாம். (இது ஒரு சிறு குறிப்பாக எழுதி 2003.02.22 அறிக்கையுடன் இணைத்து அனுப்பப்பட்டது.)

---------------------------------------

இந்த அறிக்கையை அனைத்துப் பத்திரிகைகளுக்கு கொடுத்திருந்தும் தினமுரசு மாத்திரம் தனது 502வது இதழில் யாழ் நூலகத் திறப்பு விழாச் சர்ச்சை – உண்மைகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டன – தங்க. முகுந்தன் யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் - (TULF) என்ற தலைப்பிட்டு திறப்புவிழா அழைப்பிதழையும் அக்கட்டுரையுடன் பிரசுரித்தது.அவர்களுக்கு 08.03.2003ல் எழுதிய கடிதம்

ஆசிரியர், தினமுரசு, கொழும்பு.

அன்புடையீர்,

வணக்கம். தங்களின் 502வது இதழில் எனது யாழ் பொது நூலக வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் என்ற அறிக்கையைப் பிரசுரித்திருந்தீர்கள். நன்றி. உண்மைகள் என்றோ ஒருநாள் வெளிவரும் என்பதைத் தங்கள் பத்திரிகை மூலம் உலகிற்கு எடுத்துக் காட்டியமைக்கு எனது இதய பூர்வமான நன்றிகளை மீண்டும் தெரிவித்துக்கொண்டு கடந்த இதழில் என்னால் குறிப்பிடப்பட்ட அறிக்கையின் இறுதிப் பந்தியில் ஒரு விடயம் தவறானது என்பதைச் சுட்டிக்காட்டுவதுடன் அதைப்பற்றி யாரும் வாசகர்கள் குறைப்படுவதற்கு முன்னர் நானே ஒத்துக்கொள்வது அழகாகும் என்பதற்காக இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகின்றேன். தயவுசெய்து பிரசுரிக்கும் வண்ணம் அன்புடன் வேண்டுகிறேன்.

அப்படியானால் பிரான்ஸ் நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நூலகத்துக்கு வழங்கிய ஒரு தொகுதி நால்களை தற்பொழுது யாழ் கச்சேரிக்கு முன்னர் இயங்கும் பொது நூலகத்தில் அல்லது நல்லூரிலுள்ள மாநகர சபை அலுவலகத்தில் வைத்தே வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவர் புதிய கட்டடத்திலேயே வழங்கினார் என்றிருப்பது தவறு.

ஏனெனில் அன்று 11ந்திகதி. முதல்நாள் 10.02.2003 திங்கள் புதிய நூலகத்தில் வைத்தே இந்நிகழ்வு இடம்பெறும் என எமக்குக் கூறப்பட்டது. ஆனால் பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் புத்தகக் கண்காட்சி ஒன்று நடத்த வேண்டும் எனவும் தாம் புத்தகங்கள் வழங்கும்போது நூலகத்தில் தமதுநாட்டுக் கொடி பறக்கவிடப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டதைத் தொடர்ந்து திறப்பு விழாவுக்கு முன் புதிய கட்டடத்தில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்பதற்காக கச்சேரியடி பொதுநூலகத்துக்கு முதல்வரால் இப்புத்தகக் கையளிப்பு மாற்றப்பட்டதும் இதனால் பிரான்ஸ் தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் முகம் சுழித்தார்கள் என்பதும் எனக்கு நேற்று 07.03.2003 எமது மாநகர சபை உத்தியோகத்தர்கள் கூறித்தான் தெரியும். ஏனெனில் சென்ற மாதம் 10ந்திகதி நண்பகலில் இருந்தே திறப்பு விழா குறித்த நெருக்கடிகள் எமக்குப் பெரிதும் தலையிடியாக இருந்தமையே. இதனால் பத்திரிகைகளைக் கவனமாக வாசிக்காமல் மேலோட்டமாக பார்த்தமையால் ஏற்பட்ட தவறு என்று கூறவேண்டியவனாகின்றேன். இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் குடாநாட்டுப் பத்திரிகைகளும் படங்களில் விளக்கமாகக் குறிப்பிடவில்லை. அருகருகே இருபடங்களில் குறிப்பிட்ட நபர்களை மட்டும் பிரசுரித்தபொழுது அவை வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்டிருக்கும் என நான் அறிய முடியாது போய்விட்டது. எனவே இதனால் ஏற்பட்ட தவறான செய்திக்கு எனது மனம் வருந்துகிறேன்.

தயவுசெய்து மன்னிக்கவும். நன்றி. தங்களுண்மையுள்ள தங்க. முகுந்தன்.

----------------------

25.03.2003.

அதிஉத்தம இந்திய ஸ்தானிகர் ஸ்ரீ நிரூபம் சென் அவர்களே!

தங்களுக்கு முதலில் எனது இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொண்டு இந்தக் கடிதத்தை எழுதத் தொடங்குகின்றேன்.

தாங்கள் - தங்கள் அரசு – எனது கட்சியின் தலைவர் தனது பேச்சின்போது குறிப்பிட்டவாறு எமது தாய்நாட்டைப் பிரதிநிதிப்படுத்தபவர்கள. எமது மாநகர சபை நிர்வாகத்திற்குப் பொறுப்பாக ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட சபையின் அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு சம்பிரதாயத்தினை தாயின் ஸ்தானத்திலிருந்து அந்த சம்பவத்தை உயிரூட்டி எமக்கு நூலகத் திறப்பு விழா நடைபெற்றிருந்தால் ஏற்படும் மகிழ்வைக் காட்டிலும் கூடிய மன நிறைவை அளிக்கத் தக்கதாக நேற்றைய நிகழ்வை ஏற்படுத்தியமைக்கு எமது சபையினர் சார்பாக, யாழ் மாநகரத்தில் நேர்மையையும் தர்மத்தையும் கைக்கொண்டுவாழும் மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகின்றேன். முதல்வர் அவர்கள் பேசுகையில் அவர் கண்ணீர் சிந்தினார். ஆந்த நிகழ்வு முடிவடைந்ததும் இயற்கையும் கண்ணீர் சிந்தியது. நடப்பவை எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. தூங்கள் தங்கள் பேச்சின்போது மகாகவி பாரதியாரையும் சோமசுந்தரப் புலவர் துரையப்பாபிள்ளை போன்ற பலரையும் நினைவுபடுத்தியிருந்தீர்கள். நான் கல்விகற்ற தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியைத் ஸ்தாபித்தவர் துரையப்பாபிள்ளை அவர்கள். எமது கல்லூரிக் கீதம் இந்திய நாட்டின் தேசிய கீதத்தின் மெட்டிலமைந்தது. இந்திய நாட்டின் மீதும் இந்திய தேசபிதா மகாத்மா மீதும் நான் உயிரையே வைத்திருப்பவன். குhந்தி ஆங்கில திரைப்படத்தை குறைந்தது 20 தடவைகளுக்கு மேல் பார்த்துவிட்டேன். தோடர்ந்தும் பார்க்க ஆவலாயுள்ளேன்.

எமது காலத்தில் (கடந்த 5 வருடங்களில்) இணர்டு முதல்வர்களையும் ஒரு உறுப்பினரையும் இழந்து மிகவும் ஒரு அசாதாரண நிலையில் பல்வேறு விமர்சனங்களக்கு மத்தியில் பலர் உயிருக்குப் பயந்து பதவி விலகிய நேரத்தில் துணிந்து சபையை நடத்தியதுடன் அழிந்த நிலையிலிருந்த பொது நூலகத்தை மீளக் கட்டி எழுப்பப்பட்ட அந்த காலத்தில் நாம் செய்த சேவை நியாயமானது என்ற அறத்தை மெய்ப்பித்த இந்திய அரசின் தீர்க்க தரிசனத்தை நாம் மனதாரப் போற்றுகின்றோம்.

பொது நூலகத்தின் வரலாற்றில் இந்தியாவுக்கு முக்கிய பங்குண்டு. 1952ம் ஆண்டில் டெல்லிப் பல்கலைக் கழகத்து நூலகர் பேராசிரியர் கலாநிதி எஸ். ஆர். ரங்கநாதன் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்து நூலக ஆரம்பப் பணிகளுக்கு கலந்துரையாடலைச் செய்தவர் வணக்கத்திற்குரிய பாதிரியார் லோங் அடிகள். அதேபோல முற்றவெளியில் கட்டடம் கட்டுவதை இடம்பார்த்து ஆமோதித்தவர் தமிழ்நாட்டுக் கட்டடக்கலை நிபுணர் நரசிம்மன் அவர்கள். இவர்களுக்கு மேலாக 29.05.1954ல் நகரபிதா சாம். சுபாபதி, வண. லோங் பிதா, பிரித்தானிய தூதுவர் செசில் சையேஸ், அமெரிக்கத் தூதுவர் பிலிப் குறோஸ், இந்தியத் தூதுவரின் முதற்காரியதரிசி சித்தார்த்த சாரி ஆகிய ஐவரும் அடிக்கல் நாட்டி வைத்ததும் இந்திய அரசின் நன்கொடையாக அன்றைய தினம் ரூபா 10,000.00 அன்பளிப்புச் செய்யப்பட்டதும் வரலாறு.

அந்த அடிப்படையில் இன்றைய நூலஇகள் வழங்கும் வைபவமும் வரலாறாகிவிட்டது. எமது வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமாக மனநிறைவை அளித்த விழாவாக இதை நான் நோக்குகின்றேன். 14.02.2003ல் திறக்கப்படவிருந்த நூலகத்திற்கு பங்காளியாக இருந்த எம்மை நேற்றைய விழாவில் முதன்மைப் படுத்தி கௌரவித்தமைக்காக எமது மனம் நிறைந்த நன்றிகளை மீண்டும் தெரிவித்து இதனை நிறைவு செய்கின்றேன். நன்றி. வணக்கம்.

என்றும் உண்மையுள்ள, தங்க. முகுந்தன் - முன்னாள் மாநகர சபை உறுப்பினன் - யாழ்ப்பாணம்.

குறிப்பு – 1. யாழ் பொது நூலகத்துக்கு பல அரிய நூல்களை அன்பளிப்பாக வழங்க முதல்வர் எம். ஜி. ஆர் ஏற்பாடு(ஈழநாடு 12.10.1981)

2. From India – With Love (Saturday Review Sri Lanka 1985-7-6)

3. யாழ் நூலகத்துக்கு இந்திய மத்திய, தமிழக அரசு நூல்கள் அன்பளிப்பு (வீரகேசரி 18.01.1998)

------------------

27.03.2003. (This ist he actual translation of the letter dated on 25.03.2003)

His Excellency Nirupam Sen, The High Commissioner of India in Sri Lanka, No. 36 - 38, Galle Road, Colombo -3.

Your Excellency,

I wish to express my sincere and heartiest gratitude to you at the very outset of addressing this letter to you.

As stated by our Leader Mr. V. Anandasangaree, MP during his speech, We endorse that Your Excellency and Your esteemed Nation are representing our motherland. I also tp avail of this opportunity to express my sincere thanks to you once again on behalf of the Jaffna Municipal Council and the people of Jaffna who lead a sincere life honesty and integrity for having come forward to conduct a unique function yesterday(24.03.2003) thus providing better mental satisfaction to all of us who were elected democratically for the administration of the Jaffna Municipal Council, than conducting the opening of the Library with your intervention in the capacity of Maternal Capacity, When our genuine attempts to open the Library were suppressed and oppressed.

When our former Mayor of the Jaffna Municipal Council delivered his speech he was moved by emotion thus could not control himself of shedding of tears. Immediately on conclusion of the function, nature too started shedding tears as per sayings of greatman, everything would conclude favourably.

During Your Excellency`s speech you called `Mahakavi Bharathi`, `Somasundarappulavar`Thuraiyappapillai`and others of this category. The Tellippalai Mahajana College, where I was educated was established by Thuraiyappapillai. I am proud to mention that our College anthem rhythms similar to that of Indian National Anthem.

It is indeed not an exaggeration to mention at this function that I love Mother India and Mahathma Gandhiji, the National Father of the Indian Nation more than my life. Through such love I had seen the English film Gandhi more than 20 times and still anxious to see that film more and more.

During our tenure of office as MMC, we lost two Mayors one after the other and a Member under tragic circumstances and when number of Members left their Membership due to uncertain and fear of adverse consequences, we stood steadfastly and continued the function of the Jaffna MC and engaged ourselves unremittingly to reconstruct the Library Building. We really appreciate the gesture of the farsightedness of the Indian Government in justifying our relenting service. In the history of the Jaffna Library, India has a prominent contribution. During the year 1952 Prof. Dr. S R Ranganathan, Librarian of the Delhi University came to Jaffna and conduct a Seminar regarding preliminary Library service. Similarly Rev. Fr. Long too identified the location fort he constuction of the Library at the Jaffna Esplanade. Apart from the foregoing facts the Tamil Nadu Architect Mr. Narasimman joined. His Lordship the Mayor of Jaffna Sam Sabapathy, Rev. Fr. Long, His Excellency Sisil Cyes the HC of Gt. Britain, His Excellency Phillip Cross the Ambassador of USA, Shri Siththartha Shari the First Secretary of Indian High Commission jointly laid the foundation stone and the contribution of Rs. 10,000.00 made by the Indian Govt. is also a significant historical event.

It is on this basis the donation of books to the Library by the Indian Govt. also was become a historical event.

I observe this occasion as an unforgettable event which has brought great contentment. We who were expected to be the participants of the opening of the Library scheduled to be held on 14.02.2003, have been provided prominence at the function and for which kind gesture I once again express my whole hearted gratitude and wish to conclude this letter.

Thanking you,

Yours truly,

Thanga. Mukunthan.Ex. MMC Jaffna.

Note 1. Arrangements of the CM, MGR to donate number of rare lot of books(Elanadu 12.10.1981)

2. From India with Love (Saturday Review, Sri Lanka 06.07.1985)

3. Donation of Books to Jaffna Library by the Central Govt. of India and the Govt. of Tamil Nadu(Veerakesari 18.01.1998)

--------------------

4.7.2003

சக்தியின் தேடலில் இன்று 4-7-2003 இரவு 8.00மணி தமிழிலும் 9.00 மணி ஆங்கிலத்திலும் வெளிவந்த செய்தி யாழ். நூலகம் பற்றியது.

திறப்பு விழாவுக்கு கொழும்பிலிருந்து செய்தி சேகரிக்க வந்த தங்கள் ஒளிப்பதிவுக் கூடத்தைச் சேர்ந்தவர்கள் அன்றைய தினம் 14.02.2003 நூலகத்தையும் உறுப்பினர்கள் விளக்கமளித்த பின் இராஜினாமாச் செய்த செய்திகள் மக்கள் அபிப்பிராயம் என்பவற்றை விரிவாகச் சேகரித்தார்கள்.

மேல்நாட்டுமுறைப்படி நாம் ஒருபோதும் திறப்புவிழா செய்வது கிடையாது. குடிபுகுதல் பால் காய்ச்சுதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்ற பின்பே திறப்புவிழா இடம்பெறுவது வழக்கம். நூலகப் பிரதேசம் உள்ளேயும் வெளியேயும் வாஸ்து சாந்தி செய்யப்பட்ட பின்பே திறப்புவிழா நடாத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நானும் ஒரு ஏற்பாட்டுக் குழுவில் அங்கம் வகித்தேன்.

தொடர்ந்து நூலகம் பற்றிய அலசல் ஒளி பரப்ப ஏற்பாடு செய்தால் தயவுசெய்து எமது கருத்தையும் நீங்கள் ஏற்க வேண்டும். என்னால் எழுதப்பட்ட ஓர் அறிக்கையை இத்தடன் இணைத்துள்ளேன். இதில் ஒருசில பகுதிகள் தவிர்த்து தினமுரசு மட்டும் செய்தியைப் பிரசுரித்தது குறிப்பிடத் தக்கது. நன்றி உண்மையுள்ள தங்க. முகுந்தன்.

--------------------

27.10.2003

செய்தி

காலம் கடந்த நிலையில் எல்லோரும் மறந்த சிலரால் மறைக்கப்பட்ட செய்தியை மீண்டும் கிளற வேண்டிய கட்டாய நிலை – வாசிக்கும் பழக்கத்தையுடைய எனக்கு ஏற்படுத்தியுள்ளது. காரணம்இன்று யாழ் நூலகத்தைப் பற்றி எவரும் அக்கறைப்படாததே. துற்போது இந்த நூலகத்தைப் பயன்படுத்தாமலிருப்பதனால் அதற்கு கிடைக்க இருக்கின்ற அரச சார் பற்ற நிறுவனங்களின் மேலதிகமான உதவிகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக யுனெஸ்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக நான் அறியக் கூடியதாக இருக்கிறது. சுங்கங்கள் நடத்துவோரும் அறிக்கைகள் விடுத்தோரும் இன்று சும்மா இருப்பதால் நாம் 14.02.2003ல் எந்த வேலைகளை முன்னெடுக்க திறப்பு விழாவை நடாத்த இருந்தோமோ அவையெல்லாம் நிறைவேறிய(யாருக்கும் தெரியாமல் குடிபுகுதல் வாஸ்து சாந்தி என்பன ) பின்னரும் நூலகம் திறக்கப்படாமலிருப்பதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே மாநகர சபை நிர்வாகம் இயங்கிய வேளையில் திறக்கப்படவிருந்த நிகழ்வை தடுத்துநிறுத்திய பெருமையுடையவர்கள் இனியாகிலும் பூட்டப்பட்டிருக்கின்ற நூலகத்தைத் திறந்து மாணவர்களின் அறிவை விருத்தி செய்ய முன்வரவேண்டும் என வேண்டுகின்றேன். வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகின்றான் என்பது ஆன்றோர் வாக்கு. முன்னர் மில்க்வைற் அதிபர் அமரர் க. கனகராசா அவர்கள் இலவசமாக நூல் நிலையங்களுக்கு அன்பளிப்பாக வழங்கியது. இவ்வார்த்தைகளடங்கிய அட்டை இன்றும் எமது ஊரிலுள்ள (என்னால் ஓரிரு வருடங்கள் தலைவராகவும் செயலாளராகவும் பொறுப்பிலிருந்த இந்து இளைஞர் மன்றத்தினால் பரிபாலிக்கப்பட்டுவரும் மூளாய் இந்து இளைஞர் மன்ற) நூலகத்தில் இருப்பதை நினைவுபடுத்தி - பூரணமான மனித சமுதாயம் தோன்ற வழி ஏற்படுத்த கல்வியறிவை வளர்க்கும் பணியிலீடுபட்டவர்கள் முன்வரவேண்டும் என கல்விக்கு ஏற்றம் கொடுத்த யாழ்ப்பாணச் சமூகத்தின் சார்பில் தயவாகக் கேட்டுக்கொள்ளுகின்றேன். நூலக ஆலோசனைக் குழுவினரும் இந்த விடயத்தை துரிதமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் எனவும் தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.

செய்தி ஊடகங்கள் சம்பந்தமாக சில தகவல்களையும் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது.

1. பொதுவாகவே பல செய்தி ஊடகங்கள் கடந்த வருடம் தொடக்கமே நூலகத் திறப்பு விழா சம்பந்தமாக செய்திகளை வெளியிட்டன. குறிப்பாக வீரகேசரி 25.08.2002 யாழ் தீபம் என்ற சிறப்பு வெளியீட்டில் (திறப்பு விழாவுக்கு சுமார் 6 மாதங்களுக்கு முன்னரே) அழகுற புனரமைக்கப்பட்டிருக்கும் யாழ் நூலகம் அன்றுவரை திறக்கப்படாதது ஏன்? ஏப்போதுதான் திறக்கப்படுமோ? ஏன்று அழகான படத்துடன் செய்தி வெளியிட்டுவிட்டு 30.03.2003 ஞாயிறு வீரகேசரி வெளியீட்டின் முற்பகுதியில் புனரமைக்கப்பட்டு திறக்கப்படாதுள்ள யாழ் நூலகத்தின் உட்பக்க தூண்களில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பதையும் நூலகத்தின் வெளிப்புற வேலைகள் பூர்த்தியடையாது இருப்பதையும் படங்களில் காணலாம் என்றும் படத்துடன் செய்தி வெளியிட்டிருக்கின்றது. மீண்டும் 28.06.2003ல் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட யாழ் நூலகத்திற்கு முன்னால் தமிழ் மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளில் செல்வதை படத்தில் காணலாம். இரண்டு தசாப்த காலத்திற்கு முன்னர் அழிக்கப்பட்ட இந்நூலகத்தைத் திறப்பதற்கு யாழ்ப்பாணம் மீண்டும் தயாராகின்றது என்றும் எழுதியது.

2. 22.05.2001ல் நடைபெற்ற நூலக ஆலோசனைக்குழு அறிக்கையில் பிரதம பொறியியலாளர் 80மூமான வேலைகள் முடிவடைந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். கூட்டம் திறப்பு விழாவுக்கு முன்னர் சுமார் 9 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றிருப்பதை அவதானிக்கவும். ஊங்களிடம் யாழ்ப்பாண மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம், சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை என்பவற்றின் அறிக்கைகள் இருக்கும் என எண்ணுகின்றேன். இல்லாவிட்டால் என்னிடத்தில் இவற்றின் பிரதிகள் உண்டு.

3. சக்தி தொலைக் காட்சியில் 04.07.2003 இரவு செய்தியின் நடுவில் வெளிவந்த யாழ் நூலகம் பற்றிய தேடுதல் நிகழ்வைக் கண்ணுற்றபின்னர் எழுதிய கடிதத்தின் பிரதியையும் இணைத்தள்ளேன்.

4. எனது இராஜினாமாக் கடிதம் 13.02.2003 திகதியிட்டு 14.02.2003 நண்பகலில் ஆணையாளருக்கும் தேர்தல்கள் அலுவல்கள் யாழ்ப்பாண அலுவலகத்திற்கும் சென்று நேரில் கையளித்தேன்.

5. என்னால் சகல பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்களில் தினமுரசு பத்திரிகையும் ஒரு சில விடயங்களை மாத்திரம் தவிர்த்தும், வலம்புரி பத்திரிகை கால்பங்கினையும் மாத்திரம் பிரசுரித்தன. சகல பத்திரிகைகளுக்கும் அனுப்பியிருந்தும் பிரசுரிக்காமை வருத்தத்திற்குரியதே. அத்துடன் முன்னர் அனுப்பிய கடிதப்பிரதிகள் தேவையாயின் 2347721 என்ற தொலைபேசியுடன் தொடர்புகொள்ளவும்.

பிரதிகள் - 1. வீரகேசரி, 2. தினக்குரல், 3. தினகரன், 4 . சுடர்ஒளி, 5. தினமுரசு, 6. வலம்புரி, 7. நமது ஈழநாடு, 8. உதயன், 9. யாழ் தினக்குரல், 10. சக்தி ஒலிபரப்பு, 11. சக்தி ஒளிபரப்பு, 12. சூரியன் ஒலிபரப்பு.

Sunday, May 16, 2010

திரு. ஆனந்தசங்கரி அவர்களின் பொதுத்தேர்தல் சம்பந்தமான அறிக்கை!

முகவுரை

தனது தேர்தல் தோல்வியினால் ஏமாற்றமடைந்திருக்கும் வாக்காளர்களுக்கு திருப்தியளிக்கக்கூடிய நியாயபூர்வமான காரணங்களை கண்டுபிடிக்க அங்கலாய்க்கும் ஓர் வேட்பாளரின் உள்ளக் குமுறல் அல்ல, தனது நாட்டுக்கும் அதில் வாழும் மக்களுக்கும் அரை நூற்றாண்டுக்கு மேல் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒரு மனிதனின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதே இது.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களும் சில அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் ஆகியவற்றை சேர்ந்த வேட்பாளர்களும் செய்த பொய்யானதும், குரோதமானதுமான பிரச்சாரத்தினால் வாக்காளர்களின் உள்ளங்களில் ஏற்படுத்தப்பட்ட தவறான அபிப்பிராயங்களை நீக்கும் விபரக் குறிப்பாகவே இது வெளிவருகிறது. சில ஆசனங்களை எடுப்பதற்காக அல்லது வேறு கட்சியிலும் பார்க்க கூடுதலான ஆசனங்கள் எடுக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை சுயநலத்துடனும், புத்திசாதுரியமற்ற முறையிலும் செயற்படாது, புத்திசாலித்தனமாகவும் கவனமாகவும் செயற்பட்டிருந்தால் இன்று நிலைமை முற்று முழுதும் வேறாக அமைந்திருக்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முழு அக்கறையும் என்னை தோற்கடிப்பதிலேயே இருக்க முழுப்பிரச்சாரத்தோடு வெட்கப்படக்கூடிய வகையில் பணத்தையும், மதுவையும் தாராளமாக வழங்கி தாம் நினைத்ததை திருப்தியாக சாதித்தனர். எனது 50 வருட அரசியல் வாழ்வில் நான் எதிர்கொண்ட 15 இற்கு மேற்பட்டஉள்ளுர் பாராளுமன்ற தேர்தல்கள் எதிலும் பணமோ, பானமோ தலைகாட்டவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை தோற்கடிக்கவென பெரும் தொகை பணத்தை என்னிடம் அரசு தந்து பிரச்சாரத்துக்கு செலவிட வைத்ததாக அதன் வேட்பாளர்கள் வெட்கமின்றி கூறி கண்ணியமற்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இது சம்பந்தமாக துண்டு பிரசுரங்களும் விநியோகித்திருந்தனர். அரசு சார்பில் போட்டியிட்டவர்களுக்கு அசாதாரணமாக பலவித உதவிகளை செய்தமை பற்றி அறிந்திருந்தும் பொது மக்களால் இதுபற்றி விளங்கிக் கொள்ள முடியவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களில் அநேகர் புதுமுகங்கள். அநேகர் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தும் பல்வேறு பின்னணியை கொண்டவர்களாக இருந்ததோடு பண பலம் கொண்டவர்களாகவும் இருந்தனர். ஆனால் என்னுடன் பல ஆண்டுகள் சகபாடியாகவும், நான் தலைமை தாங்கும் கட்சியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக திரு. சம்பந்தன் அவர்கள் என் நேர்மை பற்றியும், நாணயம் பற்றியும் நன்கு அறிவார். ஆனாலும் அவர் என் பக்கம் பேசமாட்டார். ஏனெனில் அவரும் திரு.அ. விநாயகமூர்த்தி அவர்களுமே நான் ஆனையிறவு முகாமை அரச படைகளிடம் மீள் அளிக்க உதவுமாறு புலிகளிடம் கோழ் சொன்னவர்களாவர். இவர்களிடம் பெற்றுக்கொண்டதை வைத்தே விடுதலைப் புலிகள் பல ஆண்டுகளாக தமது ஊடகங்கள் மூலமும், தமது கட்டுப்பாட்டிலிருந்த பல்வேறு நாட்டு ஊடகங்கள் மூலமும் எனக்கு எதிரான விஷமத்தனமான பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது. புலம் பெயர் தமிழ் மக்களையும் எனக்கு விரோதமாக செயற்பட வைத்து சரியான முறையில் மூளை சலவை செய்யப்பட்ட தமிழ் மக்கள் இன்றும் நான் துரோக செயலில் ஈடுபட்டதாகவே நம்புகின்றனர். மறக்கவும் தயாராக இல்லை. விடுதலைப் புலிகளுடன் அவர்களின் பினாமிகளாகவும் செயற்பட்ட கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகள் என்னை வேட்டையாட தீவிரமாக அலையும் போது கொஞ்சம் புத்திமதிகளை சொல்லியிருக்கலாம். 2004ம் ஆண்டு தோதலின் போது இத்துடன் சேர்த்து நான் இந்தியாவில் சேலைக் கடையும், வெள்ளவத்தையில் மதுவகை விற்கும் கடையை நடத்துவதாகவும் நான் தேர்தலில் இருந்து வாபஸ் ஆகிவிட்டேன் என்றும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் உண்மையில் எந்தவொரு நாட்டிலும் ஓர் பாதையோர கடைகூட இல்லை.

இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் வாழும் போது இத்தகைய குற்றச்சாட்டுக்கள் அவசியமா? என்ற கேள்வி எழுவது நியாயமே. ஆனால் மிகவும் அவமதிக்கப்பட்டு, மனம் நொந்திருக்கும் போது என் பெயருக்கு ஏற்பட்ட அபகீர்த்தியை போக்க வேண்டிய கடமை எனக்கு உண்டல்லவா. எனக்கு உதவ சில பத்திரிகைகள் விரும்புவதில்லை. எனக்கு வேறு வழியின்றி நான் இதனை சிறு புத்தக வடிவில் பிரசுரிக்க விரும்புகின்றேன். ஓர் பத்திரிகை எவரேனும் ஒருவரை புகழ்வதையோ தலைமை பதவிக்கு உயர்த்துவதையோ நான் ஆட்சேபிக்கவில்லை. அனால் திட்டமிட்டு பழிவாங்கும் செயற்பாடுகள் வரவேற்கதக்கதல்ல. அது பத்திரிகா தர்மமும் அல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கு ஓர் புனிதமான கடமை உண்டு. கடந்த 10 ஆண்டுகளுக்குள் மூன்று வெவ்வேறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் செயற்பட்டு வந்திருக்கின்றன. முதலாவது எனது தலைமையிலும். 2வது திரு. சம்பந்தன் தலைமையில் விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான சு.ப. தமிழ்ச்செல்வனால் தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் (சுரேஷ் அணி), விடுதலைப் புலிகள். இவர்கள் இணைந்திருக்கும் புதிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றோ விடுதலைப் புலிகள், அ.இ.த.கா, டெலோ வின் ஒரு பகுதி ஆகியவை வெளியேற்றப்பட்ட பின் தெரிவாகி இருக்கின்ற 14 பேரில் 5 பேர் மட்டுமே தமிழரசு கட்சியையும் இருவர் டெலோ வையும், இருவர் ஈ.பி.ஆர்.எல்.எப் (சுரேஷ் அணி) ஐ தவிர எஞ்சியுள்ள ஏழு பேர் எந்த கட்சியை சார்ந்தவர்கள் என்பதையும் எப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைக்கப்பட்டனர் என்பதையும் இவர்களை உள்ளடக்கிய மூன்றாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் ஏமாற்றமடைந்திருக்கும் மக்கள் கேட்கின்றனர்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ
57/48 ஸ்டான்லி வீதி
யாழ்ப்பாணம்
10-05-2010

----

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்களால் 08-04-2010 இல் நடந்தேறிய பொதுத்தேர்தல் சம்பந்தமான அறிக்கை

“தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம் வடக்கு கிழக்கிலுள்ள சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோம் வாருங்கள் என்று”, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரான இரா.சம்பந்தனின் பகிரங்க வேண்டுகோள் எனக்கு ஆச்சரியத்தை தராது போனாலும் நல்லதோர் நகைச்சுவையாகவே தோன்றுகிறது. தேர்தலுக்கு முன்பு இவ் ஆர்வத்தை காட்டியிருந்தால் இன்று நிலைமை வேறாக இருந்திருக்கும். அவரிலும் சிரேஷ்ட அரசியல்வாதி நான். தேர்தலுக்கு முன்பு பத்து அம்சங்கள் கொண்ட பிரேரணையின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து செயற்படலாமெனவும் புதிய பிரேரணைகள் இருப்பின் சேர்க்கலாம் என்றும் இருப்பவையை திருத்தலாம் எனவும் என்னால் விடப்பட்ட கோரிக்கையை பொருட்படுத்தாது, என்னையும் எமது கட்சியையும் இல்லாததும் பொல்லாததுமான பல குற்றச்சாட்டுக்களை கூறி மக்களை குழப்பமடையச் செய்து வழமைபோல் தேர்தலில் தம் வெற்றியையே மையமாக கொண்டு இயங்கிவிட்டு, இன்று ஒற்றுமையைப் பற்றி பேசுவது வேடிக்கையே. திரு. இரா.சம்பந்தன் அவர்கள் தலைமை தாங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்ற நிலைப்பாட்டுடன் விடுதலைப் புலிகளிடம் நியமனம் பெற்றே வரலாறு காணாத மோசடி மூலம் 22 உறுப்பினர்களை வென்றெடுத்து தமிழ் மக்களின் அழிவுக்கு வழிகோலியது. நியமனம் வழங்கியதே மறைந்த விடுதலைப்புலித் தலைவர் திரு. சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களே. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு திரு. பிரபாகரன் உட்பட பல முன்னணி தலைவர்களும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் இறந்தபின் உடனே தமது பதவிகளை இராஜினாமா செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நானும் பாராட்டி திரு. இரா சம்பந்தனின் கோரிக்கையை ஏற்றிருப்பேன். இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான போராளிகள் இறந்தமைக்கு தார்மீக பொறுப்பேற்று தம் பதவிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் துறந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினரோ தமக்கு ஆறு ஆண்டுகள் நிலைத்திருந்த பதவியை தந்த விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. பிரபாகரனும் அவர்களின் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் இறந்தமைக்கு அனுதாபம் தெரிவித்து ஒரு வார்த்தையேனும் கூறவில்லை. அவர்கள் கொல்லப்பட்ட முறையை எதுவிதத்திலும் கண்டிக்கவும் இல்லை. அதற்கு மாறாக மறுநாளே தம் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தம் அணியில் இருந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலரை து}க்கி வீசிவிட்டு முன்பு எதுவித கட்சிப்பணிகளிலும் ஈடுபடாத புதிய தலைவர்களை உருவாக்கி அவர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என நாமம் சு10ட்டி தேர்தலில் போட்டியிட வைத்தனர். தமக்கு பெரும் வெற்றி கிட்டியதாகவும் மக்கள் தம்மை ஏகபிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்து விட்டனர் என்று கூறிக்கொண்டும் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டும் மற்றவர்களுக்கு ஒன்று சேர வருமாறு அழைப்பு விடுக்கின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்தது பற்றியோ இன்று அந்த கூட்டில் அங்கம் வகிப்பவர்கள் யார் என்பது பற்றியோ, பாராளுமன்ற உறுப்பினர்களாக எந்தெந்த கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவானார்கள் என்பது பற்றியோ தெரிவிக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும்.

2004ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட 284026 வாக்குகளில் 90 வீதம் அதாவது 257329 வாக்குகள் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நடந்தேறிய பொதுத் தேர்தலில் கிடைத்தது 43.85 வீதம் மட்டுமே. அதாவது 65119 வாக்குகள். மொத்தமாக உள்ள வாக்களார்களின் எண்ணிக்கை 721359 ஆகும். இதில் வாக்களிப்பில் கலந்து கொண்டவர்கள் 18 வீதத்தினர் மட்டுமே என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகள் வெறும் 9 வீதமே இந் நிலையில் தமக்கு தமிழ் மக்கள் ஆணை தந்துள்ளார்கள் என்று திரு. இரா சம்பந்தன் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். ஜனாதிபதி தேர்தலில் திரு. சரத்பொன்சேகாவிற்கு கிடைத்த வாக்குகள் தம் கோரிக்கைக்கு அமையவே கிடைத்ததென அவர் கூறியதை நான் மறுத்திருந்தேன். தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கூற்று உண்மையானால் அவருக்கு கிடைத்த 113877 வாக்குகள் மூன்று மாதத்தில் எவ்வாறு குறைந்து 65119 ஆகியது?

தேர்தலின் போது அரசு சார்பு வேட்பாளர்கள் என்னுடன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை மறைத்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை அரசின் எடுபிடியாக எடுத்துக்காட்டி பெரும் தொகை பணத்தை என்னிடம் அரசு தந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை தோற்கடிக்க ஏவிவட்டதாக பிரச்சாரம் செய்தார்கள் நா கூசாமல் பொய்யையும் புரட்டுகளையும் அவிட்டு விட்டனர். என்னைப்பற்றிய எதுவித செய்தியையும் பிரசுரிக்காது சில பத்திரிகைகள் எல்லாவற்றையும் இருட்டடிப்பு செய்துள்ளதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பற்றிய உண்மைகள் பலவற்றை மூடிமறைத்து எந்தளவில் பிரச்சாரம் செய்ய முடியுமோ அதற்கு பல மடங்கு மேலாக பிரமாதப்படுத்தி பிரச்சாரம் செய்து பத்திரிகை தர்மத்தையே ஊடகவியலாளர் சிலர் கொலை செய்தனர். திரு. சம்பந்தன் பத்திரிகைகளை பாராட்டி தம் வெற்றிக்காக உழைத்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது ஒன்றே போதும் நான் கூறுவதில் நியாயம் உண்டு என்பதை நிரூபிக்க. ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இதையே செய்து எம் மக்களின் பேரழிவுக்கு காரணமாக பத்திரிகைகள் சில இருந்ததும் அல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை அவரவர் கடமையை கூட செய்ய விடாது அவர்களையும் கெடுத்தனர். நடந்தேறிய அக்கிரமங்களை, அடாவடித்தனங்களைகூட கண்டிக்காது அவற்றை பாராட்டி புகழ்ந்தனர். அத்தகைய பெரும் பிரச்சாரத்துக்கு மத்தியில் எனது கண்டனங்கள் ,ஆலோசனைகள் புத்திமதிகள் மற்றும் பலன்மிக்க கருத்துக்கள் எதுவும் எடுபடவில்லை. எனது விளக்கங்கள் அத்தனையும் இருட்டடிப்பு செய்யப்பட்டன. எனக்கு துரோகி பட்டம் சு10ட்டவே பெரு முயற்சி செய்து வெற்றியும் கண்டனர். 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் ஈடுபட்டு வரும் மிக முதிர்ந்த தமிழ் அரசியல்வாதியாகிய என்னை மக்கள் மத்தியில் அரசின் ஏவலாளியாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பத்திரிகைகளின் உதவியுடன் சித்தரித்து மக்களை ஏமாற்றி நம்ப வைத்துள்ளனர். என்மீதுள்ள கோபத்தில் வஞ்சம் தீர்க்க சில பத்திரிகைகளின் நடவடிக்கையானது அப்பாவி மக்களுக்கே பாதகமாக முடிந்தது மட்டுமல்ல விடுதலைப் புலிகளினதும் தமிழினத்தினதும் அழிவுக்கே வழிகோலியது. பத்திரிகைகள் எதுவும் என்மீது சீற்றம் கொள்வதில் எதுவித நியாயமும் இல்லை. என்னை அர்ப்பணித்து 50 ஆண்டுகாலமாக நான் அரசியலில் ஈடுபட்டு வருகின்றேன்.

