Friday, November 27, 2009
இந்து சமுத்திரத்தின் முத்தெனத் திகழும் எம் ஈழத்திருநாட்டை அமைதிப் பூங்காவாக மாற்ற முன்வாருங்கள்!
ஜனாதிபதித் தேர்தல் வருகிறது!
மீண்டும் அதற்கு மக்கள் தயாராகிவருகிறார்கள்!
இம்முறை யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்!
யாராவது ஒருவர் நாம் பிறந்த இந்நாட்டில் பூரண சுதந்திரத்தோடு வாழ வழியமைத்துத் தருவார்களா என நாம் ஆராயவேண்டும்!
எந்த நாட்டில் வாழ்ந்தாலும் பிறந்த நாடுதான் என் பொன் நாடு!
அந்த ரீதீயில் யாவரும் சரிசமமாக சுதந்திரமாக அனைத்து உரிமைகளோடும் வாழ எம் நாட்டில் முதல் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.
வடக்கு கிழக்குடன் ஏனைய பகுதிகளில் வாழும் அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றி கண்டிப்பாக ஆராயவேண்டும்!
சுவிற்சர்லாந்தின் அரசியலமைப்பு முறையை இளம் அரசியல் ஆர்வம் மிக்கோர் படிக்க வேண்டும் - உலகின் அமைதியான - அழகான நாடெனத் திகழும் இந்நாடு எம் நாட்டை விடச் சிறியது! 4 மொழிகளுக்கு அரச அந்தஸ்து அளித்து ஜனநாயகப் பண்புகளைப் பேணிவரும் நாட்டை உதாரணமாகக் கொண்டு எம்நாட்டையும் அமைதிப் பூங்கவாக மாற்றி - அனைவரும் ஒரு தாய் மக்களென வாழும் நிலையைக் கொண்டு வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இன - மத - மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதத்தன்மையுடன் இந்நாட்டை கட்டியெழுப்ப இளையவர்கள் முன்வரவேண்டும்.
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
நம்நாடு,
வேண்டுகோள்
இலங்கைத் தமிழ்பேசும் கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பு நடைபெற்ற ஹோட்டலின் படங்கள்!
கடந்த 19.11.2009 தொடக்கம் 22.11.2009 வரை சுவிற்சர்லாந்தில் இலங்கைத் தமிழ்பேசும் கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பு நடைபெற்ற ஹோட்டலின் படங்கள் இவை!
இந்தச் செய்தியை நம்பாவிட்டால் நீங்களே இந்த ஹோட்டலின் இணையத்தளத்திற்குச் சென்று பார்வையிடலாம். (http://www.unterhof.ch/xml_1/internet/en/intro.cfm)
பழமையையும் - புதுமையையும் விரும்பும் சுவிஸ் மக்களின் ஒரு பாரம்பரியம் இந்த ஹோட்டலில் பேணப்படுகிறது!
மேலேயுள்ள படங்களில் இதன் தத்துவம் புரியும்!
இந்தச் செய்தியை நம்பாவிட்டால் நீங்களே இந்த ஹோட்டலின் இணையத்தளத்திற்குச் சென்று பார்வையிடலாம். (http://www.unterhof.ch/xml_1/internet/en/intro.cfm)
பழமையையும் - புதுமையையும் விரும்பும் சுவிஸ் மக்களின் ஒரு பாரம்பரியம் இந்த ஹோட்டலில் பேணப்படுகிறது!
மேலேயுள்ள படங்களில் இதன் தத்துவம் புரியும்!
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
சந்திப்பு,
சுவிற்சர்லாந்து
Subscribe to:
Posts (Atom)