அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, April 26, 2009

மனம் நோக வேண்டாம் - பதிவர்கள் சிலரின் ...........

மனம் நோக வேண்டாம் - பதிவர்கள் சிலரின் போக்கு - தாமே திருந்த வேண்டும் அல்லது தம்மைத் திருத்திக் கொள்ள சில விடயங்களை மற்றவர்களிடம் கேட்டு அறிய வேண்டும் - இது ஒரு பணிவான வேண்டுகோள்

கடந்த சில வாரங்களாக தமிழ்வெளியில் குமுதம், தினமலர், தமிழ்மணம் போன்றவற்றை ஒரு சிலர் குறைசொல்லியிருந்ததைக் கண்ணுற்றேன்.

தமிழ் மணத்திற்கு வக்காளத்து வாங்குவதாக யாரும் நினைக்க வேண்டாம் என்னுடைய பதிவில் அவர்களுக்கு இணைப்பு நான் கொடுத்திருக்கிறேன். அவர்கள் இன்னும் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை - இது வேறு - நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

கருத்துச் சுதந்திரத்தை அளவுக்கதிகமாக பாவிக்கும் அந்த ஒரு சில பதிவர்கள் என்னை முதலில் மன்னிக்க வேண்டும்.

எமது கொள்கைகளுக்காக மற்றவர்களைச் சபிப்பது முறையல்ல. அனைவருக்கும் அனைத்து சுதந்திரங்களும் உண்டு.

இலங்கை அல்லது ஈழ வரலாற்றை முழுவதும் அறியாமல் சிலர் தான்தோன்றித்தனமாக விமர்சிப்பதும் எழுந்தமான கண்டனங்களையும் தெரிவிப்பதும் எந்த விதத்திலும் எனக்கு நியாயமாகப் படவில்லை. இது எனது தாழ்மையான கருத்து.

மேற்கொண்டு நான் ஏதும் எழுதினால் வீண் சர்ச்சைகள் விவாதங்கள் ஏற்படும் என்பதற்காக தற்போது இதை இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன்.

No comments: