
17.05.2009
கலைஞர் டாக்டர் மு. கருணாநிதி
முதலமைச்சர் – தமிழ் நாடு
சென்னை.
பெரு மதிப்புக்குரிய ஐயா,
பாராளுமன்ற தேர்தல் - 2009
நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தங்களின் ஐக்கிய முற்போக்கு முன்னணி ஈட்டிய பிரமிக்கத்தக்க வெற்றியை இந்திய மக்களுடன், குறிப்பாக தமிழ் நாட்டு மக்களுடன் இனைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியும் பெருமகிழ்ச்சி அடைகின்றது.
தமிழ் நாட்டில் தங்கள் முன்னணி பெற்ற பெரும்பான்மை ஸ்தானங்கள், இலங்கை பிரச்சனையில் தங்களின் நிலைப்பாட்டிற்கு மக்கள் கொடுத்த ஆணையே. தங்களை வாழ்த்துவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
நம் மக்களின் நலன் கருதி 33 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும் தங்களுக்கும் எதனால் உறவு ஏற்பட்டதோ, அதே போன்ற காரணத்திற்காக அவ் உறவை புதுப்பிக்க வேண்டிய காலம் வந்துள்ளது. நான் மிக விரைவில் தங்களை நேரில் வந்து வாழ்த்து கூறுவேன்.
நல் வாழ்த்துக்களுடன்,
வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்,
தமிழர் விடுதலைக் கூட்டணி.
No comments:
Post a Comment