அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, March 28, 2009

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் வேண்டுகோள்!


இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ள மக்களுக்கு இந்து மாமன்றம் உதவிசெய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே!

என்ற திருமூலரின் திருவாக்கிற்கு அமைய தர்ம உள்ளம் கொண்ட அனைவரையும் இக் கைங்கரியத்தில் இணையுமாறு கிருத்தியத்தின் சார்பாக அன்புடனும் தயவுடனும் வேண்டுகிறோம். இக்கடிதத்தின் பிரதியை அனுப்பிவைத்த கொழும்பு ஸ்வாமிக்கு எமது நன்றிகள்!!!

Saturday, March 14, 2009

கன்னியாகுமரி ஸ்ரீ விவேகானந்த ஆச்சிரமத்தின் ஸ்தாபகர் ஸ்வாமி மதுரானந்த மகராஜ் அவர்கள் - 1

சுவாமி மதுரானந்தர் (வாழ்க்கைச் சுருக்கம்)

சுவாமிகளுடைய வாழ்க்கை வரலாற்றை வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்த ஆச்சிரமத்தினர் சிறிய நூலாக 1999 ஜூனில் வெளியிட்டுள்ளார்கள். அதனை அப்படியே இங்கு பதிவிடுகிறேன்.

முன்னுரை

இதுவரை ஒரு தூய வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். இந்த எனது நீண்ட வாழ்க்கையில் ஒரு தீய எண்ணமோ தீய சிந்தனையோ என் மனத்தில் எழுந்ததில்லை இதுதான் நான் கண்ட அதிசயம் - உங்கள் துறவு வாழ்க்கையில் நீங்கள் கண்ட அதிசயம் என்ன? என்று சுவாமி மதுரானந்தரைக் கேட்டபோது அவர் கூறிய பதில் இது.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் இவர்களின் வழி வந்த ஒரு துறவியின் பதில் இப்படித்தான் இருக்கும். சித்து வேலைகளையும் நோய்தீர்ப்பது போன்ற சில ஆற்றல்களையும் அவர்கள் ஒருபோதும் அதிசயமாகக் கொண்டதில்லை. அப்பழுக்கற்ற ஒரு புனித வாழ்வையே அவர்கள் பேரதிசயமாக எண்ணினர். அத்தகையதொரு வாழ்க்கை வாழவே முயன்றனர். இப்படியோர் அதிசய வாழ்வை நம்மிடையே வாழ்ந்தவர் சுவாமி மதுரானந்தர்.

இளமை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் என்ற சிற்றூரில் 1922 ஏப்ரல் 14ஆம் நாள்(சித்திரை மாதம் விசாக நட்சத்திரம்) வெள்ளியன்று சுவாமிகள் பிறந்தார். இவரை மகனாக அடையும் பேறு பண்டாரம்பிள்ளைக்கும் லட்சுமி அம்மையாருக்கும் கிடைத்தது. அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பையாபிள்ளை. மிகச் சிறுவயதிலேயே சுவாமிகளிடம் காணப்பட்ட மூன்று முக்கியமான பண்புகள் இறைவனிடம் பக்தி, துறவிகளிடம் ஈடுபாடு, அஹிம்சை ஆகியவை ஆகும்.

அவரது வீட்டிற்கு முன்னால் பஜனை மடம் ஒன்று இருந்தது. அங்கே தினமும் ஸ்ரீராமர் பூஜையும் பஜனையும் நடைபெற்றது. இவை சுவாமிகளின் வாழ்வில் முதல் தாக்கங்களாக அமைந்தன. சிறு வயதிலேயே தேவாரம், திருவாசகம், திருப்புகழ், கீதை போன்ற நூல்களைப் படிப்பதற்கான வாய்ப்பும் சுவாமிகளுக்குக் கிடைத்தது.

காவி அணிந்த யாரைக் கண்டாலும் அவரை வணங்கி, வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவு கொடுப்பார் சுவாமிகள். அவர்களுக்குச் சேவை செய்வதற்கான எந்த வாய்ப்பையும் நழுவ விடமாட்டார்.

அவர் ஆறாம் வகுப்பில் படிக்கும் போது தமிழாசிரியர் ஒரு நாள் வகுப்பில்,
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்
என்ற திருக்குறளை விளக்கினார். அன்றுமுதல் தாயார் எவ்வளவோ வேண்டிய பின்னும் புலாலை மறுத்துவிட்டார்.

வாலிப நாட்கள்

பக்தி, துறவுவாழ்வில் நாட்டம், அஹிம்சை போன்ற பண்புகள் சுவாமிகளின் வாலிப நாட்களையும் ஆக்கிரமித்திருந்தன. அஹிம்சையில் இவ்வாறு அவர் கொண்ட நாட்டம்தானோ என்னவோ அவரை காந்தியடிகளிடம் மிகவும் ஈடுபடச் செய்தது. கல்லூரி நாட்கள் வரை காந்தியடிகளுக்கும் அவரது கருத்துக்களுக்கும் சுவாமிகளின் வாழ்க்கையில் ஒரு தனியிடம் இருந்தது.

கல்லூரிப் படிப்பிற்காக திருவனந்தபுரத்தில் 1941இல் இன்டர்மீடியட்டில் சேர்ந்தார் சுவாமிகள். அவருடைய கல்லூரிப் படிப்பும் அலாதியாகவே இருந்தது. திருவனந்தபுரம் சித்ரா இந்துமத நூல்நிலையத்தில் தினமும் காலையில் பெரிய பண்டிதர்கள், துறவிகள் சமய வகுப்புகள் நடத்துவது வழக்கம். தினமும் காலையில் அதில் பங்கெடுத்த பின்னரே கல்லூரிக்குச் செல்வார். மாலையிலும் விவேகானந்தர் போன்றோரின் நூல்களைத்தான் படிப்பார். கல்லூரிப் பாடங்களை எப்போது படிப்பது? இறுதித் தேர்விற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான்: அப்போதுதான் கல்லூரிப் பாடங்களைப் படிக்கத் தொடங்குவார், தேறியும் விடுவார்.

இளமையிலும் சரி, வாலிப நாட்களிலும் சரி சுவாமிகளை வழிநடத்தி வந்தது மிகவும் கட்டுப்பாடான வாழ்க்கை. நல்லொழுக்கம், நற்பண்புகள், ஆன்மீக சாதனைகள் என்று வந்தபோது எந்த நிலையிலும் அவர் தளர்ச்சிக்கு இடம் கொடுத்ததே இல்லை. கல்லூரி நாட்களில் அவர் எழுதிய டயரிக் குறிப்பு ஒன்றில் - இன்று இன்னாரிடம் கோபமாகப் பேசினேன். எனவே இரவு உணவு தவிர்க்கப்பட்டது – என்று காணப்படுகிறது. வாழ்க்கையை அவர் எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தார், எத்தகைய கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்தார் என்பதை இதிலிருந்து ஊகிக்கமுடிகிறது.

பக்தி, பஜனை, ஆன்மீகம், தெய்பீகம் என்று அவரது வாழ்க்கை சென்றாலும் அத்தனையையும் முறைப்படுத்தி, ஒரு தகுந்த பாதையில் அவரை வழிநடத்த ஒருவர் தேவைப்பட்டார். அத்தகைய ஒருவரைச் சந்திக்கின்ற வாய்ப்பு விரைவில் சுவாமிகளுக்குக் கிடைத்தது.

(தொடரும்)

Monday, March 9, 2009

கன்னியாகுமரி ஸ்ரீ விவேகானந்த ஆச்சிரமத்தின் ஸ்தாபகர் ஸ்வாமி மதுரானந்த மகராஜ் அவர்கள் புகைப்படங்கள்
















இந்து தர்ம வித்யா பீடத்தின் சென்னையில் நடந்த சமய மாநாட்டுப் படங்கள்





Wednesday, February 25, 2009

பூசாவில் உள்ள கைதிகள் பற்றிய விபரங்கள் தேவை - TULF

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பத்திரிக்கை செயதி

இனந்தெரியாத ஆயுததாரிகளால் யாழ்பாணத்திலும் கொழும்பிலும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் சம்பந்தமாக அவர்களின் உறவினர்கள் மூலமாக எமக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் கௌரவ வீ. ஆனந்தசங்கரி அவர்களின் பணிப்பின் பேரில், அவரின் செயலாளர் திரு. இரா. சங்கையா அவர்களின் தலைமையில் கடந்த ஒரு மாதகாலமாக எமது குழுவினர் சில இடங்களை பார்வையிட்டுள்ளனர். அதன்படி சில தகவல்களும் பெறப்பட்டுள்ளன. அதனடிப்படையில் கடந்த 20..02.2009ம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டு பூசா சிறையில் உள்ளவர்களையும் பார்வையிட்டு விபரங்களை சேகரித்து வந்துள்ளனர்.