நான் தமிழுக்கு செய்த துரோகம் என்ன? மக்களுக்கு நான் செய்த குற்றம்தான் என்ன? எம் மக்களின் நிலையை கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் இருந்து கற்பனையில் விமர்சிக்காமல் வன்னிப் பகுதி மக்களை நேரில் சென்று பார்த்திருக்க வேண்டும். கால் இல்லை, கை இல்லை, கண் இல்லை, கணவன் இல்லை,மனைவி இல்லை, பிள்ளைகள் இல்லை, பெற்ற தாய் இல்லை, வளர்த்த தந்தை இல்லை, அண்ணன் இல்லை, தம்பி இல்லை,அக்கா இல்லை, தங்கை இல்லை, மாமா இல்லை,மாமி இல்லை இப்படி எத்தனை இல்லை என்று கடுகளவேனும் சிந்தித்தார்களா நம் மக்கள். எல்லாம் உண்டு என்று கூறுபவர்கள் மட்டுமே வாக்களிப்பில் கலந்து கொண்டவர்கள். நாம் எதை இழந்தோம் கவலைப்பட என்று கேட்பவர்களும் உண்டு. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தம்மை தாமே கேட்க வேண்டும். தாம் கடந்த ஆறு ஆண்டுகள் நடந்துகொண்ட முறை சரிதானா என்று? வன்னி மக்களின் இன்றைய அவல நிலைக்கு அவர்கள் பொறுப்பில்லையா? அவர்கள் எதை பறிகொடுத்தனர் கவலைப்பட. தேசியம், சுயநிர்ணயம் போன்ற மூல மந்திரங்கள் இருக்கும் வரை அவர்களை யாரும் ஏதும் செய்ய முடியாது. நம் மக்கள் தம் அடையாளத்தை இழந்து இனப்பெருக்கம் குறைந்து ஆயிரக்கணக்கில் வெளிநாடு சென்றும் மீண்டும் ஒருமுறையல்ல பல முறை உயிரிழப்பு நேர்ந்தாலும் கூட கடைசி தமிழன் இருக்கும் வரை இத் தாரக மந்திரம் வேலை செய்யும். ஆனால் மக்கள் படும் துன்பத்தை வெளிகாட்ட வேண்டிய கடமை எவருக்கும் உண்டு. அவருக்கு இவருக்கு பயந்து வாய் மூடி மௌனமாக வாழ என்னால் முடியவில்லை. கடமையை செய்தேன். பட்டம் பதவிகளை ஏற்க மறுத்து கடமையை செய்த ஒருவன் எப்படி துரோகியாக முடியும்? விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் சிலவற்றை ஏகமனதாக அனைவரும் ஒரு தடவையேனும் கண்டித்திருந்தால் அவர்கள் திருந்தியிருப்பர். எதையேனும் சாதித்தும் இருப்பர். மக்களின் பரிதாப நிலைகண்டு விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் கண்டனம் தெரிவித்த நான் எப்படி துரோகியாக முடியும்?

விடுதலைப் புலிகளுக்கு நான் கூறிவந்த ஆலோசகைளையும் கண்டனங்களையும் அவர்கள் கவனத்துக்கு எடுத்திருந்தால் அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவற்றை விடுதலைப் புலிகளை எடுக்க வற்புறுத்தியிருந்தால் பல்லாயிரக்கணக்கான எம் பிள்ளைகளின் உயிர்கள் எம் மக்களின் மதிப்பிட முடியாத சொத்துக்கள் அத்தனையையும் காப்பாற்றியிருக்க முடியும். எத்தனையோ சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளை ஆயுதங்களை கைவிடுமாறு மன்றாடி கேட்டிருந்தேன். எம்மவரில் என்னைத் தவிர வேறு யார் கேட்டார்கள்? எந்த ஸ்தாபனம் கேட்டது?. ஆனால் துரோகி பட்டமே எனக்குக் கிடைத்தது. உலகின் பல்வேறு நாடுகளிலும் சுகமாக பல்வேறு வசதிகளுடன் வாழும் நம்மவர்கள் சரி அவர்களில் சிலர் நடாத்திய பத்திரிகைகள் சரி எவ்வளவு கீழ்த்தரமாக என்னை விமர்சித்திருந்தன என்பதை கூட நான் பொறுத்திருந்தேன். ஏன்? எங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் எனது தொகுதியாகிய கிளிநொச்சி அயல் மாவட்டங்களாகிய முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களை சேர்ந்த மக்களே. அவர்களுக்காகவாவது பேச வேண்டிய கடப்பாடு எனக்கு இருந்தது. அவர்களுக்காக நான் மௌனமாக அழுதேன். நான் அவர்களுடன் நீண்டகாலம் வாழ்ந்தவன். அவர்களில் பலர் இன்று இல்லை. மனம் வெதும்பி இறந்தவர்களும் அநியாயமாக கொல்லப்பட்டவர்களும் இதில் அடங்குவர்.என்னால் அவர்களுக்காக செய்யக்கூடியதாக இருந்தது ஒன்றே ஒன்றுதான் வன்னி மக்களின் துயர்துடைக்க எழுதினேன் வெளிநாட்டு அரச தலைவர்கள்,இந்தியதலைவர்கள் கலைஞர். மு.கருணாநிதி, செல்வி ஜெயலலிதா உட்பட தமிழ்நாட்டுத் தலைவர்கள், து}துவர்கள், ஐ.நா சபை செயலாளர், ஜனாதிபதி, சமய பெரியார்கள், மகாநாயக்கர்கள், கத்தோலிக்க ஆண்டகைகள், நம் நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், நாட்டு மக்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. மனச்சாட்சி உள்ள எவரும் என் கடிதங்களை பாராட்டியிருக்க முடியுமே அன்றி குற்றம் காண முடியாது. மிகக் கவனமெடுத்து எழுதப்பட்டவை. யாரையும் நோகடிக்கும் நோக்கம் கடுகளவும் இருக்கவில்லை. இன்றுவரை ஒரு நபர் தன்னும் என் கடிதங்களில் குற்றம் காணவில்லை. அவ்வப்போது என் செய்திகளை இருட்டடிப்பு செய்த பத்திரிகைகள் அல்லது அவைமூலம் யாரும் அப்பணியை செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை?.

விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பல செயல்கள் பெரும் இனக்கலவரத்தை து}ண்டுமளவுக்கு பாரது}ரமானவை. அவற்றின் உள்நோக்கமும் அதுவே. அச் சந்தர்பங்களிலெல்லாம் இனவெறி ஏற்படாது சாந்தப்படுத்தியது பெருமளவில் எனது அறி;க்கைகளும், கடிதங்களுமே என பலர் கூறக் கேட்டிருக்கின்றேன். 1983ம் ஆண்டு 13 இராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டபோது நாடே பற்றி எரிந்தது. நடந்த கொடூரங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளுக்குள் இடம்பெற்ற எத்தனையோ கொடூர சம்பவங்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதை கற்பனைபண்ணி பார்க்க முடியாது. இதை தவிர்க்க உதவியதில் யார் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி எனக்கு பெரும் பங்குண்டு. தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக கொழும்பில் வாழும் புத்திஜீவிகள்தானும் இக் கருத்தை மக்களுக்கு எடுத்துக்கூற தவறியமை து}ரதிஷ்டமே.

இதற்கு ஆதாரமாக பல சம்பவங்களில் ஒன்றை கூற விரும்புகின்றேன். வெளிநாட்டு து}தரக நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மிகக் கௌரவமான தமிழ் பெண்மணியொருவர் ஏன் இவ்வாறான கடிதங்களை எழுதுகிறீர்கள் என்று என்னை கேட்டபோது அதற்கு நான் நேரடியாக பதில் கூறாமல் உங்களுடைய குழந்தைகள் அல்லது பேரப்பிள்ளைகள் கொழும்பிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற்கின்றனரா எனத் திருப்பிக் கேட்டேன். என் கேள்வி கொழும்பில் கல்விகற்கும் தமிழ் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்புடையது என்ற அர்த்தத்தை புரிந்துகொண்ட அந்த அம்மணி அதன்பின் பல தடவை அவருடனான சந்திப்பின் போது “உங்கள் கடிதங்கள் ஒவ்வொன்றையும் தவறாது ஒழுங்காக வாசிக்கிறேன். அவை அர்த்தம் உள்ளவை” என்று புன்னகையுடன் தெரிவிப்பார். என் எழுத்துக்களை படிப்பவர்கள் அதற்குள் மறைந்திருக்கும் நல்ல கருத்துக்களை புரிந்துகொள்வதில்லை. இதுதான் பிரச்சினையே? புத்திஜீவிகளுக்கேனும் புரிந்திருக்க வேண்டுமே ஏன் புரியவில்லை?

நான் ஓர் காந்தி பக்தன். 1948ம் ஆண்டு அன்னார் படுகொலை செய்யப்பட்ட நாள் எனக்கு ஞாபகமிருக்கிறது ஜனவரி 30, யாரோ ரேடியோ செய்தி கேட்டு வந்து என் தந்தைக்கு கூறினார். மறுநாள் அன்னாருக்காக அனுதாபக் கூட்டம் எனது தந்தையாராலேயே ஒழுங்கு செய்யப்பட்டது. அன்றுதொட்டு என் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டேன். முடிந்தவரை அகிம்சாவாதியாகவே வாழ்ந்தேன். யாரையும் நான் என்றும் இம்சிக்கவில்லை. பொய், களவு, உருட்டு புரட்டல் எதுவும் என்னிடம் நெருங்கவில்லை. மதுவை நான் தொட்டதில்லை. அத்தகைய நான் வன்முறையை வெறுத்தேன் அகிம்சையை வளர்த்தேன். என்னுடன் பழகியவர்கள் என்னை நன்கறிவர். இயக்கங்கள் எதிலும் ஈடுபட்டவன் அல்ல. ஆயுதம் தாங்கிய பல்வேறு இயக்கங்கள் அர்த்தமற்ற கொலைகளை செய்யும் போதெல்லாம் வேதனையில் துடித்தேன். விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது அமைதி வந்துவிட்டதென முழுக்க முழுக்க நம்பினேன். ஆயுதத்தை கைவிட்ட பிரபாகரன் இனி ஆயுதத்தை தொடார் என ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருந்தேன் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தவேளை திரு பிரகாரனும் ஒரு நாள் திரு யாசீர் அரபாத் போன்று உலகை சுற்றி வரும் காலம் வருமென்று கூறியிருந்தேன். ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ்நாடு அரசு பிரபாகரனை கைது செய்து சிறையிட அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென தமது சட்டசபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றியிருந்தது. அதைக் கண்டித்து செல்வி ஜெயலலிதாவுக்கு ஓர் கடிதம் எழுதியிருந்தேன். திரு. பிரபாகரனின் அழைப்பை ஏற்று அனைவரும் 2002ம் ஆண்டு கிளிநொச்சிக்கு அன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பு பா.உ அனைவரும் சென்றிருந்தோம். எனது நடவடிக்கைகளை மிக உன்னிப்பாக அவதானித்து வந்துள்ளார் என்பது பற்றி திரு. பிரபாகரனை சந்தித்த போது புலனாகியது. பாராளுமன்த்தில் எனக்கும் வேறு உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைகூட குறிப்பிட்டு பேசினார். அதன் பின்பு ஒரு தடவை திரு.அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தாம் சொல்வதைத்தான் பா.உ க்கள் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டபோது அதற்கு தகுந்த பதில் கொடுக்காமல் இருக்க முடியவில்லை. தமிழ் இனத்தின் நன்மை கருதி அவர் நாகாக்க வேண்டுமென எச்சரித்ததை குறிப்பிட்டு திரு. ரவிராஜ் பாராளுமன்ற குழுகூட்டத்தில் “சங்கரி அண்ணனால்தான் நாம் இன்று தலை நிமிர்ந்து நிற்க முடிகிறது” என்றார்.

விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக நாம் ஏற்க வேண்டும் என்ற யோசனையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டம் ஓன்றில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் திரு. அ.விநாயகமூர்த்தியும் இன்று மேல் மாகாணசபை உறுப்பினர் கலாநிதி திரு.குமரகுருபரனும் ஏற்க வேண்டுமென கோர அதை திரு. இரா சம்பந்தன் உட்பட அனைவரும் எதிர்த்ததால் அந்த யோசனை கைவிடப்பட்டது. தேசிய பட்டியலில் முதலாவதாக திரு. மு.சிவசிதம்பரம் இடம்பெற வேண்டுமென நான் பிடிவாதமாக இருந்தேன். கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர் அதை விரும்பவில்லை என்று நான் அறிந்திருந்தேன். ஆனால் திரு. மு.சிவசிதம்பரம் அவர்களின் உடல் நிலை ஆறு மாதத்துக்கு மட்டும் தான் நீடிக்கும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருந்தது. 2001ம் ஆண்டு தேர்தலுக்கு நியமன தினம் குறிப்பிடப்பட்து. வழமைபோல் நம்மில் ஒருவர் சில சதி வேலைகளில் ஈடுபட முற்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த யாழ் மாநகரசபைத் தேர்தலில் கலந்து கொள்ளுமாறு கேட்டபோது சில கட்சி ஆதரவாளர்கள் மறுத்து விட்டனர். பின்பு இலகுவான வாய்ப்பு ஏற்படுவதைக் கண்டு நீயோ நானோ என பலர் முன்வந்தனர். இவர்களில் இருவர் தம்மை தம் அனுமதியின்றி த.வி.;கூ. செயற்குழுவில் சேர்த்துவிட்டோம் என்று என்மீது கடும் கோபம் கொண்டனர். அண்மையில் நடந்துமுடிந்த தேர்தலில் இவர்களில் ஒருவர் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர். மற்றவர் தேசியபட்டியலில் இடம்பெற்றவர். மிகவும் கஷ்டமான ஓர் நிலைமையை சதி வேலைகளில் ஈடுபட்ட அதே நபர் எனக்கு ஏற்படுத்தினார். ஒருவரோடு மோதவிட்டு அதனால் ஏற்படும் இலாபத்தை தான் பெற்றுக் கொள்வதில் அவர் திறமைசாலி. அவர் ஏற்படுத்திய ஓர் குழப்பத்தால் பெரும் சிக்கலில் கட்சி சிக்கிக் கொண்டது. திரு.ச.அரவிந்தன், திரு. ந.ரவிராஜ் ஆகியோர் 2000ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட இளம் வேட்பாளர்களாவர். அதேபோல முதியவர் ஒருவர் நீண்டகாலமாக தமிழரசு கட்சி பின் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளில் முக்கிய இடம் வகுத்தவர். இம் மூவரும் வேறு கட்சிகளின் மூலம் தேர்வான இருவர் எடுத்த வாக்குகளிலும் பார்க்க கூடுதலான வாக்குகளை பெற்றிருந்தனர். 2001ம் ஆண்டும் இடம் பெற்ற தேர்தலில் அந்நபரின் முதற் கோரிக்கை திரு.அரவிந்தனை நியமிக்காது வேறு தாம் தரும் ஓர் பேர்வழியை நியமிக்க வேண்டும் என்பதாகும். ஓர் இளைஞனை அவர் குடும்பத்தவரின் விருப்புக்கு மாறாக அச்சம் காரணமாக எவரும் போட்டியிட முன்வராத நிலையில், 2000 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட வைத்தேன் இப்போது அவரை எப்படி நிறுத்த முடியும் என்றதும் அப்படியானால் திரு ரவிராஜை நீக்குங்கள் என்றதற்கு நான் அவருக்கு கொடுத்த பதில், “விரலை வெட்ட வேண்டாமென நான் கூறும் போது கையையே வெட்டுங்கள் என கேட்கின்றீர்களே” என்றேன். இறுதியாக தொல்லை தாங்காமல் திரு.முத்துலிங்கம் அவர்களை நியமன பட்டியிலிலிருந்து நீக்கியபோது அவரின் ஆதரவாளர்கள், இளைஞர் கூட்டம் மிக கோபமடைந்தது. அந்த நேரம் எனக்குத் தோன்றிய திடீர் யோசனைக்கமைய திருவாளர்கள் இரா.சம்பந்தன், திரு. வடிவேற்கரசன் மற்றும் திரு. ஜெயபாலசிங்கம் போன்றவர்களுடன் ஆலோசித்து அவர்களும் கொடுத்த உத்தரவாதத்தின் பேரால் திரு முத்துலிங்கம் அவர்களின் பெயர் தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டது.

2001ம் தேர்தல் முடிவுகளுடன் ஆரம்பிக்கின்றன, எங்கெங்கோ உருவாகிய சதி திட்டங்களின் அமுலாக்கம், வட மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியவற்றின் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் தெரிவாகினோம். இந்தியாவிலிருந்து வருகைதந்த தலைவர் திரு.மு.சிவசிதம்பரம் அவர்களை புதிதாக ஓர் வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்து அவரை பாராளுமன்றத்துக்கு நானே அழைத்துச் சென்றேன். முறைப்படி பாராளுமன்ற குழுத் தலைவராக சம்பிரதாயப்படி வர வேண்டியவர் அவரே. அவரின் உடல்நிலை சரியில்லையெனில் அப் பதவிக்கு வந்திருக்க வேண்டியவர் நானே. இப் பதவி அங்கத்தவர்கள் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் பதவியில்லை. புதிய உறுப்பினர்கள் தம்மை அறிமுகம் செய்து கொண்டிருக்கும் வேளை திடீரென மட்டுநகர் பா.உ காலஞ்சென்ற திரு.ஜோசப் பரராஜசிங்கம், திரு. இரா.சம்பந்தனை குழுத்தலைவராக பிரேரித்தபோது கண்ணியமான முறையில் அப் பிரேரணையை திரு சம்பந்தன் அவர்கள் நிராகரித்திருக்க வேண்டும். அவர் அதை செய்யவில்லை. நானும் பெருந்தன்மையாக மௌனமாக இருந்து விட்டேன். பின்பு நான் அறிந்தேன் திரு,திருமதி ஜோசப் பரராஜசிங்கமும், திரு.இரா.சம்பந்தனும் திரு.எம்.கே. சிவாஜிலிங்கத்தை ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையிலும் ஏனையவர்களை அவரவர் இல்லங்களிலும் போய் சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர் என்று. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் மூவரும் இனந்தெரியாத தம் வஞ்சத்தை என்மீது தீர்த்துக் கொண்டனர். இதேபோன்ற ஓர் சந்தர்ப்பத்தில் திரு. அ.அமிர்தலிங்கத்துக்கு எதிரான ஒரு சதித்திட்டத்தில் திரு.மு.சிவசிதம்பரம் அவர்களின் பெயர் பிரேரிக்கப்பட இருவரும் ஒரே அளவு காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் திரு. மு.சிவசிதம்பரம் தானே திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களை பிரேரித்து பெருமையை சம்பாதித்துக் கொண்டார். இத்துடன் முதலாவது சதித்திட்டம் நிறைவேறியது.

ஏறக்குறைய ஆறு மாதங்களாக உறுப்பினராக இருந்த திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் காலமாகியதும் திரு. இரா.சம்பந்தன் கட்சி கொடுத்த வாக்குறுதிபடியும், அதிலும் மேலாக தான் செயலாளர் நாயகம் என்ற தோரணையிலும் திரு.முத்துலிங்கம் அவர்களை தேசிய பட்டியலில் போட்டு தன் வாக்குறுதியை நிறைவேற்றியிருக்க வேண்டும். அதற்கு மாறாக திரு. சிவசிதம்பரம் அவர்களின் பூதவுடல் எரிந்து கொண்டிருக்கையிலேயே திரு. ஜோசப் பரராஜசிங்கத்துடன் கிளிநொச்சிக்கு விரைந்து சென்ற திரு. சம்பந்தன், திரு. சு.ப. தமிழ்ச் செல்வன் அவர்களை சந்தித்து வந்தபின் அவர் கேட்டுக்கொண்டார் எனக்கூறி தனது தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்ட திரு. துரைரட்ணசிங்கத்தை தேசிய பட்டியலில் தன் இஷ்டப்படி சேர்த்துக் கொண்டார். கட்சியின் ஒழுங்கு விதிகளை மீறி செயற்பட்ட செயலாளர் நாயகம் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நாம் செய்யவில்லை. ஒற்றுமையை பேணும்பொருட்டு பொறுத்துக் கொண்டோம். அது கட்சி அவருக்கு கொடுத்த மன்னிப்பு இந்த நாடகத்தில் பங்கேற்ற திருவாளர்கள் இரா.சம்பந்தன், திரு சிவாஜிலிங்கம், திரு.விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன் திரு.செல்வராஜ், திரு துரைரட்ணசிங்கம், திரு. சிவசக்தி ஆனந்தன், திரு. விநோதாரலிங்கம் ஆகியோர் சான்று பகர்வர். இரண்டாவது சதி நாடகமும் இத்துடன் நிறைவேறியது.

அடுத்ததாக திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் இறந்ததும் அவருடைய இடத்துக்கு நான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக ஏகமனதாக தெரிவானேன். விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாக நான் ஏற்கவில்லை. ஏனெனில் அவர்களை அப்படி யாரும் தேர்ந்தெடுக்கவில்லை. இதனால் கசப்படைந்த ஒரு சிலர் என்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற தயாரானபோது போதிய ஆதரவின்மையால் மௌனமாகிவிட்டனர். ஆனாலும் திருவாளர்கள் அல்போன்ஸ்மேரி, ஆவரங்கால் சின்னத்துரை உட்பட சிலர் நம்பிக்கைத் தீர்மானமொன்று நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டியும் தலைமை தாங்கிய நான் ஆர்வம் காட்டாததால் அவர்களின் முயற்சி நிறைவேறாமல் போனது. இதில் மிக்க வேடிக்கை என்னவெனில் 1993ம் ஆண்டு செயலாளர்நாயகமாக தெரிவான திரு.இரா.சம்பந்தன் கடைசிவரை பொதுச்சபையையும் கூட்டவில்லை.. மகாநாட்டையும் கூட்டவில்லை. அவருடன் தெரிவான செயற்குழு உறுப்பினரில் பாதிக்குமேல் இறந்தும், வெளிநாடும் சென்று விட்டனர்.

அடுத்து சில மாதங்கள் ஓடி மறைந்தன மட்டக்களப்பு, திருகோணமலை கிளைகள் இயங்காமலே பல வருடங்கள் இருந்தன. அவை இரண்டின் உறுப்பினர்களும் விடுதலைப் புலிகளால் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யப்பட்ட நிலையில் எனக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை நிறைவேற்றவே தயாராக வந்தனர். அதற்கு அவர்களால் கொடுக்கப்பட்ட காரணம் ஒன்று கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக செயல்பட்டது. இரண்டு புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆனையிறவு இராணுவ முகாமை திரும்பவும் அரசிடம் கொடுக்க வேண்டுமென நான் யப்பானிய விஷேட து}தர் திரு.ஆகாஷிடம் கேட்டதாக. இவ் இரண்டு காரணங்களும் முற்றிலும் பொய்யானவை. இவற்றை சத்தியம் செய்வதன் மூலம் திரு. அ. விநாயகமூர்த்தியோ அன்றி திரு. சம்பந்தனோ இன்றும் நிரூபிக்க முடியும்.

இச் சம்பவத்தின் உண்மை யாதெனில் ஒரு தடவை த.வி.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் திரு. ஆகாஷியை சந்திக்கச் சென்றோம். பேசிக்கொண்டிருக்கையில் திரு. விநாயகமூர்த்தி திரு ஆகாஷிடம் “ஐயா அரசிடம் 1991ம் ஆண்டு இராணுவம் நிலைகொண்டிருந்த இடத்துக்கு வாபஸ் வாங்க சொல்லுங்கள் என்றார்”. அதைகேட்ட நான் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தேன். இக் கோரிக்கையின் விளைவு விடுதலைப் புலிகள் ஆனையிறவு முகாமை அரசிடம் திரும்ப ஒப்படைக்க நிர்ப்பந்திக்கப்படுவர் என உணர்ந்த நான் திரு.விநாயகமூர்த்தியிடம் அப்படியானால் ஆனையிறவை கேட்பார்கள். கொடுப்பீரா? என்று கேட்டேன். இம்முயற்சி இப் பெரும் தலைவர்கள் இருவரும் என்னை விடுதலைப் புலிகளுடன் முரண்பட வைக்க எடுத்த சதிமுயற்சியே அன்றி வேறொன்றுமில்லை. தலைமைப் பதவியில் பொய் புரட்டு மூலம் நிலைத்து நிற்க விரும்பும் இவர்களிடம் மக்களின் எதிர்காலத்தை நம்பி ஒப்படைக்கலாமா? என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் மக்களே.

இதோடு சம்பந்தப்பட்ட பல முக்கியமான விடயங்களில் ஒன்றை குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன். திரு.இரா.சம்பந்தன் ஒரு சந்தர்ப்பத்தில் எனக்கு கூறினார் “சங்கரி நானும் விடுதலைப்புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாக ஏற்கவில்லை. ஆனால் அதை நான் சொல்லவில்லை. நீர் என்ன அநியாயாத்துக்கு அப்படி சொல்கிறீர் என்று. அதற்கு எனது பதில் நானும் கூறாவிட்டால் அப்போ யார் இதை கூறுவார்கள் என்றேன். விடுதலைப்புலிகள் என்மீது வெறுப்படைய செய்ய திட்டமிட்ட இச்சதியும் வெற்றிகரமாக முடிந்தது. ஒளிவு மறைவின்றி உண்மையை பேசியமையால் நான் துரோகியா?

1986ம் ஆண்டு ஓர் சந்தர்ப்பத்தில் இந்திய அரசின் ஏற்பாட்டில் பதவி துறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்தியாவில் தங்கியிருந்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்த வந்தபோது இரு சாராருக்குமிடையிலான பேச்சுவார்த்தை பல நாட்கள் நடந்தன. ஒருவேளை தவறாமல் தினமும் ஒவ்வொரு சந்திப்பிலும் கலந்து கொண்டவன் நான். பேச்சுவார்;த்தையில் கலந்துகொள்ளாவிட்டாலும் கூட என் பங்களிப்பு பற்றி திரு.இரா.சம்பந்தன் குறிப்பிட்டமை அவசியமற்றதும், விஷமத்தனமானதுமாகும். 06.02.2008 தேதி தனது பாராளுமன்ற உரையில் இச்சம்பவம் பற்றி குறிப்பிடுகையில் அரசு பக்கத்தால் கலந்து கொண்டோர் பெயர்களை கூறிவிட்டு த.வி.கூ சார்பில் கலந்து கொண்டவர்கள் திருவாளர்கள் அ. அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், வெ. யோகேஸ்வரன் இடைக்கிடை திரு.ஆனந்தசங்கரி நான் என விஷமத்தனமாக கூறி ஒழுங்காக பங்கு கொண்ட என்னை “இடைக்கிடை” கலந்து கொண்டதாக குறிப்பிட்டு ஒரு அணிக்கு தலைமை தாங்கும் தகுதி தனக்கில்லை என வெளிப்படுத்திக் கொண்டார். ஆரம்பத்தில் தான் எப்படி நடந்து கொண்டார் பின்பு அப் பேச்சுவார்த்தைக்கு என்ன நடந்தது என்ற சுவையான நிகழ்வை அவரிடம் கேட்டறிந்து கொள்ளலாம். மற்றவர்களை மட்டம்தட்டி தன்னை மிகைப்படுத்தி பேசுவது திரு.இரா.சம்பந்தனுடன் கூடப்பிறந்த குணமாகும்.

