Showing posts with label யோகர் சுவாமி. Show all posts
Showing posts with label யோகர் சுவாமி. Show all posts
Thursday, April 10, 2014
இன்று சிவயோக சுவாமிகளின் 50ஆவது குருபூசை!
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
அனுபவம்,
ஆன்மிகம்,
இந்துசமயம்,
நிகழ்வுகள்,
யோகர் சுவாமி,
வரலாறு
Saturday, August 14, 2010
நல்லூரைக் கும்பிடு! - நாளை கொடியேற்றம்!
வழமைபோல நல்லூர் முருகனின் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது! யாழ்ப்பாணக் குடாநாடே விழாக் கோலம் பூண்டுவிடும்.2006இல் இருந்து கடந்த 5 வருடங்களாக முருகனைக் காணாமல் மனம் தவியாய்த் தவிக்கிறது! எப்போது மீண்டும் ஒருதடவைவந்து தேரடியிலும் உள்ளே கொடித்தம்பத்துக்கு முன்பாகவும் விழுந்து கும்பிடுவேன் என்றிருக்கிறது!
கடந்த வருடம் வெளியாகிய நல்லைக் குமரன் மலரிலிருந்த எழிலான படங்களை இணைத்துள்ளேன்.




பல்லவி
நல்லூரைக் கும்பிட்டு நீ பாடு - அதனாலே
நாட்டிலுள்ள பிணிகள் ஓடும்
அநுபல்லவி
செல்லாதே வெறுங்கையாய் செல்லப்பன் வாழ்ந்த நாடு
தேங்காயுடன் பழம் கொண்டு நீ செல்லு
சரணம்
வாடி உன் மனம் ஓடினாலும் வருத்தங்கள்
கோடிகோடியாகக் டினாலும் குறைகள் வந்து
தேடி உன்னை மூடினாலும் செல்லப்பன் பாதம்
சிந்தித்தால் ஓடிப் போமே!
பெண்டு பிள்ளைகளென்று பேதைமை கொண்டு நீ
கண்ட கண்ட இடம் கலங்கி நீ திரியாதே!
(யோகர் சுவாமிகளின் நற்சிந்தனை)
கடந்த வருடம் வெளியாகிய நல்லைக் குமரன் மலரிலிருந்த எழிலான படங்களை இணைத்துள்ளேன்.




பல்லவி
நல்லூரைக் கும்பிட்டு நீ பாடு - அதனாலே
நாட்டிலுள்ள பிணிகள் ஓடும்
அநுபல்லவி
செல்லாதே வெறுங்கையாய் செல்லப்பன் வாழ்ந்த நாடு
தேங்காயுடன் பழம் கொண்டு நீ செல்லு
சரணம்
வாடி உன் மனம் ஓடினாலும் வருத்தங்கள்
கோடிகோடியாகக் டினாலும் குறைகள் வந்து
தேடி உன்னை மூடினாலும் செல்லப்பன் பாதம்
சிந்தித்தால் ஓடிப் போமே!
பெண்டு பிள்ளைகளென்று பேதைமை கொண்டு நீ
கண்ட கண்ட இடம் கலங்கி நீ திரியாதே!
(யோகர் சுவாமிகளின் நற்சிந்தனை)
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
நல்லூர்,
நற்சிந்தனை,
யோகர் சுவாமி
Friday, March 26, 2010
அடிவாங்கிச் சாகப்போறாங்கள்! அடிபட்டுச் சாகப்போறாங்கள்! - ஒரு விசர்க்குருவின் சீடனின் வார்த்தைகள்!
ஈழத்துச் சித்தர் பரம்பரையில் யாழ்ப்பாணத்து விசர்ச் செல்லப்பா சுவாமிகளைப் பற்றி பலரும் தெரிந்திருப்பார்கள்! அவரது சீடரான சிவயோகசுவாமிகளின் குருபூசைத் தினம் இன்றாகும் - பங்குனி ஆயிலியம்!யாழ்ப்பாணத்துக் கடைவீதிகளிலும் - நல்லூர்த்தேரடியிலும் இன்னும் பல வேறு இடங்களிலும் சுற்றித் திரியும் சுவாமிகளுக்கு பல அடியார்கள் பக்தர்களாக இருக்கிறார்கள். அவரை நேரடியாக காணாதபோதிலும்- அவரது சரிதத்தை அறிந்து வைத்திருக்கும் நான் அவரது சீடரான அமெரிக்க சைவசித்தாந்த திருச்சபையின் ஸ்தாபகர் ஸ்ரீ சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் அளவெட்டி ஆச்சிரமத்தில் 1985ஆம் ஆண்டுகளில் பணியாற்றினேன். திருச்சபையின் அமைச்சராக இலங்கையில் பணிபுரிந்த கலாநிதி சோ.சண்முகசுந்தரம் ஐயா யோக சுவாமிகளின் வாழ்வு அனுபவத்தை மிக அருமையாகச் சொல்லக் கேட்பேன்!
ஏறக்குறைய 25 வருடங்கள் மானசீகமாக சுவாமிகளை வழுத்திவருகிறேன்.நற்சிந்தனையின் எழுக புலருமுன் ஏத்துக பொன்னடி என்ற பாடலில்
தன்னைப் போலச் சகலமும் ஓம்புக
விண்ணைப் போல வியாபகமாகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை ... என்ற இந்த 3 வரிகளை ஏனோ என்மனம் இறுகப்பற்றியது!
இன்றும் உயிருடன் - வாழ்வதற்கும் இதுவே உற்ற துணையென நான் உணர்கிறேன். இன்றைய நாட்டு நிலையை கருத்தில்வைத்து சுவாமிகள் சொன்னதாக நான் கேட்ட அடிவாங்கிச் சாகப்போறாங்கள்! அடிபட்டுச் சாகப்போறாங்கள்! எப்பவோ முடிந்த காரியம் -
ஒரு பொல்லாப்புமில்லை - யாமறியோம் - முழுதும் உண்மை.
இந்த வார்த்தைகள் இன்றைய நிலைக்குப் பொருத்தமாகவே அமைகிறது. எமக்குள் அடிபட்டுச் செத்ததையும் - மற்றவர்களிடம் அடிவாங்கியதையும் சொல்லலாம்.
இன்றைய குருபூசை நன்னாளில் - எம்மை நல்வழிகாட்ட - அவரது பாடல்களான நற்சிந்தனையை நாம் படித்து முன்னேறுவோமாக!
http://www.himalayanacademy.com/resources/books/yogaswami/natchintanai/
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
ஆன்மிகம்,
யோகர் சுவாமி
Subscribe to:
Posts (Atom)



