அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, September 20, 2009

இலங்கைப் பதிவர் சந்திப்பின் பின்னர் சிலருடன் தொடர்புகளை ஏற்படுத்தியதன் பின் விளைவு!


கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைப் பதிவர் சந்திப்பு நடந்தது. நட்புக்காக ஏங்கும் என்போன்றவர்களுக்கு இது ஒரு வரப் பரிசாதமே! பலருடன் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டேன். சிலருடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பானேன்.எல்லோருடனும் தொடர்பாக இருக்க வேண்டும் என்பதில் நான் அதிக அக்கறை கொண்டிருக்கிறேன். மேலும் இந்த இலங்கைப் பதிவர்கள் பரந்து விரிந்து மாவட்ட மட்டங்களில் ஒரு கூட்டாக இயங்கினாலும் நன்மை பயக்கும். இலங்கைப் பதிவர் சந்திப்பின் பின் ஒரு பதிவிட எண்ணியிருந்தேன். அது இன்னும் நிறைவேறவில்லை.

நல்ல பதிவுகளைப் பார்க்கும் போது நேரமிருந்தால் அதற்கு ஒரு பதிலிடுகை செய்வது என் வழக்கம்.மருதமூரான் எழுதிய
"என்னை புடம்போட்ட பள்ளிகள்: பள்ளி பயின்றதொரு காலம் (தொடர் விளையாட்டு)" என்ற பதிவுக்கு ஒரு இடுகையைப் பின்வருமாறு இட்டேன்.

வணக்கம் மருதமூரரே!
பசுமையான பழைய நினைவுகளை மீட்ட இதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது!
என்ன இப்படியெல்லாம் தொடர் விளையாட்டெல்லாம் நடக்குதா? எங்களை நீங்கள் இதுக்கெல்லாம் கூப்பிடமாட்டியள் தானே! ம்.. என்ன செய்வது கொஞ்சம் பழசாப் போனோம் இல்லையா! சரி எப்படியென்றாலும் என் அனுபவங்களில் கட்டாயம் இதுவரும்! பரவாயில்லை நீராவது 4 பாடசாலைகளில் படித்திருக்கிறீர். நான் மொத்தம் 8 பாடசாலைகள் பெயரைச் சொல்ல வெளிக்கிட்டாலே நிறைய எழுதவேண்டிவரும். ஆறுதலாக எனது பதிவில் போடுகிறேனே!

ஏற்கனவே நான் எழுதிய பல பதிவுகள் அரைகுறையாக இருக்கிறது. எழுதவே நேரமில்லாத என்னை பதிவிட மேலும் விளையாட்டுக்கு அழைப்பார்கள் என்று நான் சத்தியமாக நம்பவே இல்லை. இப்போது நட்புத் தொல்லை கூடிவிட்டது. சும்மா பகிடியாகவே கருத்தைச் சொல்கிறேன் யாரும் கோபிக்க வேண்டாம்.

மருதமூரான் தன்னுடைய காதல்: அழகு: கடவுள்: பணம்= நான் (தொடர் விளையாட்டு) பதிவில் 1.முதலாமவர், தங்க முகுந்தன்: இவரின் வாழ்க்கை அனுபவங்கள் இந்த தலைப்பில் அழகாக தெறிக்கும் என்று நினைக்கிறேன் என்றும்,

யோ வொய்ஸ் தன்னுடைய பள்ளிப் பயின்றதொரு காலம் (தொடர் விளையாட்டு) பதிவில் 01. தங்க முகுந்தன் (தொடர் பதிவுக்கு மருதமூரான் அழைக்கவில்லை என கவலை பட்டீங்கதானே? இப்ப மாட்டிகிட்டீங்க)
என்றும்,
தமது பதிவுகளில் குறிப்பிட்டு என்னை இப்போது பெருஞ்சிக்கலில் மாட்டிவிட்டிருக்கிறார்கள்.

மேலும் யோவொய்ஸ் என்னை நன்றாகப் புரிந்துகொண்டு மருதமூரானுக்கு இட்ட ஒரு இடுகையில் பாவம் அவர் நானும் ஒரு தொடர் பதிவுல மாட்டி விட்டுட்டேன். நேற்று தொலைபேசியில் என்னுடன் பேசி ஏன் மாட்டி விட்டீங்க என கேட்டவர், இன்று கட்டாயம் உங்களிடமும் கேட்பார். இவருக்கு அடுத்தடுத்து வைக்கும் இரண்டாவது ஆப்பு?.. என்று கருத்துச் சொல்லியிருக்கிறார்.அவர் குறிப்பிட்டதுபோலவே நான் மருதமூரனுடன் தொடர்பு கொண்டு பேசினேன். இந்த இருவருக்கும் எனது கோபத்துடன் கூடிய அன்பான நன்றிகள். உங்களுடைய கட்டளைக்கு தலைவணங்கி கூடிய விரைவில் நீங்கள் எதிர்பார்த்த கட்டுரைகளை எழுதி பதிவிடுகிறேன். அதுவரை சற்றுப் பொறுத்திருக்கவும்.

7 comments:

Subankan said...

ஆகா, மாட்டி விட்டுட்டாங்களா? நானும் இலங்கைப்பதிவர்தான். ப்ரன்ட்ஸ் ஆயிக்கலாமா?

வந்தியத்தேவன் said...

அடுத்த பதிவுக்கு கட்டியம்(Trailer) கூறிய ஒரே பதிவர் நீங்கள் தான். கலக்குங்க‌

தங்க முகுந்தன் said...

தாராளமாக! I am already your friend my dear Subangan! உங்களுக்குத்தானே முதலில் யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் அந்தஸ்தை வழங்கியது - அதுபற்றி என்னுடைய பதிவில் நான் பெயர் குறிப்பிட்டிருந்தேனே! பார்க்கவில்லையோ? சரி உம்முடன் நான் தொடர்பு கொள்ள வேண்டும் என்று இருக்க நீர் முந்திவிட்டீர்! சரி உமது தொலைபேசி இலக்கத்தை தெரிவியும் நான் நேரில் பேசுகிறேன். ஓ கேயா?

தங்க முகுந்தன் said...

திரைப்பட விமர்சனம் எழுதுபவர்களுக்குத்தான் அந்த கட்டியம்(Trailer) பற்றித் தெரியும்! எனக்கு முதலில் விளங்கவில்லை அதுதான் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். கருத்துக்கு நன்றி வந்தியத்தேவரே!

கனககோபி said...

நானும் இலங்கைப்பதிவர் தான்...
நானும் இலங்கைப்பதிவர் தான்...
நானும் இலங்கைப்பதிவர் தான்.....

யோ வாய்ஸ் (யோகா) said...

thanks

தங்க முகுந்தன் said...

கனககோபி! எனக்குத் தெரியும் - ஆறுதலாக வருவேன்! அதென்ன 3 தரம் கோட்டில சொல்லுறமாதிரி!