Wednesday, June 12, 2013
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 10)
ஆவணப்படுத்தலுக்கு சில முக்கிய பத்திரிகைச் செய்திகளை இணைக்கலாம் எனக் கருதியமையால் அவற்றை இங்கு சேர்த்துள்ளேன்.
16.06.1981 வீரகேசரி “யாழ் பொதுநூலகத்தை எரித்தது காட்டுமிராண்டிச் செயல் - வாசுதேவநாணயக்கார - கூட்டணி எம்பிக்களின் பகிஷ்கரிப்புக்கு ஆதரவு
17.06.1981 ஈழநாடு தாவீது அடிகள் மற்றும் நால்வர் ஆத்மசாந்திக்கு அஞ்சலி அச்சுவேலி தம்பாலையைச் சேர்ந்த பாலசோதி,
கோப்பாய் பயிர்ச்செய்கை உத்தியோகத்தர் பரமேஸ்வரன்,
நீர்வேலி சலவைத் தொழிலாளி கணபதிப்பிள்ளை சண்முகம்,
தெல்லிப்பழை கோவிந்தசாமி சண்முகராஜா
17.06.1981 தினபதி யாழ் கொலை,கொள்ளை, தீவைப்பு சம்பவங்களுக்கு மாநகராளுமன்றம் பலத்த கண்டனம் உறுப்பினர்கள் ஆவேசமான உரை -
தினபதிப்படங்களுக்கு நன்றி – தலையங்கத்துக்குப் பாராட்டு
22.06.1981 தமிழ்த் தேசிய இனத்தைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது ஆயுதப்படையினர் வாபஸ் பெறவேண்டும் - தமிழ்க் காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்
24.06.1981 வீரகேசரி எங்களைக் கண்டதும் பொலிசார் மதில் ஏறிக் குதித்து அப்பால் சென்றனர் - யாழ் பொதுநூல்நிலையக் காவலாளி பொலிஸ் விசாரணையில் தகவல்
6.7.1981 வீரகேசரி அணுகுண்டைவிட ஆத்மீக சக்திக்கு அதிகவலிமை உண்டு - வவுனியா உண்ணாவிரதத்தில் சாவகச்சேரி எம்.பி.
8.7.1981 வீரகேசரி யாழ் நூலக எரிப்பு பற்றி எனக்கும் கவலை உண்டு. ஆனால் கண்டிக்கும் நிலையில் இல்லை. அமைச்சர் என்பதால் அரசின் முடிவகளுக்கு கட்டுப்பட்டிருக்கிறேன் என்கிறார் “தேவா”
12.7.1981 யாழ் நூலக புனரமைப்பு நிதிக்கு தாராளமாக உதவுங்கள் - மகாநாயக்க தேரோக்கள், இதிமேற்றிராணிமார் மற்றும் பிரமுகர்கள் வேண்டுகோள்
14.7.1981 ஈழநாடு யாழ் வன்செயல்கள் குவைத் நாட்டுப் பத்திரிகை வெளியிட்ட செய்தி
17.7.1981 தினகரன் யாழ் வன்செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் - கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா
12.10.1981 ஈழநாடு ஈழத்தமிழருக்கு எப்படி உதவலாம் என்பதுபற்றி முடிவு செய்ய அனைத்துக்கட்சி மகாநாடு தமிழக முதல்வர் கூட்டுகிறார் யாழ் நூலகத்துக்கு நூல்கள் வழங்க எம்.ஜி.ஆர் ஏற்பாடு.
15.10.1981 யாழ் மக்களின் கவலையில் நானும் பங்கெடுக்கின்றேன் - யாழ்நகரில் ஆரியரத்னா
8.11.1981 பொதுசனநூலகத்துக்கு 1 1/2 லட்சம் ரூபா நூல்கள் யாழ் கிறீஸ்தவ ஐக்கிய சங்கம் வழங்கும்.
13.12.1981 ஈழநாடு யாழ் பொதுசன நூலக புனரமைப்பு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றும் நாளையும் வீடுகளில் நிதி திரட்டுவர்
21.12.1981 ஈழநாடு யாழ் பொது சன நூலகநிதி - பல்கலைக்கழக மாணவர்கள் ரூ 193,965 சேர்த்தனர்
23.12.1981 வீரகேசரி யாழ் நூலக கட்டிட நிதிக்கு வரிவிலக்குக் கோருகிறார் சூசை
20.1.1981 ஈழநாடு யாழ் நூல் நிலைய புனரமைப்புக்கு நிதி திரட்டும் பணியில் தொழில் பிரமுகர்கள் குழு!
24.2.1982 ஈழநாடு நூலகத்துக்கு வைக்கப்பட்ட தீ தமிழினத்துக்கு ஏற்பட்ட சவால்! இதனைக்கட்டி எழுப்புவது தமிழினத்தின் தூய கடமை - நூலக வார ஆரம்பத்தில் அமிர்
25.02.1982 வீரகேசரி யாழ் பொது நூலகத்தை கட்டிமுடித்து மீண்டும் பூத்துக் குலுங்க வைப்பது தமிழரின் தலையாய கடமை - கொடிதின ஆரம்ப விழாவில் தலைவர் அமிர் கோரிக்கை
25.2.1982 தினபதி யாழ் நூலகவாரத்தையொட்டி வியாழக்கிழமையன்று நூலக கொடி தினம் அனுட்டிக்கப்பட்டது. யாழ் முதல்வர் திரு.இராசா விசுவநாதன் முதலாவது கொடியை எதிர்க்கட்சித் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கத்துக்கு அணிவித்து கொடி விற்பனை தினத்தை ஆரம்பித்து வைத்தபோது எடுக்கப்பட்ட படம்.
3.6.1982 வீரகேசரி தமிழனைத் தமிழனே அழித்துக் கொள்ள வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். யாழ் உண்ணாவிரதத்தில் அமிர் - சரியான தலைமையின்றி தவறான பாதையில் செல்லாதீர்
தினபதி 3.6.1982 யாழ் பொது நூல்நிலையம் எரிக்கப்பட்ட ஓராண்டுப் பூiர்த்தியை முன்னிட்டு நூல்நிலையத்தின் முன்னால் நேற்றுக் கூட்டணியினர் உண்ணாவிரதம் இருந்து துக்கம் அனுட்டித்தனர். உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட யாழ் எம்.பி. திரு. வெ. யோகேஸ்வரன், திரு. நீலன் திருச்செல்வம், மன்னார் எம்.பி திரு. பி.எஸ் சூசைதாசன் , கோப்பாய் எம்.பி. திரு. எம். ஆலாலசுந்தரன் ஆகியோரை முதலாவது படத்தில் காண்க. செல்வா நினைவாலத்தின் முன்னால் தமிழ் ஈழ விடுதலை அணியினரும் மாணவர்களும் உண்ணாவிரதம் இருந்தனர். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்களில் ஒரு பகுதியினர் இரண்டாவது படத்தில் காணப்படுகின்றனர்.
2.6.1982 தமிழனைத் தமிழன் அழிக்கும் நிலை எமக்குள் நிகழ வேண்டாம் உண்ணாவிரதத்தில் அமிர் கோரிக்கை
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
செய்திகள்,
யாழ் பொது நூலகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment