Showing posts with label அனுபவங்கள். Show all posts
Showing posts with label அனுபவங்கள். Show all posts
Wednesday, October 10, 2012
மறக்க முடியாத இன்றைய நாள் - ஒக்ரோபர் - 10
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
அனுபவங்கள்,
நினைவுகள்
Thursday, August 4, 2011
மறக்க முடியாத நல்லூர்! திருவிழா இன்று ஆரம்பம்!

என் வாழ்க்கையில் மறக்க முடியாத சில சம்பவங்களுள் நல்லூர்த் திருவிழா ஒரு தனியான இடத்தை வகிக்கும்!
சிறு வயதில் எமது கிராமத்துப் பாடசாலை மூலம் அப்போதைய யாழ்ப்பாணப் பட்டணத்துக்கு சுற்றுலா போனது இன்றும் நல்ல ஞாபகம்!
வரும்வழியில் கல்லுண்டாயிலுள்ள உப்பளத்திற்கும் போய் உப்பு விளைவதையும் கண்டுவந்தோம்!
இது நடந்தது 1973 – 1974 காலப்பகுதிகளில் - இற்றைக்கு சுமார் 37 வருடங்களுக்கு முன்னர்.
நல்லூர்க் கோவிலுக்குப் போகுமுன்பு யாழ்ப்பாணப் பட்டணத்திலுள்ள – பழைய சந்தை – வள்ளுவர் - ஓளவையார் - பாரதியார் சிலைகள் – யாழ்ப்பாணக் கோட்டை – நூல்நிலையம் - இவற்றைப் பார்த்த பின்பு நல்லூருக்கப் போனோம்!
அப்போது கோவில் கேணி – தண்டாயுதபாணி கோவில் தனியாக பிரதான வீதிக்கு அந்தப் பக்கம் இருந்தது! அருகில் நாவலர் சிலை மண்டபம்!
இதற்கு முன்பாக கோவில்! கோவிலுக்கு அருகில் வெளியிலேயே ஒரு கூட்டில் அழகான மயிலும் இருந்து அகவியதை இப்போதும் மறக்க முடியாது!

இதன் பின்னர் 1977ல் தேரின்போது பஜனை பாடியதும் ஞாபகம்!
நல்லை நகர் வீற்றிருக்கும் கந்தா நின் சரணம்!
தொல்லைகளைத் தீர்த்தருள்வாய் கந்தா உன் சரணம்!
இல்லை உனக்கீடு என்றோம் கந்தா உன் சரணம்!
இடகரற்ற குரல் கொடுத்தோம் கந்தா உன்சரணம்!
பார்வதியாள் பெற்றெடுத்த பாலா உன் சரணம்!
பார்த்தருள்வாய் பைந்தமிழைக் காத்தருள்வாய் சரணம்!
இதற்குப் பின் 1984 – 1987 காலப் பகுதிகளில் மூளாய் இந்து இளைஞர் மன்றத்தின் அங்கத்தவராயிருந்த சமயம் - யாழ் மாவட்ட இந்து இளைஞர் பேரவை - நல்லை ஆதீனத் தொண்டர் சபை மூலம் நல்லூர் மகோற்சவ காலம் 25 நாட்களும் ஆலயத்தின் சுற்றாடலில் நாம் எம்மாலியன்ற தொண்டையும் பணிகளையும் மேற்கொண்டோம்!
ஒரு தடவை சரியாக எந்த ஆண்டு என்று ஞாபகமில்லை 1985 அல்லது 1986 ஆக இருக்க வேண்டும் தீர்த்த நாளன்று அதிகாலை 4மணிக்கு எழுந்து காலைக்கடன் முடித்து கோவிலுக்கு வந்தால் கோவிலின் பிரதான வாசற்கதவு பூட்டப்பட்டிருந்தது! பக்தர்கள் கோவிலின் வாசற்கதவை முண்டியடித்தபடி இருந்தனர்! உள்ளே பூசைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இயக்க இளைஞர்கள் சிலர் கோவில் கூரையின் மேல் எதையோ தேடுவதுபோல இருந்தது! நாங்கள் ஒரு 5,6 தொண்டர்கள் என்னவென அறிவதற்கு முயற்சி எடுத்தோம். கோவிலினுள் யாரோ குண்டு வைத்துவிட்டார்கள் என்ற கதை அடிபட்டது! நானும் ஓரிரு தொண்டர்களும் வாயிற்கதவுக்கு போய் பக்தர்களை அமைதிப்படுத்துவது என முடிவு செய்தோம். மிகவும் சிரமப்பட்டு நெரிசலுக்கு மத்தியில் வாயிற் கதவையடைந்தோம். இரும்புக் கதவை தள்ளியபடி கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது! நாங்கள் அவர்களுக்கும் கதவுக்கும் இடையில் சென்று கூட்டத்தை சற்றுப் பின்னகர்த்தி இருக்கும்படி சொன்னோம்! பக்தர்களில் பலர் எமது கருத்தை ஏற்று அமர்ந்திருந்தனர். ஒரு சில வயதான ஆண்கள் இருத்தி என்னத்தைச் சாதிக்கப் போகிறீர்கள் என்று கோபமாகக் கேட்டனர். நீங்கள் நின்று என்ன சாதிக்கிறீர்கள் என்று நான் பதிலுக்குக் கேட்டேன். முருகன் மீது உண்மையான பக்தி வைத்து விரதமிருந்தால் எப்படியும் தீர்த்தம் நாம் பார்க்கலாம்! என்று சொல்லி அடக்க முடியாத கோபத்தால் எனக்கு அழுகையும் வந்து விட்டது. ஒரு சில வயதானவர்கள் தம்பி இவர்களைத் திருத்த முடியாது நீர் ஏன் இவர்களுடன் சண்டையிடுகிறாய் என எனக்குப் பரிந்து பேசினார்கள்! இப்படி நாமும் அவர்களும் சண்டைபிடித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே கோவிலினுள் ஒன்றும் இல்லை என கோவிற்கதவையும் திறந்து விட்டார்கள்! தீர்த்தம் மிகச் சிறப்பாக நடைபெற்றது!1987இல் திருவிழா முடிந்த பின்னர் ஒக்டோபரில் 10.10.1987இல் புலிகளுக்கும் - இந்திய இராணுவத்திற்குமிடையில் போர் தொடங்கிய நாள் ஒரு சனிக்கிழமை!
புரட்டாதிச் சனிக் கிழமைகளில் வண்ணை ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவிலில் சனீஸ்வரருக்கு எள்ளெண்ணெய்ச் சட்டி எரிப்பவர்களுக்கு வசதியாக நாம் எரிந்த சட்டிகளை எடுத்து அப்புறப்படுத்தவது எமது பணி! இந்த நேரத்தில்தான் சண்டை தொடங்கியது. மதியம் ஒரு மணியிருக்கும். பலத்த குண்டுச் சத்தங்கள். பக்தர்கள் வருகை குறையவே ஆலயத்தையும் பூட்ட ஆயத்தமாக நாம் எமது வீடுகளுக்குச் சென்றோம். அப்போது நான்
கந்தர்மடம் பழம் றோட் பிள்ளையார் கோவில் ஐயா வீட்டில் தங்கியிருந்தேன்! கோவிலிலிருந்து திரும்பிய பின் சிலமணி நேரம் கழித்து எனது நண்பனொருவன் அவசரமாக வந்து "வாடா! நிறையச் சனம் காயப்பட்டுக் கிடக்காம்! உதவ யாருமில்லையாம்! நாங்கள் போவோம்" என்று சொல்ல நானும் அவனுடைய சைக்கிளில் ஏறிப் போனேன்! ஸ்ரீதர் தியேட்டருக்கு முன்பாக நாம் செல்லும்போது பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் விழுந்து ஒரு குண்டு வெடித்தது! ஒரு பெடியன் சைக்கிளுடன் விழுவதைப் பார்த்தோம்! அவனுக்கு உதவ நாம் விரைந்த போது மீண்டும் ஒரு குண்டு அதே இடத்தில்!
மீதி நாளை!
நல்லூர்க் கோவிலில் இடம் பெயர்ந்தவர்கள் பற்றிய செய்தியும் அடங்கும்!
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
அனுபவங்கள்,
நல்லூர்
Monday, June 13, 2011
ஜேர்மனி ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத் தேர்த்திருவிழா
எனது வாழ்க்கையின் 2 ஆவது அத்தியாயத்தின்(மறுபிறவி) 5 வருடங்கள் நேற்றுடன்(12-06-2011) முடிந்தது! இந்த 5ஆவது ஆண்டு நிறைவு நாளில் எனக்கு மிகவும் பிடித்த அன்னை ஸ்ரீ காமாட்சி அம்பிகையின் சந்நிதானத்தில் எனது பொழுதைப் போக்க ஆண்டவன் அளித்திருந்த திருவருளை எண்ணி வியந்தபடி இக்கட்டுரையை எழுதுகிறேன்!
பஞ்சபூதத்தலங்களில் முதன்மையாகிய காஞ்சிபுரத்திலுள்ள அம்பாளின் அதே உயர அகலத்தில் அமையப் பெற்ற கருவறையில் எழுந்தருளியிருக்கும் அம்பாளைக் கண்டதும் தன்னிலை மறக்கும் நிலை ஏற்படுவது உறுதி!
நான் உலகிலுள்ள 3 காமாட்சி அம்பாள் தலங்களைத் தரிசித்திருப்பது நான் செய்த பாக்கியம்! முதலாவதாக எமது யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் என அழைக்கப்படும் நாச்சிமார் கோவில் அம்பாளின் கும்பாபிசேக வைபவத்தில் கலந்து கொண்டேன். (1981ஆம் ஆண்டு முதலில் இனப்பிரச்சனை ஆரம்பித்த அடம் இதுதான். அதைத் தொடர்ந்தே யாழ்ப்பாண நகரம் தீக்கிரையாக்கப்பட்டது)
அடுத்தது காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில்! காஞ்சி மகா பெரியவரையும் இங்கு எழுந்தருளிய காமாட்சி அம்பாளையும் ஒரே நாளில் தரிசித்தமை பெரும் பேறு!
அடுத்து ஜேர்மனி ஹம் நகரிலுள்ள இந்த காமாட்சி அம்பாள்!
கடந்த 11.06.2011 சனிக்கிழமை நண்பகலில் தேவன் என்ற நண்பருடனும் எமது அடில்ஸ்வீல் முருகன் கோவில் சபரிமலை யாத்திரை குருசுவாமி சண்முகலிங்கம் அவர்களுடனும் சுவிற்சர்லாந்திலிருந்து ஜேர்மனிக்குப் புறப்பட்டு மாலையில் நேராக கோவிலுக்குச் சென்றபோது அன்னை ஸ்ரீ காமாட்சி அம்பாள் சப்பறத்தில் புறப்பட்டு ஆலயத்திற்கு வெளியே எழுந்தருளிய காட்சி மிக அருமையாக இருந்தது!
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்! நீண்ட காலத்திற்குப் பிறகு எனது சித்தப்பாவை(திரு. தம்பிநாதர் புவனேந்திரன் அவர்களை)ச் சந்தித்தேன். மூளாய் அருணகிரிநாதன் அண்ணனின் மகன் சரவணன் என்னைக் கண்டதும் ஓடோடிவந்து கதைத்தார்.
அன்றிரவு ஒரு அருமையான தங்குமிடத்தில் தங்கியபின் அடுத்த நாள் 12.06.2011 காலையில் தேருக்குப் புறப்பட்டோம். வாகனத் தரிப்பிடம் அனைத்தும் நிறைந்திருந்ததால் ஆலயத்தின் பின்புறம் சுமார் ஒன்றரைக் கிலோமீற்றர் தூரத்திலிருந்த தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து கோவிலுக்குச் சென்றபோது கோவில் நிறைந்திருந்தது! பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகைதந்து கோவிலை நிறைத்திருந்தார்கள்! உள்ளே கொடித்தம்ப பூசை நடைபெற்றுக் கொண்டிருந்தது!தம்பபூஜையில் தேவார புராணங்களுக்கு இடமளிக்கப்பட்டது - புதுமையாக இருந்தது. தொடர்ந்து ஆசீர்வாதம் நடைபெற்ற பின்னர் அஸ்திரதேவர் சுற்றுப்பலிப்பூஜைக்குப் புறப்பட்டார். கோவிலின் இரண்டாவது வீதியில் இது நடைபெற்றது.
