
அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் மறைந்து இருபத்தொரு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. எனினும் அவர் தொடர்பாகத் தவறான கருத்துக்கள் நிரம்பவே இப்பொழுதும் தெரிவிக்கப்படுகின்றன. அவை பற்றிய ஆய்வைக் கொண்டது இந்த நூல்.
பேராசிரியர் வி.சூரியநாராயணன் பிரபாகரனை ‘பரங்கன்ஸ்ரைனின் இராட்சதனாக’ (Frankenstein’s monster) உருவாக்கியவர் அமிர்தலிங்கம் என்றும், அவர் யாழ்ப்பாணத்திற் தங்கியிருந்து சுதந்திரப் போருக்குத் தலைமை தாங்கவில்லை என்றும் குற்றம் சுமத்துகின்றார். அமிர்தலிங்கம் அவர்களைச் சார்ந்தவர்கள் கணிசமானவர்களும் அதே கருத்துடையவர்களாக உள்ளனர்.
கேம்பிரிட்ஜ் மேதை சட்டத்தரணி சத்தியேந்திரா நடேசன், அமிர்தலிங்கம் இந்திய சமாதான இராணுவத்தின் கொடுமைகளைக் கண்டிக்கவில்லை என்று குற்றம் சுமத்துகின்றார். இதே கருத்தினை யாழ் நகரத்தைச் சுற்றிய பிரதேச மக்கள் ஒட்டுமொத்தமாகக் கொண்டுள்ளனர். இன்னும் 20ஆம் நூற்றாண்டு 100 தமிழ்த் தலைவர்களில் அமிர்தலிங்கம் ஒருவரல்ல என்று சத்தியவாக்காக எழுதுகின்றார்.
நாற்பதாண்டு அரசியற் பயணத்தில் அமிர்தலிங்கம் எதுவும் சாதிக்கவில்லை என்று இயக்கங்கள் சார்ந்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர். அடிப்படை உரிமைகள் சிலவற்றோடு, பதினாறு துறைகளில் அமிர்தலிங்கம் சாதனைகள் நிகழ்த்தியுள்ளார் என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது. அதே சமயம் 40 ஆண்டுகள் அரசியற் களத்தில் நின்ற இயக்கங்கள் செய்த சேவையை யாரும் அலசிப் பார்ப்பதாக இல்லை.
1977 தேர்தலைத் தொடர்ந்து ‘தேசிய சபையை’ உருவாக்கி, வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு அமைவாக விடுதலையை அமிர்தலிங்கம் முன்னெடுக்க வில்லை என்ற குற்றச் சாட்டும் உண்டு. அது பற்றிய தெளிவான அறிவு; தலைவர்கள் தொடக்கம் சாதாரண மக்கள் வரை பூச்சியமாக உள்ளது.
அமிர்தலிங்கம் தவிர்ந்த, இராமநாதன் தொட்டு வந்த அத்தனை தலைவர்களும் மருந்துக்கும் ‘வெளிநாட்டுக் கொள்கை’ ஒன்றில்லாமலே அரசியல் நடாத்தியுள்ளனர்.
அமிர்தலிங்கம் கொள்ளைகொள்ளையாக தேட்டம் தேடினார், துரையப்பாவின் மரணச் சடங்கிற் கலந்து கொள்ளவில்லை, மாவட்ட சபையை ஏற்றார், இந்திய சார்பாகச் செயற்பட்டார், 1987 இலங்கை-இந்திய உடன்படிக்கையைக் கொண்டு வந்தார் - இவ்வாறான வேறும் குற்றச் சாட்டுகள் உண்டு. இவை பற்றிய விசாரணைகள் நூலில் ஆய்வுக்கு உள்ளாகின்றன.
******
“20ஆம் நூற்றாண்டுத் தமிழ் ஈழ வரலாற்றுக் கதாநாயகன் - காவியநாயகன் யார்?”
****
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
க.கதிர்காமநாதன்
விழா ஒருங்கமைப்பாளர்.
தொடர்புகளுக்கு: 001 416 939 2220
3 comments:
புத்தகம் வெளியிட்டதும் விமர்சனத்தை தெரிவியுங்கள்
ஈழ வரலாற்றில் அதிக அக்கறையுடைய உங்களுக்காக புத்தகம் ஒன்று இருக்கிறதே!
நன்றிங்கோய்ய்ய்ய்
Post a Comment