இத்தொடர் விளையாட்டுக்கு என்னை அழைத்த யோவொய்ஸ் அவர்களுக்கு முதலில் நன்றி! மருதமூரானுக்கும் இப்பதிவிலுள்ள கட்டுரையைச் சரிப்படுத்தியமைக்கு நன்றி! அரிவரியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என நினைத்தேன். ஒரு சந்தோஷமான நிகழ்வால் இடையிலிருந்து பகுதியாக எழுத விரும்பி இதைப் பதிவிடுகிறேன்.
இன்று இக்கட்டுரையை பதிவிட முற்படும்போது கடந்த 32 வருடங்களுக்கு முன்னர் நான் பயின்ற இப்பாடசாலையின் அதிபருடைய மகன் என்னுடன் ஈமெயில் தொடர்பு கொண்டதும் மறக்க முடியாத ஒரு சம்பவம். இந்தப் பதிவுகளை எழுதியதன் திருப்தி இன்று எனக்குக் கிடைத்திருக்கிறது. இன்றைய பதிவொன்றில் குறிப்பிட்டதுபோல - நட்புக்காக ஏங்கும் எனக்கு 32 வருடத்தின் பின் ஒரு நட்புக் கிடைத்தது ஒரு சந்தோசமான நிகழ்வல்லவா! மீண்டும் நிர்ஷனைத்தான் இன்றும் நினைவுபடுத்தி நன்றி சொல்லவேண்டும் - கிருத்தியத்தை எழுத உதவியமைக்கு!
அதிபருடைய மகனுடைய செய்தியை இதில் போடுவது எனக்கு ஒரு திருப்தியை ஏற்படுத்தும். சில மணி நேரத்துக்கு முன்னர் அவர் என்னுடன் தொடர்பு கொண்டு பேசியதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
அன்புமிக்க முகுந்தன்,
வணக்கம். இக்கடிதம் உங்கட்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.
சுமார் முப்பது ஆண்டுகட்கு முன்னரான தொடர்பு.
அனுராதபுரம் விவேகனந்தாவில் ஒன்றாக படித்தோம். என்னுடைய அப்பா அப்போது அங்கு அதிபராக இருந்தவர். இந்த மெயிலின் பிரதி அப்பாவுக்கும் அனுப்பியுள்ளேன்.
உங்களுடைய தளம் வழியாகவே உங்களுடைய மெயில் முகவரி கிடைத்தது.
உங்களுடைய தளம் மிகவும் அருமையாக உள்ளது. பாராட்டுகள்.
பல அருமையான தகவல்களை பகிர்ந்து கொள்கின்றீர்கள். உங்கள் எழுத்து தொடர நால்வாழ்த்துக்கள்.
நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்.
அன்புடன்,
சி.சிற்சபேசன்
நியூசீலாந்து
Sunday, September 20, 2009
கல்வி பயின்றதொரு காலம் - அனுராதபுரம் விவேகானநதா தமிழ் மகா வித்தியாலயம் - பகுதி 1
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
தொடர் விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ப்ளாக்கால இப்படி நல்ல விசயமெல்லாம் நடக்குதா?
உண்மைதான் சுபாங்கன்! எனக்கு இது முதல் அனுபவம்! சும்மாவா 32 வருடங்களின் பின்னர் ஒரு பழைய நண்பனைக் காண்பது! சொல்லும் பார்ப்போம்!
இன்று உங்களுடைய பிளாக் பார்த்தபோது ஒரு இன்ப அதிர்ச்சி. பல்லாயிரம் மைல்கட்கு அப்பால் வாழும் எம்மையெல்லாம் கணணி யுகம் சேர்த்து வைக்கின்றதல்லவா. மிக்க மகிழ்ச்சி.
உண்மைதான் வன்னியூரன்!
பல மைல்களுக்கு அப்பால் கடல் கடந்த நிலையில் எம்மை இணைத்திருக்கும் இந்த கணினி மூலமான இணைய வலைப் பதிவுகள் - எம்மையெல்லாம் ஒரு பிணைப்பில் வைத்திருப்பது சத்தியமான உண்மைதான்!
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி யோ!
இணையம் அற்புதமான உலகம்தான். மறந்து போன பழைய உறவுகளைப் புதிப்பிக்கவும் புதிய நட்புகளை வளர்த்துக் கொள்ளவும் செய்கிறது.
Post a Comment