பூசாவில் உள்ளவர்களில் குறிப்பாகப் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். ஒருசில வயதான தாய்மார்கள் கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள் நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள் போன்றவர்களின் நிலை பரிதாபகரமானதாகவே காணப்படுகின்றது. இவ்வாறானவர்களின் விசாரனையை துரிதமாக முடித்து அவர்களை விடுதலை செய்வதற்காக சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்து நடவடிக்கைகளை மேற்nகொள்ளவேண்டுமென எமது குழுவினர் தலைவர் வீ. ஆனந்தசங்கரி அவர்களை கேட்டுக்கொண்டனர்.

அத்துடன் பூசாவில் அடைக்கப்பட்டுள்ள ஆண்கள் அனைவரும் அரசியல் தலைவர்கள் மீது ஆத்திரத்துடனும் வெறுப்புடனும் உள்ளனர். அடிக்கடி பூசாவிற்கு செல்லும் அரசியல்வாதிகள் அவர்களைப் பார்த்துவிட்டு பத்திரிக்கைகளுக்கு வெறும் அறிக்கைகளைமட்டும் கொடுத்துவிட்டு தமது கடமை முடிந்தவிட்டதாக நினைத்துக்கொண்டு செயற்படுவதாகவும் தங்களின் விடுதலையைப்பற்றி எவருமே சிந்திப்பதேயில்லை எனவும் கூறி விசனப்பட்டார்கள்.

எத்தனையோ கொடூரமான கொலைகளை செய்தவர்களும் விலைமதிக்கமுடியாத சொத்துக்களையெல்லாம் அழித்தவர்களும் இன்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசதி வாய்ப்புகளுடனும் தங்களை ஒரு மிகப்பெரிய ஜனநாயகவாதிகளாகக் காட்டிக்கொணடு பொறுப்பான பதவிகளையும் வகித்துக்கொண்டு; அதி உயர் பாதுகாப்புக்களுடன் வலம் வரும் போது இவர்கள் பாவம் ஏதோ சிறு சிறு குற்றங்களை செய்துவிட்டு சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல் பலர் தாங்கள் செய்த குற்றங்களுக்காக மனம் வருந்தி வேதனைப்பட்டார்கள். ஒரு சிலர் தங்களையறியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் நிர்ப்பந்தத்தின் பேரில் குற்றமிழைத்தவர்களும் உள்ளனர். ஒரு சிலர் விடுதலைப் புலிகளுக்கு ஒரு வேளை சாப்பாடு கொடுத்தவர்களும் ஒரு வேளை தேநீர் கொடுத்தவர்களும் புலிகள் என்று தெரியாமல் வீடுகளில் தங்குவதற்கு இடம் கொடுத்தவர்களும் உள்ளனர். இவ்வாறானவர்களின் பரிதாபகரமான நிலைமையினை எமது குழுவினர் தiலைவரிடம் எடுத்துக்கூறினர்.

மேலும் சில அப்பாவி மலையகத்து இளைஞர்கள் என்ன செய்கின்றோம் எதற்காக செய்கின்றோம் எனத் தெரியாமல் விளைவுகளைப்பற்றியறியாமல் சிறு சிறு தவறுகளைச் செயதுவிட்டு சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள் இவ்வாறான அப்பாவிகளின் எதிர் காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

எது எப்படியோ இவர்களுக்கெல்லாம் பொது மன்னிப்பு என்றபேரிலாவது நிபந்தனையின் அடிப்படையில் சில பெரியோர்களின் கையில் பொறுப்பினை ஒப்படைத்து விடுதலை செய்ய முயற்சியினை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுமாறு எமது குழு தலைவரைக் கேட்டுக்கொண்டது.

எமது குழுவினரின் அறிக்கைகளையும் கோரிக்கைகளையும் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொண்ட எமது தலைவர் கௌரவ வீ. ஆனந்தசங்கரி அவர்கள் மிக விரைவில் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களை சந்தித்து சிறையில் இருப்பவர்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்;.

எமது தலைவர் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது யாழ்ப்பாண விஜயத்தின் போது எடுத்த நடவடிக்கை காரணமாக குறிப்பிட்ட ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த வெள்ளை வான்களில் ஆட்களை கடத்தல் கொலை செய்தல் போன்ற சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. மேற்படி குழுவினரின் செயற்பாடுகளை உயர் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு எமது தலைவர் எடுத்துச் செனறதாலேயே இச்சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. சில ஊடகங்கள் எம்முடன் இணைந்து தைரியத்துடன் செயற்பட்டாலே போதும் இவ்வாறான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

மேலும் எமது குழுவினர் காணாமல் போனவர்கள் சம்மந்தமாக இன்னும் சில இடங்களை பார்வையிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கீழே பெயர் குறிப்பிட்டவர்களின் உறவினர்கள் யாராவது இருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

1. சிவபாதசுந்தரம் சோபனா சுண்டிக்குளம் 40ம் வாய்க்கால் பிரமந்தனாறு விசுவமடு
2. வேலன் முருகுப்பிள்ளை 12 கட்சன் வீதி வட்டக்கச்சி
3. இராசரத்தினம் அற்புதமலர் தேவன் பிட்டி வெள்ளாங் குளம் புதுக்காடு மன்னார்
4; ஜேகதீஸ்வரன் ஜெயதரன் அடம்பன் மன்னார்
5. அருமைநாதர் குகதர்சினி வைரவர் கோவிலடி கண்டி வீதி பரந்தன்
6. இராசலிங்கம் வளர்மதி(கார்த்திகா) 137 உதயநகர் கிளிநொச்சி
7. பாஸ்கரன் சிவசக்தி அருட்செல்வராணி 57 கல்விளான் துனுக்காய்
8. த. சுபாசினி இணுவில் தெற்கு இணுவில்
9. கணேசலிங்கம் 566 7ம் யுனிட் இராமநாதபுரம் வட்டக்கச்சி
10. சிவனடியான் குகராஜ் அளவெட்டி தெற்கு அளவெட்டி
11; மகேந்திரன் மதனகுமார் உக்கிலாங்குளம் வவுனியா
12. கந்தசாமி யசிந்தன் வரணி யாழ்ப்பாணம்
13. ஜெயராசா அசோக்குமார் பாசையூர் யாழ்ப்பாணம்
14. பூபாலசிங்கம் கபிலன் பத்து}ர் கிழக்கு புத்து}ர்
15. சண்முகநாதன் சதீஸ்கரன் இணுவில் கிழக்கு இணுவில்
16.;;; பஸ்டியான் தினேஸ் நாவலர் வீதி நாவாந்துறை யாழ்ப்பாணம்
17. இராசலிங்கம் சந்திரமோகன் உடபுஸ்ஸல்லாவ
18. அய்யாத்துரை முருகஜோதி வேப்பங்குளம் வவுனியா
19. கிருஸணபிள்ளை சந்திரமோகன் கல்லப்பாடு முல்லைத்தீவு
20. அரியதாஸ் சிவாஜினி உரும்பிராய் கிழக்கு உரும்பிராய்

தொடர்புகளுக்கு
தமிழர் விடுதலைக் கூட்டணி(TULF)
30 /1B அல்விஸ் பிளேஸ் கொழும்பு 03

தொலைபேசி 0094112347721 0094772487339

Wednesday, January 14, 2009

தமிழர் திருநாளில் அல்லல்கள் நீங்கிடப் பிரார்த்தனை செய்திடுவோம்!!

Friday, January 2, 2009

2009 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்


நாட்டில் அமைதி ஏற்படவும் சமாதானம் பிறக்கவும் இன்றைய புத்தாண்டு தினத்தில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றேன்.