திரு.இரா.சம்பந்தன் அவர்கள் தற்போது தலைமை தாங்குவது திரு.சேனாதிராசா அவர்களால் முறைதவறி புத்துயிரளிக்கப்பட்ட தமிழரசு கட்சியே அன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்ல. ஸ்தாபகராகிய தந்தை செல்வாவின் கட்டளைக்கு விரோதமாகவும் கட்சி முக்கியஸ்தர்களின் அனுசரணை இன்றியும் அப் பெயரை துஷ்பிரயோகம் செய்து மக்களையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றலாம் என திரு சம்பந்தன் குழுவினர் நினைத்தால் அது வெறும் பகற் கனவாகும். தன் சிந்தனையிலேயே தெளிவில்லாமல் திரு. சம்பந்தன் செயற்படுகின்றார். அதற்கு சில பத்திரிகைகள் அவருக்கு முண்டு கொடுக்கின்றன. அவை பத்திரிகா தர்மத்தை மீறி செயற்படுவதால் நான் எதையும் இழந்து விடவில்லையென கூறமாட்டேன் ஏனெனில் 2004, 2010ல் நடந்த தேர்தல்களில் பத்திரிகைளின் அநீதியான பிரச்சாரத்தினால் தான் நான் தோற்கடிக்கப்பட்டேன் என்பது தான் உண்மை. தம் புனிதமான கடமையை உணராது செயற்படும் பத்திரிகை மக்களுக்கு செய்வது பெரிய துரோகமாகும். பத்திரிகைகள் தம் இஷ்டம்போல் பத்திரிகை தர்மத்தை மீறி சிலரை து}க்கி வைப்பதும் சிலரை போட்டு மிதிப்பதும் மக்களுக்கு செய்யும் பெரும் அநீதியாகும். தலைவர்களை தெரிவுசெய்யும் உரிமை மக்களுக்கே. அரசுக்கும் இல்லை. பத்திரிகைகளுக்கும் இல்லை. பத்திரிகைகள் நடுநிலை வகிப்பதே உத்தமமான செயலாகும். தம் சுயநல போக்கால் கண்ணியமான தலைவர்களை உருவாகாது தடுப்பதும்,அழிப்பதும் மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமே. அவர்களின் முதற்கடமை மக்களின் நலன் பேணுவதே.

சகிப்புத் தன்மையையும் அகிம்சையையும் முன்னெடுக்க ஐ.நாவின் கிளை ஸ்தாபனமாகிய யுனெஸ்கோ ஸ்தாபனம் மகாத்மா காந்தியின் 125வது பிறந்த தினத்தில் மதன்ஜித் சிங் என்பவரின் பேரால் உருவாக்கப்பட்ட விருது 2006ம் ஆண்டு நவம்பர் 16 இல் எனக்கு பாரிஸ் நகரில் 1000 மக்களுக்கு மேல் பிரசன்னமாயிருந்த சபையில் ஒரு கோடி ரூபா காசோலையோடு விருதும் வழங்கப்பட்டது. இது நம் நாட்டுக்கும் குறிப்பாக எம் இனத்துக்கும் கிடைத்த பெருமையாகும். அந்த விருது பலமக்கள் முன் பிரான்ஸ் நகரில் பெற்ற என்னை என் தாய்நாட்டில் 20 தமிழர்கள்தன்னும் கூடி வாழ்த்த முடியவில்லை. அவ்விருதுகூட நான் செல்வாக்கை பாவித்து பெற்றதாக சொந்த நாட்டில் பேராசிரியராக இருந்த ஒருவர் ஒரு பத்திரிகையில் விமர்சித்திருந்தார். இக் கண்டனம் காந்திஜீ அவர்களையே அவமதிக்கும் செயலென அந்த பேராசிரியருக்கும் அப் பத்திரிகை நிறுவனத்துக்கும் தெரியவில்லை. நான் அறிந்த வரையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 65 நபர்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்த மிக கண்ணியமிக்க ஒரு குழுவினரால் ஐவர் தெரிவு செய்யப்பட்டு பின் அதில் நான் தெரிவுசெய்யப்பட்டு எனக்கு வழங்கப்பட்ட விருதாகும். விருது கிடைக்கும்வரை இது பற்றிய செய்தி எதுவும் எனக்குத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்விருது கொலைகள், ஆட்கடத்தல்கள் போன்ற பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டேன் என்பதற்காக வழங்கப்படவில்லை. நாட்டில் நடைபெறும் அடாவடித்தனங்கள், கொலைகள், போன்ற வன்முறைகளை எனது உயிருக்கு ஏற்பட்டிருந்த ஆபத்துக்கு அஞ்சாமல் கண்டித்தமைக்கு கிடைத்த விருதாகும். எனது உயிருக்கு எத்தகைய அச்சுறுத்தல் இருந்ததென்பதை அனைவரும் அறிவர்.

அதுமட்டுமல்ல 2004ம் ஆண்டு தேர்தலை யாழப்பாணத்தில் யார் நடத்தினார்கள்? எப்படி நடத்தினார்கள்? என்பதை உலகறியும். என் சொந்த வாக்கையே நான் போடமுடியவில்லை. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு 90 வீத ஆதரவை பெற்றமை பெரும் மோசடி மூலம் என்பதை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பகிரங்கப்படுத்தி இருந்தனர். அதுபற்றி விமர்சிக்காமல் ஏதோவொரு நாடு பல கோடி ரூபா எனது தேர்தலுக்கு செலவு செய்தும் நான் படுதோல்வி அடைந்ததாகவும் ஒரு பத்திரிகை எழுதியது. நான் கேட்டு வெற்றி பெற்ற பல தேர்தல்களுக்கு ஒரு சதமேனும் பணம் செலவிட்டதில்லை. மக்களே அவற்றை கவனித்துக் கொண்டனர். இப்போது கூட தேவைக்கு மேல் நான் செலவு செய்வதில்லை. இத்தகைய வேதனை தரும் திட்டமிட்ட செயல்கள் 50 ஆண்டுகளுக்கு மேல் தளம்பாத அரசியல் செய்த என்னை வன்முறையால் ஓர் இயக்கம் தோற்கடித்தமை நாட்டைப்பொறுத்தவரை ஓர் துன்பமான செயலாகும். இவ்வாறான செயல்கள் அத்தனையையும் எவ்வாறுதான் ஒரு சாதாரண மனிதனால் தாங்கிக்கொள்ள முடியும்?.

தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பற்றி விமர்சிக்கும் எவரும் தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்டு அவர் காலத்திலேயே அவராலேயே செயலிழக்கப்பட்ட கட்சி தமிழரசுக்கட்சி எவ்வாறு புத்துயிர் பெற்றது? யாரால் ஏன் புத்துயிர் கொடுக்கப்பட்டதென இன்றுவரை யாராலும் கேட்கப்படவில்லை. தந்தை செல்வா, தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம், அமரர்கள் சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் ஆகியோரின் பூதவுடல்கள் உதயசு10ரியன் கொடியினால்தான் போர்த்து எடுக்கப்பட்டன. அப்படியிருந்தும் தமிழரசுக்கட்சி நல்ல நோக்குடன் மீள் இயங்க வைக்கப்படவில்லை என்பதை நியாயமாக செயற்படும் தந்தை செல்வாவில் நல்ல மதிப்பு வைத்திருக்கும் எவரும் ஏற்றுக்கொள்வர். எதற்கெடுத்தாலும் யாரைப் பார்த்தாலும் குற்றம் சுமத்துவது என் மீதே. பல்வேறு குற்றங்கள் புரிந்த மற்றவர்கள் அனைவரும் உத்தமர்களாக கணிக்கப்படும்போது ஒரு குற்றமும் செய்யாத நான் மட்டும் துரோகியா. தந்தை செல்வா உருவாக்கிய கட்சிதான் அவர் அனைவரையும் ஒற்றுமையாக்க உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். தந்தை செல்வாவில் உண்மையான விசுவாசமுள்ளவர்கள் ஆதரிக்க வேண்டியது தமிழர் விடுதலைக் கூட்டணியே அன்றி தமிழரசுக்கட்சியல்ல. ஒரு தனிநபர் தன் நலனை மட்டும் கருதி தமிழரசுக்கட்சிக்கு புத்துயிர் கொடுத்ததால் மற்றும் சிலர் ஒதுங்க இடமின்றி தமிழரசுக்கட்சியின் சின்னமாகிய வீட்டுக்காக மட்டுமே அதனுடன் இணைந்து கொண்டனர். நானும் ஒருவனாக இருந்து தந்தையினால் உருவாக்கப்பட்ட கட்சியை பல இலட்சம் ரூபா செலவில் கட்டிக்காத்து வருகின்றேன். யுனெஸ்கோ நிறுவனத்தினால் வழங்கப்பட்ட விருது மூலம் கிடைத்த பணத்தில் பெரும் பகுதியை இதற்காகவே செலவிட்டேன். என் கடைசி காலத்திலும் ஓர் இலட்சியத்துக்காகவே அன்றி சுயநலன் கருதி இதை செய்யவில்லை. தலைவர் அமிர் கொலை செய்யப்பட்டதும் அவர் வகித்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை திரு சேனாதிராஜாவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய காரணம் என்ன? அவர்தான் திரு. அமிர்தலிங்கம் அவர்களின் வாரிசா? அன்று அப்பதவியினை திரு. இரா சம்பந்தன் உட்பட பலரும் விரும்பினர்.

77 வயதுவரை ஒருவராலும் அவமதிக்கப்படாதவன் இன்று சில சுயநலமிகளின் சுயநல சதியாலும் பொய் பிரச்சாரங்களினாலும் பெரும் வேதனை அடைந்துள்ளேன். அம்பாறை, மட்டக்களப்பு மக்கள் என்னை பற்றிய உண்மைகளை அறிந்திராமையால்தான் புதிதாக உருவாக்கப்பட்ட தலைவர்கள், சில வேட்பாளர்கள் உட்பட அரசு என்னிடம் பெருந்தொகை பணத்தைக் கொடுத்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் அள்ளி இறைத்ததாக எழுதியும் பேசியும் வந்துள்ளனர். ஆண்டவன் அவர்களின் அறியாமையை மன்னிக்கட்டும். மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை தம்பிமார்க்கு ஒன்று சொல்வேன் உணர்ந்து கொள்ளட்டும். பொய்யும், புரட்டும் என்னவென்று எனக்குத் தெரியாது. பசித்தாலும் புல்லுத் தின்னாத புலிபோன்ற ஒருவன் நான். அம்பாறை செயற்குழு உறுப்பினர் சிலருக்கு அன்றொருநாள் நான் ஓர் வாக்குறுதியை கொடுத்து அதை நிறைவேற்றிய என் செயலை அன்று கண்ட திரு. இரா சம்பந்தன், திரு. ஜோசப் பரராஜசிங்கம், திரு.செல்வராசா, திரு. துரைரட்ணசிங்கம் ஆகியோரே ஆச்சரியம் அடைந்தனர். திரு. மாவை சேனாதிராசாவை இரண்டாவது தடவையாக தேசிய பட்டியலில் இணைத்து மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களை கவனிக்குமாறு அனுப்பி வைத்த கட்சியின் தலைமை பதவியை வகிக்க சகல விதத்திலும் தகுதியானவன் என்பதை நிரூபித்த கட்சியின் தலைவன் நான். இந்த உண்மைகள் புத்திஜீவிகள், பல்கலைகழக மாணவர்கள் பொதுமக்களுக்கும் தெரியாமல் போனது வேதனையே. உரிமையுடன் நான் எடுத்திருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஒரே நபருக்கு இரண்டாவது தடவையாக கிடைக்கச் செய்தமைகூட என் துரோகச் செயலா?

