அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, April 26, 2009

இன்றைய எனது இடுகைகள் அனைத்தும் அப்பாவி மக்கள் குறித்த மனப்பூர்வமான உணர்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டவையே!

நான் பெரிதும் மதிக்கின்ற காந்தீய வழிகாட்டி ஈழத்துக் காந்தி தீர்க்கதரிசி தந்தை செல்வா அவர்களின் நினைவு நாளில் எழுதிய அனைத்துப் பதிவுகளும் கனத்த மனத்துடன் உணர்வுபூர்வமாக சிந்தித்து எழுதப்பட்டவையே! அப்பாவி மக்கள் வாழ்வில் அவ்வளவு அதிக அக்கறை கொண்ட அந்தத் தலைவர் பெயரில் அவர் வழி வந்தோர் இன்று அவர் கொள்கையிலிருந்து விலகி இத்தனை அழிவுகளுக்கும் காரணமாக இருக்கிறார்களே என்ற வேதனை! அவர் இருந்திருந்தால் இப்படி நடக்க முடிந்திருக்குமா?
அவர் ஆசைப்பட்ட நெடுங்காலம் பாடுபட்ட எதிர்பார்த்த சமஸ்டி ஆட்சிமுறையிலான இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் ஏதேனுமொரு நிரந்தர தீர்வு ஏற்பட்டிருக்கும்.
ஆனால் எந்த நாட்டினுடைய உதவிவேண்டி அவர் பாடுபட்டாரோ அந்த நாடு இன்று எதிரிக்கு துணை புரிகிறது! காரணம் யார்? இவையெல்லாம் சிந்திக்க - ஆராய வேண்டிய விடயங்களே!
எனது இன்றைய இடுகைகளின் தலைப்புக்கள்.
1. இன்று ஈழத் தமிழர் தலைவர் தந்தை செல்வா அவர்களின் நினைவு தினம்
2. மனம் நோக வேண்டாம். பதிவர்கள் சிலரின்......
3. பூனைக்குக் கொண்டாட்டம் - எலிக்குச் சீவன் போகிறது.
4. விடுதலைப் போராட்டத்தில் கொச்சைப்படுத்தப்பட்ட வண்ணாவிரதம் - மறந்துவிட்ட பழைய உண்மைகள்
5. பிந்திய செய்தி - விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தம்.

No comments: