
இரண்டு லட்சத்து எண்பதாயிரத்துக்கும் அதிகமான மக்களைப்பற்றி அரசு எதுவித பொறுப்பான நடவடிக்கைகளையும் எடுக்காது தமது அமைச்சர்களையும் அதிகாரிகளையும் யாழ்ப்பாணத்தக்கு தற்போது நடைபெறப் போகும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்யும் அரச ஆதரவாளர்களை அறிவுள்ள யாழ்ப்பாண மக்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். புலிகளை அழித்துவிட்டோம் என்ற இறுமாப்பில் யாழ்ப்பாணம், மற்றும் வவனியா மாநகர நகர சபைகளுக்கும் ஊவா மாகாண சபைக்கும் பரீட்சார்த்த தேர்தலை வைத்துப் பார்த்தபின் அடுத்த தேர்தலை நடத்த எண்ணியுள்ள அரசு பாதிக்கப்பட்ட மக்களைப்பற்றியோ அல்லது அவர்களது தேவைகள் குறித்தோ கரிசனை காட்டாது இதுவரை இயங்கிவந்த பொது அமைப்புக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளையும் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்கிறது.
மேற்கோளுக்கான தகவல் - தமிழ்வின் (http://www.tamilwin.org/view.php?2a46QVb4b3bD9ES24d3SWnL3b0277GGe4d34YpDce0ddZLuIce0dg2hr2cc0Rj0K2e)
No comments:
Post a Comment