பின்னர் வசந்த மண்டபப் பூஜை நடைபெற்று உள்வீதியுலாவைத் தொடர்ந்து யாகபூஜையின் பின்னர் இரண்டாவது வீதியில் வலம்வந்து தேருக்கு எழுந்தருளிய ஸ்ரீ காமாட்சி அம்பாள் விநாயகர் - சண்டேசுவரி சகிதம் அடியார்களுக்கு அருள்புரிந்தார்.
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
அனுபவங்கள்,
மறுபிறவி,
ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள்
Saturday, June 12, 2010
மறுபிறவியாக 4 வருடங்கள் முடிகிறது இன்று!
கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் என்னுடன் கதைக்கவேண்டும் என்றுசொல்லி 3ஆவது தடவையாக வந்தவர்கள் சுட்டுவிட்டு நான் இறந்துவிட்டதாகவும் செய்தி வெளியிட்டார்கள்!
எந்த உயிரையும் கொல்வதற்கு எவருக்கும் உரிமையுமில்லை. யாருக்கும் அந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.
பிறந்து, வளர்ந்து, நேசித்த - எனது ஊரவர்களால் காப்பாற்றப்பட்ட நான் - நம்பிக் கைக்கொள்ளும் கொள்கைகளால் இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பதாகவே உணர்கிறேன். சொந்த ஊரைவிட்டு வெகுதொலைவில் இருந்தாலும் பசுமரத்தாணிபோல மனதிலிருக்கும் எண்ணங்களை மீட்டுப் பார்ப்பதே தனியாக இருக்கும் எனக்கு பொழுதாக இப்போது இருக்கிறது!
சமயத்திற்கும் தமிழுக்கும் - அன்புக்கும் அமைதிக்குமாக ஊர்ஊராய்ப் போன நினைவுகளும் - பலருடன் பழகிய அனுபவங்களும் சொல்லமுடியாத அளவுக்கு மனதைக் கனமாக்குகிறது! பல இடங்களில் தங்கியிருந்த அனுபவங்களும் இதில் அடங்கும்.
கடந்த வருடம் நடந்த சம்பவத்தை முழுவதுமாக பதிவிட்டமையால் இவ்வருடம் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கின்ற சுவிற்சர்லாந்து நாட்டில் எனக்குப்பிடித்த சில புகைப்படங்களை பதிவிட எண்ணியுள்ளேன்!
எழுதுவதை நான் இப்போது பெரிதாக விரும்பவில்லை.
முழுதும் உண்மை
யாமறியோம்
ஒரு பொல்லாப்புமில்லை
எப்பவோ முடிந்த காரியம் என் குருநாதர் யோகர்சுவாமியினுடைய வாக்கியங்கள்!
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
அனுபவங்கள்,
சுவிற்சர்லாந்து,
மறுபிறவி
Wednesday, May 12, 2010
20 வருட நட்பை மீட்டுப் பார்க்கிறேன்!
எனக்குப் பிடித்த மலையகத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் கஹவத்தை - தலுகல்லைக்கு சமயச் சொற்பொழிவுக்காகச் சென்ற இன்றைய நன்னாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அரிய நட்பை பெற்றுத் தந்தது.
20 வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்தச் சம்பவத்தை விரிவாக எழுதவேண்டும் - ஆனாலும் பதிவுக்காகவும் நட்பின் உறுதியான அந்தப் பசுமையான எண்ணங்களாலும் இதை குறிப்பாக எனது பதிவில் தக்கவைப்பதற்காக இப்போது குறித்து வைத்துக்கொண்டு தொடர இருக்கிறேன். எனது கிருத்தியம் பதிவைத் தொடங்குவதற்கு காரணகர்த்தாவாக இருக்கும் பதிவர் நிர்ஷனும் இந்தப் பதிவுக்கு காரணமான - நட்பின் குடும்பத்தில் வருகிறார்.......
வேலைப்பளு காரணமாக இரவு தொடர்கிறேன்.

அனுபவங்கள்
Tuesday, September 15, 2009
கார்த்திக் சுபராஜ் அவர்களின் இனியொரு பதிவில் என்னுடைய இடுகை!
காட்சிப்பிழை – ஈழப்பிரச்சனையைத் தொட்டுச்செல்லும் 4நிமிடங்களும் 51 செக்கன்கள் கொண்ட அந்தக் குறும்படத்தைப் பார்த்ததும் உடனேயே (23.07.2009இல்) இட்ட இடுகையை ஒரு பதிவுக்காக இங்கு பதிவிலிடுகிறேன்.
எனக்கு இதைப் பார்த்தவுடன் பழைய ஞாபகங்கள் பல உருண்டோடின. அதில் ஒன்று இந்திய அமைதி காக்கும்படையுடன் விடுதலைப் புலிகள் யுத்தத்தை மேற்கொண்ட 10.10.1987 புரட்டாசிச்சனி மதியம்.
நல்லை ஆதீனத் தொண்டர் அணியினராகிய நாம் வண்ணார்பண்ணைப் பெருமாள் கோவிலில் தொண்டுப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மதியம் 1.00 மணியளவில் குண்டுச் சத்தங்கள் கேட்டன. கோவில் மூடப்பட்ட பின் அப்போது நான் தங்கியிருந்த கந்தர்மடம் பழம் றோட் பிள்ளையார் கோவில் ஐயா வீட்டிற்குப் போய் சற்று நேரத்தில் எனது நண்பன் ஒருவன் வந்து வாடா நிறைய சனம் காயப்பட்டுக் கிடக்காம். உதவ வேணும் என்று சொல்ல அவனுடன் யாழ்ப்பாண நகருக்குப் போனேன். குண்டுகள் வந்து விழுந்தபடி இருந்தது. என் கண்முன்னாலேயே ஒரு இளைஞன் குண்டடிபட்டு விழுந்தான். சைக்கிளில் விழுந்து கிடந்த சுபாஸ் ஹோட்டலுக்கு முன்பாக இருந்த பிள்ளையார் கோவிலுக்கு நானும் எனது நண்பனும் ஓடிப் போனோம். நாங்கள் எங்கள் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு ராணித் தியேட்டர் பக்கத்திலிருந்து அவருக்குப் பக்கத்தில் செல்லவும் அடுத்த குண்டு அதே இடத்தில். அந்த இடம் ஒரே புகை மண்டலமாயிருந்தது. காதுக்குள் கிண் என்ற சத்தம் மாத்திரம் – அந்த இளைஞனின் உடல் சிதறியிருந்தது. எனக்கு சற்று நேரத்தின்பின்னர்தான் என்னுடம்பில் ஏதோ செய்வதுபோல இருந்தது. பார்த்தால் எனக்கு ஒன்பது இடங்களில் ஷெல் துண்டுகள் – உடனேயே கத்தினேன் – ஐயோ! என்னைக் காப்பாற்றுங்கள் என்று!
இதை எழுதியதற்கு கார்த்தி எழுதிய பதில் - Hi thanga mukunthan..Your experience is really painful.Endru adangum nam thuyar?????

Sunday, September 13, 2009
சுவிற்சர்லாந்தில் எனது அனுபவங்களும் - இங்குள்ள சில நடைமுறைகளும் - பகுதி 5
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
அனுபவங்கள்,
சுவிஸ் அனுபவம்
சுவிற்சர்லாந்தில் எனது அனுபவங்களும் - இங்குள்ள சில நடைமுறைகளும் - பகுதி 4
உலகில் அழகான நாடு என்பதில் சுவிசுக்கு முதலிடம். இங்குதான் நானும் வாழ்கிறேன் என்பதில் கொஞ்சம் திருப்தி. இங்கு நான் வாழ்ந்தாலும் இது என் சொந்த நாடு இல்லைத்தானே! அதற்காகத்தான் அப்படிச் சொன்னேன். இங்கு நாம் அகதிகள் - ஆங்கிலத்தில் சொன்னால் Refugees -இந்குள்ள டொச் மொழியில் Auslander. 

படங்களில் இங்குள்ள சில வியாபார நிலையங்களும், புகையிரத நிலையங்களும் மற்றும் புகையிரதச் சீட்டை நாமே இயக்கிப் பெற்றுக்கொள்ளும் இயந்திரங்களும்தான்.
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
அனுபவங்கள்,
சுவிஸ் அனுபவம்
Subscribe to:
Posts (Atom)