
1978ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம். சிவதலம் ஆவரங்காலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இரண்டாவது தேசிய மாநாடு நடந்து கொண்டிருந்தது. ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் சிவன் கோவில் எதிரேயுள்ள பரந்த புல் வெளியை நிறைத்திருந்தனர்.
(மாநாட்டின் இலக்கியவிழாவில் இந்த நூலாசிரியர் திராவிடரும் இந்துவெளி நாகரீகமும் என்னும் மகுடத்தில் உரை நிகழ்த்தினார்)
அவ்வேளை சுமார் மூன்று மைல்கள் தள்ளி இடைக்காட்டிலிருந்து ஆயுதம் ஏந்த முனைந்து நின்ற இளைஞர் கூட்டம் புறப்பட்டது. ஏறக்குறைய 150 இளைஞர்கள். அவர்கள் அனைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் பேரவை வாலிப முன்னணி என்பனவற்றில் முன்னர் அங்கம் வகித்தவர்கள்.......
"அகிம்சை வேண்டாம் ஆயுதப் போராட்டம் வேண்டும்" என்று கோசமிட்டபடி ஊர்வலமாக அச்சுவேலி வழியாக வந்து மாநாட்டு மைதானத்தை அடைந்தனர். பத்தடி உயரமான மேடை முன்னின்று யுத்தகோசம் முழங்கினர்.
பரந்தன் ராசன் தலைமையிலான பார்வையாளர்கள் அவர்களை வெருட்டித் துரத்திவிட்டனர்.அவர்கள் பார்வையாளர்களோடு கலந்து கொண்டனர்.
நள்ளிரவைக் கடந்த பின்னர் தேசிய மாநாட்டில் அமிர்தலிங்கம் அவர்கள் இறுதியாகப் பேசினார்.அவ்வேளை இளைஞர்கள்களின் ஆயுதப் போராட்ட முயற்சியை வன்மையாகக் கண்டித்தார். பேரழிவைக் கொண்டுவரும் என்று எச்சரித்தார். இறுதியில் "ஆயுதப் போராட்டம் சுடலையில்தான் கொடி பறக்கவிடும்" என்று ஆரூடம் கூறினார்.
No comments:
Post a Comment