அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, September 12, 2009

சுவிற்சர்லாந்தில் எனது அனுபவங்களும் - இங்குள்ள சில நடைமுறைகளும் - பகுதி 2

சட்ட ரீதியாக வருபவர்களும் - முகவர்கள் மூலம் நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களும் முதலில் 5 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். விமான நிலையமூலம் வந்து தஞ்சம் கோருபவர்களும் சில நாட்கள் விமான நிலைய காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட 5 முகாம்களில் ஏதேனும் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அதிகமாக நாங்கள் இருந்த முகாம்(Kreuzlingen) Zurich விமான நிலையத்திற்கு குறைந்தளவு தூரத்தில் இருப்பதால் அங்கேயே பலர் அனுப்பி வைக்கப்படுவர்.
இந்த இடத்திற்குப் பெயர் Bundesamt für Migration BFM Empfangszentrum (இது டொச் மொழி) ஆங்கிலத்தில் Federal Office for Migration FOM Reception Center.
In the Reception centers (Basel, Kreuzlingen, Chiasso, Vallorbe, Altstätten) and the airports of Zurich and Geneva), the Refugees only by means of a computer checklist Tuberculosis questioned and it will show them a video on AIDS. Generally Refugees have a poor health. Not often they are ill with tuberculosis or AIDS, suffering from minor War injuries and suffered depression due to traumatic Experiences and psychological distress. Although each Refugees have the right to medical care, each must Doctor's visit will be authorized by the caregiver. Refugees N (still in the asylum) and F (temporarily) Status Date have a health insurance card and can in extreme Emergency to be treated directly in hospital. For rejected asylum seekers - to leave the so-called -- decided by a competent person in the District administration, whether the consult a physician concerning a refugee or not. This, and complicate the lack of a health insurance card to the Access to health care massively.
நான் அங்கு உள்ளே சென்றபோது மதியம் 1.30 இருக்கும் அந்த நேரம் முகாமிலிருந்தவர்கள் அனைவரும் வெளியே சென்றுவிட்டனர். நான் உள்ளே நுழைந்ததும் எனது பயணப் பொருட்கள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. நானும் உடற் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டேன்.எங்களிடமுள்ள அனைத்துப் பொருட்களையும் இங்கு வாங்கிப் பத்திரமாக வைப்பார்கள் - நான் கொண்டுபோன சகல ஆவணங்கள் - கைத்தொலைபேசி, அதனுள்ளிருந்த சிம் காட், CD, Memory sticks எல்லாமே வாங்கி வைத்துக்கொண்டு - பணத்தையும், உடைகளையும் எம்மிடம் தருவார்கள். உள்ளே சென்று ஒரு மணிநேரத்தினுள் ஒரு விண்ணப்பப் பத்திரத்தைத் தந்து நிரப்பச் சொல்லுவார்கள். எமது தாய்மொழியிலும் - ஆங்கிலத்திலும் இந்தப் பத்திரம் இருக்கும். இதை நிரப்பிக் கொடுத்தபின்னர் எம்மை உள்ளே அனுமதிப்பார்கள்.
3 மாடிகளைக் கொண்ட விடுதிபோன்ற கட்டடத்தின் கீழ்ப்பாகத்தில் ஒரு பக்கமும் அடுத்த மேல் மாடிகளிலும் நாம் தங்க வைக்கப்பட்டோம். நாமிருந்த அறையில் சுமார் 40 பேர் படுக்க வசதியுடையதாக இருந்தது. 20 கட்டில்கள் இரண்டு தட்டுக்கள் கொண்டதாக - தனித்தனியாக அவரவர்க்கு தமது பொருட்களைப் பத்திரப்படுத்தி வைக்க சிறிய அலுமாரிகளும் தரப்பட்டன. தனியாக இருப்பவர்களுக்குத்தான் இந்த நடைமுறை குடும்பத்தவர்க்கு தனித்தனியாக முன்பு கொடுக்கப்பட்டாலும் வருகைதரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆண்களைக் கீழேயும் பெண்களையும் குழந்தைகளையும் மேலேயும் தங்க வைத்தனர். நாமிருந்தபோது சுமார் 150 பேர்கள் அந்தக்க கட்டடத்தில் இருந்தோம். தற்போது 350/400க்கும் அதிகமானவர்கள் இருப்பதாக அண்மையில் வந்தவர்கள் தெரிவித்தார்கள்.
மாலை 5.30க்கு இரவு உணவு வழங்கப்பட்டது. அதன்பின் கட்டடத்தின் உள்ளேயே இருக்கும் 40 x 40 மீற்றர் மைதானத்தில் உலவித் திரிவோம். சிலர் விளையாடுவார்கள். குழந்தைகள் ஒருபுறம் பந்து அடித்து விளையாடுவார்கள் பட்மின்ரன் - கூடைப்பந்து போன்றவற்றுக்கும் அவர்கள் விளையாட்டு உபகரணங்களைத் தந்துதவி செய்வார்கள். இரவு 10.00 மணிக்கு அனைவரும் படுக்கையில் இருக்க வேண்டும். 10.30க்கப் பின்னர் யாரும் சத்தம் செய்யக் கூடாது. ஆனால் நான் தங்கியிருந்த 2 வாரங்கள் ஒரு வியட்நாம் வாசி விடாத பகிடிகளே இல்லை. அனைத்தும் இரவு 10.30க்கு ஆரம்பமாகும். காவல் கடமையில் ஈடுபடும் காவலர்கள் வந்து அதட்டும் வரை படாதபாடு படுத்துவார். அதிகாலையில் எழும்பும் வழக்கத்தையுடைய நான் 5மணிக்கே எழும்பி காலைக்கடன்களை முடித்துவிடுவேன். காரணம் இருக்கும் அத்தனைபேருக்கும் 16 மலசலகூடங்கள். 2 குளியலறைகள். காலை 6.00 மணியிலிருந்து 10.00 மணிவரை தான் குளிக்க முடியும். குளியலறையில் ஒரே தடவையில் 12 பேர் குளிக்க முடியும்.காலைச் சாப்பாடு 7.30மணிக்கு. அதன்பின் ஒவ்வொருநாளும் 8.00 மணிக்கு சிலருடைய பெயர்களைக் கூப்பிடுவார்கள் - அவர்கள் (10 பேர்வரை) அங்கு சொல்லப்படும் வேலைகளைச் செய்ய வேண்டும்.காலைச் சாப்பாடு 7.30மணிக்கு. அதன்பின் 8.00 மணிக்கு சிலருடைய பெயர்களைக் கூப்பிடுவார்கள் அவர்கள் ஒவ்வொருநாளும் 10 பேர்வரை அங்கு சொல்லப்படும் வேலைகளைச் செய்ய வேண்டும். நிலம் துடைத்தல் - மலசலகூடங்கள் துபஇபரவாக்குதல் - கண்ணாடி துடைத்தல் - மைதானத்திலுள்ள குப்பை பொறுக்குதல் - படுக்கைகளை சரிசெய்தல் படிகள் சுத்தம்செய்தல் போன்றன. ஒவ்வொருநாளும் இரவில் 4 அல்லது 5 பேர்களுடைய பெயர்களை விளம்பரப் பலகையில் போட்டுவிடுவார்கள். அவர்கள் காலையில் 7.00 மணிக்கும் மத்தியானம் 11.30க்கும் மாலையில் 5.00 மணிக்கும் குசினியில் வேலைசெய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும். வாகனத்தில் வரும் சாப்பாட்டை இறக்குதல் - பரிமாறுதல் - மேசை ஒழுங்குபடுத்தல் பின்னர் துப்பரவு செய்தல் - கோப்பைகள் அத்தனையையும் கழுவுதல் போன்றன.நான் போன அடுத்த நாள் காலையில் என்னுடைய பெயரைச் சாப்பிட்ட பின்னர் கூப்பிட்டார்கள். போனதும் என்னை புகைப்படம் எடுக்கவும் - எனது கைரேகைகளைப் பதியவும் ஒரு பெண்மணி அழைத்துப் போனார். 10 விரல்களையும் தானே பிடித்து மையில் தோய்த்து வேண்டியபடி அவர் எனது கைரேகைகளைப் பதிவு செய்தார். இந்த நாட்டில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இக்கைரேகைகளைப் பதிவுசெய்து கணனி முறைப்படுத்தி வைத்திருப்பதால்தான் சட்டம் ஒழுங்கு போன்றன ஓரளவாவது இங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என வெளிப்படையாகக் கூறலாம்.

1 comment:

Anonymous said...

Very good documentation.Please write more.