
நூலகம் எரிக்கப்பட்ட பின்னர் 04.06.1984 அன்று மீள்விக்கப்பெற்ற யாழ் மாநகர நூலக திறப்பு விழா மலரில் ஆணையாளர் வி.வீ.கே. சிவஞானம் அவர்களின் செய்தியிலும் 01.06.1981 ஆந்திகதி இரவோடு இரவாக தீக்கிரையாக்கப்பட்டது என்றுள்ளது.
நான் குறிப்பிட்ட இரண்டு(மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது, யாழ்ப்பாண பொது நூலகம் மீள்விக்கப்பெற்ற கட்டடத் திறப்பு விழா மலர் என்பவை) நூல்களைவிட மேலும் பல நூல்கள் ஆவணமாக இருக்கின்றன.
1. யாழ்ப்பாண நூல்நிலையம் - ஓர் ஆவணம் - மூதறிஞர் க.சி.குலரத்தினம் அவர்களின் புத்தகத்தில் (மித்ரா வெளியீடாக 9.2.1997ல் வெளிவந்தது) பக்கம் 88ல் மூன்றாவது பந்தியில்
அமெரிக்கரின் நன்கொடைப்பணம் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூலக வாசல் முகப்பில் துலாம்பரமாகப் பொறிக்கப் பெற்றுள்ளது
"A generous gift of 104,000 by the Asian Foundation formed the nucleus of the fund for the construction of this library
"
என்றிருக்கிறது. ஆனால் நூலகத்தில் இன்று ஆங்கிலத்திலுள்ள கல் மாத்திரமே இருக்கிறது. அதுவும் பழைய கல் அல்ல. புதிய கருமைநிறமான பளபளப்பானது. ஏனெனில் பழைய அடிக்கல்கற்கள் யாவும் வெள்ளைக்கற்களில் பொறிக்கப்பட்டிருந்தன. தமிழில் இருந்திருக்க வேண்டிய கல் எங்கே?
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment