
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின்

என் கடன் பணி செய்து கிடப்பதே!

தன்னைப் போலச் சகலமும் ஓம்புக
விண்ணைப் போல வியாபகமாகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை!

ஜாதி பேதம் ஒன்றும் இல்லை
ஏற்றத் தாழ்வு ஏதுமில்லை
மாலையிட்ட மாந்தருக்கு மனம் சுத்தமாகும்!
அந்த அரபிக் கடலும் பம்பா நதியும் நீரால் ஒரு நிறம் தான் மனிதர்கள் ஒரு குலம் தான்!
மீள முடியாத தாக்கங்கள் - இழப்புகள் - மன உளைச்சல்களைப் பெரிதும் சுமந்தவந்த 2009ஆம் ஆண்டை ஒருபோதும் ஈழத்தமிழர்கள் மறந்துவிடார்கள்- மறந்துவிடவும்முடியாது! இனிமேலும் இப்படியொரு அழிவை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது! மனம் மிகவும் கனத்த நிலையில் புதிய 2010ஆம் ஆண்டை வரவேற்பது கடமையாகிறது!
வாழ்வாதார அடிப்படை வசதிகளை துறந்து தவித்து நிற்கும் மக்களைப் பற்றி இன்றைய ஜனாதிபதி தேர்தல் வரும் நேரத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலுமாக இனி வரும் காலம் இனிய பொழுதாக எமது மக்களுக்கு நல்லதொரு வழியை ஏற்படுத்த இறைவனை வேண்டுவதுடன் - நாமும் அதற்கு எம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளுவதுமே இன்றைய கடமையாகிறது!
எப்படியாகிலும் பழகிய தெரிந்த தொடர்பான அனைவருக்கும் புதுவருடம் பசுமையாக இனிமையைத் தரட்டும் என வாழ்த்த முனைகிறேன்!
என்றும் மறவாத அன்புடன்
தங்க. முகுந்தன்.