அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, September 13, 2009

யாழ்தேவி திரட்டிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!


யாழ்தேவிக்காரர்களே! என்னுடைய பதிவுகளை இனி நான் ஆறுதலாக இடலாம் தானே! தினமும் இடவேண்டும் என்ற நிபந்தனை இன்றுடன் முடிந்தவிட்டதுதானே!

அப்பாடா!!!

யாழ்தேவி திரட்டியினர் கடந்த ஒரு வாரம் நட்சத்திரப் பதிவர் என்ற நாமத்தை இட்டார்கள் - அதனால் நான் பட்டபாடு - அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். ஏனோ தெரியவில்லை - இப்போது எதையாவது எழுதுவது என்றாலும் - கணினியின் முன்பிருக்கச் சென்றாலும் கொஞ்சம் அலுப்பு வருகிறது. கையில் ஏற்பட்ட காயத்தின் வலி சிறிது இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஏனோ தெரியவில்லை எல்லாவற்றிலும் ஒரு விரக்திநிலை! எழுதவேண்டியவை நிறைய இருக்கிறது! பதிவிலிட மட்டுமல்ல. இங்கு டொச் மொழி படிக்க - வேண்டிய வீட்டுவேலை - இங்குள்ள சட்டதிட்டங்களுக்கு அமைவாக செய்யவேண்டியவை. இங்கு அடுத்தவாரங்களில் நடைபெற இருக்கின்ற சில நிகழ்வுகளுக்கான ஆயத்தங்களைத் தயார்படுத்த வேண்டிய வேலைகள் என்று கனக்கச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நாய்வாலை நிமிர்த்த முடியாது - உலகத்தைத் திருத்த முடியாது

உன்னைத் திருத்திக்கொள் சமூகம் தானாகவே திருந்திவிடும் என்று சுவாமி சிவானந்தர் சொல்கிறார்.

உலகம் எப்பவும் அழுக்குத்தான். அதைத் துப்பரவு செய்ய முடியாது - இதை யோக சுவாமிகள் மிகவும் சிறப்பாகச் சொல்லியிருகிறார். யேசு வந்தார் - புத்தர் வந்தார் - உலகின் அழுக்கைத் தோய்த்துப் பார்த்தார்கள் - கொஞ்ச நேரம் வெள்ளையாக இருக்கும் பின்னர் பழையபடி அழுக்கு நிறைந்து விடும் - இவர்கள் சோப்புக் கட்டிகள் போல தேய்ந்து காணாமற் போனதுதான் மிச்சம்! என்று.

அண்மையில் இடம்பெற்ற இலங்கைப் பதிவர் சந்திப்பில் நானும் சிறிது ஆர்வம் எடுத்தேன். நல்லது நடக்கும்போதும் ஏதாவது புதிய நிகழ்வுகள் இடம்பெறும் போதும் என் ஆவல் அந்தப்பக்கம் செல்லும். இலங்கைப் பதிவர் சந்திப்பு நடந்த அன்றே பலருடன் தொடர்பு கொண்டேன். சந்திப்பைப் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசித்தேன். நான் ஒரு இடுகை இடலாமென்றால் நேரம் என்னை விட்டுத் தொலைதூரம் சென்றுவிட்டது. ஒரு சில புதிய இலங்கைப் பதிவர்களுடன் தொடர்பு கொண்டேன். ஏனையவர்களுடன் இனித்தான் தொடர்பு கொள்ள வேண்டும்.

சந்திப்பு நடைபெற்ற அன்றே வந்தியத்தேவனுடன் தொடர்பு கொண்டபோது அவர் எப்பவோ ஒரு நாள்(12, 13 October, 1990களில்) நாம் நடத்திய இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிய கருத்தரங்கு நிகழ்வுகளையும் - மலையகத்தில் செய்த சமயப் பணிகள் பற்றியும் பதிவிடுமாறு வேண்டினார். நானும் ஒரு சில பத்திரிகைச் செய்திகளை வரும்போது மறவாமல் எடுத்து வந்ததால் அதைப் பதிவிடலாம் என்ற நினைத்தாலும் நேரம்தான் கிடைக்கமாட்டேன் என்கிறது.(கூடிய விரைவில் எழுகிறேன் - வந்தியத்தேவரே!)

கரூரில் நடைபெற்ற விசுவின் மக்கள் அரங்கத்தில் (Nov 17) ஒரு இளைஞன் (அ. இராமமூர்த்தி) சொல்கிறான் - ஐயா இன்னும் சொல்லப்போனால் எனக்கு இந்த 24 மணிநேரமும் பத்தலிங்க ஐயா! என்று சொல்வதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

இலங்கையில் பல பதிவர்கள் இருக்கையில் யாழ்தேவி திரட்டியினரும் என்னை ஓர் நட்சத்திரப் பதிவராக 8ஆவது இடத்தில் வைத்தமைக்கும் நான் அவர்களை நன்றியோடு நினைவு கூறித்தான் ஆக வேண்டும். ஏற்கனவே சுபாங்கனின் ஐந்தறைப்பெட்டி - சாயினியின் Sketch- மருதமூரானின் மருதமூரான் - த. ஜீவராஜின் ஜீவநதி - அமுதனின் அமுதனின் பக்கங்கள் - ஈழவனின் களத்துமேடு - சுதாவின் ஹரன் - என்ற 7 நட்சத்திரப்பதிவர்கள் அலங்கரித்த இடத்தை எட்டிப்பிடிக்க வைத்த இறைவனுக்கும் நன்றிகள்!

நட்சத்திரப் பதிவராக இருந்த இந்த ஒருவார காலத்தில் பதிவுகளுக்கு - முக்கியமாக யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவரானமைக்கு வாழ்த்துத் தெரிவித்து - இடுகையிட்ட சிலருக்கு நான் எந்த மறுமொழியும் இடவில்லை - காரணம் அவர்களுக்கு ஒரு பதிவிலியே மறுமொழி இடுவதுதான் சிறப்பு என்று கருதி இன்றுவரை பொறுத்திருந்தேன். அதற்காக அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

குறிப்பாக இதில் சில பெயரிலிகளும் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள்! தேவைகளை மாத்திரம் பயன்படுத்தி விட்டு மீதி அனைத்தையும் கிடப்பில் போட்டுவிட்டேன். அதற்காக அந்த வெளிக்காட்ட மறுப்போர் என்னை மன்னிப்பார்களாக!

முதலாவதாக ஈழவன் - இன்றுவரை எங்கிருக்கிறார் - அவர் எப்படிப் பட்டவர் என்ற - முகம் தெரியாத நண்பருக்கு எனது மனம்நிறைந்த நன்றிகள்.

இரண்டாவதாக யோ வாய்ஸ் (யோகா) - இவரை இலங்கைப் பதிவர் சந்திப்பின் பின் தொடர்பு கொண்டு - தொலைபேசியில் பேசியிருக்கிறேன். அவருக்கும் எனது நன்றிகள்.

மூன்றாவதாக வன்னிசிங்கம் - அவரது இடுகையை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமானதென நினைக்கிறேன் - காரணம் ஒருவராதல் என் எழுத்தை மெச்சி ஒரு சான்றிதழ் தந்திருக்கிறாரல்லவா! அது என் எழுத்துக்கு ஒரு பரிசு கிடைத்ததுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. சில எழுத்துக்கள் வெளியே கொண்டுவரப்பட்டே ஆகவேண்டும்.வாசிக்கப்பட்டே ஆகவேண்டும்.அந்தவகைப்பதிவுகள் உங்களுடையவை. எதையும் பட்டுப்பட்டென வெளிப்படையாக சொல்லும் உண்மையான பதிவுகள் பகிரப்படவேண்டும்.நன்றி யாழ்தேவி.நட்சத்திரப்பதிவரானதற்கு வாழ்த்துக்கள் தங்க முகுந்தன்

நான்காவதாக ஆதிரை - அவருடனும் நான் இலங்கைப் பதிவர் சந்திப்பின் பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறேன். அவருக்கும் எனது நன்றிகள்!

ஐந்தாவதாக மருதமூரான் - இவரையும் பதிவர் சந்திப்பின் பின்னர் தொடர்பு கொண்டு பேசியிருந்தேன். அவர்களுடைய வீரவிளையாட்டே எனது நட்சத்திரப் பதிவர்! பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டும் இவருக்கு என் மனம்நிறைந்த நன்றிகள்!( கோபிக்க வேண்டாம் சும்மா ஒரு பகிடிக்காக இதைக் குறிப்பிட்டேன்! சரியா!)

ஆறாவதாக ஈழவன் திரும்பவும்
நட்சத்திரப் பதிவரானால் போதுமா, தினமும் தவறாமல் பதிவு இட வேண்டும், எங்கே இன்று எதையும் காணவில்லையே, என்ன முகுந்தன் வேலையாக இருக்கின்றீர்களோ! இலங்கையருக்கான திரட்டியென "யாழ்தேவி" இருப்பதால் தானே நட்சேத்திரப் பதிவரெனும் மகுடமெல்லாம் எங்களுக்கு! ஆகவே யாழ்தேவி இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வாழ்த்துவோம்! என்று பதிவிட்டார் - நானும் எனது யாழ்தேவி அனுபவத்தை எழுதலாம் என்று அதை எழுதினேன்.

