Sunday, June 9, 2013
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 9)
“ஏசுவார்கள், எரிப்பார்கள், அஞ்சவேண்டாம்,உண்மையை எழுதுங்கள், உண்மையாய் எழுதுங்கள்”.
1959 “ஈழநாடு” முதல் பிரதியைப் பார்த்ததும் யோகசுவாமிகள் இவ்வாறு கூறி ஆசீர்வதித்தார்களாம்.
கடந்த 23வருட காலத்தில் எம்மை ஏசியவர்கள் உண்டு.திட்டியவர்களுமுண்டு. ஏன் பத்திரிகையை எரிக்கவும் செய்தார்கள்.ஆனால் ஈழநாடு கட்டிடத்தையே தீயிட்டுக்கொளுத்துவார்கள் என்று யாருமே எண்ணியதில்லை.
இப்படியும் நடக்கும் என்பதைத்தான் சுவாமிகள் அப்பொழுதே சூசகமாகக் குறிப்பிட்டிருப்பாரோ என்று இப்பொழுது எண்ணத் தோன்றுகிறது.
ஜுன் முதலாந்திகதி திங்கட்கிழமை காலையில் வழமைபோல் வேலைக்குப் போகப் புறப்பட ஆயத்தமாகின்றேன்.
“பஸ்” ஓடவில்லையென்று யாரோ கூறினார்கள். வேலை நிறுத்தமாகவிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு வீதிக்கு வருகின்றேன்.
‘யாழ்ப்பாணத்தில் குழப்பம். ஆதனால்தான் பஸ் ஓடவில்லையென்று பேசிக்கொள்கிறார்கள்.….. இவ்வாறு தொடங்கும் ‘பேனா’ எழுதுவது - உணர்வுகள் எரிவதில்லை என்ற கட்டுரை 3.7.1981 வெள்ளிக்கிழமை முதல் 16.7.1981 வெள்ளிக்கிழமை வரை தொடராக வந்தது.
ஈழநாடு எரியூட்டப்பட்டதன் பின் நான்கு நாட்களின் பின்னர் ஆறூந்திகதி அப்பத்திரிகை மீண்டும் வெளிவந்தது.
வரலாறுகளை எழுதுவோர் ஏனோதானோ என எழுந்தமானமாக பதிவிடுதல் கூடாது. சம்பந்தப்பட்ட சகல விபரங்களையும் தெரிந்து உண்மையை உண்மையாக எழுதவேண்டும்.
தந்தை செல்வாவுடைய சரித்திரத்தை எழுதிய பத்திரிகை ஆசிரியர் ரி. சபாரத்தினம் அவர்கள் அந்நூலில் என்னுரையில் மூன்றாவது பந்தியில் குறிப்பிட்டவற்றை ஆவணப்படுத்தல் - பதிவிடுதல், பத்திரிகை ஏன் எழுத்துத்துறையிலிருப்பவருக்கும் அறிந்துகொள்வதற்காக இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
ஒரு நல்ல பத்திரிகையாளனின் பணி ஆய்வில் ஈடுபடுவதல்ல. அதைச் செய்ய நிறையப்பேர் இருக்கிறார்கள். பத்திரிகையாளனின் பணி, தான் மிக அருகே நின்று பார்த்தவற்றைப் பதிவுசெய்து வைப்பதே. பத்திரிகையாளனுக்குக் கிடைக்கும் அந்த அருமையான சந்தர்ப்பம் ஆய்வாளர்களுக்குக் கிடைப்பதில்லை.
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
ஈழநாடு,
யாழ் பொது நூலகம்,
வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment