அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, September 7, 2009

நட்சத்திரப்பதிவரா? நானா? யாழ்தேவி திரட்டியினருக்கு எனது நன்றிகள்!


இன்று மாலையில் வேலையால் வந்தவுடன் எனது மின்னஞ்சல் முகவரிக்கு எதேனும் புதிய செய்திகள் வந்ததா? என்று பார்க்கப் போனபோது 3 மின்னஞ்சல்கள் வந்திருந்தன. அவை முறையே webmaster, Yaaldevy_noreply, ஈழவன்.

என்னவென வாசித்துப்பார்த்தால் இந்தவார நட்சத்திரப்பதிவராக என்னைத் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தகவல். இதற்கிடையில் ஈழவன் எனக்கு வாழ்த்தையும் தெரிவித்திருந்தார். எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை: நட்சத்திர வாரத்தில் நீங்கள் ஒவ்வொருநாளும் குறைந்தது ஒரு இடுகையாவது இடவேண்டும் என்ற அன்பான கட்டளை வேறு!

நான் எழுதிய ஓலங்களையும் - பிதற்றல்களையும் தேடியறிந்து - என்னையும் ஓர் பொருட்படுத்தி எனது கிருத்தியம் பதிவுக்கு நட்சத்திரப்பதிவர் என்ற ஒரு நிலையை வழங்கிய யாழ்தேவி திரட்டியினருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
ஒன்றை மாத்திரம் சொல்லி இன்றைய பதிவை முடிக்க விரும்புகிறேன். அதாவது - நான் எனது கிருத்தியத்தின் ஆரம்பத்தில் 3ஆவதாக எழுதிய நன்றே நினைமின் நமன் இல்லை என்ற 07.07.2008 கட்டுரையில் எனது உயிர் எனது உடலை விட்டுப்பிரிய முன்னர் இக்கொள்கைகளை ஏற்கக்கூடிய ஒரு மனிதனைக் காண்பேன் - கண்டுகொள்வேன் என்பது எனது திடமான சங்கற்பம் என்று குறிப்பிட்டிருந்தேன்.முகமறியா -முன்னெப்போதுமே பழக்கமில்லாத பல பதிவர் நட்புகள் இந்த ஒரு வருட காலத்தினுள் எனக்குக் கிடைத்திருப்பது நான் குறிப்பிட்ட என்போன்ற பலரைப் பார்க்க(நேரடியாக இல்லாவிடினும்) - அறிய முடிந்தது என்பது மட்டும் உண்மை!

இதற்காக என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் அந்தப் பெருங்கடவுளுக்கும் - என்னுடைய இப்பதிவை ஆரம்பிக்க உதவிய தம்பி நிர்ஷன்(மேடை - புதிய மலையகம்) அவர்களுக்கும் எனது கோடானுகோடி வணக்கங்கள்!!!

6 comments:

யோ வாய்ஸ் (யோகா) said...

நட்சத்திர பதிவரானதற்கு வாழ்த்துக்கள்..

என்றும் நட்புடன்
யோகா

vannisingam said...

சில எழுத்துக்கள் வெளியே கொண்டுவரப்பட்டே ஆகவேண்டும்.வாசிக்கப்பட்டே ஆகவேண்டும்.அந்தவகைப்பதிவுகள் உங்களுடையவை. எதையும் பட்டுப்பட்டென வெளிப்படையாக சொல்லும் உண்மையான பதிவுகள் பகிரப்படவேண்டும்.நன்றி யாழ்தேவி.நட்சத்திரப்பதிவரானதற்கு வாழ்த்துக்கள் தங்க முகுந்தன்

ஆதிரை said...

வாழ்த்துக்கள்... :)

மருதமூரான். said...

வாழ்த்துக்கள் தங்க முகுந்தன்…….
நட்சத்திரப்பதிவராக நல்ல பதிவுகளை இடுங்கள்.

ஈழவன் said...

நட்சத்திரப் பதிவரானால் போதுமா, தினமும் தவறாமல் பதிவு இட வேண்டும், எங்கே இன்று எதையும் காணவில்லையே, என்ன முகுந்தன் வேலையாக இருக்கின்றீர்களோ!

இலங்கையருக்கான திரட்டியென "யாழ்தேவி" இருப்பதால் தானே நட்சேத்திரப் பதிவரெனும் மகுடமெல்லாம் எங்களுக்கு!

ஆகவே யாழ்தேவி இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வாழ்த்துவோம்!

கனககோபி said...

நட்சத்திர பதிவரானதற்கு வாழ்த்துக்கள்..