ஏழாவதாக தேவதாசன் dilshaad - அவருக்கும் எனது நன்றிகள்!
அடுத்ததாக கனககோபி - அவருக்கும் எனது நன்றிகள்!
எல்லாவற்றுக்கும் மேலாக என்னை பதிவிட இந்த உலகுக்குள் கொண்டுவந்த தள்ளிய மேடை - புதிய மலையகம் புகழ் நிர்ஷனுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

மீண்டும் பதிவுகளை கிரமமாக எழுத எனக்கு ஒரு வாய்ப்பைத் தந்த யாழ்தேவி திரட்டியினருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்!

7 comments:

ஆதிரை said...

தொடர்ந்தும் உங்கள் படைப்புக்கள் பதிவிடப்படும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

வாழ்த்துக்கள்.

ஆதிரை said...

குழும இணைவு அழைப்பு கிடைக்கப் பெறாதவர்கள், இக்குழுமத்தில் இணைய http://groups.google.com/group/srilankantamilbloggers எனும் முகவரிக்குச் சென்று தன்னை இணைத்துக் கொள்ளலாம்.

நன்றி

maruthamooran said...

வாழ்த்துக்கள் தங்க முகுந்தன்….

நட்சத்திர பதிவராக இருந்து நல்ல பதிவுகளை இட்டிருக்கிறீர்கள். எதிர்காலத்திலும் தங்களின் கருத்தை அச்சமின்றி வெளியிடுங்கள். மீண்டும் தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

யோ வொய்ஸ் (யோகா) said...

உங்கள் எழுத்துக்கள் மட்டுமல்ல நீங்களும் இலங்கை பதிவர்களுக்கு ஓர் ஊன்று கோல்தான். நீங்கள் தொலைபேசியில் என்னுடன் கதைத்ததற்கு பின்னர் எனக்கு நாம் கிறுக்குவதையும் வாசிப்போர் பல இடங்களில் உண்டு என்பதை அறிய தந்தது. அதற்கு முதற்கண் எனது நன்றிகள்

நட்சத்திர பதிவராக இருந்த காலம் போன்றே தொடர்ந்து வரும் காலங்களிலும் எழுதுங்கள்

தங்க முகுந்தன் said...

ஆதிரை அவர்களே!

கண்டிப்பாக! எழுதுவது என்னுடன் கூடவே ஒட்டிவிட்ட ஒருசுபாவம் - இப்படி எழுத வெளிக்கிட்டு ஒரு வேலையே எனக்குக் கிடைத்தது! இதுபற்றியும் விரைவில் எழுதுகிறேன். கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!

தங்க முகுந்தன் said...

மருதமூராரே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! அதுதான் தொடர்ச்சியாக எழுதவைத்துவிட்டீர்களே! அந்தப் பெருமை கண்டிப்பாக உங்களுக்கு இருக்கிறது! ஆதிரைக்குச் சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன்! கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும்! ஓகேயா!

தங்க முகுந்தன் said...

யோ வாய்ஸ் யோகா!

ஊன்றுகோலா? நானா? என்ன அப்படி ஒரேயடியாக உச்சிக்கு!

நீங்கள் பதிவிடுகிறீர்களெனத் தெரிந்தவுடனேயே உங்களுடன் கதைத்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது! உங்களுக்கு அது தெரிந்திருக்கலாம்! சிலவேளை தெரியாமல் இருக்கலாம்! அதை நான் இப்போது சொல்லவில்லை - கொஞ்சம் பொறுத்து என் பதிவில் சொல்கின்றேன்.

நீங்கள் கிறுக்குவதாகத் தெரியவில்லையே! நன்றாகத்தானே பதிவிடுகிறீர்கள்!நல்ல விடயங்களுக்கு என்போன்றோர் கடல்கடந்திருந்தாலும் வாசிப்பார்கள் -நான் உம்முடன் தொடர்பு கொண்டேன். எத்தனைபேர் தொடர்புகொள்ள முடியாமல் இருப்பார்களோ தெரியாது! எனக்கு சரி எனப் பட்டதையும் நல்லது எனத் தோன்றுவதையும் உடனேயே செய்துவிடுவேன்! அதுதான் என்னுடைய ஒரு பழக்கம்.

நட்சத்திரப் பதிவராயிருந்தபோதும் எழுதினேன் கிரமமாக - ஒரு நாள் தவறிவிட்டது! அதற்கு முன்பும் எழுதினேன்! இனியும் உயிருள்ளவரை எழுதுவேன். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று சிறுவயதில் படித்த வாசகத்தையும் எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதாலும் - இறைவனுக்காகவும் - சமூகத்திற்காகவும் - எனது திருப்திக்காகவும் நான் எழுதியபடியே இருப்பேன்!

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி! என்னை இவ்வளவு இடுகை இடவைத்த உமது எழுத்துக்கு மீண்டும் நன்றிகள்!