இன்று கூட காலம் கடந்துவிடவில்லை. நான் செய்த குற்றங்களை தமிழரசுக் கட்சிக்கு புத்துயிர் கொடுத்து நம் மக்களை கூறுபோட்டவர்கள் பட்டியலிட்டு காட்டட்டும். எவரேனும் விசாரித்து தீர்ப்பு வழங்கட்டும். திரு. சம்பந்தன் போன்றோருக்கு மனசாட்சி இருந்தால் இப்படியொரு ஒழுங்கை செய்திருக்க வேண்டும். நான் குற்றவாளியாக காணப்பட்டால் கட்சியை விட்டு விலக பின்னிற்கமாட்டேன். அதை விடுத்து இழந்த சந்தர்ப்பங்களை தங்களுக்கு சாதகமாக்கி அப்பாவி மக்களை குழப்பியடித்து பெரும் சாதனை புரிந்ததாக உலகுக்கு காட்ட வேண்டாம். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகள் வெறும்
9 வீதம் மட்டுமே அன்றி அது மக்கள் கொடுத்த ஆணையல்ல. சில பத்திரிகைகள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வக்காலத்து வாங்க முன்வரலாம். அவர்களை நான் மன்றாட்டமாக வேண்டுவது தயவு செய்து என்மீதுள்ள தனிப்பட்ட கோபத்தை வைத்து அப்பாவி மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்த வேண்டாம். தம் தலைவர்களை தமிழ் மக்கள் சுயமாக தேர்ந்தெடுக்க வழிவிடுங்கள். அதுவே மனித நீதியும் பத்திரிகை தர்மமும் ஆகும். அரசும் இதையே பின்பற்ற வேண்டும்.

சுயமாக சிந்திக்காமலும் மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளை உதாசீனம் செய்தும், விடுதலைப் புலிகள் கூறும் எல்லாவற்றிற்கும் ஆமாம் சாமி போட்டமையால். தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக கடமையை தமிழ் தேசிய கூட்டமைப்பு இழந்துவிட்டது என்பது மட்டுமல்ல. மீண்டும் தேசியம் சுயநிர்ணய உரிமை போன்ற சுலோகங்களுடன் தேர்தலில் போட்டியிட்டது மக்களுக்கு செய்த பெரும் துரோகமாகும். வன்னி மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு இழப்புக்கள் சொல்லில் அடங்கா. கிளிநொச்சி பறிபோனவுடன் விடுதலைப்புலிகளை கேட்டேன், தயவு செய்து ஓர் உடன்பாட்டுக்கு வந்து பிரச்சினைக்குத் தீர்வு காணுங்களென்று. அரசை மன்றாடி கேட்டேன், அரசு யுத்தத்தை வென்று விட்டது இனி தொடரும் போரில் ஒரு அப்பாவி உயிர்தன்னும் வீணாக அழிக்கப்படக்கூடாதென்று. தமிழ் தேசிய கூட்டமைப்பைக் கேட்டேன் உலகநாடுகளும் அவற்றிலுள்ள பல்வேறு அமைப்புக்களும் மனித கேடயமாக பிடித்து வைத்திருக்கும் மக்களை விடுமாறு கேட்டுள்ளனர். அதேபோல் விடுதலைப்புலிகளை கேளுங்கள் அல்லது உங்கள் பதவிகளை ராஜினாமா செய்யுங்கள் என்று. யாரும் என் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை. அதன் விளைவு என்னவாயிற்று? இவர்கள் தம் பதவிகளை இராஜினாமா செய்வதாகவேனும் கூறி விடுதலைப்புலிகளை மிரட்டி இதை சாதித்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. பத்திரிகைகளேனும் இவர்களை கேட்கவில்லை. கேட்ட நான்தான் துரோகியா? இவர்கள் இதை செய்திருந்தால் வன்னி மக்களின் பல்லாயிரக்கணக்கான உயிர்களும் அவர்களின் சொத்துக்களும் காப்பாற்றப்பட்டிருக்கும்.

யுத்தத்தின் கடைசி கட்டத்தில் போரை இந்தியத் தேர்தல் முடிவு வரும்வரை சிலகாலம் நீடிக்கவென பல்லாயிரக்கணக்கான பயிற்சி பெறாத போராளி சிறுவர்கள் பலிகொடுக்கப் பட்டனர். காயப்பட்ட போராளிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். சரணடைந்து இன்று அரச பாதுகாப்பில் இருப்பவர்கள் மத்தியிலுள்ள 11000 இற்கு மேற்பட்ட போராளிகளில் ஒரு கால் துண்டிக்கப்பட்டவர்கள் 686 பேரும் இரு கால்களையும் இழந்தவர்கள் 05 பேரும், ஒரு கை இல்லாதவர்கள் 367 பேரும், இரு கைகளும் இல்லாதவர்கள் 17 பேரும், கண் பார்வை இழந்தவர்கள், நடமாட முடியாதவர்கள் என பலர் முகாமில் இருப்பின் இப்படியான நிலையில் உயிரிழந்தவர்கள் எத்தனை ஆயிரமாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். கிழக்கு மாகாண போரில் 22000 இளைஞர்களும், யுவதிகளும், வன்னியின் இறுதிப் போரில் எத்தனை ஆயிரம் இளைஞர்களும், யுவதிகளும்? பலிகொள்ளப்பட்டார்கள்? நம் மக்கள் இந்நிலையில் வாடி வதங்கும் போது பாராளுமன்ற பதவி அவசியமா? என்னைப் பொறுத்தவரையில் நான் 17 ஆண்டுகள் பாராளுமன்றத்தில் இருந்திருக்கிறேன். நம் நாட்டு பெரும் அரசியல் தலைவர்களுடன் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்துள்ளேன். வயதும் 77ஐ தாண்டி விட்டது. இத்தேர்தலில் நான் வெல்ல வேண்டுமென ஆசைப்படவில்லை என்றும், ஓர் கடமையாக உணர்ந்தே போட்டியிடுகின்றேன் என்றும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பகிரங்கமாக சத்தியம்கூட பண்ணியுள்ளேன். 1994ம் ஆண்டு ஓர் கட்சிக்கு 09 ஸ்தானங்கள் கொடுத்த நீங்கள் 2004ம் ஆண்டு 22 ஆசனங்களை த.தே.கூ. கொடுத்தீர்கள். எனது கட்சிக்கு ஒருசந்தர்ப்பம் 6 மாத காலத்துக்கேனும் தந்து பாருங்கள் என்று வருந்தி கேட்டேன். நீங்கள் ஒரு ஆசனமும் கொடுக்காது என்னை ஒதுக்கி விட்டீர்கள்.

நான் ஒற்றுமைக்கு மாறானவன் அல்ல. 2001ம் ஆண்டு ஒரு சில தமிழ்ப் பெரியார்களின் வேண்டுதலுக்கு அமைய தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையில் அமைக்கப்பட்டு அவ் வருடம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பை என்மீது எதுவித காரணமும் இன்றி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து ஒற்றுமையை சிதைத்த திருவாளர்கள் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோருக்கு இந்த ஒற்றுமை ஞானம் அப்போ எங்கே போய் மறைந்தது. இத்தகைய செயற்பாடுகளினால் ஏற்கனவே ஒன்றுபட்டிருந்த தமிழ் இனத்திற்குள் வேற்றுமையை வளர்த்த அதே தலைவர்கள் இன்று மீண்டும் ஒற்றுமை பற்றிப் பேசுவது விந்தையே. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு தாம் செய்ய வேண்டிய கடமையை செய்யாது ஆறு ஆண்டுகளை வீணடித்து விட்டு மக்கள் மத்தியில் எந்த முகத்துடன் வருகிறார்கள் என்று பார்த்தால் 09 வீதம் மக்கள்தான் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். மீதிப்பேர் ஏன் வாக்களிக்கவில்லை? இதற்கு அவர்கள் தரும் பதில்தான் என்ன? எல்லா கட்சிகளையும் ஒன்றிணைக்கவே தந்தை செல்வா அவர்கள் தமிழரசுக் கட்சியை செயலிழக்க செய்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார். தமிழரசு கட்சி ஏன் புத்துயிர் பெற்றது என மக்கள் அறிய விரும்புகின்றனர்.

என் சேவையை தர முன்வந்தேன். மக்கள் ஆணை தரவில்லை என்பதிலும் பார்க்க நம் மக்களின் உணர்வைத் து}ண்டிவிட்டு வறுமையையும், படும் கஷ்டங்களையும் தீர்ப்பதாக உறுதியளித்து பணமும் பொருளும் கொடுத்து மக்களை வாங்கிவிட்டார்கள். என் தோல்வி எனக்கு ஏற்பட்ட தோல்வியல்ல. மக்களின் ஏழ்மைதான் விலைபோனது. சொல்லொணா துன்பத்தை அனுபவிக்கும் எம் மக்களுக்காக மௌனமாக அழுவதே அன்றி எனக்கு வேறு வழி தெரியவில்லை. அன்றும் நம் மக்களை அழிவுக்கு கொண்டு சென்றுவிட்டு மீண்டும் அதே நிலைமைக்கு கொண்டு செல்வது அப்பாவி மக்களுக்கு செய்யப்படும் படுபாதகச் செயலாகும். என்னைப்பற்றி எவராலும் என்ன சொல்ல முடியும். அரச பணத்தை வாங்கி இறைக்கிறார் என்ற பொய்யை மட்டும்தான் திரும்பத் திரும்ப கூற முடியும். ஆனால் இது பணத்துக்காகவும் பதவிக்காகவும் விலைபோகும் ஜீவன் அல்ல என்ற நிலைப்பாடு இன்றல்ல என் உயிர் உள்ளவரை நீடிக்கும்.

வீ. ஆனந்தசங்கரி 57/48, ஸ்டான்லி வீதி
தலைவர்- த.வி.கூ யாழ்ப்பாணம்
10-05-2010

Monday, August 11, 2008

பிரச்சனைக்கு ஒரு நிரந்தர முடிவு காணவேண்டும்

அன்பே கடவுள்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

இநது சமய ஒற்றுமைப் பேரவை
410-27 பௌத்தலோக மாவத்தை
கொழும்பு 7
28.06.1990

பத்திரிகைச்செய்தி

வடக்குக் கிழக்குப் பகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சண்டைகளை உடனடியாக நிறுத்தி மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பிரச்சனைகளுக்குத் தீர்வை உடனடியாகக் காணமுன்வரவேண்டும் என்று சகல தரப்பினரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன். இரு பகுதியினரும் விட்டுக்கொடுக்காது போர்புரிவதை மனிதாபிமானம் கொண்டுள்ள எவரும் ஏற்க மாட்டார்கள். இச்சண்டைகளின் நிமித்தம் இருதரப்பினருக்கிடையிலான சேதங்களைக் காட்டிலும் அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழப்பும் உடமைகள் அழிவும் அதிகமாயுள்ளதை எவரும் மறுக்கமுடியாது. குறிப்பாக விமானங்களிலிருந்து குண்டுகள் போடுவதும் பரல்கள் போடுவதும் முகாம்களிலிருந்து ஷெல்த் தாக்குதல்களை மேற்கொள்வதும் தமிழ்மக்களுக்கு மாத்திரம் உரிய தண்டனையோ அல்லது அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட கொடையோ தெரியாது. 1985ம் ஆண்டிலிரு;து தமிழ்ப் பேசும் மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் உட்பட இத்தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாயிருப்பினும் 1981ம் ஆண்டிலேயே தமிழ் மக்களுடைய பகுதிகளில் அவர்களுடைய உடமைகள் அழிப்பது ஆரம்பமாகி இன்றும் தொடர்ந்து வருகிறது. 1949ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட குடியுரிமைச்சட்டம் முதற்கொண்டு இந்நாட்டில் பிரச்சனைகள் ஆரம்பித்து இன்று முற்றாக தமிழ் மக்களை அழிக்கும் நிலைக்கு நாட்டில் வன்செயல்கள் அதிகரித்துள்ளதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

பேச்சுவார்த்தை மூலமாகப் பிரச்சனைகள்; தீர்க்கப்படுவதையே மக்களில்; பெரும்பாலானோர் கருதுகின்றபோதிலும் நடைமுறையில் சாத்தியப்படுவது கடினமாக இருப்பதையும் மறக்கமுடியாது. காரணம் இனப்பிரச்சனை குறித்துப் பல பேச்சுவார்த்தைகள் கொழும்பிலும் இங்கு சரிவராத பட்சத்தில் திம்புவிலும் பெங்களுரிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதையும் வரலாறு கூறும். ஓப்பந்தங்கள் பல செய்யப்பட்டு அவை நிறைவேறாமல்; கிழிக்கப்பட்டதையும் இந்நேரத்தில் நினைவு கூரவேண்டிய கடமையுள்ளது.

இன்றைய நிலையில் மக்களுடைய தேவைகள் என்ன என்பதை அறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியகடமை மக்களால் தெரிவான அரசிற்குள்ளது. பிரச்சனைகளுக்கு மத்தியில் அல்லலுறுகின்ற மக்களின் தேவைகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். திரிகரண சுத்தியோடு மக்கள் பணிசெய்ய அனைவரும் முன்வரவேண்டும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிக்கை சமர்ப்பித்த இளைஞர் சம்பந்தமான ஜனாதிபதியின் ஆணைக்குழுவினரின் முடிவகளைச் செயற்படுத்தி கடந்த 41வருடங்களாக இழுபறிப்படுகின்ற தமிழ் மக்ககளின் குறிப்பாக சிறுபான்மையினரின் பிரச்சனை ஒரு நிரந்தர முடிவை எட்டவேண்டும் எனவும் இதற்கான பூரண ஒத்துழைப்பை சகல அரசியற் கட்சிகளும் போராட்டக்குழுக்களும் முக்கியமாக இலங்கை நாட்டின் சகல பிரஜைகளும் நல்கி இந்நாடு ஒரு சமாதான ஐக்கிய நாடாக மிளிர வழியமைக்க எல்லோரும் ஒருமித்து செயற்படவேண்டும் எனவும் இவ்வறிக்கை மூலமாக வேண்டுகின்றேன்.

விவேகானந்தர் கூறியதுபோhல ஒருவருக்கொருவர் குறைகள் கண்டுபிடித்துக்கொண்டும் தூஷித்துக்கொண்டும் இருந்த காலம் தீர்ந்துவிட்டது. நம் சமூகத்தைத் திருத்தியமைக்கக் கூடிய நிர்மாணவேலை செய்யவேண்டிய காலமிது. சிதறுண்டு கிடக்கும் சக்தியனைத்தையும் ஒன்றுசேர்த்து இப்பணியில் செலுத்தி நம்தேசத்தை முன்னேற்றப்பாதையில் அழைத்தச் செல்லவேண்டிய தருணமிது. அதில் நாம் முன்செல்வோமாக என்று கூறி இனியும் தாமதிக்காது பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து எமது நாட்டில் அமைதியும் சமாதானமும் அன்பு வழிகொண்ட வாழ்க்கையும் ஏற்பட நாம் ஒருவரையொருவர் புரிந்துணர்ந்து வாழ இன்றே பங்கெடுக்க வேண்டும் எனவும் வேண்டி ஈற்றில் கிராம எழுச்சித் திட்டங்களை நடாத்தும் அரசு இனி எக்காலத்திலும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் விமானத் தாக்குதல்கள் பீரங்கித் தாக்குதல்கள் ஷெல்த் தாக்குதல்களை நடாத்த இடமளிக்கவோ எண்ணவோ கூடாது எனவும் தெரிவித்து இவ்வறிக்கையை நிறைவு செய்கின்றேன்

ஒற்றுமை இந்த ஊரிடை ஓங்குக.

என்றும் சமாதானத்திற்காக
இந்து சமய ஒற்றுமைப் பேரவை அமைப்பாளரும்
தேசிய ஒருமைப்பாட்டிற்கான இளைஞர் குழு உறுப்பினருமான
தங்கராசா முகுந்தன்

(இவ்வறிக்கையின் கடைசிப் பந்தியைத் தவிர்த்து வீரகேசரி – 03.07.1990 2ஆம்பக்கத்தில் சிறுபான்மையினரின் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர முடிவு காணவேண்டும் போர் தொடர்வதை மனிதாபிமானம் கொண்ட எவரும் ஏற்க மாட்டார்கள் என்ற தலையங்கம் இட்டு பிரசுரித்தமை குறிப்பிடத் தக்கது.)

Sunday, August 10, 2008

இன்றைய உடனடித்தேவை – ஒற்றுமையே

மக்களாலே மக்களிலிருந்து மக்களுக்காகத் தெரிவுசெய்யப்பட்ட ஆட்சிமுறை – மக்களாட்சி(ஜனநாயக ஆட்சி) நடைபெறும் எமது நாட்டில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்ட பிரச்சனைகள் நிமித்தம் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகிய மக்கள்(குறிப்பாக விதவைப் பெண்கள் அநாதைக் குழந்தைகள் அங்கவீனர்கள் மனநோயாளர்கள்;) சேதமாக்கப்பட்ட அரச தனியார் சொத்துக்கள் கொல்லப்பட்ட மக்களுடைய உயிர்கள் எண்ணிலடங்கா அளவுக்கு அதிகம்.

ஆக்கத்திற்கு வழிவகுக்க வேண்டிய அறிவியல்
அச்சத்திற்கு வழிவகுத்துவருகின்றது.

யாரால் எங்கே எப்போது என்ன நிகழும் என்ற பீதியுடன் மக்கள் வாழ வேண்டிய நிலை தொடருகின்ற நிலையையும் நாம் சிந்திக்கவேண்டும். கொலை கொள்ளை கடத்தல் இப்படி அளவுக்கதிகமான அராஜகச் செயல்கள் தொடர்ந்து நடைபெற மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். மக்கள் பேச்சுரிமை கட்டுண்டநிலையில் செய்வது அறியாது ஏங்குகின்றார்கள்.

தான் வாழ வழிகாண வேண்டிய மனிதன்
பிறர் வீழ வழிகாணத் துடிக்கின்றான்.

மக்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான பயனுள்ள சட்டங்களை ஏற்படுத்த வேண்டும். மக்களுடைய நன்மைக்காகச் சட்டங்கள் இருக்கவேண்டுமேயன்றி சட்டத்திற்குள் மக்கள் வலுக்கட்டாயமாகத் திணிக்கக்கூடாது. மக்கள் சுதந்திரமாக நீதிநெறி முறைகளோடு வாழவேண்டும்.

சுதந்திரமடைந்தபின் எமது நாட்டில் பிரச்சனைகள் அதிகரித்த வரலாறு மாற்றப்படவேண்டும். இரண்டாவது உலகப்போரின் பின்பு உலக நாடுகள் பெற்ற அனுபவத்தின் காரணமாக உலக அமைதியைப் பேணவேண்டி ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றத்தையும் இந்நேரத்தில் நாம் எடுத்து நோக்க வேண்டும். சிறய நாடாகிய எம் நாட்டில் இவ்வளவு பெரிய பிரச்சனைகள் இருக்கும்போது எப்படி உலக சமாதானம் அமைதி ஏற்படும். சிந்தனைக்கு விடப்படவேண்டிய ஒரு வினாவாக அமைகிறது.

உலகில் தோன்றிய உயிரினங்கள் யாவும் சுதந்திரமுடையன. ஏந்த உயிரையும் கொல்லுவதற்கு எவருக்கும் உரிமையில்லை. இது இறைவன் ஆணை. இதை மீறுவோர் தண்டனைக்குரியோரே. ஓர் உயிரை அழிப்பவன் அதை ஆக்க முடியுமா? ஏன்ற விசாரணை மூலம் உயிர்களிடத்து இரக்கமும் அன்பும் உடையவனாக வாழவேண்டும். தான் வாழ்வதோடு உலகத்தையும் வாழவைக்கவேண்டும். இதுவே மனித நியதி.

மானிடஜாதியில் பண்பியல் வளர்ச்சிக்கு சமயவாழ்வே அடிப்படை. சமுதாயத்தில் அன்பு அறம் பண்பாடு சமுதாய ஒற்றுமை என்பவற்றை ஆட்சியால் சட்டத்தால் ஆக்கமுடியாது. சமயம் ஒன்றே மனித சமுதாயத்தினுடைய வளர்ச்சிக்கு உற்றதுணையாகிறது. சமயம் என்பது ஒரு வாழ்க்கைமுறை மனிதனை நெறிப்படுத்தி அவன் உள்ளத்தைப் பக்குவப்படுத்தும் சாதனமாக சமயம் அமையவேண்டும். புலன்கள் தூய்மையடையவும் இதயம் விரிவடையவும் அன்புபெருகி வேறுபாடுகள் மறையவும் ஒருமை தோன்றவும் ஓருலகம் மலரவும் வழிகாட்டுவதே சமயத்தின் தேவையும் பயனுமாக இருக்கவேண்டும். அந்த வழிமுறைகள் ஏற்கனவே வாழ்க்கையை செவ்வனே நடாத்தி பேரானந்தப் பெருவாழ்வு கண்ட மகான்கள் ஞானிகள் மூலம் எமக்குக் காட்டப்பட்டுள்ளன. புதிதாக நாம் ஒன்றும் ஏற்படுத்தவேண்டிய தேவையில்லை.

பௌத்த சமயம் - அன்புச் சமயம். அறியாமைக்கு எதிராக அறிவை உபதேசிக்கும் சமயம். சாதிப் பிரிவினைகளையும் பிறப்பால் ஏற்படும் உயர்வு தாழ்வுகளையும் உடைத்தெறியும் சமயம். சமதர்மத்தையும் ஜீவகாருணியத்தையும் பெண்ணுரிமையையும் அறிவையும் அன்பொழுக்கத்தையும் வற்புறுத்திக்கூறும் பஞ்சசீலம் - அஸ்டசீலம் - தசசீலம் என்ற கொள்கைகள்மூலம் அன்புவழிதான் உலகிற்குத் தேவையென்று உறுதிசெய்யும் பௌத்தசமயம். துக்கத்திற்குக் காரணம் ஆசை. ஆசையைத் துறந்து நிர்வாணம் என்ற முத்திநிலையைத் தானே கண்டு தெளிந்து அவ்வுண்மைகளை உலகிற்கு உபதேசித்த பௌத்தசமய ஸ்தாபகரான புத்தர் பெருமானின் சமயமும்

கடவுள் ஒருவரே – அவரே அல்லா – அவர்முன் எல்லா மக்களும் ஒருவரே என்ற உயரிய தத்துவத்தையுடைய இஸ்லாமிய நெறியும்,

ஒருவரே கடவுள் ஒருவரே மக்கள் என்ற பத்துக் கட்டளைகளை வாழும் மனிதஇனம் முழுவதற்கும் வழங்கிய யேசுபெருமானின் கிறீஸ்தவ மார்க்கமும்,

சமயச்சார்புடையவர்கள் குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிக் கொள்ளும் உணர்வுடையவர்களாக கிணற்றுத் தவளைகளாக ஒருபோதும் வாழாது தத்தமக்குரிய மனஆற்றலால் மக்கள் ஒருவரே என விளங்கும் இப்பரந்து விரிந்த உலகைக் காணவேண்;டும் எனத் துணிந்து சிக்காக்கோவில் கூடிய சர்வசமயமாநாட்டில் அனைத்துலக சகோதரத்துவத்தைப்பற்றி முதல்முதல் பேசிய விவேகானந்தர் தோன்றிய இந்துதர்மமும்

இந்நாட்டில் கைக்கொண்டுவருகின்றவேளையில் நமது உடனடித்தேவை – ஒற்றுமையே என உணர்ந்து நாமிங்குகூடி எமது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கின்றோம். ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமாயின் முதலில் எம்மிடமுள்ள வேற்றுமைகளை விலக்கிக்கொள்ளவேண்டும். தன்னைப்போலச் சகல மற்றவர்களையும் நோக்கும் தன்மைபெறவேண்டும். பிறரது உணர்ச்சிகளுக்குப் பங்கம் ஏற்படா வண்ணம் வாழத்தெரிந்துகொள்வதற்கு ஆழ்ந்த அன்பும் உயர்ந்த எண்ணமும் பரந்த உள்ளமும் எம்மிடத்தில் குடிகொள்ள வேண்டும்.

சிந்தனை என்ற பேரறிவைக் கொண்ட மனிதன் எதிரில் வருபவனைச் சந்தேகக்கண் கொண்டு பார்க்கின்றான். எங்கே தன்னைக் கொன்றுவிடுவானோ என்று அஞ்சுகின்றான். இந்நிலை மாறவேண்டும். எம்மத்தியயில் அன்பும் அறமும் ஓங்கவேண்டும்.

சமூக ஒற்றுமைக்கு சமயங்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். திரிகரணசுத்தியோடு (அதாவது மனம் வாக்கு காயம்) எல்லோரும் வாழவேண்டும் என்ற உயரிய கொள்கையை ஏற்கவேண்டும்.

எங்கும் ஈசனைக் காணுதல் இன்பமே
ஏதிலார்பால் இரங்குதல் இன்பமே
பொங்கு கோபத்தைப் போக்குதல் இன்பமே
ஏன்றும் வாழக் கருதுதல் இன்பமே
என்ற யாழ்ப்பாணத்துச் சுவாமியினுடைய பாடலை நினைந்து நாமனைவரும் ஒருபரம்பொருளுடைய குழந்தைகள் என்ற உண்மையான சகோதர உணர்ச்சியில் நல்வாழ்வு வாழவேண்டும். அதற்காக இன்று மேற்கொள்ளப்படும் இச் சமூக சமய நடுநிலையத்தின் முயற்சிகள் மேன்மேலும் தொடரவும் அதன்மூலம் நற்பெறுபேறுகளைப் பெறவும் எல்லாம் வல்ல அந்த உண்மைப்பொருளைப் பிரார்த்தனை செய்து மனித சமூகநலனுக்கு இவ்வுமைப்பு மேற்கொள்ளும் சீரிய முயற்சிகளுக்கு எம்மால் முடியுமான பங்களிப்பையும் ஆதரவையும் வழங்க நாம் ஆயத்தமாக இருப்பதையும் தெரிவித்து எமது கருத்துக்களைச் சமர்ப்பித்து அமைகின்றோம்.

ஓற்றுமை இந்த ஊரிடை ஓங்குக
மற்றும் நற்குணம் முற்றும் ஆகுக
கற்றும் கேட்டும் கழலடி போற்றுக
நற்றவம் இந்த நாட்டில் நிலவுக.

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.

வணக்கம்.


(மேற்படி 31.03.1990 01.04.1990 ஆகிய 2 தினங்கள் மருதானை டீன்ஸ் வீதியில் அமைந்துள்ள சமூக சமய நடுநிலையத்தினரால் நடத்தப்பட்ட இன ஒற்றுமை பற்றிய கருத்தரங்கில் மூளாய் இந்து இளைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் என்ற ரீதியில் தங்கராசா முகுந்தன் ஆகிய அடியேனால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.)